PDA

View Full Version : கம்பி எண்ணும் கோழிஇனியவன்
21-06-2006, 04:16 PM
பிளஸ்டூ படிக்கும் மாணவிக்கு ஒரே நாளில் 500 எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி 'டீஸ்' செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெண்களின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் 'செல்லப்பாக்களின்' எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் தினசரி ஏராளமான எஸ்.எம்.எஸ். புகார்கள் குவிந்து கொண்டுள்ளன.

இந் நிலையில் வித்தியாசமான ஒரு கேஸ் வந்துள்ளது. திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செல்வம். துரைப்பாக்கத்தில் கோழிக்கடை வைத்துள்ளார். இவருக்கு 'கோழி செல்வம்' என்றும் பெயர் உண்டு. எப்படியோ ஒரு செல்போனை 'உஷார்' செய்து விட்டார் செல்வம்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் மேனகா. இவர் பிளஸ்டூ படித்து வருகிறார். மேனகா மீது மோகம் கொண்ட செல்வம், அவரிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார். ஆனால் மேனகா மறுத்து விட்டார்.

இருந்தாலும் தொடர்ந்து மேனகாவை துரத்திக் கொண்டிருந்தார். கோழிக்கடை வைத்துள்ளேன், நல்ல வருமானம், என்னைக் கல்யாணம் செய்து கொள், உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செல்வம்.

ஆனால் மேனகா விட்டுக் கொடுக்கவே இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த செல்வம், மேனகாவின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அதில் தினசரி எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தார்.

காதலி என்னைக் காதலி என்ற ரீதியில் ஆரம்பித்த செல்வத்தின் எஸ்எம்எஸ் அட்டகாசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.களை அனுப்பினார் செல்வம்.

அதில் ஏகத்துக்கும் ஆபாசம் வேறு. இனியும் பொறுக்கக் கூடாது என்று பயந்து போன மேனகா தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து மேனகாவின் தந்தை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.

கோழிக் கடையை ஒழுங்காக பார்க்காமல், கோழி பின்னால் அலையும் சேவல் மாதிரி அலைந்த செல்வம் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

செல்வம் கவுண்டிங் ஸ்டார்ட்...

பென்ஸ்
21-06-2006, 04:26 PM
என்னா நியூசு.. என்னா நியூசு....

இனியா...
மக்கா இதுக்கு முன்னால தினதந்தி மாலை மலை இதுல இருந்தீங்களா...
நியூஸ் எல்லாம் அதே மாதிரி இருக்கு....

இணைய நண்பன்
21-06-2006, 05:14 PM
அடடா..இப்படியும் நடக்குது என்ன? அப்போ கம்பி எண்ணுவது கோழியா சேவலா?

றெனிநிமல்
21-06-2006, 08:05 PM
கோழிக் கடையை ஒழுங்காக பார்க்காமல், கோழி பின்னால் அலையும் சேவல் மாதிரி அலைந்த செல்வம் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஹி ஹி ஹி.....:D

sarcharan
22-06-2006, 05:46 AM
என்னா நியூசு.. என்னா நியூசு....

இனியா...
மக்கா இதுக்கு முன்னால தினதந்தி மாலை மலை இதுல இருந்தீங்களா...
நியூஸ் எல்லாம் அதே மாதிரி இருக்கு....மாலை மலை!!!!!!!!!!!!:confused: :confused: :mad: :mad:

sarcharan
22-06-2006, 05:48 AM
கோழிக் கடையை ஒழுங்காக பார்க்காமல், கோழி பின்னால் அலையும் சேவல் மாதிரி அலைந்த செல்வம் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

செல்வம் கவுண்டிங் ஸ்டார்ட்...

அறைகூவிய சேவல் -இப்பொழுது

அறையினுள் கூவும் சேவல்

தாமரை
22-06-2006, 05:55 AM
இது இன்றைய தினமலர் செய்தி...

pradeepkt
22-06-2006, 06:41 AM
அதானே பார்த்தேன்... :D
சரவணா!! இப்ப பொம்பளைப் புள்ளைங்கள்லாம் ரொம்ப உஷாரு... கவனமா இருந்துக்கப்பா!! உன்னை பிடிஎம் போலீசு ஸ்டேஷன்ல வந்து செல்வனை ஜாமீன் எடுக்க விட்டுறாத, அம்புட்டுதேன் சொல்வேன்.

