PDA

View Full Version : 'குவா குவா'வை தள்ளி போட்டீங்கன்னா...?

தாமரை
28-06-2006, 05:19 AM
"குவா குவா'வை தள்ளி போட்டீங்கன்னா...? *"இப்படியும் உண்மை' என்கிற பகீர் தகவல்

நியூயார்க்: ஒருவர் 100 ஆண்டுகள் வாழ முடியும். ஆம், எப்படி தெரியுமா? அவர் இளம் தாய் வயிற்றில் பிறந்தவராக இருப்பாரானால், நிச்சயம், அவரால் நீண்ட ஆயுட்காலத்தை பெற முடியும் என்று புது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், திருமணம் ஆகியும், சில ஆண்டுகள் வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது, "பேஷனாகி' விட்டது. கேட்டால், "அவருக்கும் வேலை, எனக்கும் இப்போது தான் வேலை நல்ல நிலைக்கு வந்துள்ளது. இப்போது குழந்தை பெற்றால், யார் பார்த்துக் கொள்வது' என்று ரொம்பவும் ஈசியாக சொல்கின்றனர்.

வாழ்க்கையில் திருப்தியான காலகட்டமே, குழந்தை பெற்று, அதை வளர்த்து ஆளாக்கிப் பார்ப்பது மட்டுமல்ல, அதை எந்த ஆரோக்கிய குறைவில்லாமல் வளர்ப்பதும் தான். ஆனால், இப்போதுள்ள இளம் தம்பதியர் மனதில், வேலை, பணம், வசதிதான் மனதில் குடிகொண் டுள்ளது. இன்னும் சிலர், "சில ஆண்டுகள் நிம்மதியாக ஜாலியாக இருந்து விட்டு குழந்தை பெற்றுக்கொள்கிறோம்' என்கின்றனர்.

இதை தட்டிக்கேட்கவோ, ஆலோசனை செய்யவோ இப்போது அனுபவம் மிக்க பெற்றோர் இருப்பதில்லை. அவர்கள், பிள்ளைகள் சொல்படித் தான் கேட்க வேண்டியிருக்கிறது. அதனால், குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவது, இந்தியாவில் கூட அதிகரித்து வருகிறது.

ஆனால், இப்படி தள்ளிப் போடுவது நல்லதல்ல, என்று காலம் காலமாக சொல்லி வந்தாலும், இப்போதும் மருத் துவ நிபுணர்கள் அதைத்தான் மீண்டும் சொல்கின்றனர். "இளம் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், நீண்ட காலம் வாழும். அவர்களில் சிலர் 100 ஆண்டுகளையும் தாண்டி வாழ்வர்' என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள, "சிகாகோ யூனிவர்சிட்டி ஆப் ஏஜிங்' என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள், "வயதானவர்கள் பற்றி ஒரு பக்கம் ஆராய்ந்து வரும் நாங்கள், ஒருவரின் வாழ்நாள் எப்படி அமைகிறது, அதற்கு அடிப் படை அவர் ஆரோக்கியமா, பிறப்பு அடிப் படையா என்று ஆராய்ந்து வந்தோம். அதில் சில வித்தியாசமான உண்மைகள் தெரியவந்தன. ஒருவர் இளம் தாய்க்கு பிறந்தவர் என்றால், அவர் ஆயுள் அதிகமாக இருக்கும். வயதான தாய்க்கு பிறக்கும் குழந்தைகள், ஆயுள் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதை அமெரிக்காவில் வயதானோர் 250 பேரை வைத்தும் சர்வே எடுத்து, அவர்கள் வாழ்நாள் குறித்து ஆராய்ந்தும் உறுதி செய்துள்ளோம்,' என்றனர்.

இதற்கு முன்னர் காவிலாவ் தம்பதிகள், கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஆராய்ந்து ஒரு அறிக்கை தந்தனர்.

அதில், "இளம் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தையில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்' என்று கண்டுபிடித்தனர். ஆனால், இப்போது சிகாகோ பேராசிரியர்கள் குழு ஆராய்ந்ததில், இளம் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை, அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அதற்கு ஆயுட் காலம் அதிகமாக இருக்கும் என்று கண்டுபிடித்தனர்.

