PDA

View Full Version : ஜுன் 22 இலங்கைச் செய்திகள்



இனியவன்
22-06-2006, 02:04 PM
1) இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம்
நிராகரித்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்தன. அதையடுத்து அவர்கள்
கண்காணிப்புக் குழுவில் தொடரக் கூடாது என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை
அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதனிடையே, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழி பற்றி அரசாங்கத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கவில்லை என்று
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு தெரிவித்தார். அச்சம்பவத்தில்
பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளால் கையாளப்படுபவை. எனவே அத்தாக்குதலை அவர்களே நடத்தி இருக்க
வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அரச படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்துள்ள போதும் விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்களுக்குத் திரும்புவார்கள்
என்று நம்புவதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.


2) இலங்கை இனப்பிரச்சனைக்கு சிங்களர்கள் தான் காரணம் என்று ஜே.வி.பி. பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
கண்டியில் நடந்த கருத்தரங்கில் பேசிய போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

சொந்த இலாபங்களுக்காக சில அரசியல் குழுக்களும் ஊடகங்களும் ஜே.வி.பி.யை விமர்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

வடபகுதியில் உள்ள எண்ணெய் வளத்துக்கு ஆசைப்பட்டு மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர். அவர்கள்
வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.

நாம் நமது உரிமைகளுக்காகப் போராடுவோம். உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து அரச படைகள் நம்மைக் காப்பாற்றும் என்றும்
ரில்வின் சில்வா தெரிவித்தார்.


3) இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டம் ஏதும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியது. கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது.அதைத் தொடக்கி வைத்துப் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட உறுப்பினர் லக்மண் கிரியெல்ல அவ்வாறு கூறினார்.

வடக்கு-கிழக்கு பிரச்சனைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தம் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கினார்.
அது கடந்த 3 ஆண்டுகாலமாக வன்முறைகளைத் தடுத்தது. ஆனால் யுத்த நிறுத்தம் நடப்பில் இருந்தும் சென்ற 6 மாதங்களில் அப்பாவிகள்
600 பேர் கொல்லப்பட்டனர். எனவே மகிந்த ராஜபக்ச அரசிடம் இனப்பிரச்சனைக்த் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை என்று லக்மண்
கிரியெல்ல பேசினார்.


4) இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழு சிறார்களைக் கடத்திச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஆட்கடத்தல் அதிகரித்துள்ளது. அது பற்றி அரசாங்கம் விசாரணை நடத்தி சிறார்களுக்கு
பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதனிடையயே அம்மாவட்த்தில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வன்செயலை துணை ராணுவக்குழுவினர் தான் நடத்தி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5) அம்பாறை கிராமங்களில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று,
ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா, நாவற்குடா ஆகிய இடங்களில் அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை அந்தத் தேடுதல்
நடத்தப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினருடன் துணை இராணுவ்க் குழுவும் அந்த நடவடிக்கையில் ஈடபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

6) மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அது தொடர்பாக தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் ஆலோசித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தெரிவித்தனர்.தற்போது லண்டனில் உள்ள சந்திரகாந்தனை நேரில் சந்தித்து இலங்கைக்கு அழைத்து வர இருப்பதாகவும் கூட்டமைப்பு
வட்டாரங்கள் தெரிவித்தன.