மயூ
22-06-2006, 07:52 AM
ஆப்புன்னா ஆப்புத்தான்.
ஆனா எங்க ஊரில (யாழ்ப்பாணம்). ஒரு சைக்கள் திருத்துபவனும் பாடசாலை மாணவியும் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடி விட்டனர்
கொடுத்து வைத்த சேவல்......

pradeepkt
22-06-2006, 09:04 AM
ஆப்புன்னா ஆப்புத்தான்.
ஆனா எங்க ஊரில (யாழ்ப்பாணம்). ஒரு சைக்கள் திருத்துபவனும் பாடசாலை மாணவியும் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடி விட்டனர்
கொடுத்து வைத்த சேவல்......
எங்க ஊரில் (மதுரையில) ஒரு மோட்டார் சைக்கிள் திருத்துபவனும் பாடசாலை மாணவியும் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடி விட்டனர்
ஆனால் சேவல் கொடுத்து வைக்கவில்லை, கொஞ்ச நாள் கழித்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் "யாயாயாயாயாயாயாயாயாயாயா" என்று கத்திக் கொண்டே தலையைச் சொறிந்து கொண்டு திரிந்தது.

(புரியாதவர்களுக்கு: பையன் பெயர் முருகன், பெண் பெயர் ஐஸ்வர்யா :D)

மதி
22-06-2006, 10:54 AM
அடடே...உங்க ஊர் தானா அது..?
புரியுது புரியுது...

ஓவியா
22-06-2006, 10:55 AM
எங்க ஊரில் (மதுரையில) ஒரு மோட்டார் சைக்கிள் திருத்துபவனும் பாடசாலை மாணவியும் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடி விட்டனர்
ஆனால் சேவல் கொடுத்து வைக்கவில்லை, கொஞ்ச நாள் கழித்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் "யாயாயாயாயாயாயாயாயாயாயா" என்று கத்திக் கொண்டே தலையைச் சொறிந்து கொண்டு திரிந்தது.

(புரியாதவர்களுக்கு: பையன் பெயர் முருகன், பெண் பெயர் ஐஸ்வர்யா :D)

:D :D :D

பென்ஸ்
22-06-2006, 11:32 AM
அட நீங்க வேற.. எங்க ஊரில் பொறியியல் கல்லூரி மாணவியும் , ஆசாரி வேலை செய்பவனும் ஓடி போயிட்டாங்க...

கொடுமை என்னானா...
கொஞ்ச நாள் க(ழி)ளித்து பையன் பொண்ணை பிடிக்கலைன்னு விட்டுட்டான்...
அதுவரை சும்மா இருந்த ஊருகாரங்க எல்லோரும் "பொது மாத்து" கொடுத்துட்டாங்க...

தாமரை
22-06-2006, 11:34 AM
அட நீங்க வேற.. எங்க ஊரில் பொறியியல் கல்லூரி மாணவியும் , ஆசாரி வேலை செய்பவனும் ஓடி போயிட்டாங்க...

கொடுமை என்னானா...
கொஞ்ச நாள் களித்து பயன் பொண்ணை பிடிக்கலைன்னு விட்டுட்டான்...
அதுவரை சும்மா இருந்த ஊருகாரங்க எல்லோரும் "பொது மாத்து" கொடுத்துட்டாங்க...
பென்ஸூ - உங்க ஓடிப் போன கதைகளில் இதை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..?

மதி
22-06-2006, 11:40 AM
இல்லியே..இது கல்லூரி மாணவி கதை தானே...?

தாமரை
22-06-2006, 11:42 AM
இல்லியே..இது கல்லூரி மாணவி கதை தானே...?
நான் சொன்னது பொண்ணுங்களோட ஓடிப் போறதை...:rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
22-06-2006, 11:43 AM
நான் சொன்னது பொண்ணுங்களோட ஓடிப் போறதை...:rolleyes: :rolleyes: :rolleyes:
எனக்கு எதுவும் தெரியாததால இத பத்தி கருத்து சொல்ல விரும்பல..:D :D :D :D

pradeepkt
22-06-2006, 11:44 AM
அட நீங்க வேற.. எங்க ஊரில் பொறியியல் கல்லூரி மாணவியும் , ஆசாரி வேலை செய்பவனும் ஓடி போயிட்டாங்க...

கொடுமை என்னானா...
கொஞ்ச நாள் க(ழி)ளித்து பையன் பொண்ணை பிடிக்கலைன்னு விட்டுட்டான்...
அதுவரை சும்மா இருந்த ஊருகாரங்க எல்லோரும் "பொது மாத்து" கொடுத்துட்டாங்க...
இதில கூட என்ன கவிதை நயம்????
ஆமா அதுவரைக்கும் உங்க ஊருக்காரங்க சும்மாதான் இருந்தாங்களா?