இதற்கு ஆதாரமாக, கடந்த காலங்களில் சிலர் இப்படி 100 வயதை தாண்டி உயிர் வாழ்ந்ததை சுட்டிக்காட்டினர். கடந்த 1890 முதல் 1893ம் ஆண்டு வரை பிறந்த சிலர் வாழ்நாள் பற்றி ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களில் பலரும், இளம் தாய்மார்களுக்கு பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இவர்கள் எல்லாரும் 100 வயதை தாண்டித்தான் இறந்துள்ளனர். சிலர் 125 வயது வரை கூட இருந்துள்ளனர் என்பது தான் வியப்பான விஷயம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர், ஜூன் 28 2006.
http://www.dinamalar.com/2006june28/world3.asp

மயூ
28-06-2006, 07:27 AM
எனக்கு இப்போதைக்கு இந்த தகவல் தேவையில்லை. சேமித்து வைத்துக்கொள்கின்றேன் இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர் பயன் படலாம்...:D

தாமரை
28-06-2006, 08:34 AM
எனக்கு இப்போதைக்கு இந்த தகவல் தேவையில்லை. சேமித்து வைத்துக்கொள்கின்றேன் இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர் பயன் படலாம்...:D
இவ்வளவு சின்னப் பயலை எல்லாம் யாரப்பா பண்பட்டவர் ஆக்கியது???:D :D :D

மயூ
28-06-2006, 09:35 AM
இவ்வளவு சின்னப் பயலை எல்லாம் யாரப்பா பண்பட்டவர் ஆக்கியது???:D :D :D
என்ன செய்யுறது காலம் கெட்டுப்போய் கிடக்குது....
சின்னதுங்களெல்லாம் கெட்டு விட்டது;) :D :eek:

மதி
28-06-2006, 10:27 AM
இதெல்லாம் இருக்கட்டும். கல்யாணமே ஆகாம நிறைய முதியோர்கள் இருக்காங்களே.அவங்களுக்கு என்ன சொல்றீங்க??

தாமரை
28-06-2006, 10:34 AM
இதெல்லாம் இருக்கட்டும். கல்யாணமே ஆகாம நிறைய முதியோர்கள் இருக்காங்களே.அவங்களுக்கு என்ன சொல்றீங்க??
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!!!:D :D :D :D

மதி
28-06-2006, 10:36 AM
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!!!:D :D :D :D
என்ன கேக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கேட்டுச்சா..?

ஓவியா
28-06-2006, 10:50 AM
என்ன கேக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கேட்டுச்சா..?

ராஜகுமாரா இது யாருக்கு?

செல்வன் சார்,
குவா குவா'வின் தகவலுக்கு நன்றி

மதி
28-06-2006, 11:16 AM
ராஜகுமாரா இது யாருக்கு?

செல்வன் சார்,
குவா குவா'வின் தகவலுக்கு நன்றி
யக்கா..
அது புரிய வேண்டியவங்களுக்கு..!

Raaga
28-06-2006, 11:23 AM
என்னது நூறு வயது வரை வாழ்வதா ?

நான் வாழும் ஃப்ரான்ஸ் நாட்டிலே, தள்ளாடிய வயது வந்ததும், முதியோர் காப்பகத்திலே கொண்டு போய் தள்ளிவிட்டு விடுவார்கள் குடும்பத்தினர்கள்...

அப்புறம் என்ன, சாகும்வரை லோல்பட வேண்டியதுதான்...

இந்த லட்ஷணத்தில் நூரு வயது வாழ்வது என்ன முக்கியமா ?

வெள்ளைகாரர்கள் மக்கள் தொகையை நாட்டின் பிரஜைகள் பெருக்க வேண்டும் என்று இப்படியெல்லாம் பண்ணுவார்கள்...

ஃப்ரான்ஸ் நாட்டில் :

1 பிள்ளை பெற்றால் 15 ஈரொ,
2 பெற்றால் 70 ஈரொ,
3 பெற்றால் 150 ஈரொ,
3 க்கு பின்பு பிறக்கும் எல்லா பில்லைகலுக்கும் 100 ஈரொ கூட கொடுப்பார்கள்...

ஆனால் கவர்ன்மென்ட் எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் ஒன்றிரண்டுக்கு மேல் பெற்றுக்கொள்ள மாட்டார்கள், அதையும் முடிந்த அளவு லேட்டாகத்தான் பெற்றெடுப்பார்கள்...

pradeepkt
28-06-2006, 11:58 AM
என்ன கேக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கேட்டுச்சா..?
அது இருக்கட்டும், திருமணம் ஆகுறதுக்கும் குழந்தை பிறக்குறதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு பெங்களூர்ல ஒரு கும்பல் கெளம்பீருக்குதாம்... அது உனக்குக் கேட்டுச்சா???? :p

ஓவியா
28-06-2006, 12:01 PM
அது இருக்கட்டும், திருமணம் ஆகுறதுக்கும் குழந்தை பிறக்குறதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு பெங்களூர்ல ஒரு கும்பல் கெளம்பீருக்குதாம்... அது உனக்குக் கேட்டுச்சா???? :p

