PDA

View Full Version : மிட்டல்-ஆர்சிலர் இணைப்பு



அறிஞர்
26-06-2006, 09:21 PM
மிட்டல்-ஆர்சிலர் இணைப்பு

இரும்பு உற்பத்தியில் இலண்டனில் ஆதிக்கம் செலுத்தும் லட்சுமி மிட்டலை தெரியாதவர்களின் எண்ணிக்கை சிலர். நலிவடைந்த இரும்பு ஆலைகளை குறைந்த விலைக்கு வாங்கி.... முன்னேற்றி... இலாபம் பார்க்கும் நபர்.

இந்த வருடத்தில் முக்கிய செய்தியாக... வலம் வருவது மிட்டல் குழுமமும், ஆர்சிலர் குழுமமும் இணைவது. இதற்காக சில வருடங்கள் முயற்சிகள் நடந்தன. ஆனால் அதை தடை செய்ய.. சில ஐரோப்பிய நாடுகள் (குறிப்பாக பிரான்ஸ்) முயன்றது. ரஷ்யாவின் ஒரு கம்பெனியும் பங்குகளை (32%) வாங்க முயன்றது. ஆனால் இறுதியில் லட்சுமி மிட்டல் வெற்றிப்பெற்றுள்ளார். 45% பங்குகளை ஆர்ச்சிலர் குழுமத்திலிருந்து வாங்குகிறார். ஆர்ச்சிலர் போர்டு மீட்டிங்கில் இது முடிவாகிவிட்டது. பங்குதாரர்கள் கூட்டத்தில் ஜூன் 30தேதி.. இறுதி ஒப்புதல் கிடைக்கும்

இதன் மூலம், ஆர்ச்சிலர்-மிட்டல் குழுமம் வருடத்திற்கு 1 கோடி டன் ஸ்டீல் தயாரிக்கப்போகிறது. இது உலக ஒட்டுமொத்த மொத்த உற்பத்தியில் 10%.

இதன் மூலம் இலட்சுமி மிட்டல் அசைக்கமுடியாத இரும்பு மனிதனாக உருவெடுக்கிறார். இவர் வைப்பது தான் சட்டம் என நிலைமைகள் மாறும்.... இரும்பு விலையும் இந்த வருடத்தில் உயரும் என்கிறார்கள்.

இளசு
26-06-2006, 09:26 PM
நானும் கேள்விப்பட்டேன் அறிஞரே.. இந்த பிரம்மாண்ட இணைப்பைப் பற்றி..

ஏற்கனவே ரஷ்ய நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய.
இழப்பீடாக மட்டும் மிட்டல் 800 கோடி ரூபாய் தருவாராமே...

aren
27-06-2006, 02:07 AM
இது ஒரு நல்ல வாய்ப்பு மிட்டலுக்கு. இதன் மூலம் நம் இந்தியாவின் பெருமையை மேலும் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

ஆனால் மிட்டல் எப்படி ஆர்சிலாரை வழிநடுத்துகிறார் என்பதைப் பொருத்தே மற்ற விஷயங்கள்.

இனியவன்
27-06-2006, 09:37 AM
மிட்டல்
தொட்டதெல்லாம்
மிளிருமா.
பொறுத்திருந்து பார்ப்போம்.

pradeepkt
27-06-2006, 11:10 AM
தனக்கு அடுத்தபடியாக இருக்கும் ஆலையை விட மூன்று மடங்கு அதிகம் உற்பத்தி செய்யப் போகிறது ஆர்சில்லர்-மிட்டல் நிறுவனம்.

இந்த இணைப்பு மூலம் மிட்டலுக்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் அவர் விலையேற்றம் மூலம் சரிக்கட்டுவார் என்று மேல்நாட்டுப் பட்சிகள் கூவுகின்றன.

ஓவியா
27-06-2006, 04:10 PM
தனக்கு அடுத்தபடியாக இருக்கும் ஆலையை விட மூன்று மடங்கு அதிகம் உற்பத்தி செய்யப் போகிறது ஆர்சில்லர்-மிட்டல் நிறுவனம்.

