PDA

View Full Version : இலங்கைச் செய்திகள் ஜுன் 27



இனியவன்
27-06-2006, 01:35 PM
1) பன்னிப்பிட்டியில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை நடக்கிறது. கொழும்பு
பொரளை கனத்தை மயானத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க
கூறினார்.

களனி, வரகொடவில் பரமி குலதுங்க சகோதரரி வீடு உள்ளது. அங்கு அவருடைய உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர் முழு இராணுவ மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என பிரசாத் சமரசிங்க விளக்கினார்.

வன்முறையைக் கைவிடுமாறு சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்

பக்குவத்தில் இல்லை என்பதை பரமியின் கொலை உணர்த்துகிறது என்று அதிபர் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

இந்நிலையில், தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்பு, சிறிலங்காவின் தேசிய மருத்துவமனைக்கு இது பற்றிய தகவல்

வந்திருக்கிறது.தொலைபேசியில் அழைத்த ஒருவர், சிறிது நேரத்தில் மேலதிக வேலைகள் வரலாம் என்று கூறியதாக "ஹிந்து" நாளேடு

செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையை தொடர்பு கொண்டவர் சிங்களத்தில் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி

உள்ளது. இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகள் பலர் தற்போது வெளிநாட்டில் உள்ளனர். எனவே நாட்டின் தற்போதைய சூழலில்
அவர்களின் சேவையைப் பெற முடியவில்லை. அது பற்றி அரச தலைவர் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.தே.க. கோரியுள்ளது.

2) ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற பிடிவாதத்தை கைவிட்டு சமாதான முயற்சிகளில் அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபட வேண்டும் என்று

மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் அடிகளார் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய
செவ்வியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் மாற்றம் செய்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

அதை விடுத்து இப்போதே மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறுவது அர்த்தமற்றது என்றார் அவர்.

கருணா குழு அப்பாவிப் பொதுமக்களை வேட்டையாடுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். கிணற்றுத் தவளைகள் போல

செயற்படும் ஜே.வி.பி.யை மகிழ்ச்சிப்படுத்துவதை விட நாட்டின் எதிர்காலம் பற்றி மகிந்த சிந்திக்க வேண்டும் என்று மன்னார் ஆயர்
தெரிவித்தார்.

3) மட்டக்களப்பு வாகரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறிவைத்து ராணுவத்தின் துணைக்

இராணுவக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். அதில் போராளியொருவர் வீர மரணமடைந்தார். வாகரை கிருமிச்சையில் செவ்வாய்க்கிழமை
காலை அத்தாக்குதல் நடத்தப்பட்டது.

துணை இராணுவக் குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது போராளி மரணித்ததாக திருகோணமலை அரசியல்துறைப்
பொறுப்பாளர் எழிலன் தெரிவித்தார்.

4)திருகோணமலையில் அப்பாவி தமிழர்கள் நால்வரைக் காணவில்லை. அவர்கள் கால்நடைகளைத் தேடியும், விறகு வெட்டவும்
காட்டுப்பகுதிக்குச் சென்றனர். எனினும் இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை.

அது பற்றி திருகோணமலை காவல்துறை மற்றும் இராணுவத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் காணாமல் போன அப்பாவி பொதுமக்களை உடனடியாக கண்டுபிடிக்க கோரினார்.