இனியவன்
22-06-2006, 02:15 PM
சேதி சொல்ல வந்தா என்னப்பு
இப்புடி எத்தனை கேள்விக் கணைகள்.
சிங்கப்பூர் வருவதற்கு முன்
சென்னையில் தூர தரிசனம் தந்தவன்.
அப்பப்போ அந்த வாடை இருக்கும்,
படிக்க சுவாரஸ்யமா இருக்கான்னு பாருங்க,
அல்வா வின் வாசனை முக்கியமில்ல,
சுவை தான் தேவை,

பென்ஸ்
22-06-2006, 04:01 PM
அல்வா வின் வாசனை முக்கியமில்ல,
சுவை தான் தேவை,

அல்வாவில்.. பத்து நாள் கழித்து ப்ரிக்கும் போது அடிக்கும் மணம்
அடித்தாலும் ருசித்து சாப்பிட முடியும்னு நினைக்கிறிரு...:D :D :D

பென்ஸ்
22-06-2006, 04:04 PM
இதில கூட என்ன கவிதை நயம்????
ஆமா அதுவரைக்கும் உங்க ஊருக்காரங்க சும்மாதான் இருந்தாங்களா?

பிரதிப்... இதில் முதலில் எதாவது பலன் கிடைக்குமா என்று பம்மாத்து காமிக்கும் மக்களும் உண்டு, :rolleyes: :rolleyes:
பாவம் என்று கொதித்து எழும் நல்ல மனிதர்களும் உண்டு... :D :D

பிரச்சினை வரும் வரை "ஒருவேளை அவளை அவன் நன்றாக
வைத்திருக்கலாம் என்று" பேசாமல் இருந்திருக்கலாம் அல்லவா????B) B)

இனியவன்
22-06-2006, 04:28 PM
அல்வாவில்.. பத்து நாள் கழித்து ப்ரிக்கும் போது அடிக்கும் மணம் அடித்தாலும் ருசித்து சாப்பிட முடியும்னு நினைக்கிறிரு...:D :D :D

ஒரு மாசமானாலும் வாணலியில் போட்டு கொஞ்சம் வாட்டி எடுத்து சாப்பிட்டுப் பாருங்கப்பூ,,,, அப்புறம் கேளுங்க,,,,

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள....

சிங்கத் தமிழன் சத்யராஜ்
சின்னத் தமிழி 3ஷா

இன்னா(மா)மே புர்ஞ்சுதா... தகிடு,,, ,,, ,,, ,,, ,,, ,,,

sarcharan
23-06-2006, 11:59 AM
எங்க ஊரில் (மதுரையில) ஒரு மோட்டார் சைக்கிள் திருத்துபவனும் பாடசாலை மாணவியும் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடி விட்டனர்
ஆனால் சேவல் கொடுத்து வைக்கவில்லை, கொஞ்ச நாள் கழித்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் "யாயாயாயாயாயாயாயாயாயாயா" என்று கத்திக் கொண்டே தலையைச் சொறிந்து கொண்டு திரிந்தது.

(புரியாதவர்களுக்கு: பையன் பெயர் முருகன், பெண் பெயர் ஐஸ்வர்யா :D)

மதுரைக்கார தம்பிக்கெல்லாம் புரிஞ்சுதா!!!!!!!!!!

pradeepkt
23-06-2006, 01:35 PM
மதுரைக்கார தம்பிக்கெல்லாம் புரிஞ்சுதா!!!!!!!!!!
இந்தத் தம்பிக்கு எல்லாம் புரிஞ்சுருச்சு... உனக்கு என்ன புரியுதுன்னு பாரு தம்பி...

அறிஞர்
23-06-2006, 03:47 PM
இது மாதிரி பல செய்திகள் வருகின்றன......

கோழிதான் கூண்டுக்கு கம்பி எண்ணுகிறது என்றால்.... கோழிக்கடை முதலாளியுமா....

இனியவன்
23-06-2006, 04:11 PM
இந்தத் தம்பிக்கு எல்லாம் புரிஞ்சுருச்சு... உனக்கு என்ன புரியுதுன்னு பாரு தம்பி...
காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.....

அறிஞர்
23-06-2006, 05:00 PM
(புரியாதவர்களுக்கு: பையன் பெயர் முருகன், பெண் பெயர் ஐஸ்வர்யா :D) யாரு!!!!!!!!! உங்க.. தோழன் முருகன் தானே... :confused: :confused: :confused: :confused:

ஓவியா
24-06-2006, 12:29 PM
இது மாதிரி பல செய்திகள் வருகின்றன......

கோழிதான் கூண்டுக்கு கம்பி எண்ணுகிறது என்றால்.... கோழிக்கடை முதலாளியுமா....

காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.....

:D :) :D :) :D :)