PDA

View Full Version : விருத்தனுக்கோர் விருத்தம்....

தாமரை
23-06-2006, 03:48 AM
விருத்தனுக்கோர் விருத்தம்....

முருகனை முக்கண் முதல்வன் குருத்தினை - மால்
மருகனை வள்ளி மனங்கவர் விருத்தனை

வேடனை விண்ணோர் குறைதீர் வேலனை - செங்
கோடனை குறுநகை தருமருள் பாலனை

வீரனை வேந்தனை வெற்றிக் குமரனை - கொடும்
சூரனை யழித்த சிறுவனை அமரனை

கந்தனை கடம்பனை கானமயில் வாகனனை - தினம்
வந்தனை செய்திடும் சிந்தனை சுகமே

பின்குறிப்பு : மயில் இருப்பதால் ராகவருக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

இளசு
23-06-2006, 08:12 PM
விருத்தனும் சிறுவனுமானவனுக்குப்
பொருத்தமான விருத்தப்பா..

அருமை செல்வன்.

சுவைகள் நிரம்பிய பா... அருந்தத் தந்தமைக்கு நன்றி..

இனியவன்
24-06-2006, 06:13 AM
விருத்தம் படிப்பவருக்கு வருத்தம் வருவதில்லை என்று கேள்விப்பட்டதுண்டு, தொடருங்கள் செல்வன்,

ஓவியா
24-06-2006, 01:43 PM
விருத்தனுக்கோர் விருத்தம்....

முருகனை முக்கண் முதல்வன் குருத்தினை - மால்
மருகனை வள்ளி மனங்கவர் விருத்தனை

வேடனை விண்ணோர் குறைதீர் வேலனை - செங்
கோடனை குறுநகை தருமருள் பாலனை

வீரனை வேந்தனை வெற்றிக் குமரனை - கொடும்
சூரனை யழித்த சிறுவனை அமரனை

கந்தனை கடம்பனை கானமயில் வாகனனை - தினம்
வந்தனை செய்திடும் சிந்தனை சுகமே

பின்குறிப்பு : மயில் இருப்பதால் ராகவருக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

மிகவும் அருமை........ஆனால்
எனக்கு தமிழில் புலமை கொஞ்சம் குறைவு.......................:)

மிக தாழ்மையான ஒரு வேண்டுகோள்
கவிதையின் விளக்கம் கொடுத்தால் நலம் ....:) :)

saraa
24-06-2006, 01:50 PM
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

முருகு
அழகு
தமிழ்
வீரம்
காதல்

எல்லாம் மூன்று எழுத்து

முருகுன்னா அழகு:
அழகுன்ன முருகன்:

தமிழ் கிழவன் முருகன் மேல்
நல்ல விருத்தம்

ஓவியா
24-06-2006, 02:38 PM
முருகுன்னா அழகு:
அழகுன்ன முருகன்:

தமிழ் கிழவன் முருகன் மேல்
நல்ல விருத்தம்

இங்கே தமிழ் கிழவன் யாரு?

அய்யையோ..செல்வன் சார்....

pradeepkt
24-06-2006, 06:29 PM
முதல்ல, பாரதி காணாப் புதுமைப் பெண்ணே,
கிழவன்னா என்னன்னு கேளுங்க...
நம்ம மன்றத்திலையே நிறைய தமிழ்க் கிழவர்கள் உண்டு...

றெனிநிமல்
24-06-2006, 10:09 PM
முதல்ல, பாரதி காணாப் புதுமைப் பெண்ணே,
கிழவன்னா என்னன்னு கேளுங்க...
நம்ம மன்றத்திலையே நிறைய தமிழ்க் கிழவர்கள் உண்டு...

ஹா ஹா ஹா ஹா......:D

றெனிநிமல்
24-06-2006, 10:10 PM
வாழ்த்துக்கள் செல்வன்.

பென்ஸ்
25-06-2006, 02:59 PM
மிக தாழ்மையான ஒரு வேண்டுகோள்
கவிதையின் விளக்கம் கொடுத்தால் நலம் ....:) :)

செல்வன்..
விமர்சனம் எழுத பாட்டு முதல்ல புரியனுமில்லா... புரியமாட்டேங்குது ஓய்...

ஏலே சரவணா... என்னாலா இது... புரியல.. இது தமிலூ தானாலா....
சின்ன பயக்க எனக்கு இது எல்லாம் புரிய மாட்டேங்குதேலா....
இந்த பாட்டை கொஞ்சம் விளக்கமா சொல்ல சொல்லுல....

தாமரை
26-06-2006, 03:36 AM
விருத்தனுக்கோர் விருத்தம் -
விருத்தன் - கிழவன்
விருத்தம் - ஆசிரிய விருத்தம் என்ற பாவகை.

முருகனை

முக்கண் முதல்வன் குருத்தினை - மூன்று கண்களைக் கொண்ட, அனைத்திற்கும் முதன்மையானவனாக திகழும் சிவனிலிருந்து தோன்றியவனை

மால் திருமால், விஷ்ணு

மருகனை [/B] - மருமகனை

வள்ளி மனங்கவர் விருத்தனை - கிழவனாக பொய்யுருவம் கொண்டு சென்று வள்ளியின் மனம் கவர்ந்தவனை

வேடனை - வேடனாகவும் வேடம் புனைந்தவன், வேட்டைக்காரன், வேடமிடுபவன்

விண்ணோர் குறைதீர் வேலனை - தேவ்ர்களின் அடிமைத் தளை கழைந்து அவர்களின் கவலையைத் தீர்த்தவனை

செங்கோடனை - செங்குத்தான மலை மீது இருப்பவனை (திருச் செங்கோட்டு வேலவர்)

குறுநகை தருமருள் பாலனை - புன்சிரிப்பு கொண்ட அருளுடைய குழந்தையை

வீரனை
வேந்தனை
வெற்றிக் குமரனை -
கொடும் சூரனை யழித்த சிறுவனை
அமரனை - அழிவில்லாதவனை

கந்தனை - குமரன், கந்தன் என்றால் மகன் என்றே பொருள்
கடம்பனை - முருகனின் இன்னொரு பெயர்

கானமயில் வாகனனை
தினம் வந்தனை செய்திடும் சிந்தனை சுகமே - தினமும் வணங்க வேண்டும் வந்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே சுகமானது..

