PDA

View Full Version : தேதியில்லாக் குறிப்புகள்- மயூரேசன்

மயூ
26-06-2006, 10:33 AM
ஒரு வயது ம்ஹும்....
இரண்டாவது வயது ம்ஹும்.... ஞாகபகம் இல்லை
மூண்றாவது வயது சத்தியமா எதுவும் குறிப்பிடும் படியாக ஞாபகம் இல்லை...
நான்காவது வயதில்.... ஆம் சில சில ஞாபகங்கள் வருகின்றது...... ஆனால் சிதறல் சிதறலாக அங்கு மிங்குமாக.......

நர்சரிக்கு அம்மா காலையில் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போவது ஞாபகம் இருக்கின்றது..

நர்சரி ரீச்சரின் பெயர் பால.... என்று தொடங்குகின்றது சரியாக ஞாபகம் இல்லை. எல்லாரும் வீடு சென்றபின்னரும் நான் அம்மாவின் வருகைக்காக காத்து இருப்பேன்....... அம்மா அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் என்பதால் அம்மா வர எப்பிடியும் 1.30 ஆகும். அதுவரைக்கும் நர்சரி ரீச்சரின் பேத்தியுடன் விளையாடியதாக ஞாபகம். பேத்தியின் பெயர் ஜனனி என்று நினைக்கின்றேன். சில வருடங்களிற்குப் முன்னர் இவர்களைப் பற்றி அம்மா ஒரு நாள் சொன்னா நர்சரி ரீச்சரும் அவரின் முழு குடும்பமும் கனடாவில் செட்டிலாகிட்டதாய். இதுக்கு மேல் ஜனனி பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது... அவ முகம் கூடி எனக்கு இப்ப ஞாபகம் இல்லை...

இதுக்குப் பிறகு பாடசாலைக்கு போனது நல்லா ஞாபகம் இருக்கு அப்போது நான் சேர்ந்த பாடசாலை கோனேஸ்வரா வித்தியாலயம். பாடசாலைக்குள் நுழைந்தபேது கஜேந்திரன் எனும் பொடியன் ஜன்னலில தொங்கிக் கொண்டிருந்ததும் நல்ல ஞாபகம் இருக்குது. இப்ப இவன் யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றான். இவங்கள விட சங்கர்கணேஷ், தேவ்காந், ஜெகன்.... இவங்களெல்லாம் இப்ப எங்கையோ தெரியாது.

பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கலாம் அதுக்குப் பின்னர் சுவருக்கு மறுபக்கமுள்ள இந்துக் கல்லூரிக்குப் போக வேண்டும். ஆனால் நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது இரண்டு பாடசாலைகளையும் ஒரு பாடசாலையாக்கி மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
http://www.tcohindu.org

முதலாம் வகுப்பில் பாலேஸ் ரீச்சர். இப்ப கண்டாலும் சைக்கிளால இறங்கி குட்மோர்ணிங் சொல்லுவன். இப்ப ஓய்வு பெற்று விட்டா. ஆங்கிலம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களையும் இவரே படிப்பிப்பார். நாம் படிக்கும் போது நான்காம் ஆண்டு வரை எமது இலங்கை பாடவிதானத்தில் ஆங்கிலம் இருக்கவில்லை. நான்காம் ஆண்டுக்கு போக பயப்பிட்ட காரணங்களில் ஒன்று ஆங்கிலம் தொடங்குகின்றது, இரண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, மூண்று என் பிரியமான பாலேஸ் ரீச்சர் போய் புது ரீச்சர், பெயர் ஜெயகலா வருகின்றார். எதர் பார்த்ததைவிட எம்முடன் அன்பாகவே இருந்தார்.
எட்டு வயதில் என்றுதான் நினைக்கின்றேன் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுவிஸ்லாந்து சென்ற ஞாபகம் இருக்கின்றது. அவரை வழி அனுப்ப கொழும்பு வந்த போது புறக்கோட்டை அரசமரத்தடியில் துலைந்து போய் அழுது கொண்டு நின்றதும் பின்பு கடலை விற்கும் ஒரு சிங்களவன் என்னை போக்குவரத்து கண்காணிப்பு பொலீசிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டதும் நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது. இப்போது கூட அவ்விடத்தால் செல்லும்போது ஒரு தடவை மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். அந்த கடலை வியாபாரி மட்டும் ஞாபகம் இல்லை........

நான்காம் வகுப்பில்தான் என் வாழ்கையில் பயங்கரமான விபத்து நடந்தது. அது வரை சுகந்திரப் பறவையாக பறந்து திரிந்த என்னை ரியூசன் எனும் கூட்டுக்குள் அடைத்து விட்டப்பட்ட நாள். அதுவும் நகரிலேயே கடுமைக்குப் பெயர் போன தனம் அக்கா எனும் ரீச்சரிடம். இவரிடம் நான் வேண்டாத பேச்சு என்ன வேண்டாத அடி என்ன. பல தடவை அம்மா நான் செய்த குற்றங்களிற்காக ரியூசன் வகுப்பு ரீச்சரை சந்தித்து இருக்கின்றா. உதாரணமா ஒரு நாள் நாங்களெல்லாம் ரியூசனுக்கு முன்னால் உள்ள மைதானத்தில் கிரிகட் விளையாடினோம் எங்கள் அனைவரையும் 10 ம் வகுப்பு மாணவர்களை ஏவி விட்டு கைது செய்து முட்டிபோட்டு வெய்யிலில் நிக்க வைத்தா அந்த ஆத்தா. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவரால் தான் நான் புலமைப்பரிசில் பரீட்சை முதல் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சை வரை சித்தி எய்தினேன்.

இந்தக் காலமெல்லாம திரும்பி வராது இப்போது இயந்திரத்தனமான வாழ்கை. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு பின் பஸ் தரிப்படத்திற்கு ஓடி அங்கிருந்து 138 ம் இலக்க பஸ் எடுத்து கம்பஸ்சுக்குபோய்...... இப்படியே அலுப்பான வாழ்க்கை..... செய்ததையே திருப்பி திருப்பி செய்யும் வாழ்க்கை.

பேசுவதற்கோ அரவணைப்பதற்கோ அம்மாவும் அருகில் இல்லை. போதுமடா சாமி இந்த பாழ்பட்ட கொழும்பு வாழ்க்கை......

இளசு
26-06-2006, 09:47 PM
நெகிழ வைத்த முதல் நினைவுகள்..

குறிப்பாய் உங்கள் தந்த பயணமும்.
கண்டிப்பு காட்டி வெற்றி ஈட்டிய தனம் டீச்சரின் கைது - தண்டனையும்..

அருமை மயூரேசன்.

பாரதி போலவே நீங்களும் தொடரலாமே..

மயூ
27-06-2006, 10:36 AM
குறிப்பாய் உங்கள் தந்த பயணமும்.
கண்டிப்பு காட்டி வெற்றி ஈட்டிய தனம் டீச்சரின் கைது - தண்டனையும்..

பாரதி போலவே நீங்களும் தொடரலாமே..
நன்றி இளசு அய்யா அவர்களே!
தொடர்ந்து எழுதுவதாகவே உத்தேசம் விரைவில் எழுதுகின்றேன்....
தனம் ரீச்சரை மறக்க முடியாது இன்று வீதியில் கண்டாலும் பயம் கலந்த மரியாதை என் முகத்தில் தெரியும். :)

pradeepkt
27-06-2006, 11:22 AM
பழைய நினைவுகளை அழகாகச் சொல்லியிருக்கிறாய் மயூரேசன்.
இப்பவும் நமக்கு நினைவு வருமளவு நடந்த நிகழ்வுகள்தான் நம்மைப் பிற்காலத்தில் வழிநடத்துகின்றன.
இந்த வகையில் எனக்கு எல்கேஜி யூகேஜி வகுப்பு எடுத்த ஆசிரியைகள் கூட இன்று எனக்கு நினைவு வருவதுண்டு. ஆனால் அவர்களைப் பார்க்கும் வாய்ப்புத்தான் இல்லை.

இன்னும் நிறைய எழுது. மனப்பாரம் குறைந்த மாதிரியும் இருக்கும்.

ஓவியா
27-06-2006, 03:51 PM
அருமையான பதிவு...