அப்படியா,
வேனும்னா குஷ்பூ அக்காவா கேட்கலாமா,
அருமையான ஐடியா கொடுப்பாங்களே....:p

pradeepkt
28-06-2006, 12:04 PM
அப்படியா,
வேனும்னா குஷ்பூ அக்காவா கேட்கலாமா,
அருமையான ஐடியா கொடுப்பாங்களே....:p
அட நீங்க வேற...
மதி குஷ்பூவுக்கே ஐடியா குடுப்பானே... :rolleyes:

ஓவியா
28-06-2006, 12:11 PM
அட நீங்க வேற...
மதி குஷ்பூவுக்கே ஐடியா குடுப்பானே... :rolleyes:

குஷ்புவுக்கா...:eek: :eek: :eek: :eek:
ஆஆஆஆஆஅ மதி, உங்கள் புகழ் ஒங்குக
புகழ் பாடும் பிரதீப்புக்கு மறவாமல் வாழ்த்து சொல்லவும்.

மதி
28-06-2006, 12:11 PM
அட நீங்க வேற...
மதி குஷ்பூவுக்கே ஐடியா குடுப்பானே... :rolleyes:
என்னாதிது..?!
:angry: :angry: :angry:

மதி
28-06-2006, 12:15 PM
அது இருக்கட்டும், திருமணம் ஆகுறதுக்கும் குழந்தை பிறக்குறதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு பெங்களூர்ல ஒரு கும்பல் கெளம்பீருக்குதாம்... அது உனக்குக் கேட்டுச்சா???? :p

அதுக்கு தலைமை தாங்க கண் தரா ஊரிலிருந்து ஒரு கூட்டம் வந்துச்சாம்..
பாத்துங்க பண்பட்டவர் பகுதிக்கு மாத்திர போறாங்க..!

இனியவன்
28-06-2006, 02:21 PM
[QUOTE=Rajeshkumar]அதுக்கு தலைமை தாங்க கண் தரா ஊரிலிருந்து ஒரு கூட்டம் வந்துச்சாம்../QUOTE]

அதுக்கு தலைமை தாங்க நிஜாம் வந்தாரா?

உலகம் எங்கே போறதப்பு,,,?

அடுத்து புள்ளி ராஜாவும் கூடவே வந்துடப் போறாரு,

பென்ஸ்
28-06-2006, 03:16 PM
ம்ம்ம்ம்ம்க்கூம்ம்ம்..... என்னமோ பேசுறிங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
28-06-2006, 03:18 PM
தகவலுக்கு நன்றி செல்வன்.... சரியான வயதில் குழந்தை பெறுவது நல்லது...

காலம் தாழ்த்தினால்... குழந்தைகளுக்கு முளை வளர்ச்சி குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது....

அறிஞர்
28-06-2006, 03:19 PM
ம்ம்ம்ம்ம்க்கூம்ம்ம்..... என்னமோ பேசுறிங்க...:rolleyes: :rolleyes: :rolleyes: இன்னும் ரெண்டு வருசத்துல எல்லாம் புரியும்....

பென்ஸ்
28-06-2006, 03:21 PM
இன்னும் ரெண்டு வருசத்துல எல்லாம் புரியும்....

ரெண்டு வருஷமாஆஆஆஆ........:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :angry: :angry: :angry: :angry:

அறிஞர்
28-06-2006, 03:25 PM
ரெண்டு வருஷமாஆஆஆஆ........:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :angry: :angry: :angry: :angry: அதுக்குள்ள அவசரமா..... சரி ரெண்டு மாதம் :D :D :D

இளசு
28-06-2006, 08:58 PM
பருவத்தே பயிர் செய் ..

பெற்றோர் வயது கூட கூட (குறிப்பாய் தாயின் வயது 35-ஐ தாண்டினால்) குழந்தைகளுக்கு டவுன்ஸ் ஸிண்ட்ரோம் போன்ற தீவிர பாதிப்புகள் வர வாய்ப்பு கூடுகிறது.

18க்கு முன்னும் தப்பு... பிறக்க, வளர்க்க பக்குவம் இராது.
35-க்கு பின்னும் பிரச்னை. இருந்து வளர்த்து பேரக்குழந்தைகளைக் கொஞ்ச, கொஞ்சம் தெம்பு வேணாமா?

-------------------------------------

இதையொட்டி சில சிந்தனைகள்:

இளையராஜா எத்தனையாவது குழந்தை?

ஆண்ட்டனி குயின் தந்தையான போது அவரின் வயது?

----------------------------------------------

நன்றி செல்வன்.

தாமரை
29-06-2006, 04:11 AM
பருவத்தே பயிர் செய் ..

-------------------------------------

இதையொட்டி சில சிந்தனைகள்:

இளையராஜா எத்தனையாவது குழந்தை?

ஆண்ட்டனி குயின் தந்தையான போது அவரின் வயது?

----------------------------------------------

நன்றி செல்வன்.