கிழவர் என்றால் அறிஞர் என்றும் பொருள்...!!!!
(மாற்றி நினைத்தால் நான் பொறுப்பல்ல :D :D :D )

ஓவியா
26-06-2006, 11:02 AM
முதல்ல, பாரதி காணாப் புதுமைப் பெண்ணே,
கிழவன்னா என்னன்னு கேளுங்க...
நம்ம மன்றத்திலையே நிறைய தமிழ்க் கிழவர்கள் உண்டு...

:) :) :) :)

விருத்தனுக்கோர் விருத்தம் -
விருத்தன் - கிழவன்
விருத்தம் - ஆசிரிய விருத்தம் என்ற பாவகை.

முருகனை
முக்கண் முதல்வன் குருத்தினை - மூன்று கண்களைக் கொண்ட, அனைத்திற்கும் முதன்மையானவனாக திகழும் சிவனிலிருந்து தோன்றியவனை

மால் திருமால், விஷ்ணு
மருகனை [/B] - மருமகனை

வள்ளி மனங்கவர் விருத்தனை - கிழவனாக பொய்யுருவம் கொண்டு சென்று வள்ளியின் மனம் கவர்ந்தவனை
வேடனை - வேடனாகவும் வேடம் புனைந்தவன், வேட்டைக்காரன், வேடமிடுபவன்

விண்ணோர் குறைதீர் வேலனை - தேவ்ர்களின் அடிமைத் தளை கழைந்து அவர்களின் கவலையைத் தீர்த்தவனை
செங்கோடனை - செங்குத்தான மலை மீது இருப்பவனை (திருச் செங்கோட்டு வேலவர்)

குறுநகை தருமருள் பாலனை - புன்சிரிப்பு கொண்ட அருளுடைய குழந்தையை
வீரனை
வேந்தனை
வெற்றிக் குமரனை -
கொடும் சூரனை யழித்த சிறுவனை
அமரனை - அழிவில்லாதவனை

கந்தனை - குமரன், கந்தன் என்றால் மகன் என்றே பொருள்
கடம்பனை - முருகனின் இன்னொரு பெயர்
கானமயில் வாகனனை
தினம் வந்தனை செய்திடும் சிந்தனை சுகமே - தினமும் வணங்க வேண்டும் வந்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே சுகமானது..

கிழவர் என்றால் அறிஞர் என்றும் பொருள்...!!!!
(மாற்றி நினைத்தால் நான் பொறுப்பல்ல :D :D :D )

அழகனுக்கு அழகான பாடல்
நன்றி செல்வன் சார்

gragavan
04-07-2006, 09:14 AM
அன்று நன்று என்று தமிழ்க் கன்று ஒன்று இட்ட பதிவொன்று இன்று என் கண்கள் தின்று உவந்தன.

வேலனைச் சிவபாலனை உமையருட் சீலனைப் பற்றி விருத்தம் எழுதி வருத்தம் போக்கிய தாமரை வாழ்க. முத்தமிழுக்கும் முழுமுதற் கடவுளாகிய கந்தவேளை எந்தவேளையும் தொழும் அவன் காலடியில் விழும் எனக்கு இந்தப் பதிப்பு உவப்பு என்று சொல்லவும் வேண்டுமோ!

pradeepkt
04-07-2006, 09:19 AM
ராகவா,
பாராட்டுறது கூட மூச்சைப் பிடிக்கிற மாதிரிதான் செய்வீங்களா? :D :D

தாமரை
04-07-2006, 09:28 AM
ராகவா,
பாராட்டுறது கூட மூச்சைப் பிடிக்கிற மாதிரிதான் செய்வீங்களா? :D :D
வேறென்ன மூச்சைப் பிடிக்கிறா மாதிரி செய்யறார்?:confused: :confused: :confused:

vckannan
31-07-2006, 01:29 PM
குறத்தியின் கணவனை குமரனை
குன்றேறி நின்றவனை குகனை
கண்ணனின் மருகனை மயிலேறும்
வேலனை வேழத்தின் தம்பியை
விருத்ததில்வைத்த செல்வ!- நீர் வாழி

pradeepkt
01-08-2006, 05:26 AM
அட...
என்று சொல்ல வைக்கும் இன்னொரு வாழ்த்துப்பா...
கண்ணா, நன்றாகச் செல்வனை வாழ்த்துப்பா!!!

gragavan
01-08-2006, 06:31 AM
ராகவா,
பாராட்டுறது கூட மூச்சைப் பிடிக்கிற மாதிரிதான் செய்வீங்களா? :D :Dஹி ஹி இதெல்லாம் நமக்குக் கை வந்த கலையப்பா.... :D :D :D :D :D

vckannan
01-08-2006, 09:04 AM
அட...
என்று சொல்ல வைக்கும் இன்னொரு வாழ்த்துப்பா...
கண்ணா, நன்றாகச் செல்வனை வாழ்த்துப்பா!!!

நன்றி:D:D

சும்மா முயற்சி பண்ணிப் பார்த்தேன்