PDA

View Full Version : இலங்கைச் செய்திகள் ஜுன் 24



இனியவன்
24-06-2006, 04:54 PM
1) வவுனியா வேப்பங்குளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

அவர்கள் வீதிச் சோதனையில் ஈடுபட்ட போது, உந்துருளியில் வந்த இருவர் அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
அச்சம்பவம் தொடாபான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2) தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து நம் தலைவிதி பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி திருமுறிகண்டியில் மக்கள் கட்டுமானப்பயிற்சி நிறைவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய பாலகுமாரன் அவ்வாறு கூறினார். தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தினால் நடத்தப்படுகிறது. இது புலிகளின் தனிப்பட்ட பிரச்சினையல்ல ஒரு இனத்தின் பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திருமுறிகண்டி, பொன்நகர், செல்வபுரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகாமானோர் தற்காப்புப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

3) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் கமலாதாஸ் கூறினார்.

ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனக்குப் பிடித்த தமிழராக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை அடையாளப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் போராளிகளுக்கும் சுயநலங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி என்றார் கமலாதாஸ்.

4) ச.அமரதாசின் "வாழுங்கணங்கள்" ஒளிப்படத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. நுண்கலைக் கல்லூரிகளின் பணிப்பாளர் தணிகைமாறன் தலைமையேற்க கிளிநொச்சி அரச அதிபர் தி.இராச நாயகம் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். ஒளிப்படத் தொகுதி வெளியீட்டு உரையை தமிழீழ கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை நிகழ்த்தினார்.

முதற் பிரதியினை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வெளியிட்டு வைக்க, தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் பெற்றுக் கொண்டார்.

5) இலங்கைத் தமிழர்கள் மீது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாபிரிக்காவில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் கழக உறுப்பினர்கள், மனித உரிமை ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் அநத் அமைதி வழிப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

டேர்பன் நகர மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்ததை எதிர்த்தும் முழக்கம் எழுப்பப்பட்டது.