PDA

View Full Version : ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!

தாமரை
22-06-2006, 06:54 AM
ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!

உள்ளத் துறையும் உயர்பெருந் தகைசால்
தெள்ளத் தெளிந்த அறிவுடை பெரியோய்
வள்ளட் டன்மையிற் வான்மழைக் கொப்போய்
உள்ளங் கனிந்தேத் துவதைக் கேளாய்
பள்ளிச் செல்வமாம் கல்விச் செல்வத்தை
அள்ளி அள்ளி அன்புடன் ஈந்து
பாலில் பட்ட பைம்புனல் தன்னை
பாங்குடன் அன்னம் பகுப்பதைப் போலே
நூலில் கற்ற நுட்பத்தில் எல்லாம்
நுணங்கிடும் நன்மையை நுகர்ந்திட வைத்தாய்
வாழ்வில் வளத்தை வனப்புடன் இணைத்த
வாழும் தெய்வம் நீயென்றும்
வாழிய வாழிய வாழிய வே.
__________________

pradeepkt
22-06-2006, 06:59 AM
சபாஷ்!!!

mukilan
22-06-2006, 07:01 AM
இப்படித் தனியா திரியா போட்டாத்தானே எல்லாருக்கும் தெளிவாத் தெரியும். அரசியல், கதை, சினிமா, கவிதை, விளையாட்டு இப்படி எல்லாத்தையும் தொட்டு ஆல்ரவுண்டரா கலக்கிறீங்களே.

தாமரை
22-06-2006, 10:35 AM
இப்படித் தனியா திரியா போட்டாத்தானே எல்லாருக்கும் தெளிவாத் தெரியும். அரசியல், கதை, சினிமா, கவிதை, விளையாட்டு இப்படி எல்லாத்தையும் தொட்டு ஆல்ரவுண்டரா கலக்கிறீங்களே.

தொட்டதுக்கெல்லாம் புகழ்றீங்களே

இளசு
22-06-2006, 10:46 PM
பாராட்டுகள் செல்வன்..

இதைப்பாராட்ட மிகச்சரியான நபர் - கவிதா.

கவீ எங்கேப்பா..?

பென்ஸ்
25-06-2006, 03:47 PM
பாராட்டுகள் செல்வன்..

இதைப்பாராட்ட மிகச்சரியான நபர் - கவிதா.

கவீ எங்கேப்பா..?

இளசு என் மேல உங்களுக்கு எதாவது கோபமா...??:rolleyes: :rolleyes:

ஏற்க்கனவே இந்த சங்கதி புரியாமாதான் செல்வனை இப்படி ஒன்னு
எழுதியதற்க்கு திட்டுவதா:angry: :angry: இல்லை பாராட்டுவதா:D :D
(பாராட்டு எப்படியும் கிடையாது, நல்ல நண்பனுக்கு எப்பவும் பாராட்டு
தேவையில்லை:p :p ) என்று தெரியாமல் இருக்கிறேன்...

இந்த நிலமையில் கவியை விமர்சனம் எழுத கூப்பிடுங்க...
இந்த கவிதையைய புருஞ்சுக்க முடியவில்லை ..
பின்ன எங்க அவங்க விமர்சனத்தை....

செல்வன்: யோவ், இது எல்லாம் எதுக்கு ஓய்... நீரு ஒழுக்க ,
நேரிடையா நக்கல் அடித்தாலே நாலு நாளு கழித்துதான் புரியும், இந்த
லச்சனத்தில் ஆசிரியப்பா.. பாப்பான்னுட்டு...

பி.கு: எதோ டீச்சரை பத்தின்னு புரியுது, எடக்கு முடக்கான
விஷயம்னா தனிமடல் செய்யவும்...

தாமரை
26-06-2006, 03:49 AM
ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!