தொடரலாம் மயூரேசன்.

மயூ
28-06-2006, 07:04 AM
ஓவியா சித்தி (வயதுக்கு சரியான மரியாதை தானே?) மற்றும் பிரதீப் அண்ணாவுக்கு நன்றிகள். எழுதும் போது ஏதோ இனம் புரியாத உணர்வலைகள் என்னைச் சுற்றி வட்டமிட்டது நீங்களும் எழுதிப் பாருங்கள் அந்த இனம் புரியாத சுகமான வலியை உணர்வீர்கள்.

தாமரை
28-06-2006, 07:08 AM

கொசு விரட்டி உபயோகிக்கவும்... :D :D :D

மயூ
28-06-2006, 07:11 AM
வந்திட்டார்யா!
வந்திட்டார்யா!
பிளேடு வன் ஆன செல்வன் அண்ணா இந்த பிளேடு 2 தம்பியை இப்படிக் கடிக்கலாமா?
(இங்க கடிக்கிறது எண்டு வாயால கடிக்கிறது சொல்லேல... பின்பு அதுக்கும் அறுவை விழலாம் அதுதான் கொஞ்சம் முன்எச்சரிக்கையாக...):D

தாமரை
28-06-2006, 08:38 AM

முள்ளை முள்ளால எடுக்கலாம்...
விஷத்தை விஷத்தால முறிக்கலாம்...
வைரத்தை வைரத்தால அறுக்கலாம்....

ப்ளேடை ப்ளேடால அறுக்க முடியுமா?????

அப்படியே அறுத்தாலும்..
அறுக்கிற ப்ளேடு அறுபடுமா?
அறுபடுகிற ப்ளேடு அறுக்குமா?:D :D :D :D :D :D :D :D

மதி
28-06-2006, 09:21 AM
ஆகமொத்தம் இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா?

மயூ
28-06-2006, 09:28 AM
முள்ளை முள்ளால எடுக்கலாம்...
விஷத்தை விஷத்தால முறிக்கலாம்...
வைரத்தை வைரத்தால அறுக்கலாம்....

ப்ளேடை ப்ளேடால அறுக்க முடியுமா?????

அப்படியே அறுத்தாலும்..
அறுக்கிற ப்ளேடு அறுபடுமா?
அறுபடுகிற ப்ளேடு அறுக்குமா?:D :D :D :D :D :D :D :D
ஆகா என்ன கவிதை!
நயமே தனி!
உள்ளம் பூரித்துப் போய்விட்டான்
இந்த பிளேட் தம்பி!
http://toys.wowshopper.com/pics-inventory/blade2-63018nos.jpg
காண்க கோபாவேசம் கொள்ளும் போது தம்பியின் தோற்றம். :mad:
ஆனாலும் தற்போது கூலாகத்தான் உள்ளேன்...:D :D :D

மயூ
28-06-2006, 09:42 AM
ஆகமொத்தம் இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா?
ஏன் நீங்க சலிக்கிறீங்க?
பிளேடுகள் கதைத்தால் அப்படித்தான் இடையில் வருபவர்களுக்கு என்னானாலும் நான் பொறுப்பல்ல....:eek: :D :D

தாமரை
28-06-2006, 09:43 AM
இதயத்தை தமிழ் மன்றத்தில்
இழந்ததாய் சொன்ன நீ
வாளெடுக்க வந்த அவசியம் என்ன..

கத்தியின்றி ரத்தமின்றி
ஒரு
இதய மாற்று
அறுவை சிகிச்சை
ஆம் காதல்

என்றவன் இன்று
வாளாவிருக்காமல்
வாளாக இருப்பதேன்??

தாமரை
28-06-2006, 09:48 AM
இதயத்தை தமிழ் மன்றத்தில்
இழந்ததாய் சொன்ன நீ
வாளெடுக்க வந்த அவசியம் என்ன..

கத்தியின்றி ரத்தமின்றி
ஒரு
இதய மாற்று
அறுவை சிகிச்சை
ஆம் காதல்

என்றவன் இன்று
வாளாவிருக்காமல்
வாளாக இருப்பதேன்??
நீ என் தம்பி என்பதால் உனக்காக நானே பதில் சொல்லி விடுகிறேன்..