இதெல்லாம் எனக்குத் தெரியாது நான் எட்டாவது குழந்தை..கடைசி சுட்டி.. நான் பிறந்த பொழுது என் தாய்க்கு வயது 32 இருந்திருக்கலாம்.

எட்டாவது பிள்ளை தட்டாமல் ஆண்தான்..நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களும் எட்டாவது குழந்தைதான்.. அவர் வீடு இருக்கும் தெருவில்தான் என் பாட்டி வீடும்..

ஓவியா
29-06-2006, 11:33 AM
பருவத்தே பயிர் செய் ..

பெற்றோர் வயது கூட கூட (குறிப்பாய் தாயின் வயது 35-ஐ தாண்டினால்) குழந்தைகளுக்கு டவுன்ஸ் ஸிண்ட்ரோம் போன்ற தீவிர பாதிப்புகள் வர வாய்ப்பு கூடுகிறது.
18க்கு முன்னும் தப்பு... பிறக்க, வளர்க்க பக்குவம் இராது.
35-க்கு பின்னும் பிரச்னை.
இருந்து வளர்த்து பேரக்குழந்தைகளைக் கொஞ்ச, கொஞ்சம் தெம்பு வேணாமா?

தகவலுக்கு நன்றி

sarcharan
29-06-2006, 01:05 PM
இதெல்லாம் இருக்கட்டும். கல்யாணமே ஆகாம நிறைய முதியோர்கள் இருக்காங்களே.அவங்களுக்கு என்ன சொல்றீங்க??

மதி, யாரைச் சொல்லுகிறீர்கள்?

பென்ஸூ, நீங்க என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறிர்?

sarcharan
29-06-2006, 01:05 PM
இதெல்லாம் எனக்குத் தெரியாது நான் எட்டாவது குழந்தை..கடைசி சுட்டி.. நான் பிறந்த பொழுது என் தாய்க்கு வயது 32 இருந்திருக்கலாம்.

எட்டாவது பிள்ளை தட்டாமல் ஆண்தான்..நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களும் எட்டாவது குழந்தைதான்.. அவர் வீடு இருக்கும் தெருவில்தான் என் பாட்டி வீடும்..

அப்ப அவர் கவிதைகள் தான் உங்களதுமா!!!!!!:D :D

sarcharan
29-06-2006, 01:07 PM
[QUOTE=ilasu]பருவத்தே பயிர் செய் ..

QUOTE]

ஹ்ம்ம் பென்ஸூ, பிரதீப்போட கவலையெல்லாம் யாருக்கு புரியப்போவுது

sarcharan
29-06-2006, 01:10 PM
இவ்வளவு சின்னப் பயலை எல்லாம் யாரப்பா பண்பட்டவர் ஆக்கியது???:D :D :D

இப்பெல்லாம் அவங்கவங்களே ஆகிக்கறாங்க:D :D :D

sarcharan
29-06-2006, 01:11 PM
இவ்வளவு சின்னப் பயலை எல்லாம் யாரப்பா பண்பட்டவர் ஆக்கியது???:D :D :D

இப்பெல்லாம் அவங்கவங்களே ஆகிக்கறாங்க.

என்ன தாமரை நீங்க, மயூரேசரு எழுதுன கதைகளை வைச்சே அவர பத்தி புரிஞ்சுக்க வேணாமா!!!!!!!! பல களங்(தோல்வி)கள பாத்தவராச்சே....

:D :D :D

சுகந்தப்ரீதன்
14-02-2008, 10:22 AM
புதுசா கல்யாணம் ஆகுறவங்க எல்லாம் இதை கொஞ்சம் படிச்சிடுங்கப்பா...அப்பதான் ஆரோக்கியமான அடுத்த சமுதயாத்தை உருவாக்க முடியும்...!!:icon_rollout:

அக்னி
14-02-2008, 01:39 PM
புதுசா கல்யாணம் ஆகுறவங்க எல்லாம் இதை கொஞ்சம் படிச்சிடுங்கப்பா...அப்பதான் ஆரோக்கியமான அடுத்த சமுதயாத்தை உருவாக்க முடியும்...!!:icon_rollout:
:D:D:D:D:D:D:D:D:D:D
பொருத்தமான நேரத்தில், :icon_rollout:த் திரியை மேலெழுப்பிய சுகந்தப்ரீதனுக்கு,
சொல்ல விரும்புபவர்கள் சார்பில் சொல்லிக்கொள்கின்றேன்...
நன்றி! நன்றி! நன்றி!

ஓவியன்
14-02-2008, 02:01 PM
புதுசா கல்யாணம் ஆகுறவங்க எல்லாம் இதை கொஞ்சம் படிச்சிடுங்கப்பா...அப்பதான் ஆரோக்கியமான அடுத்த சமுதயாத்தை உருவாக்க முடியும்...!!:icon_rollout:

கொஞ்சம் படிச்சா போதாது சுபி, முழுமையாகவே படிக்கணும்....!! :D:D:D

அக்னி
14-02-2008, 02:04 PM
கொஞ்சம் படிச்சா போதாது சுபி, முழுமையாகவே படிக்கணும்....!! :D:D:D
சுகந்தப்ரீதா...
நீங்க பிளான் பண்ணினது நடந்துடிச்சு...
உரிய இடத்துக்கு சேர்ந்திடுச்சே... :D

ஓவியன்
14-02-2008, 02:24 PM
சுகந்தப்ரீதா...
நீங்க பிளான் பண்ணினது நடந்துடிச்சு...
உரிய இடத்துக்கு சேர்ந்திடுச்சே... :D

அக்னி வேண்டாம் விட்டிடுங்க, அழுதிடுவன்...!! :icon_wink1:

மலர்
14-02-2008, 02:27 PM
அக்னி வேண்டாம் விட்டிடுங்க, அழுதிடுவன்...!! :icon_wink1:
நோ..நோ.....அழக்கூடாது........ :icon_rollout: :icon_rollout:
இதுக்கே அழுதா எப்பிடி......... :D :D :D

ஓவியன்
14-02-2008, 02:30 PM
நோ..நோ.....அழக்கூடாது........ :icon_rollout: :icon_rollout:
இதுக்கே அழுதா எப்பிடி......... :D :D :D

:icon_rollout: னா அழத் தான் செய்யும்......!! :rolleyes:

baluaravinth
14-02-2008, 02:38 PM
தகவலுக்கு நன்றி செல்வன்

நேசம்
15-02-2008, 12:41 PM
என்ன செய்யுறது காலம் கெட்டுப்போய் கிடக்குது....
சின்னதுங்களெல்லாம் கெட்டு விட்டது;) :D :eek:

தாமறையண்ணா கட்டுரையே உங்களை மாதிரி இளைஞர்கள் சீக்கிரம் கல்யாணம் செய்து குழந்தை பெத்துகணும் சொல்வதற்குதான்.என்னை மாதிரி சின்ன பசங்க வேண்டுமென்றால் மனசுல வச்சுக்கலாம்

அனுராகவன்
16-02-2008, 08:28 AM
அக்னி வேண்டாம் விட்டிடுங்க, அழுதிடுவன்...!! :icon_wink1:

இது என்ன சின்ன புள்ள தனமா..!!
நான் இப்பதான் பார்த்தேன்..!
ம்ம் இங்க என்ன நடக்குது..!!??:wuerg019:

சுகந்தப்ரீதன்
16-02-2008, 09:01 AM
கொஞ்சம் படிச்சா போதாது சுபி, முழுமையாகவே படிக்கணும்....!! :D:D:D

எல்லாத்துக்கும் கொஞ்சம் இடைவெளி வேணாமா...? அதான் கொஞ்ச கொஞ்ச மா படிக்க சொன்னேன்...:aetsch013:! ஆனாலும் அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்.. இனிமே எல்லோரும் முழுசாவே படிச்சிடுங்கப்பா..:mini023:

ம்ம் இங்க என்ன நடக்குது..!!??:wuerg019:
அநேகமா குழந்தைதான் நடக்குதுன்னு நினைக்கிறேன் அக்கா...:icon_rollout:

sarathecreator
16-02-2008, 09:05 AM
எனது தந்தையின் 42 ஆம் வயதில் - தாயின் 33 ஆம் வயதில்தான் நான் பிறந்தேன். இன்று இருவரும் இல்லை. என்னுடன் பிறந்தோர் 6 பேர். நான்தான் கடைசியில் பிறந்து பெற்றோருடன் அதிக நாள் வாழாமல் தவிக்கிறேன்.

என்னுடைய பிற சகோக்கள் எல்லாம் நீண்டகாலம் என் பெற்றோருடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

கடைசியில் பிறந்தால் பெற்றோரின் செல்லமாகச் சிலகாலம் வாழலாம். ஆனால் பெற்றோர் சீக்கிரம் மறைந்துபோகியபின் செல்லம் நிரந்தரமா?

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல தாமதமாகக் குழந்தை பெற்றவர்தாம் எம் தாய்தந்தை. தாமதமாக என்னை மட்டும் தான் பெற்றனர்.

பிற சகோக்களை சீக்கிரத்தில் பெற்றனர்.
மணமாகும்போது தாய்க்கு 16. தந்தைக்கு 26. இருவருக்கும் மனநெருக்கம்.
தந்தை இறந்த சோகத்தில் தாயும் போனாள் ஒன்றரையாண்டு விதவைக் கோலத்தில். ஆனால் நீண்டகாலம் வாழாது 73ஆம் அகவையில் தந்தையும், 64ஆம் அகவையில் தாயும் பிரிந்தனரே..

