PDA

View Full Version : பொது வாழ்த்து.

தாமரை
23-06-2006, 03:49 AM
வாழியவே இப்புவி வாழியவே நன்மாந்தர்
வாழியவே ஒப்பிலாப் பேரண்டம் - வாழியவே
வானிலவு கோள்மீன்கள் வவ்வகைத் தாவரங்கள்
ஊனுயிர்கள் வாழ்க உயர்ந்து.

மதி
23-06-2006, 04:10 AM
பொது மாத்து கேள்விப்பட்டிருக்கிறேன்..
புதுசாய் "பொது வாழ்த்து"
இது என்ன பா? வெண்பாவா?

தாமரை
23-06-2006, 04:14 AM
பொது மாத்து கேள்விப்பட்டிருக்கிறேன்..
புதுசாய் "பொது வாழ்த்து"
இது என்ன பா? வெண்பாவா?
பொது வாழ்த்து என்றால் எல்லோருக்கும் பொதுவான வாழ்த்துப் பாடல்..
இது வெண்பா தான்..

pradeepkt
23-06-2006, 05:46 AM
பொது மாத்து கேள்விப்பட்டிருக்கிறேன்..
புதுசாய் "பொது வாழ்த்து"
இது என்ன பா? வெண்பாவா?
பொது மாத்துல அடிபட்ட மாதிரில்ல இருக்கு????

பென்ஸ்
23-06-2006, 07:09 AM
செல்வன் ...

பணி பளு அதிகம்... அதான் இந்த பக்கம் வர முடியலை...

இந்த கவிதை பாடல் பகுதியிலை கொஞ்ச நாளாவே நீரு "வே வெவ்வே"
என்று எல்லாம் என்னமோ எனக்கு புரியாத மாதிரி எல்லாம் எழுதுறீர்....

எங்க ஓய் படிச்சீரு இதை எல்லாம் எழுத...
இந்த மாதிரி எதாவது எழுதும் போது நம்ம ராகவன் மாதிரி வரிக்கு
வரி விளக்கவுரையும் கொடுத்திடும் புருஞ்சுதா...???

மதி
23-06-2006, 07:21 AM
பொது மாத்துல அடிபட்ட மாதிரில்ல இருக்கு????
இதுவரைக்கும் வாங்கினதில்லை..
பொறந்தநாளுக்கு எல்லா பயலும் வருவாங்க..
ஆனா..ஒரு சாவுக்கு காரணமாயிடுவோமோன்னு பயத்துல அடிக்க மாட்டானுங்க....
ம்ம்... இது கூட வசதி தான்...

தாமரை
23-06-2006, 08:00 AM
[
வாழியவே இப்புவி வாழியவே நன்மாந்தர்
வாழியவே ஒப்பிலாப் பேரண்டம் - வாழியவே
வானிலவு கோள்மீன்கள் வகைவகைத் தாவரங்கள்
ஊனுயிர்கள் வாழ்க உயர்ந்து.

இந்தப் பூமி வாழ்க
பூமியில் உள்ள நல்ல மனிதர்கள் வாழ்க
அளவிட முடியாத அளவு பெரிதான பேரண்டம் வாழ்க (யுனிவர்ஸ்)
வான், நிலவு, கிரகங்கள், வின்மீன்கள், ஆயிரக் கணக்கான வகைகளைக் கொண்ட தாவரங்கள் வாழ்க..

உடல் கொண்ட அனைத்து உயிர்களும் வாழ்க

இது புரியுதா பாருங்க...

மதி
23-06-2006, 08:16 AM
இது புரியுதா பாருங்க...

பவளவாய் தேறல் பருகியும் நெஞ்சில்
அவளவா தீராத தேன்
சுத்தம்...!:confused: :confused: :confused: :confused:

தாமரை
23-06-2006, 08:29 AM
:D :D :D

pradeepkt
23-06-2006, 10:18 AM
சீக்கிரம் பண்பட்டவர் பகுதிக்கு இதை மாத்துங்கப்பா
சின்னப் புள்ளைங்க படிச்சு கெட்டுப் போவுதுல்ல...

தாமரை
23-06-2006, 11:40 AM
சீக்கிரம் பண்பட்டவர் பகுதிக்கு இதை மாத்துங்கப்பா
சின்னப் புள்ளைங்க படிச்சு கெட்டுப் போவுதுல்ல...
நான் ஒன்பதாம் வகுப்பில் எழுதிய பாட்டையே பண்பட்டவர்கள் பகுதிக்கு மாத்தறதா????:confused: :confused: :confused: :confused:

sarcharan
23-06-2006, 11:47 AM
நான் ஒன்பதாம் வகுப்பில் எழுதிய பாட்டையே பண்பட்டவர்கள் பகுதிக்கு மாத்தறதா????:confused: :confused: :confused: :confused:
ஆஹா அப்பவே ஆரம்பிச்சாசாஆஆஆ.....