ஆடுகிற சில
வால்களை நறுக்கத்தான்...:D :D :D

மயூ
28-06-2006, 09:50 AM
வாளாக இருப்பதேன்??
வாய் இல்லாமல் இருந்தது அன்றுB)
வாள் கொண்டு திரிவது இன்று:mad:
காரணம் :confused:
அன்பு கொண்ட தமிழ்மன்றத்திற்காய் :p
அகிலமே வந்தாலும்
வாளெடுத்த கை
வாளாதிருக்காது :mad:
ஊறாய், எதிராய், பிணியாய், சதியாய் :confused:
மன்றத்தை வீழ்த வருபவர்கள்
வீழ்வது மட்டும் நிச்சயம்:D
வாழ்க தமிழ் மன்றம்:D :D :D :D :D

இப்படிக்கு தமிழ் மன்றம் செக்குரிடி ஆபிஸர் :- மயூ"ரேசர்":D

தாமரை
28-06-2006, 09:54 AM
வாய் இல்லாமல் இருந்தது அன்று
வாள் கொண்டு திரிவது இன்று
காரணம்
அன்பு கொண்ட தமிழ்மன்றத்திற்காய்
அகிலமே வந்தாலும்
வாளெடுத்த கை
வாளாதிருக்காது
வாழ்க தமிழ் மன்றம்:D :D :D :D :D

இப்படிக்கு தமிழ் மன்றம் செக்குரிடி ஆபிஸர் :- மயூ"ரேசர்":angry:
என்ன தம்பி வாய் குளறுகிறதே வாளெடுத்தவுடன்... ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு...

தமிழ் மன்றத்திற்கு ஊறாய், எதிராய், பிணியாய், சதியாய் யார் வந்தாலும் என்று மாற்று...

இல்லையெனில் விழலாம் மாத்து.. பொது மாத்து..

மயூ
28-06-2006, 10:02 AM

மாத்திவிட்டேன அண்ணனே!:D

pradeepkt
28-06-2006, 11:47 AM
ஓவியா சித்தி (வயதுக்கு சரியான மரியாதை தானே?) மற்றும் பிரதீப் அண்ணாவுக்கு நன்றிகள். எழுதும் போது ஏதோ இனம் புரியாத உணர்வலைகள் என்னைச் சுற்றி வட்டமிட்டது நீங்களும் எழுதிப் பாருங்கள் அந்த இனம் புரியாத சுகமான வலியை உணர்வீர்கள்.
சந்தடி சாக்கில இதை எல்லாரும் மறந்துட்டீங்களே....
சீக்கிரம் ஓவியா அடுத்த தேதியில்லாக் குறிப்புகள் எழுத வேண்டிய நேரம் நெருங்கிருச்சு....
:rolleyes:

தாமரை
28-06-2006, 11:51 AM
சந்தடி சாக்கில இதை எல்லாரும் மறந்துட்டீங்களே....
சீக்கிரம் ஓவியா அடுத்த தேதியில்லாக் குறிப்புகள் எழுத வேண்டிய நேரம் நெருங்கிருச்சு....
:rolleyes:
தம்பிக்கு சித்தி என்றால் நமக்கும் தானே!..

மதி
28-06-2006, 12:22 PM
தம்பிக்கு சித்தி என்றால் நமக்கும் தானே!..
மக்களே பாருங்க..இது அடுக்குமா..?
நமக்குமாமில்ல நமக்கு..

அங்கிள் இது நியாயமா?:D :D

தாமரை
28-06-2006, 12:27 PM
மக்களே பாருங்க..இது அடுக்குமா..?
நமக்குமாமில்ல நமக்கு..

அங்கிள் இது நியாயமா?:D :D
நீ வேணும்னா பாட்டி-ன்னு கூப்பிடு..:D :D :D

மதி
28-06-2006, 12:33 PM
நீ வேணும்னா பாட்டி-ன்னு கூப்பிடு..:D :D :D
உங்களுக்கு சித்தின்னா..எனக்கு பாட்டி தானே..!
பாட்டி சரி தானே??

