PDA

View Full Version : மன்றம் விரிவடைய யோசனைகள்



xathish
26-06-2006, 07:13 PM
:rolleyes: Mudhalil anaivarum ennai mannithukolavum, thamilil eluda mudiyamaiku varundhukiren.Thamilai valarka angilathai oru karuviyaka payanpaduthuvathil thavarillai enra karuthudayavan nan. Melum nan thamil than eluthuven enru ninaithal intha karuthukalai therivika mudiyamal poirukalam allatha en ponnana pala manithulikal pudhaikapattirukum.Practicalaka yosithathin vilaivaka enaku thonriya karuthukalai ungalidam pakirnthu kolla ingu koduthulen. Ivatrai patriya ungal karuthukalai thayavuseithu therivikavum


Difficulty with tamil typing:

Enavae intha mathiriyana vakiyangalai anumathikalam. Allathu ivatrai thamilil matra ethuvana softwarkal kidaikumidathai therivikalam. Intha matram ennai ponravarkalai
ukkuvikum enpathil ellalavum iyamillai(idhai type panna nan eduthu konda neram 25 nimidankal thamil enral 1 mani neram aki irukum)

Cinema:

Kataikal, kavithaikal, katuraikal ivatrai mattumae tamilai valarka nambikondirukamal
cinemavayum nambalamae. Cinema sarnantha votedupukal Ex: sirantha pathu padankal, padalkal, nikalchikal , tharpothaya padangal patriya vimarsanangal akiavatrin moolam mantra sonthangalin ACTIVE PARTICIPATION i sulapamaga athikarikalam.

Easy sharing:

E-Books,Softwares ponra amsangalai rapidshare ponra file hosting valai thalangalil pathithu mantra bandwidth bathikapadamal parthukollalam.

Information:

Tamil softwares matrum tamil sambhanthapatavai kidaikum webthalankalai pakirnthukolalam. Munnani tamil inayangaludan inaithu tamil groupkalai uruvakalam.

அறிஞர்
26-06-2006, 07:46 PM
இதோ தமிழாக்கம்

முதலில் அனைவரும் என்னை மன்னித்துகொள்ளவும், தமிழில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். தமிழை வளர்க்க ஆங்கிலத்தை ஒரு கருவியாக பயன்படுதுவதில் தவறில்லை என்ற கருத்துடையவன் நான். மேலும் நான் தமிழ் தான் எழுதுவேன் என்று நினைத்திருந்தால் இந்த கருதுக்களை தெரிவிக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது என் பொன்னான பல மணித்துளிகள் புதைக்கபட்டிருக்கும். ப்ராக்டிக்கலாக யோசித்ததின் விளைவாக எனக்கு தோன்றிய கருதுக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இங்கு கொடுத்துள்ளேன். இவற்றை பற்றிய உங்கள் கருத்துக்களை தயவுசெய்து தெரிவிக்கவும்.

Difficulty with tamil typing:

எனவே இந்த மாதிரியான (Xathish பதிந்தது போன்ற) வாக்கியங்களை அனுமதிக்கலாம் அல்லது இவற்றை தமிழில் மாற்ற ஏதுவான சாப்ட்வேர்கள் கிடைக்குமிடத்தை தெரிவிக்கலாம். இந்த மன்றம் என்னை போன்றவர்களை ஊக்குவிக்கும் என்பதில் எள்ளவில் ஐயமில்லை (இதை டைப் பண்ண நான் எடுத்துக்கொண்ட நேரம் 25 நிமிடங்கள். தமிழ் என்றால் 1 மணி நேரம் ஆகியிருக்கும்).

Cinema:

கதைகள், கவிதைகள், கடுரைகள் இவற்றை மட்டுமே தமிழை வளர்க்க நம்பிகொண்டிருக்காமல் சினிமாவையும் நம்பலாமே. சினிமா சார்ந்த ஓட்டெடுப்புகள் (எ.கா : சிறந்த புது படங்கள், பாடல்கள், நிகழ்ச்சிகள், தற்போதைய படங்கள் பற்றிய விமர்சங்கள் ஆகியவற்றின் மூலம் மன்ற சொந்தங்களின் ACTIVE PARTICIPATION ஐ சுலபமாக அதிகரிக்கலாம்.

Easy sharing:

ஈ-புத்தகங்கள், சாப்ட்வேர் போன்ற அம்சங்களை ராபிட்ஷேர் போன்ற பைல் ஹோஸ்டிங் வலை தலங்களில் பதிந்து மன்ற பாண்ட்வித் பாதிக்கபடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Information:

தமிழ் சாப்ட்வேர்ஸ் மற்றும் தமிழ் சம்பந்தப்பட்டவை கிடைக்கும் தளங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். முன்னணி இணையங்களுடன் இணைந்து தமிழ் குழுமங்களை உருவாக்கலாம்

இளசு
26-06-2006, 09:19 PM
அன்பு சதீஷ்

ஆர்வமான யோசனைகளுக்கு முதலில் பாராட்டும் நன்றியும்.

நீங்கள் தெரிவித்துள்ள அத்தனையும் தற்போது மன்றத்தில் இருக்கின்றன.
அவற்றை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்துவது நம் அனைவரின் கையில் உள்ளது.


எடுத்துக்காட்டாக -

ஆங்கில எழுத்துருவில் அச்சியதை , மன்றப் பக்க்கங்களின் அடியில் வரும் யூனிகோட் கன்வர்ட்டரின் இடப்பக்கம் இட்டு, Romanised என்ற நடுப்புள்ளியை அழுத்தினால் வலப்பக்கம் தமிழில் யூனிக்கோடுக்கு ஏற்ற உருவில் தோன்றும். அதை காப்பி செய்து பதிக்கவும் அங்கேயே வசதி உண்டு.

அறிஞர்
26-06-2006, 11:14 PM
மற்ற நண்பர்கள் நல்ல கருத்துக்களை கூறுவார்கள்...

இளசு சொல்வது போல தாங்கள் கூறிய எல்லாமே தளத்தில் உள்ளது. அதை பயன்படுத்துவது.... உறுப்பினர்கள் கையில் உள்ளது.

இதோ என்னுடைய கருத்து.... இதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

ஆங்கிலம் நல்ல வழிதான்.. இல்லையென்று கூறவில்லை. எனக்கு தமிழ் டைப்பிங்க் தெரியாது. பிறகு மன்றம் மூலம் சிறிது சிறிதாக பழகி.. இப்பொழுது நன்றாக டைப் பண்ணுகிறேன்.

சிறு குழந்தை பிறந்தவுடன் நடக்காது. அதுவே விழுந்து விழுந்து முயற்சித்து.... நடக்க பழகனும்.. அதுபோலதான்.. பழகும் போது சற்று கடினமாக இருக்கும்... பழகிவிட்டால் மிக எளிதாக இருக்கும்.

தங்கள் நோக்கில் டைப் பண்ணுவதை யோசிக்கிறீர்கள்... ஆனால் தங்கள் கருத்தை படிப்பவர்களை எண்ணி பார்த்தீர்களா. நீங்கள் பதிந்த பதிப்பை (தங்கலீஸ்) படிக்க, புரிந்துக்கொள்ள ஆகும் நேரம் எவ்வளவு?? அதே நேரம்... நான் மொழியாக்கம் செய்துள்ளது படிக்க ஆகும் நேரம் எவ்வளவு??

நாம் நம்முடைய கருத்தை தெரிவிக்கும்போது.. அது அடுத்தவர்களை.... சரியாக சென்றடையவேண்டும். அதற்கு எழுத்தும், மொழியும் முக்கியம்.

புதியவர்கள் பழக மன்றத்தில் unicode convertor உள்ளது. அதை உபயோகிக்கலாம். முரசு அஞ்சல், ஈகலப்பை மூலம்.. எளிதாக தமிழ் எழுதலாம். கீழ்கண்ட படம் தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
http://i13.photobucket.com/albums/a282/aringar/anjalkbd.gif

அறிஞர்
26-06-2006, 11:49 PM
தங்களின் எண்ணம் நல்லது. மன்றத்தில் எல்லா வசதிகளும் உள்ளது. ஆனால் அதை மேம்படுத்துவது.. அனைத்து உறுப்பினர்கள் கையில் தான். தாங்கள் சொல்லியது போன்று... தாங்கள் விரும்பிய விமர்சனங்கள், ஓட்டெடுப்புக்களை கொடுங்கள்......

வெளிநாடுகளில் பிறந்து தமிழை நேசிக்கும் நம் அன்பு நெஞ்சங்களின் (மனோஜி, சுவேதா, ஓவியா, மயூரேசன், jptheepan.. இன்னும் பலர்) தமிழ் படைப்புக்களை பாருங்கள்.