இந்த இணைப்பு மூலம் மிட்டலுக்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் அவர் விலையேற்றம் மூலம் சரிக்கட்டுவார் என்று மேல்நாட்டுப் பட்சிகள் கூவுகின்றன.

ஆமாம் பிரதீப்,
என் ப்ரோஜெக்ட் மேனஜிமென்ட் பாடத்தில் இவரை பற்றி ஒரு அருமையான விமர்சனமே நடந்தது

விலையேற்றம் (மக்களை) பொருளாதாரத்தை பாதிக்கும்
பொருத்திருந்து பார்ப்போம்.....

இராசகுமாரன்
27-06-2006, 04:22 PM
வரும் வெள்ளிக் கிழமை ஒரு கண்டம் இருக்கிறது. ஆர்சிலர் பங்கு தாரர்கள் வரும் வெள்ளிக் கிழமை கூடுகிறார்கள், அதில் அவர்கள் ரஷ்ய கம்பெனியின் இணைப்பை நிராகரிக்க வேண்டும், அப்போது தான் மிட்டல் கம்பெனியுடன் இணைய முடியும்.

விலை உயரலாம், அது போல தரமும் உயரும்.
ஒரு இந்தியனின் விடா முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்.
இவரை படிப்பினையாக கொண்டு பலர் முன்னேரணும், இவரை முன்மாதிரியாக கொண்டு இன்னும் பல தொழில் முனைபவர்கள் உதிக்க வேண்டும்.

அறிஞர்
27-06-2006, 04:24 PM
வரும் வெள்ளிக் கிழமை ஒரு கண்டம் இருக்கிறது. ஆர்சிலர் பங்கு தாரர்கள் ரஷ்ய கம்பெனியின் இணைப்பை நிராகரிக்க வேண்டும், அப்போது தான் மிட்டல் கம்பெனியுடன் இணைய முடியும்.

விலை உயரலாம், ஆனால் ஒரு இந்தியனின் விடா முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட எல்லா போர்ட் உறுப்பினர்களையும் சரிகட்டிவிட்டார் எனத்தோன்றுகிறது. ரஷ்ய கம்பெனி கேட்ட தொகையையும் கொடுப்பதால்.. கண்டத்தை எளிதில் தாண்டிவிடுவார் எனத்தோன்றுகிறது

mukilan
27-06-2006, 04:29 PM
இப்படியே அடுத்து மென்பொருள் கம்பனிகளும் அதி விரைவில் அமெரிக்க கம்பெனிகளை வாங்கி அமெரிக்க வாசிகளும் குடிமகன்களும் இந்திய தூதரகத்தின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாய் எனக்கு ஒரு கனவு பல நாட்களாய் வந்து கொண்டிருக்கிறது.

ஓவியா
28-06-2006, 11:45 AM
இப்படியே அடுத்து மென்பொருள் கம்பனிகளும் அதி விரைவில் அமெரிக்க கம்பெனிகளை வாங்கி அமெரிக்க வாசிகளும் குடிமகன்களும் இந்திய தூதரகத்தின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாய் எனக்கு ஒரு கனவு பல நாட்களாய் வந்து கொண்டிருக்கிறது.

:eek: :eek: :eek:
கனவு மெய் பட வாழ்த்துக்கள்...:D :D :D :D

அறிஞர்
28-06-2006, 12:03 PM
இப்படியே அடுத்து மென்பொருள் கம்பனிகளும் அதி விரைவில் அமெரிக்க கம்பெனிகளை வாங்கி அமெரிக்க வாசிகளும் குடிமகன்களும் இந்திய தூதரகத்தின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாய் எனக்கு ஒரு கனவு பல நாட்களாய் வந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் இந்தியாவில் வேலை செய்ய ஐரோப்பியர், அமெரிக்கர்.... 500-600 பேர் பெரிய கம்பெனிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்

mukilan
29-06-2006, 07:42 PM
என் கனவு சீக்கிரமே மெய்ப்படும் போலத்தான் தோன்றுகிறது.
[http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/IndiaInc.jpgபடம் சிறியதாத் தெரிகிறதே. கீழ்க்கண்ட லிங்க் ல் சென்று படிக்கவும்.
http://www.time.com/time/archive/preview/0,10987,1205374,00.html