ஓவியா
28-06-2006, 12:44 PM
ஓவியா சித்தி (வயதுக்கு சரியான மரியாதை தானே?) மற்றும் பிரதீப் அண்ணாவுக்கு நன்றிகள். எழுதும் போது ஏதோ இனம் புரியாத உணர்வலைகள் என்னைச் சுற்றி வட்டமிட்டது நீங்களும் எழுதிப் பாருங்கள் அந்த இனம் புரியாத சுகமான வலியை உணர்வீர்கள்.

என்னாது வயதுக்கு சரியான மரியாதையா? அட கோவிந்தா :eek: :eek: :eek:
என் வயது என்னானு தெரியுமா மக்கா? ..

என் சகோதரிக்களுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை..
அதற்க்குள் என்னை சித்தியா ஆக்கிடீங்களே..:angry:

இன்னும் மாப்பிளை பார்க்கவில்லை,...
மனம் முடிக்கவில்லை, நடக்கவில்லை, அம்மா ஆகவில்லை...
அதற்க்குள் என்னை சித்தியா ஆக்கிடீங்களே..:angry:

இது அடுக்குமா. இது முறையா, இது தர்மமா?
:angry: :angry: :angry: :angry:

தாமரை
28-06-2006, 12:50 PM

பாட்டியே ஆக்கியாச்சு!.. ஔவைப்பாட்டிக்கு கூடத்தான் மாப்பிளை பார்க்கவில்லை,...மணம் முடிக்கவில்லை, நடக்கவில்லை, அம்மா ஆகவில்லை.. பாட்டி ஆகலியா...

சித்தி ஆக திருமணம் ஆக வேண்டியதில்லை சித்தி...

ஓவியா
28-06-2006, 12:55 PM
பாட்டியே ஆக்கியாச்சு!.. ஔவைப்பாட்டிக்கு கூடத்தான் மாப்பிளை பார்க்கவில்லை,...மணம் முடிக்கவில்லை, நடக்கவில்லை, அம்மா ஆகவில்லை.. பாட்டி ஆகலியா...

சித்தி ஆக திருமணம் ஆக வேண்டியதில்லை சித்தி...

பெரியப்பா செல்வன் நீங்களுமா?
உங்களை விட நான் ரொம்ப சின்னவள்

(என்னை மன்றத்தில் இருந்து துரத்திய புகழ் மயூரனுக்கே சேரட்டும்.
மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )

தாமரை
28-06-2006, 01:02 PM
பெரியப்பா செல்வன் நீங்களுமா?
உங்களை விட நான் ரொம்ப சின்னவள்

(மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )
சேலம் அருகில் இளம்பிள்ளை என்ற ஊர் இருக்கிறது. இங்கு பல தலைமுறைகளாக கூட்டு குடும்பமாய் வாழும் குடும்பங்கள் இருக்கின்றன.. இங்கே கீழ்கண்டது போன்ற உரையாடல்கள் சகஜம்..

1 : எங்கடா புருஷனும் பொஞ்சாதியுமா எங்க கிளம்பிட்டீங்க...
2 : எங்க தாத்தா கல்யாணத்துக்கு
1 : ஓ அறுபதாம் கல்யாணமா
2 : அட ஆண்டவா அவனுக்கு இப்ப 21 வயசுதான் ஆகுது,.. தாத்தா முறை...

மதி
28-06-2006, 01:55 PM
பெரியப்பா செல்வன் நீங்களுமா?
உங்களை விட நான் ரொம்ப சின்னவள்

(என்னை மன்றத்தில் இருந்து துரத்திய புகழ் மயூரனுக்கே சேரட்டும்.
மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )

அடடே..!
செல்வருக்கு எத்தனை இணைய உறவுகள்...
அங்கிள்..பெரியப்பா..!
இன்னும் எந்த உறவாவது இருக்கீங்களாப்பா..?

மயூ
29-06-2006, 03:54 AM
[COLOR="Purple"][B][SIZE="4"]
(என்னை மன்றத்தில் இருந்து துரத்திய புகழ் மயூரனுக்கே சேரட்டும்.
மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )
பாவம் பய மயூரன்
மன்னிச்சுடுங்க ஓவியா தங்கச்சி!
இப்ப சரிதானே!:confused: :D :D :D :D

pradeepkt
29-06-2006, 05:23 AM
சரி சரி சண்டை போடாதீங்க... ஓவியா மயூரனை மன்னிச்சுருங்க... ஏதோ சின்னப்பய தெரியாமச் சொல்லிட்டான்... :D :D

ஒரு வகையில எனக்கு ஒருத்தர் மாமா முறை வேணும் அவரும் என் கடைசித் தம்பியும் ஒரே வயசு... என்ன செய்யிறது? உறவுகளுக்கும் வயசுக்கும் உள்ள உறவு அப்படி :D :D

தாமரை
29-06-2006, 05:32 AM

எங்கள் குடும்பத்தில் வழி வழியாய் கடை பிடித்து வரும் முறை..

அக்கா, தங்கை - சகோதரிகள், அத்தை, தாய்வழிப் பாட்டி அனைவருக்கும் பொருந்தும்.. வயது வித்தியாசம் பொருத்து மாறுபடலாம்..

அண்ணன், தம்பி - சகோதிரர்கள் ,தந்தைவழி ஆண் உறவினர்
அண்ணி - அண்ணி, சித்தி, தந்தை வழிப்பாட்டி...

மாமா - தாய் வழி ஆண் உறவினர், தாயுடன் அண்ணன் தம்பி உறவு கொண்டவர்.

அத்தை - அப்பாவுடன் அக்கா தங்கை உறவு கொண்டாடுபவர்..

அதனால் உண்மை உறவு முறை அறிய வேண்டுமானால் தீர்க்கமான ஞானம் வேண்டும்.

sarcharan
29-06-2006, 01:18 PM
பெரியப்பா செல்வன் நீங்களுமா?
உங்களை விட நான் ரொம்ப சின்னவள்

(என்னை மன்றத்தில் இருந்து துரத்திய புகழ் மயூரனுக்கே சேரட்டும்.
மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )

ஓவியாக்கா ஓவியாக்கா ,

பொண்ணுங்ககிட்ட அவர்களது உண்மையான வயசை சொன்னா அவங்களுக்கு கோபம் வருமாமே.. பிரதீப் சொன்னான்:D :D ;)

ஓவியா
29-06-2006, 01:37 PM
ஓவியாக்கா ஓவியாக்கா ,

பொண்ணுங்ககிட்ட அவர்களது உண்மையான வயசை சொன்னா அவங்களுக்கு கோபம் வருமாமே.. பிரதீப் சொன்னான்:D :D ;)

சரவணனே

அனைந்த நெருப்பில் இது என்ன பெட்ரோல்லா...:angry: :angry:

மக்கா அந்த crashcalc விசயத்திலே நீங்கள் எனக்கு....இப்ப இதுலையுமா...:cool: :cool:

தாமரை
29-06-2006, 02:22 PM
சரவணனே

அனைந்த நெருப்பில் இது என்ன பெட்ரோல்லா...:angry: :angry:

அது அணைந்த மாதிரி தெரியவில்லையே மகளே!... நீறு பூத்த நெருப்பாகவன்றோ இருந்திருக்கிறது..

என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவர் உம்மை பாட்டி என்று அழைக்கத்தானே போகிறார்...

என் அத்தை இன்னும் 35 வயது என்று என்னிடமே சொன்னது நினைவிற்கு வருகிறது.. (எனக்கே அதை விட அதிகம்..).

சிரிப்புதான் வருகுதைய்யா...:D :D :D

ஓவியா
30-06-2006, 03:49 PM

சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க

என்றாவது ஒரு நாள் யாராவது அழைக்கட்டும்
ஆனால் இன்று வேண்டாமே...;)

(புத்தகம் சுமக்கும் பெண்னை
பாட்டினு கூபிட்டா மனசு தாங்கவில்லையே..)