மதி
23-06-2006, 12:14 PM
சீக்கிரம் பண்பட்டவர் பகுதிக்கு இதை மாத்துங்கப்பா
சின்னப் புள்ளைங்க படிச்சு கெட்டுப் போவுதுல்ல...
என்ன பத்தி ஏதோ பேசற மாதிரி இருக்கு...:confused: :confused: :confused:

pradeepkt
23-06-2006, 01:38 PM
என்ன பத்தி ஏதோ பேசற மாதிரி இருக்கு...:confused: :confused: :confused:
அதானே பாத்தேன்...
ராசா, உன் புள்ளைங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, நீ கவலைப் படாத...

அறிஞர்
23-06-2006, 04:31 PM
வெண்பாவும்.. கருத்துக்களின் கலாய்ச்சலும் அருமை....

இந்த பகுதியில் தங்களுடைய படைப்பு மட்டும் கொடுங்கள்.... மற்றொருவர் படைப்பாக இருந்தால் இலக்கிய பகுதியில் கொடுங்கள்

தாமரை
24-06-2006, 07:08 AM
வெண்பாவும்.. கருத்துக்களின் கலாய்ச்சலும் அருமை....

இந்த பகுதியில் தங்களுடைய படைப்பு மட்டும் கொடுங்கள்.... மற்றொருவர் படைப்பாக இருந்தால் இலக்கிய பகுதியில் கொடுங்கள்
என்னை நம்பவில்லையா அறிஞரே???:confused: :confused: :confused:

இப்பகுதியில் நான் பதிக்கும் பதிவுகள் என்னால் உருவாக்கப் பட்டவை என்று உளமார உறுதி கூறுகிறேன்..:cool: :cool: :cool: :cool: :cool:

ஓவியா
24-06-2006, 12:16 PM
நான் ஒன்பதாம் வகுப்பில் எழுதிய பாட்டையே பண்பட்டவர்கள் பகுதிக்கு மாத்தறதா????:confused: :confused: :confused: :confused:
:eek: :eek:

ஆஹா அப்பவே ஆரம்பிச்சாசாஆஆஆ.....
:p :p :p :p :p

இளசு
24-06-2006, 10:16 PM
பரந்த மனசுக்கு - பொது வாழ்த்து..
பாட்டு கட்டும் புலமைக்கு - வெண்பா..

புகழ் ஏந்தி விளங்கும் செல்வனுக்கு பாராட்டுகள்.

(கவீ கண்டு இன்னும் பாராட்டுவார்..
பென்ஸ், இலக்கணம் எல்லாம் பார்க்காம, நாம பொதுவா பாராட்டி வைப்போம் சரீயா?)

தாமரை
12-05-2007, 06:54 PM
தவறிய பதிவு

ஓவியா
12-05-2007, 07:03 PM
வாழியவே இப்புவி வாழியவே நன்மாந்தர்
வாழியவே ஒப்பிலாப் பேரண்டம் - வாழியவே
வானிலவு கோள்மீன்கள் வகைவகைத் தாவரங்கள்
ஊனுயிர்கள் வாழ்க உயர்ந்து.

[

இந்தப் பூமி வாழ்க
பூமியில் உள்ள நல்ல மனிதர்கள் வாழ்க
அளவிட முடியாத அளவு பெரிதான பேரண்டம் வாழ்க (யுனிவர்ஸ்)
வான், நிலவு, கிரகங்கள், வின்மீன்கள், ஆயிரக் கணக்கான வகைகளைக் கொண்ட தாவரங்கள் வாழ்க..

உடல் கொண்ட அனைத்து உயிர்களும் வாழ்க.....

என்ன அழகிய தமிழ். நான் மீண்டும் பாராட்டினா தப்பில்லை.

அருமையான வாழ்த்துப்பா. நன்றி.

ஆதவா
12-05-2007, 07:29 PM
வாழியவே இப்புவி வாழியவே நன்மாந்தர்
வாழியவே ஒப்பிலாப் பேரண்டம் - வாழியவே
வானிலவு கோள்மீன்கள் வகைவகைத் தாவரங்கள்
ஊனுயிர்கள் வாழ்க உயர்ந்து.

அழகான கவிவாழ்த்து... அதிலும் வெண்பாவில்..... நீங்கள் வெண்பா எழுதுவது எனக்கு இப்போழ்துதான் தெரியும். சுவை அழகு...
வார்த்தை பிரிக்காமல் இட்ட சொல்லழகு. நன்று..

ஒன்பதாம் வகுப்பில் இட்ட கவியென்றாலும் அன்று நடத்திய அசைபிரித்தலை சரி பார்த்திருந்தீர்கள் என்றால் தவறு நிகழ்ந்திருக்காது...

கோள்மீன்கள் காய் முன் நேர் வரவேண்டும் ஆனால் வந்ததோ நிரை (வகை) ஹி ஹி கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்....:spudnikbackflip: