PDA

View Full Version : நதியின் சலனங்கள்



bharathappriyan
27-06-2006, 11:52 PM
என்னை கடந்து போன தென்றலின் முகத்தில்
அத்தனை சந்தோசம்.
நான் நடந்து போன பாதையெங்கும்
பூக்களின் ஆரவாரம்.
ஒருகணம் திகைத்தாலும்
உடனே புரிந்து கொண்டது மனது.
என்னில் தானே நீ இருக்கிறாய்.

-------------------------------------------
உனக்கு பெயரிட்ட உனது அப்பாவை
திட்டிக் கொண்டிருக்கின்றன
உனது பெயரில் இல்லாத
மற்ற தமிழ் எழுத்துக்கள்.

அல்லிராணி
28-06-2006, 04:00 AM
-------------------------------------------
உனக்கு பெயரிட்ட உனது அப்பாவை
திட்டிக் கொண்டிருக்கின்றன
உனது பெயரில் இல்லாத
மற்ற தமிழ் எழுத்துக்கள்.

அது
எழுத்துக்களின்
ஆனந்தக் கண்ணீர்
உன் வாயில்
கடிபட்டு...!!!

அல்லி

அல்லிராணி
28-06-2006, 04:03 AM
என்னை கடந்து போன தென்றலின் முகத்தில்
அத்தனை சந்தோசம்.
நான் நடந்து போன பாதையெங்கும்
பூக்களின் ஆரவாரம்.
ஒருகணம் திகைத்தாலும்
உடனே புரிந்து கொண்டது மனது.
என்னில் தானே நீ இருக்கிறாய்.

.
உள்ளொன்று வைத்து (என்னை)
புறமொன்று பேசாதீர் (பூ, தென்றல் என)
ஏன்
நான் மணக்கவில்லையா
இல்லை
இதமாய் உம்மை
வருடவில்லையா???

தாமரை
28-06-2006, 04:13 AM
உள்ளொன்று வைத்து (என்னை)
புறமொன்று பேசாதீர் (பூ, தென்றல் என)
ஏன்
நான் மணக்கவில்லையா
இல்லை
இதமாய் உம்மை
வருடவில்லையா???

மணக்கும் வரை(திருமணம் ஆகும் வரை)
மணப்பாள்..
மணந்த பின்போ
அது வெறும்
மனப் பால்...

தாமரை


தாமரையின் தத்துவம்:
இன்னிக்குச் செத்தால் நாளைக்குப் பால்..:rolleyes: :rolleyes: :rolleyes: . கல்யாணம் பண்ணினா அன்றைக்கே பால்...:D :D :D

மதி
28-06-2006, 04:29 AM
மணக்கும் வரை(திருமணம் ஆகும் வரை)
மணப்பாள்..
மணந்த பின்போ
அது வெறும்
மனப் பால்...

தாமரை


தாமரையின் தத்துவம்:
செத்தால் மூன்றாம் நாள் பால்... கல்யாணம் பண்ணினா அன்றைக்கே பால்...:D :D :D

இப்படி எல்லாம் பயமுறுத்தக்கூடாது. ஏற்கனவே நிறைய அங்கிள் காத்திட்டிருக்காங்க.

அல்லிராணி
28-06-2006, 04:49 AM
தாமரையின் தத்துவம்:
செத்தால் மூன்றாம் நாள் பால்..:rolleyes: :rolleyes: :rolleyes: . கல்யாணம் பண்ணினா அன்றைக்கே பால்...:D :D :D
பிறந்தாலும் பால்...
மணந்தாலும் பால்...
செத்தாலும் பால்...

பிறந்தபோது முழுப்பாலும் உனக்குத்தான்..
மணந்தாலோ பாதிப் பங்கு..
செத்தாலோ ஊற்றப்பட்டாலும் குடிக்க முடியாது..

இதிலிருந்து புரிவதெல்லாம்..
இப்பொழுதே பாலை
நன்கு குடித்து விடு
அது
பசும் பாலாய் இருந்தாலும் சரி
மனப் பாலாய் இருந்தாலும் சரி

அல்லி

ஓவியா
28-06-2006, 11:00 AM
தாமரையின் தத்துவம்:
செத்தால் மூன்றாம் நாள் பால்..:rolleyes: :rolleyes: :rolleyes: . கல்யாணம் பண்ணினா அன்றைக்கே பால்...:D :D :D
:D :D :D




பிறந்தாலும் பால்...மணந்தாலும் பால்...செத்தாலும் பால்...

பிறந்தபோது முழுப்பாலும் உனக்குத்தான்..
மணந்தாலோ பாதிப் பங்கு..
செத்தாலோ ஊற்றப்பட்டாலும் குடிக்க முடியாது..

இதிலிருந்து புரிவதெல்லாம்..இப்பொழுதே பாலை நன்கு குடித்து விடு
அது பசும் பாலாய் இருந்தாலும் சரி மனப் பாலாய் இருந்தாலும் சரி
அல்லி

வணக்கம் யக்கா / மக்கா (புரியாதவர்கள் அல்லியின் புரொபைலை பார்க்கவும்)

சபையில் இப்படியே தத்துவ மழையை அள்ளி விட்டுகொண்டே இருக்கவும்
வாழ்த்துக்கள்

ஓவியா
28-06-2006, 11:02 AM
என்னை கடந்து போன தென்றலின் முகத்தில்
அத்தனை சந்தோசம்.
நான் நடந்து போன பாதையெங்கும்
பூக்களின் ஆரவாரம்.
ஒருகணம் திகைத்தாலும்
உடனே புரிந்து கொண்டது மனது.
என்னில் தானே நீ இருக்கிறாய்.

-------------------------------------------
உனக்கு பெயரிட்ட உனது அப்பாவை
திட்டிக் கொண்டிருக்கின்றன
உனது பெயரில் இல்லாத
மற்ற தமிழ் எழுத்துக்கள்.

அருமையோ அருமை.

இன்னும் அதிகம் பதிக்க வாழ்த்துக்கள்

Raaga
28-06-2006, 11:04 AM
எனக்கு பிடித்த பால் வள்ளுவர் தந்த மூன்றாம் பால்...

இது என் தவறில்லை... நான் வாழும் நாடு அப்படி...

றெனிநிமல்
28-06-2006, 08:45 PM
எனக்கு பிடித்த பால் வள்ளுவர் தந்த மூன்றாம் பால்...

இது என் தவறில்லை... நான் வாழும் நாடு அப்படி...

ஆ! நான் நினைத்தேன் இவர் இருப்பது சவுதி அரேபியா என்று
ஆனால் அவர் இருப்பது பிரான்ஸ் என்று தானே இருக்கின்றது?:D

றெனிநிமல்
28-06-2006, 08:48 PM
தாமரையின் தத்துவம்:
செத்தால் மூன்றாம் நாள் பால்... கல்யாணம் பண்ணினா அன்றைக்கே பால்...:D :D :D :D
கவலை வேண்டாம் உங்களுக்கு பால் காத்திருக்கின்றது!
அது என்ன பார் என்று யாருக்குத்தெரியும்!:D

இளசு
28-06-2006, 08:49 PM
காதலில் ஒன்றாவதும்
காதலி பெயரே வேதமாவதும்...

காதல் மட்டும் ஏன் எப்பவுமே புதுசாய்.....???!!!


வாழ்த்துகள் பாரதப்ரியன்.