PDA

View Full Version : ஆறு ஆறு ஆறு!



இனியவன்
25-06-2006, 05:29 PM
ஆறாம் வருடம் ;

ஆறாம் மாதம் ;

ஆறாம் தேதி ;

சமீபத்தில் _

சந்தித்துக் கொண்ட...

இந்த மூன்று ஆறுகள்பற்றி

இருக்கிறது முக்கியச் சேதி;

என்ன ஆகுமோ?

ஏது ஆகுமோ?

என _

எண்ணும்படி...

உலகெங்கும்

உள்ள _

கிறிஸ்தவர்கள் இடயே

கிளர்த்திருக்கிறது ஒரு பீதி!



ஆறு ஆறு ஆறு _ என

அடுத்த அடுத்து அமந்தால்...

அது

அறுநூற்று அறுபத்து ஆறு ;

ஏசு அடியார்க்கு_ அதுதான்

ஏற்படுத்திடுமாம் ஊறு!

கவலையிலும் ; கண்ணீர்த்

திவலையிலும் ;

அலமந்து கிடக்கிறது

அவர்களது கண் ; ஏனெனில் _

அவர்கள் நம்பிக்கைப்படி

666 _ சாத்தானின் எண்!



மர்லன் பிராண்டோ ;

ரிச்சர்டு பர்ட்டன் ;

ஆண்டனி குவின் ;

ஓமர் ஷெரிஃப் ;

இந்த

இசைமிகு _

வரிசையில்

வருகின்ற...

கீர்த்திமிகு

கிரகரி பெக் நடித்த...

ஓமன் என்று _

ஒரு படம் வந்தது; அது _

எக்ஸார்ஸிஸ்ட் டுக்குப் பிறகு.

எல்லோர்க்கும் பேதி தந்தது!

அதில் _

666 _ தான்...

சாத்தானின் எண்ணாகச்

சித்திரிக்கப் படுகிறது ;

ஆதலால்

அந்த எண்...

நம்

நெஞ்சுக்கினிய _

கிறிஸ்தவ சோதரர்களை

கிலியில் தள்ளி விடுகிறது!



அன்பர்களே!

அச்சம் விடுவீர்;

சேசு காப்பார்;

சிலுவை இடுவீர்!



நான்

நம்புவது வேறு;

இந்திய ஆறுகள்

இணைவதற்கான அறிகுறிதான் _

அடுத்தடுத்து நிற்கின்ற

ஆறு ஆறு ஆறு!



நன்றி குமுதம்

இளசு
25-06-2006, 09:46 PM
ஒரு சிலர் குறிப்பாய் அமெரிக்காவில் சில நாள் வீண்பீதி அடைந்தது உண்மைதான்.
தம் குழந்தை பிறப்பதைக் கூட அந்நாளை விட்டு தள்ளி வைக்கச் சொன்னார்களாம்.

அந்த நாளாய் பார்த்து மணம் புரிந்தவர்களும் உண்டு.

எங்கும் இதுபோல் சிலர் இருப்பார்கள். அதை விடுங்கள்.

நதிகள் இணைப்புக்கான குறியீடாய் முடித்தது நச்.. (மூட நம்பிக்கையாய்ப் போகாது என நம்புவோம்..)

நன்றி இனியவன்..

கவிஞரின் பெயர்?

இனியவன்
26-06-2006, 04:11 AM
கவிஞரின் பெயர்?
வாலிபக் கவிஞர் வாலி,
சிங்கப்பூரில் சென்ற ஆண்டைக் காட்டிலும் 6 6 06 ல் அதிக திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்.