மயூ
01-07-2006, 06:25 AM
சரவணனே

அனைந்த நெருப்பில் இது என்ன பெட்ரோல்லா...:angry: :angry:

மக்கா அந்த crashcalc விசயத்திலே நீங்கள் எனக்கு....இப்ப இதுலையுமா...:cool: :cool:

crashcalcவிசயத்தில் சரவணண் அண்ணாவை பேசுவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்...
அதனால் தான் பலர் என்பின்னால் இரகசியம் பேணச்சொல்லி அலைந்து கோண்டு திரியினம்.....
நம்ம டிமாண்டும் அதனால்தான் கூடியது....:rolleyes:

இணைய நண்பன்
01-07-2006, 04:35 PM
நண்பா மயூரேசன் ....உங்கள் தேதியில்லா குறிப்புக்கள் பிரமாதம். இடையில் சும்ம இருந்த நம்ம ஓவியா சித்திய மன்னிக்கவும்..சிஸ்டரை குழப்பிவிட்டார்கள்..அவ குழம்பினா தெரியும் தானே....பாவம் அவ சின்னப்பொண் ணு..ஓவியா ஓர் குழந்தை....சரி இப்போ நீங்கள் உங்களுடைய குறிப்புக்களைத் தொடரலாமே?

மயூ
02-07-2006, 09:27 AM
நன்றி இக்ரம்!
இரண்டாம் பாகம் இன்று பதிக்கின்றேன்.....

இணைய நண்பன்
02-07-2006, 10:12 AM
நன்றி நண்பா.முயற்சி தொடர வாழ்த்துக்கள்

பென்ஸ்
30-07-2006, 03:22 AM
வைப்பாட்டிக்கு கூடத்தான் மாப்பிளை பார்க்கவில்லை,...மணம் முடிக்கவில்லை, நடக்கவில்லை, அம்மா ஆகவில்லை.. .

என்ன செல்வன்... இப்படி ஒரு கதை \இருக்கிறது சொல்லவேயில்லை....

சரி... பண்பட்டவர் பகுதிக்கு மாத்திராதிங்கோ :rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
30-07-2006, 03:24 AM
மயூ...

நல்ல பதிவுடா... மூண்றாம் பகுதியை கானோம்.,... என்ன ஆச்சு...???

பென்ஸ்
30-07-2006, 03:30 AM
அது அணைந்த மாதிரி தெரியவில்லையே மகளே!... நீறு பூத்த நெருப்பாகவன்றோ இருந்திருக்கிறது..

என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவர் உம்மை பாட்டி என்று அழைக்கத்தானே போகிறார்...

என் அத்தை இன்னும் 35 வயது என்று என்னிடமே சொன்னது நினைவிற்கு வருகிறது.. (எனக்கே அதை விட அதிகம்..).

சிரிப்புதான் வருகுதைய்யா...:D :D :D

என்ன இது சின்ன் பிள்ள தனமா வயசை பற்றி பேசிக்கிட்டு...

ஓவியா பாட்டி..... (பென்ஸ், 100 வருஷத்துக்கு பிறகு இப்படி கூப்பிடுவான்)

ஏல செல்வா.. ஏல கிறுக்கு பயல... டேய் குட்டி பையா.... (இப்படி நம்ம செல்வரை 35 வருசத்துக்கு முன்னாடி கூப்பிட்டு இருப்பாங்க)

பி.கு: ரொம்ப நாளா இதுக்கு தான் காத்துகிட்டுருந்தேன்...

மயூ
30-07-2006, 07:34 AM
மயூ...

நல்ல பதிவுடா... மூண்றாம் பகுதியை கானோம்.,... என்ன ஆச்சு...???
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
பல்கலைக்கழக படிப்புகள் சற்று கழுத்தை நெரிக்கின்றது.
விரைவில்எழுத முயல்கின்றேன்:D

pradeepkt
31-07-2006, 05:16 AM
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
பல்கலைக்கழக படிப்புகள் சற்று கழுத்தை நெரிக்கின்றது.
விரைவில்எழுத முயல்கின்றேன்:D
இது நல்ல பிள்ளைக்கு அழகு.
படிப்புதான் முக்கியம். நல்லாப் படிச்சு பரீட்சை எல்லாம் நல்லா எழுதிட்டு அப்புறம் கதை சொல்லு, சரியா?

gragavan
31-07-2006, 06:19 AM
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
பல்கலைக்கழக படிப்புகள் சற்று கழுத்தை நெரிக்கின்றது.
விரைவில்எழுத முயல்கின்றேன்:Dநல்லாப் படிச்சு நல்ல புள்ளையா முன்னுக்கு வரனும். என்னுடைய வாழ்த்துகள்.

