PDA

View Full Version : ஓடும் பஸ்சில் 1 ரூபாய் தொ(ல்)லைபேசி



இனியவன்
22-06-2006, 03:23 PM
திண்டுக்கல் மினி பேருந்துகளில் ஒரு ரூபாய் நாணயத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். பயணிகளிடையே இதற்கு செமையான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 1 ரூபாய் போட்டு தொலைபேசும் முறை பிரபலம் அடைந்துள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஒரு ரூபாய் தொலை'பொட்டி' தொங்குவதைப் பார்க்கலாம். தடுக்கி விழுந்தால் அந்தப் பொட்டிதான் தாங்கும்.

தற்போது அது புதிய அவதாரம் எடுத்து பேருந்துகளிலும் தொங்குகின்றன மனிதனுக்குப் போட்டியாக. ஆனால் அவற்றில் மனிதனை விட பயன் அதிகம். :)

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பேருந்துகளில் முதல் கட்டமாக இதை அமல்படுத்தியுள்ளனர். வழக்கமாக வைக்கப்படும் ஒரு ரூபாய் போன் மெஷின் போல தோற்றமளித்தாலும் இது கம்பியில்லா தொலைபேசி யாரும் லவட்ட முடியாது. அதற்கென ஒரு கொம்பு(ஆண்டெனாவும்) பொருத்தப்பட்டுள்ளது.

தொ(ல்)லைபேசப் போய் பேருந்தை விட்டு விடுவோமா என்ற பதற்றம் எல்லாம் இனி இல்லை.
பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க ...
உங்க காசுல மட்டும்.

pradeepkt
23-06-2006, 05:32 AM
சூப்பர்...
கலக்குறாங்க... நாடு முன்னேறட்டும்

sarcharan
23-06-2006, 11:54 AM
சூப்பர்...
கலக்குறாங்க... நாடு முன்னேறட்டும்


ஹ்ம்ம் இனிமேல் பஸ்ஸில் அதுவும் லேடீள் சீட்டுல போயே கடலை சாரி போன் பேசலாம்....

pradeepkt
23-06-2006, 01:34 PM
ஹ்ம்ம் இனிமேல் பஸ்ஸில் அதுவும் லேடீள் சீட்டுல போயே கடலை சாரி போன் பேசலாம்....
உன் கவலை உனக்கு...
ஆனாப் பாரு, பொது மாத்து மாத்துறதுக்குன்னே கொள்ளப் பய திரியுறான்... கவனமா இரு ராசா :D

அறிஞர்
23-06-2006, 03:51 PM
இது மாதிரி வசதியை.. நான் எங்கும் கண்டதில்லை...

எளிய மக்களுக்கு நல்ல பயனுள்ள திட்டம்...
----
இன்னும் கொஞ்ச நாள் கழித்து...

போனில் கதைக்கும் குடிமகன் "யோவ் டிரைவரு... வண்டிய கொஞ்சம் ஓரம் கட்டுப்பா..... வீட்டுல இருக்கிறவங்களுக்கு.... நான் பேசுற சரியா கேட்கலையாம்"
------
அடுத்த நாள் செய்தி தாளில்

ஓடும் பஸ்ஸில் போன் பேசியவருக்கும், டிரைவருக்கும் கைகலப்பு...

இனியவன்
23-06-2006, 04:09 PM
ஓடும் பஸ்ஸில் போன் பேசியவருக்கும், டிரைவருக்கும் கைகலப்பு...[/QUOTE]
:) :) :)

ஓவியா
24-06-2006, 12:41 PM
உன் கவலை உனக்கு...
ஆனாப் பாரு, பொது மாத்து மாத்துறதுக்குன்னே கொள்ளப் பய திரியுறான்... கவனமா இரு ராசா :D


:) :)

saraa
24-06-2006, 01:22 PM
சில்லரை பிரச்சனை இருக்காது