PDA

View Full Version : இலங்கைச் செய்திகள் ஜுன் 23இனியவன்
23-06-2006, 04:19 PM
1) இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பாக ஜூன் 29 நோர்டிக் நாடுகளுடன் நோர்வே ஆலோசனை நடத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் வெளியேற வேண்டுமென்ற புலிகளின் நிபந்தனை துரதிர்ஸ்டமானது என்று கூறிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் அந்நிபந்தனை கண்காணிப்புக் குழுவைப் பலவீனமாக்கும் என்றும் சதெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் 29 ஆம் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செயற்பாடு பற்றி நோர்வே ஆலோசிக்கவிருக்கிறது.


2) கொழும்பு புறநகர் வத்தளை உஸ்வெட்டகெய்யாவவில் பெரும் சத்தம் எழுந்தது. முதலில் அது குண்டுவெடிப்பு என்று சொல்லப்பட்டது.
பின்னர் நடந்த விசாரணையில் அது வெடிகுண்டுச் சத்தமல்ல என்று உறுதி செய்யப்பட்டது. கடல் கண்ணிவெடி குண்டு வெடித்ததா என்ற சந்தேகத்தில் அப்பகுதிக்கு உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டு உண்மையை அறிந்து கொண்டதாக காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ கூறினார்.

3) தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அடிகள், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கிளிநொச்சியில் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் நடந்த அந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.

சென்ற மாதம் 22 ஆம் நாள் சு.ப. தமிழ்ச் செல்வனையும், 30 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவையும் அவர்கள் சந்தித்தனர். அதன் பின்னர் இன்று மீண்டும் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது தாயகத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள், அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக பேசப்பட்டது.

4) மட்டக்களப்பில் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் பெரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கிய அந்நடவடிக்கை சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது. அதனால் முற்பகல் 11 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

5) யாழ். துன்னாலைத் தாக்குதலில் காயமடைந்த இராணுவத்தினர் இருவர் வியாழக்கிழமை மரணித்தனர்.
துன்னாலையில் புதன்கிழமை மர்ம நபர்கள் சுற்றுக்காவல் பணியிலிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில் காயமடைந்த மூவர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி மாண்டனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே கொழும்புத்துறை செபமாலை கத்தோலிக்க தேவாலயம் அருகில் உள்ள இராணுவ காவலரண் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அதற்கு இராணுவமும் பதிலடி கொடுத்தது. இருப்பினும் தாக்குதல் நடத்தியோர் காயமின்றி தப்பினர்.

6) யாழ்ப்பாணம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவம் புகுந்து சிதைத்தது. அந்த அட்டூழியத்தைக் கண்டித்து யாழ். குடாநாட்டில் முழு கதவடைப்புப் போராட்டம் நடக்கவுள்ளது. தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் அதற்காக அழைப்பு விடுத்துள்ளது.

ஏ-9 வீதி வழியாக யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்தை முற்றாக நிறுத்துமாறும் அக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

அறிஞர்
23-06-2006, 04:58 PM
29 ஆம் தேதி இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செயற்பாடு பற்றி நோர்வேவின் ஆலோசனை நல்ல முடிவுகளை தரட்டும்....