இனியவன்
31-07-2006, 07:26 AM
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
பல்கலைக்கழக படிப்புகள் சற்று கழுத்தை நெரிக்கின்றது.
விரைவில்எழுத முயல்கின்றேன்:D
வெற்றி உனதாகட்டும் மயூரா.

மயூ
31-07-2006, 09:27 AM
படிப்பில் ஆர்வம் காட்டச்சொன்ன பிரதீப் அண்ணா, இராகவன் அண்ணா, மற்றும் இனியவனுக்கு நன்றிகள்!
பல்கலைக்கழக படிப்புகள் மற்றும் வார இறுதியில் செய்யும் BCS (Britihs Computer Society) பரீட்சைகள் போன்றவை நெருங்குவதால் பிராஜக்ட் வேலைகள், படிக்கவேண்டிய அரியஸ் தலைக்கு மேல்!
இரண்டு வாரங்களில் எப்பிடியும் சரியாகிடும் என்று நம்பிறன் :D :D

vckannan
31-07-2006, 12:45 PM
நல்ல பதிவு . நினைவுகள் தொடரட்டும்

vckannan
31-07-2006, 01:02 PM
சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க

என்றாவது ஒரு நாள் யாராவது அழைக்கட்டும்
ஆனால் இன்று வேண்டாமே...;)

(புத்தகம் சுமக்கும் பெண்னை
பாட்டினு கூபிட்டா மனசு தாங்கவில்லையே..)

ஏம்பா ஒரு பச்ச புள்ளய ஓட்டறிங்க?
இன்னக்கிகெல்லாம் ஒரு 5 வயசு இருக்குமா.:D

ஓவியா வேணும்ன பேர சின்னபுள்ளனு / இளம் பெண்ணுணு அப்படி ஏதாச்சும் மாத்தி வச்சிகோங்க...

(சரி சரி கோச்சிகாதிங்க நான் வாய மூடிக்கிறேன்:rolleyes: )

ஓவியன்
15-07-2008, 11:43 AM
அட இங்கே பார்டா..!!

நம்ம மயூ நர்சரி டீச்சரின் பேத்தியிடமிருந்துதான் பெண் பிள்ளைகளுடன் பழகத் தொடங்கியிருக்கிறார்...!! :D:D:D

________________________________________________________________________________________________________________

நீண்ட நாட்களுக்கு முன்னரே படித்திருக்க வேண்டிய பதிவு, இன்றுதான் படித்தேன்...

ஆனாலும் பழைய நினைவுகளைத் திரும்ப அசை போடுவது போல..
பழைய பதிவுகளை கிளறிப் படிப்பதும் ஒரு சுகம்..!!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மயூ..!!

மயூ
15-07-2008, 01:43 PM
நன்றி ஓவியரே...
அட.. ஆமா.. நீங்க சொன்னாப்பிறகுதான் நானும் பாக்கிறன்..... அவதான் ஆரம்பம்.

ஓவியன்
15-07-2008, 02:56 PM
அவதான் ஆரம்பம்.

ஆமா, அங்கே தான், உங்க ரம்பம் - ஆரம்பம்..!! :lachen001:

மயூ
15-07-2008, 03:06 PM
ஆமா, அங்கே தான், உங்க ரம்பம் - ஆரம்பம்..!! :lachen001:
ரம்பம்பம் ஆரம்பம்
ரம் பம் பம பேரின்பம்...

இப்ப ஓன்றும் இல்லை.. வேர்துசாவில் காய்ந்து போய் இருக்கின்றேன்.

ஓவியன்
15-07-2008, 03:31 PM
வேர்துசாவில் காய்ந்து போய் இருக்கின்றேன்.

வேர்த்துசாவா...!!

சரி, சரி...!!
மழைகாலம் வந்தால், கோடைக்காலமும் வரும் தானே..!! :D

மீள மழைவரும் வரை காத்திருமோய்...!! :D