பெற்றவரைக் குற்றம் சொல்லவில்லை. பலகாலம் என்னோடு வாழாமல் என்னைப் பரிதவிக்கவிட்டுச் சென்றுவிட்டனரே. அய்யகோ.. துயரம் என்னும் துக்கம் தாங்கலையே... மனம் விட்டுச் சிரித்தால் துக்கம் போகும். துன்பம் வரும் நேரத்திலே நகைக்க என்னால் முடியலையே...

அனுராகவன்
16-02-2008, 09:05 AM
அநேகமா குழந்தைதான் நடக்குதுன்னு நினைக்கிறேன் அக்கா...:icon_rollout:

அதற்குள்ளையா..
கல்யானம் எப்ப முடிந்தது ..
சொல்லவே இல்லை..
நடக்கட்டும் ..
பார்த்து நடக்கட்டும் தம்பி!!

அனுராகவன்
16-02-2008, 09:11 AM
வருத்தபடாதங்க சரத்!!
என்ன செய்வது அந்த காலத்தில குழந்தைகள் பெற்றுவிட்டு அதை வளர்க்கூட பல பெற்றோர்கள் இல்லை..
ம்ம் நாமாவது அளவோடு பெற்றால் நம் குழந்தைகளுக்கு இந்த நிலைமையே ஏற்படுத்த கூடாது..
என் நன்றி சரத்..!!
கவலை வேண்டாம்.. !!
மன்றத்திற்கு வந்தால் அந்த கவலை தானாக போகும்..!!

சுகந்தப்ரீதன்
16-02-2008, 09:17 AM
அதற்குள்ளையா..
கல்யானம் எப்ப முடிந்தது ..
சொல்லவே இல்லை..
நடக்கட்டும் ..
பார்த்து நடக்கட்டும் தம்பி!!
அக்கா நீங்க எல்லாம் பொண்ணு பாத்து தம்பிக்கு ஓகே பண்ணாம எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்..போக்கா..போயி யவனியக்கா அரபி பொண்ண பாத்த மாதிரி நீங்களும் சிங்கை சீமாட்டி ஏதாவது தம்பிக்கு சிக்குமா தேடிபாருங்க...!:wuerg019:

மதி
16-02-2008, 09:23 AM

இப்படி தான் ஒவ்வொரு திரியா...போய் பொண்ணு பாக்க எல்லா அக்காவையும் தூது அனுப்ப வேண்டியதா இருக்கு...

யூ..டூ...சுகந்தன்...

sarathecreator
16-02-2008, 09:58 AM
தூது அனுப்பத் துணை தேடும் சுகந்தனுக்கு
துணிச்சலான தூரிகையாள் கிடைத்திட வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
16-02-2008, 10:06 AM
இப்படி தான் ஒவ்வொரு திரியா...போய் பொண்ணு பாக்க எல்லா அக்காவையும் தூது அனுப்ப வேண்டியதா இருக்கு...

யூ..டூ...சுகந்தன்...
மதி...கவலைபடாத ரெண்டுல ஒன்னு உனக்கு தந்துடுறேன்...அக்காளுங்க மூலமா ஏதுனா சிக்குதான்னு முதல்ல பாக்கலாம் சரியா...?!:fragend005:

தூது அனுப்பத் துணை தேடும் சுகந்தனுக்கு
துணிச்சலான தூரிகையாள் கிடைத்திட வாழ்த்துக்கள்

ஆஹா..நன்றி நண்பரே..!! அப்படி கிடைச்சா முதல் மரியாதை உங்களுக்குதான்..!!:wuerg019:

மதி
16-02-2008, 10:11 AM
மதி...கவலைபடாத ரெண்டுல ஒன்னு உனக்கு தந்துடுறேன்...அக்காளுங்க மூலமா ஏதுனா சிக்குதான்னு முதல்ல பாக்கலாம் சரியா...?!:fragend005:

ஹிஹி... புரிஞ்சிடுச்சா...?

அனுராகவன்
16-02-2008, 10:43 AM
அக்கா நீங்க எல்லாம் பொண்ணு பாத்து தம்பிக்கு ஓகே பண்ணாம எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்..போக்கா..போயி யவனியக்கா அரபி பொண்ண பாத்த மாதிரி நீங்களும் சிங்கை சீமாட்டி ஏதாவது தம்பிக்கு சிக்குமா தேடிபாருங்க...!:wuerg019:

பெண்களுக்கு குறைந்தாத சிங்கை..
இங்கு வந்தால் கலர் கலராக ரீங்காரமிடும் பல இன பெண்கள்
அதில் எது வேண்டும் தம்பிக்கு..