உள்ளத் துறையும் : என் உள்ளத்தில் வாழும்

உயர்பெருந் தகைசால் : உயர்ந்த, பெரிய புகழுக்குரிய

தெள்ளத் தெளிந்த அறிவுடை பெரியோய் : தெள்ளத்தெளிவாக இது புரியா விட்டால் மணியா அவர்களிடம் தமிழ் கற்றுக் கொள்ளவும்..

வள்ளட் டன்மையிற் வான்மழைக் கொப்போய் : மழை யாருக்காக பெய்கிறோம் எவ்வளவு பெய்கிறோம் என்று அறிந்து பெய்வதில்லை. அதைப் போல், கல்வியை யாருக்குக் கற்பிக்கிறோம் எதற்குக் கற்பிக்க்றோம் என்று பாராமல் அள்ளி வழங்கும் வள்ளலே

உள்ளங் கனிந்தேத் துவதைக் கேளாய் : என் உள்ளம் மகிழ்ந்து போற்றுவதைக் கேள்

பள்ளிச் செல்வமாம் கல்விச் செல்வத்தை : பள்ளியில் நாங்கள் ஈட்டக்கூடிய செல்வமாகிய கல்வியெனும் செல்வத்தை

அள்ளி அள்ளி அன்புடன் ஈந்து : அன்புடன் அள்ளி அள்ளி கொடுத்து

பாலில் பட்ட பைம்புனல் தன்னை : பாலில் கலந்திருக்கும் தண்ணீரை
பாங்குடன் அன்னம் பகுப்பதைப் போலே : அன்னம் பிரித்து பாலைப் பருகுவது போல

நூலில் கற்ற நுட்பத்தில் எல்லாம் : பல நூல்களில் நாங்கள் படிக்கின்ற பலவிதமான நுணுக்கமான விஷயங்கள், பாடங்களில்

நுணங்கிடும் நன்மையை நுகர்ந்திட வைத்தாய் : ஒளிந்து கொண்டிருக்கும் நல்ல விஷயங்களை, அவற்றால் பெறக்கூடிய நன்மைகள் அறிய வைத்தாய்

வாழ்வில் வளத்தை வனப்புடன் இணைத்த : எங்கள் வாழ்வில் வளம் பெருக வழிகாட்டியாக மட்டும் இல்லாமல் அதை அழகாக, எளிதாக, முறையாக எங்கள் வாழ்வுடன் இணைத்து வைத்த

வாழும் தெய்வம் நீயென்றும்

வாழிய வாழிய வாழிய வே.

போதுமா??

ஓவியா
26-06-2006, 10:56 AM

நல்லவேலை விளக்கம் கொடுத்தீர்,
இல்லை என்றால் நான் இந்த திரியை திரும்பியே பார்த்திருக்க மாட்டேன்

கவிதை நன்று
விளக்கம் அருமை

றெனிநிமல்
27-06-2006, 09:03 PM
கவியும் விளைக்கமும் நன்றே அமைந்திருக்கின்றது.

bioalgae
30-06-2006, 07:32 AM
நன்றி திரு செல்வம் அவர்களுக்கு பிறரிடதில் இருந்து வித்தியாசமாக ஆசிரியாருக்கு கவிதை எழதிய உங்களின் சிந்தனை போற்றதக்கது. ஒரு நல்ல ஆசிரியார் அவர் வாழ்நாளில் நிறைய மனிதர்களை உருவாக்குகிறார்
அவரை சிறப்பிக்க கவிதை எழுதிய உங்களால் இந்த இணையதளம் பொருமை அடைகிறது.

Raaga
30-06-2006, 07:43 AM
தாமரை செல்வனுக்கு அடியேனின் மனமார்ந்த பாராட்டுக்கள்...

உங்கள் விளக்கங்களுக்கும் நன்றி...

gragavan
30-06-2006, 09:22 AM
மிக அருமை. இலக்கணத்தைச் சரி பார்க்கவில்லை. ஆனால் சொல்ல வந்த கருத்து சிறப்பு.