முயன்றால் முடியாது ஒன்றுமில்லை சதீஸ்... உங்களால்.. நன்றாக தமிழ் எழுத முடியும்.. முயுலுங்கள்... தமிழ் இணைய தளங்களில் தங்களுக்கு என ஒரு இடத்தை ஏற்படுத்துங்கள்.
----
சினிமா செய்திகளுக்கு கதம்ப மன்றம் உள்ளது. உள்ளே சென்று பாருங்கள் பாடல்கள் பற்றியும், பாட்டுக்கு பாட்டு பற்றியும் பரிமாறப்படும் செய்திகளையும்.....

கணினி சம்பந்தப்பட்ட புதுச்செய்திகளுக்கு ரோஜா மன்றம் உள்ளது.

ஈபுத்தகங்களை.. சில நண்பர்கள் கொடுக்கிறார்கள்... சமீபத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகளை மற்ற தளங்கள் மூலம் நண்பர்கள் கொடுத்தார்கள். மேலும் பல இலக்கியங்களையும் தருகிறார்கள்.
-----------

Mano.G.
27-06-2006, 01:33 AM
தமிழின் மேல் உள்ள ஆர்வம் பற்றுதல் உள்ள உங்களுக்கு
எனது வாழ்த்துக்கள் அத்துடன் ஆலோசனைக்கும் நன்றி

மேலே நண்பர் இளசுவும் அறிஞரும் கூறிய ஆலோசனை படி இங்கு
உங்கள் ஆலோசனையை தமிழில் தெரிவித்திருந்தால் மேலும்
பலனுள்ளதாக இருந்திருக்கும்.

முயற்சி செய்யுங்கள்



மனோ.ஜி

இனியவன்
27-06-2006, 01:59 AM
இளசு அறிஞர் மனோ (அண்ணா)
யாவரும் அருமையான வழிகாட்டலை வழங்கியிருக்கிறார்கள்.
அனைவருக்கும் அது பயனளிக்கும்.

aren
27-06-2006, 02:13 AM
சதீஷ் வாழ்த்துக்கள்.

நண்பர்கள் இளசு, அறிஞர் ஆகியோர் சொன்னதுபோல் முயற்சி செய்து பாருங்கள், உங்களாலும் அருமையாக தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

அதற்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் நீங்கள் மன்றத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளை அள்ளிவிடுங்கள். மன்றத்தால் முடிந்ததை இங்கே நிறைவேற்றுவார்கள்.

மயூ
28-06-2006, 07:40 AM
சதீஸ் மன்றம் பால் உங்களுக்கு இருக்கும் அன்புக்கு நன்றி.
அவசரத்திற்கு செயலிகளை நிறுவ முடியாத நிலையில் பின்வரும் தளத்திற்கு சென்று தட்டச்சிடுங்கள்.ஒப்பீட்டளவில் இது இலகுவானது....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அறிஞர்
28-06-2006, 12:02 PM
சதீஸ் மன்றம் பால் உங்களுக்கு இருக்கும் அன்புக்கு நன்றி.
அவசரத்திற்கு செயலிகளை நிறுவ முடியாத நிலையில் பின்வரும் தளத்திற்கு சென்று தட்டச்சிடுங்கள்.ஒப்பீட்டளவில் இது இலகுவானது....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm நல்ல தளம் மயூரேசன்

ஓவியா
28-06-2006, 12:22 PM
தம்பி சதிஷ் நலமா?
உங்களின் ஆர்வமான யோசனைகளுக்கு முதலில் பாராட்டும் நன்றியும்.

நமது மூத்த சான்றொர்களின் கருத்துக்களை பின் பற்றினால் வெற்றி நிச்சயமே, முயற்சி செய்யுங்கள் உங்களாலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

என் வாழ்த்துக்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
02-07-2006, 05:24 AM
உங்கள் ஆர்வத்திற்கும் முயற்ச்சிக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பும் அனைத்தும் இங்கே உள்ளது. இனி என்ன அசத்துங்க காத்திருக்கிறோம்

meera
13-09-2006, 05:15 AM
சதீஷ்,உங்களின் தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும்,ஆலோசனையும் நன்று.உங்களுக்கு எனக்கு தெரிந்த வலைதளத்தையும் அறிவிக்கிறேன் http://www.suratha.com/unicode.htm என்ற வலைத்தளத்தில் thaminglish என்ற பொத்தானை தட்டினால் உங்களின் தமிழ் பதிப்புக்களை பதிக்க முடியும்.