அனுராகவன்
16-02-2008, 10:49 AM
தூது அனுப்பத் துணை தேடும் சுகந்தனுக்கு
துணிச்சலான தூரிகையாள் கிடைத்திட வாழ்த்துக்கள்

ம்ம் நல்லா அப்படி சொல்லுங்க சரத்..
நீங்க சொன்னபடியே முடித்திடுவோம்..
அப்ப பொண்ணுங்க வேணும் ..

சுகந்தப்ரீதன்
16-02-2008, 10:49 AM
பெண்களுக்கு குறைந்தாத சிங்கை..
இங்கு வந்தால் கலர் கலராக ரீங்காரமிடும் பல இன பெண்கள்
அதில் எது வேண்டும் தம்பிக்கு..
எதுவா இருந்தாலும் பரவாய்யில்லை..ஆனா பொண்ணு தமிழ் பேசனும் அவ்வளவுதான்...!!:icon_rollout: (அக்க்கா இது தொடர்பா இனி இங்க விவாதிக்க வேணாம் அரட்டை பகுதிக்கு போயிடலாம்... இல்லண்ணா அமரு வந்து இதை வெட்டி அங்க ஒட்டிடுவாரு...!)

அனுராகவன்
16-02-2008, 11:19 AM
எதுவா இருந்தாலும் பரவாய்யில்லை..ஆனா பொண்ணு தமிழ் பேசனும் அவ்வளவுதான்...!!:icon_rollout: (அக்க்கா இது தொடர்பா இனி இங்க விவாதிக்க வேணாம் அரட்டை பகுதிக்கு போயிடலாம்... இல்லண்ணா அமரு வந்து இதை வெட்டி அங்க ஒட்டிடுவாரு...!)

குவா.. குவா என ஆரம்பித்து எங்கையோ வந்திருசு..
ம்ம் அங்கே சந்திப்போம் தம்பி..
அமரன் வர முன்பே அனு எஸ்கேப்!!

Vanambadi
17-02-2008, 06:28 AM
அட நம்ம நாட்டில்தான் அந்தக்காலம் முதல் மிகச் சின்ன வயதிலேயே கல்யாணம் (பால்யவிவாகம்) பண்ணிவைத்துவிடுவார்களே! அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளை கணக்கெடுத்தாலே நன்றாக தெரிந்துவிடப்போகிறது!

sarathecreator
17-02-2008, 07:34 AM
காந்தித்தாத்தாவுமே பால்ய விவாகம் செய்து கொண்டவர்தான்

ஓவியன்
17-02-2008, 09:37 AM
யூ..டூ...சுகந்தன்...

ஆமா, யாரைச் சொல்லுறீங்க.......???? :mini023::mini023::mini023:

சுகந்தப்ரீதன்
17-02-2008, 09:53 AM
ஆமா, யாரைச் சொல்லுறீங்க.......???? :mini023::mini023::mini023:
இப்படி எதுவும் தெரியாத மாதிரி கேட்டா தப்பிச்சுடலாம்ன்னு நினைப்பா...?:fragend005: (ஓமானி பொன்னு உங்களை நினைச்சு 'ஓ'ன்னு அழுதுகிட்டு இருக்குன்னு யவனியக்காதான் சொன்னாங்க..நான் சொல்லைப்பா..!)

ஓவியன்
17-02-2008, 10:16 AM
(ஓமானி பொன்னு உங்களை நினைச்சு 'ஓ'ன்னு அழுதுகிட்டு இருக்குன்னு யவனியக்காதான் சொன்னாங்க..நான் சொல்லைப்பா..!)

ப்ளீஸ்பா சுட்டி தாங்க, மன்ற வருகை ஒழுங்காக இல்லாததால், எங்கெங்கே யார் யார் காலை வாரி இருக்காங்கனு தெரியலையே........!! :eek:

சூரியன்
17-02-2008, 10:41 AM
இந்த சின்ன பையனுக்கு இந்த செய்தி இப்போது தேவையில்லை என நினக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
17-02-2008, 10:47 AM
ப்ளீஸ்பா சுட்டி தாங்க, மன்ற வருகை ஒழுங்காக இல்லாததால், எங்கெங்கே யார் யார் காலை வாரி இருக்காங்கனு தெரியலையே........!! :eek:
ஹைய்யோ..ஹைய்யோ...!:icon_rollout: சுட்டியில கொடுக்கலன்ணா.. அக்கா நேத்து போன் பண்ணி என்கிட்ட ஓமான் போயி அழுதுகிட்டு இருக்குற அண்ணியை(:fragend005:) பாத்துட்டு வாடான்னு சொன்னாங்க..ஹி...ஹி..! எனக்கு பட்ஜட் இடிக்குதுன்னு நான் போக்லையாக்கும்..:icon_ush:

