PDA

View Full Version : சரிந்து வரும் ஆச்சர்யம் பைசா,



இனியவன்
25-06-2006, 04:46 AM
பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார்.

சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்...

"பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு.

"ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத் தாங்குகின்றன. விசித்திரம் என்னவென்றால், இத்தனை உயர கோபுரத்துக்கு மூன்று மீட்டர் ஆழம் தான் அஸ்திவாரம் போட்டாங்களாம்...

"கோபுரம் இன்று செங்குத்து நிலையிலிருந்து நாலு மீட்டர் சாய்ந்து நிற்கிறது. உள்ளுக்குள் 293 படிகளைக் கொண்ட சுழல் மாடிப்படி அமைந்திருக்கிறது. உச்சியில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது...
"சாய்ந்த கோபுரத்தை இன்று ஆராய்ந்து பார்க்கிற விஞ்ஞானிகள், அதைக் கட்டி முடித்தவனின் மேதா விலாசத்தை எண்ணி, எண்ணி பிரமித்துப் போறாங்களாம்...

"கோபுரம் சரியும் என்பது இதைக் கட்டியவர்களுக்கு தெரிந்தே இருந்தது. சாய்ந்தாலும் சரிந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கின்றனர் என்பது இக்கட்டடத்தை ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் "பேராசிரியர் பர்லண்டு.

உதாரணமாக, தென் பகுதியில் இருப்பதை விடவும் வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல் பாளங்கள் ஒரு செ.மீ., மெல்லியதாக உள்ளன. நாலாவது மாடியை அவர்கள் அடைந்தபோது திட்டமிட்டுப் பத்து செ.மீ., கனம் குறைவான பாளங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்... இதிலிருந்தே சாய்மானத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றனர் என்பது புரிகிறது...'

ஐந்தாவது மாடியைக் கட்டும் போது ஒரு விசித்திரம் நிகழ்ந்ததாம்... கோபுரம் நேராக நிமிர ஆரம்பித்ததாம்... இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லையாம். ஒருவேளை, சதுப்பு நிலத்தின் களிமண் கெட்டிப்பட்டிருக்கலாம் என்கின்றனர்... கட்டி முடிக்கப்பட்ட போது கோபுரம் வடக்குப் புறமாகத் தான் லேசாகச் சாய்ந்திருந்ததாம்... இப்போதுள்ளது போல் தெற்குப்புறம் அல்லவாம்...
"சரிவைச் சரி செய்து விடலாம் என்று சிலர் முயற்சி எடுத்த போதெல்லாம் கோபுரம் மேலும் சற்றுச் சரிந்து பீதி கிளப்பியிருக்கிறதாம்...

உதாரணமாக, 1920ல் கோபுரத்தைச் சுற்றி ஒரு நடைபாதை தோண்டினார்களாம்... உடனே கோபுரத்தின் சரிவு கூடியது. 1930ல் முசோலினி இந்தக் கோபுரத்தின் அஸ்திவாரத்துக்குள் 800 டன் சிமென்ட்டை விசைப் பம்புகளைப் பயன்படுத்திச் செலுத்தினாராம்...
"அஸ்திவாரத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி, கோபுரம் மேலும் சற்று சரியவே காரணமாயிற்றாம்... சமீபத்தில், கோபுரத்தில் பல நவீன கருவிகளைப் பொருத்தி ஆராய்ந்தனராம்... கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்ட இந்த அதி நவீன தானியங்கிக் கருவிகள், மேலும் பல அதிசயத் தகவல்களை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்தனவாம்...

"அதாவது, சூரியோதயத்துக்குப் பிறகு, வெயில் ஏற, ஏற, கோபுரம் லேசாக அரை மில்லி மீட்டர் அளவுக்கு சுழல்கிறது என்பது தான். இதன் காரணமாகவே கோபுரம் அதிர்கிறது என்றும் கண்டுபிடித்தார்களாம்!
"தற்போது இரண்டு தற்காலிக ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் கோபுரம் சாயாமலிருக்க! எஃகு கம்பிகளை பிளாஸ்டிக் உறையிட்டுத் தயாரித்து, அவற்றை அடிவாரத்தில் கோபுரத்தைச் சுற்றிப் பிணைத்திருக்கின்றனர். இது கோபுரத்தின் சாய்மானத்தைக் கணிசமாகத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.

"பிளாஸ்டிக் உறையிலிருப்பதால் கம்பி சுற்றியிருப்பதே பார்வையாளருக்குத் தெரியாது. தவிர, தென்புறம் அஸ்திவாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்ய, வடக்குப்புறம் 800 டன் எடையில் ஈயம் பூமிக்குள் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்...'

நன்றி அந்துமணி

இளசு
29-06-2006, 09:51 PM
நன்றி இனியன். நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை.

அடிப்படை நிலத்தில் ஒரு பக்கம் சதுப்பாக, அதனால் தலை சாய ஆரம்பித்த கோபுரம்
சாதனை கோபுரமாகிய கதையே அலாதிதான்..

இணைய நண்பன்
30-06-2006, 09:42 AM
அருமையான தகவலைத்தந்த இனியவன் அவர்களுக்கு நன்றி!

sarcharan
30-06-2006, 11:56 AM
தகவலுக்கு நன்றி!இனியவன்

மயூ
30-06-2006, 12:42 PM
அருமையான தகவல் இனியன்....

ஓவியா
05-07-2006, 04:04 PM
அருமையான தகவல்
நன்றி இனியவன் சார்


அப்படியே அந்த ஏழு அதிசயத்தையும் தொடர்ந்து எழுதினா சிறப்பா இருக்கும்....;) ;)

இனியவன்
05-07-2006, 04:07 PM
முயற்சிக்கிறேன்,,,
ஓவியா,,,

mgandhi
12-08-2006, 07:08 PM
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் இத்தனை அதிசயங்களா!!