PDA

View Full Version : மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்gragavan
23-06-2006, 09:05 AM
"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே!!!!" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.

அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.

திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz In"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.

"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா?
அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..

ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.

"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"

"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"

நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.

அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"

"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே

"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.

"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.

"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"

இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."

"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.
எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.

அதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.

பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.
அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.

"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.

"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.

அன்புடன்,
கோ.இராகவன்

http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Image%28084%29.jpg

http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Image%28083%29.0.jpg

தாமரை
23-06-2006, 09:12 AM
ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.

"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"

"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"

நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.

அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"

"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே

"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.

"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.

"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"

இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."

நாலு மீட்டிங்க்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்.:D :D :D :D

pradeepkt
23-06-2006, 11:15 AM
எனக்கும் பனானா ஸ்ப்லிட்தான் ரொம்பப் பிடிக்கும். கார்னர் ஹௌஸ்ல அது ரொம்பப் பேமஸ்...
அங்க வாழைப் பழத்தை திமுக அதிமுக மாதிரி ரெண்டே துண்டா நறுக்கி அழகா வச்சிருப்பாங்க, ஆனா உங்க ஐஸ்கிரீம்ல பல துண்டுகளா காங்கிரஸ் மாதிரி ஆக்கி வச்சுருக்காங்க... நல்லாவே இல்லை...

மயூ
30-06-2006, 12:13 PM
எனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட.....
தயவு செய்து கடன் கேட்காதீர்.......

sarcharan
30-06-2006, 12:47 PM
எனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட.....
தயவு செய்து கடன் கேட்காதீர்.......

என்ன மயூரேசன், நீங்க பாக்கணும்கறதுக்காகவே போர்ட் வெச்ச மாதிரி இருக்கு....:p :p :D :D

தாமரை
30-06-2006, 01:29 PM
எனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட.....
தயவு செய்து கடன் கேட்காதீர்.......

உண்மையைச் சொல்லுங்க அது உங்க கல்லூரி அருகில் இருந்த பெட்டிக் கடைதானே!

மயிலாரைத் தெரியாதா உங்களுக்கு... !!! அடடா.. அதுதானய்யா இரண்டு கால் இரண்டு இறக்கை அழகான தோகை, நீண்ட கழுத்து, பளபளவென மின்னும் இறகுகள்.. மழை வந்தா தோகை விரித்து ஆடுவாரே...

என்ன மயூரேஸன், மயூரம் என்பதே மயில்தானே, மயிலுக்கே மயிலைத் தெரியவில்லையென்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

மயூ
30-06-2006, 01:38 PM
அடக்கடவுளே அந்த கடைக்காரணுக்கு தலையில இடிவிழ.....
நான் இங்க சொன்ன மயிலாருக்கு அறுக்கபோய் என்ன நானே அறுத்துக் கொண்டு விட்டேன் போல....:eek:
பரவாயில்லை, இங்க இருக்கும் மயிலய்யா யாருங்கோ????:confused:
விழிப்பூட்டிய செல்வன் அண்ணாவிற்கு நன்றி.....:)

தாமரை
30-06-2006, 02:04 PM
மயிலார் ராகவன் அண்ணாவின்... #%&$ #&$# &#^&#^%*

பெங்களூர் வாருங்கள் அறிமுகம் செய்கிறோம்..

மயூ
30-06-2006, 02:06 PM
அடடா!
அப்பசசரி....
பெங்களுருக்கு இதுக்காகவாவது வரவேணும்.....
ஹி...ஹி.....

இளசு
02-07-2006, 11:11 PM
இராகவன்,

இந்த மயிலாருடன் நீங்கள் இணைந்து அடிக்கும் லூட்டிகள் -

சொற்சிலம்பம், நகைச்சுவை கலந்து ஐஸ்கிரீம் சுவையை விஞ்சுகிறது.

மயிலார் பயணங்களைத் தொகுத்து பின்னாளில் தனி நூல் வரட்டும். வாழ்த்துகள்.

தாமரை
03-07-2006, 10:16 AM
நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ! இதோ!! இதோ!!!

http://www.geocities.com/stselvan/mayilar2.bmp

மயூ
03-07-2006, 11:44 AM
நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ! இதோ!! இதோ!!!

http://www.geocities.com/stselvan/mayilar2.bmp

என்ன அழகு
எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
என்று இராகவன் அண்ணா கைசேருமோ? :confused:

மதி
03-07-2006, 12:44 PM
அற்புதம்..அபாரம்...
மயிலாரின் அழகே..தனி தான்..

ஓவியா
03-07-2006, 05:07 PM
http://www.geocities.com/stselvan/mayilar2.bmp
மயிலே மயிலே உன் தொகை எங்கே என்று
கேட்பவர்களுக்கு அனுப்பவேண்டிய அழகான படம்

மயிலாரும் ராகவன் சாரும் என்றென்றும்
நகமும் சதையும் போல் உலா வர வாழ்த்துக்கள்