சுகந்தப்ரீதன்
17-02-2008, 10:48 AM
இந்த சின்ன பையனுக்கு இந்த செய்தி இப்போது தேவையில்லை என நினக்கிறேன்.
ஸூரியா... இப்பவெல்லாம் சின்ன பசங்களுக்குதான் இது தேவையில்லாம தேவைபடும் போலிருக்கு...:sprachlos020:

சூரியன்
17-02-2008, 10:53 AM
ஸூரியா... இப்பவெல்லாம் சின்ன பசங்களுக்குதான் இது தேவையில்லாம தேவைபடும் போலிருக்கு...:sprachlos020:

அண்ணே நான் நல்லா இருக்கறது புடிக்கலையா,,:sprachlos020:

சுகந்தப்ரீதன்
17-02-2008, 10:59 AM
அண்ணே நான் நல்லா இருக்கறது புடிக்கலையா,,:sprachlos020:
அடேய்...அம்பி..ச்சே..தம்பி... நீ நல்லாயிருக்கனும்ன்னுதாண்டா அண்ணன் உன்னை படிக்க சொல்லுறேன்...:mini023:

சூரியன்
17-02-2008, 11:12 AM
அடேய்...அம்பி..ச்சே..தம்பி... நீ நல்லாயிருக்கனும்ன்னுதாண்டா அண்ணன் உன்னை படிக்க சொல்லுறேன்...:mini023:

நேரம் வரும் போது படிச்சு தெரிஞ்சுக்கலாம்..:redface:

தாமரை
02-09-2008, 07:04 AM
http://news.yahoo.com/story//nm/20080901/hl_nm/bipolar_fathers_dc

இன்னும் கொஞ்சம் அதிகப்படியான தகவல்கள்

:D :D :D

ஓவியன்
02-09-2008, 07:06 AM
பகிர்வுக்கு நன்றி...!! :D:D:D

தாமரை
02-09-2008, 07:08 AM
பகிர்வுக்கு நன்றி...!! :D:D:D

நன்றியை வெறுமனேவா சொல்றது? நீயுமொரு செய்தியோட சொல்லக்கூடாதா??:D:D:D

ஓவியன்
02-09-2008, 07:14 AM
நீயுமொரு செய்தியோட சொல்லக்கூடாதா??:D:D:D

இதே போல இன்னொரு செய்திதானே தந்திட்டால் போயிற்று.....

இன்னொரு செய்திக்கு இங்கே (http://www.nhs.uk/news/2008/06June/Pages/Olderdadsanddeathofchildren.aspx) அழுத்துங்கள்...!!

:D:D :icon_rollout: :D:D :icon_rollout: :D:D :icon_rollout: :D:D

விகடன்
02-09-2008, 07:34 AM
இதோட மன்றத்திலிருக்கும் கல்யாணமாணவர்கள் திருந்தினால் சரி... :D .
----------------------------------------------
இளந்தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைதானே நீண்ட ஆயுட்காலம் என்றெண்ணி இனிவரும் காலத்தில் 10 இன்றி இருபது வயது குறைந்த பெண்ணைத்திருமணம் செய்தாலும் செய்துவிடுவார்கள் வெள்ளையர்கள்.
வெள்ளையர்கள் ஒன்றை செய்தால் அதை பின்பற்ற நம்மவர்கள் பின்னிற்கு நிற்பார்களா என்ன? எப்படியும் அதற்கென ஒரு தொகுதி மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
பார்க்கலாம்...

பகிர்விற்கு நன்றி அண்ணா.

விகடன்
02-09-2008, 07:41 AM
அன்பு....
படித்தாயா ஓவியன் போட்ட செய்தியை...
இனியும் காலம் தாழ்த்தாது சட்டு புட்டென்று கலியாணத்தைக்கட்டிடப்பா.
ரூட்தான் கிளியராகிட்டெல்லே.....

அறிஞர்
02-09-2008, 02:29 PM
http://news.yahoo.com/story//nm/20080901/hl_nm/bipolar_fathers_dc

இன்னும் கொஞ்சம் அதிகப்படியான தகவல்கள்

:D :D :D

இதே போல இன்னொரு செய்திதானே தந்திட்டால் போயிற்று.....

இன்னொரு செய்திக்கு இங்கே (http://www.nhs.uk/news/2008/06June/Pages/Olderdadsanddeathofchildren.aspx) அழுத்துங்கள்...!!

:D:D :icon_rollout: :D:D :icon_rollout: :D:D :icon_rollout: :D:D
கூடுதல் தகவல்களை பலரை அவசரப்படுத்துவது போல இருக்கு..

asok_03
02-09-2008, 05:50 PM
ம்ம் அப்ப அடுத்த வருஷமே ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பன்னிட வேண்டியதுதான்...........