PDA

View Full Version : நான் கதை எழுதிய கதை...



saraa
21-06-2006, 01:20 PM
:eek: எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?

இந்த அரிப்பு ரணமாகி போறதுக்குள்ள கதை எழுதலாம் அப்படின்னு ஒரு குயர் A4 பேப்பர் வாங்கி, நல்லா மார்ஜின் போட்டுட்டு யோசிச்சேன்.

என்ன எழுதுறது?????????????????

டேய் சரா... முதல்ல பிள்ளையார் சுழி போடுடான்னு சொன்ன என்னுள் இருந்த ஆன்மீகவாதிக்கு ஒரு சபாஷ் சொன்னேன்.

பிள்ளையார் சுழி போட்டாச்சு...

அப்புறம்...

எத பத்தி கதை எழுதுறது ?????

முதல் முறையாய் கதை எழுதுற சாமி கதை எழுதுன்னு என் ஆன்மீகவாதி அறிவுறுத்தினான்...

ச்சி... அடங்கு என்று என் பெரியார் (அதாங்க பகுத்தறிவு) கண்டிச்சார் (கொஞ்சம் மரியாதை )

அறிவியல் சம்பந்த பட்ட கதை எழுத என் விஞ்ஞானி வலியுறுத்தினான்.


காதல் கதை எழுத சொல்லி என் ரோமியோ தூண்டினான்.

கடைசியில் என் சுய அறிவு முழிச்சுகிட்டு...

தம்பி... நேரமாச்சு தூங்கு நாளைக்கு ஆபிசு போனும்..

இல்லை ஆப்புதான்னு சொல்லி மிரட்டியது...


கடைசியில் எதார்த்தம் வென்று என் கதை பிள்ளையார் சுழியேடு நிற்க்கிறது.

இருந்தாலும் வார கடைசி இருக்குல்லா!!!

நாங்க அப்ப வருவோம்ல என்று எல்லாரும் அடங்கினார்.

விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.

மதி
21-06-2006, 02:18 PM
எழுதுங்கோ..எழுதுங்கோ...
பேஷா...

pradeepkt
21-06-2006, 02:38 PM
அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...

sarcharan
21-06-2006, 03:46 PM
அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...


இங்கயும் மதியா!!!!!!!!!!

அறிஞர்
21-06-2006, 03:59 PM
இது வரை ஏதும் எழுதிய பழக்கம் உண்டா....

இல்லையெனில்.. நீங்கள் கண்ட உண்மை சம்பவங்களை ஒட்டி எழுதப்பழகுங்க...... எளிதாக வரும்.....

மதி
22-06-2006, 04:41 AM
அதை எழுதி மன்றத்திலயும் போடுங்க.
மதிகிட்ட கேளுங்க நல்லாக் கதை விடுவார், மன்னிக்க... சொல்லுவார்...
ஏங்க..என் மேல இவ்ளோ கோவம்...

மேற்படி உங்க அளவுக்கு கத வுடற திறமை எனக்கில்ல...ஆமா..:D :D :D

தாமரை
22-06-2006, 05:30 AM
:eek: எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?


விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.
எழுத வேண்டும் கவிதை
ஏங்கினேன் நான் நெடுநாள்
புழுதி வாரி
பூசிக் கொண்டாலும்
எழுத வேண்டும் கவிதை

உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள்
உருப் பெற முடியாத வண்ணங்கள்
எள்ளி நகைத்தாலும்
நிமிர்ந்து எழுகின்ற சிங்கங்கள்

இது ஒரு
பல தெரு
சந்திப்பு

இதில்
எதுவென தெரியலை
என் திக்கு

வெறுமையை நோக்கி
திறமையை கூட்டி
போக வேண்டி ஒரு நினைப்பு

ஆனால்
அதில்தான் ஏனோ
ஒரு வெறுப்பு!!!!!

மதி
22-06-2006, 05:33 AM
யார் மேல வெறுப்பு..செல்வன்??

தாமரை
22-06-2006, 05:54 AM
யார் மேல வெறுப்பு..செல்வன்??
இப்படித்தான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயம் என் கவிதை எழுதும் பழக்கம் ஆ"ரம்பம்" ஆனது..

அடுத்து எழுதிய கவிதை

ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா!!!

உள்ளத் துறையும் உயர்பெருந் தகைசால்
தெள்ளத் தெளிந்த அறிவுடை பெரியோய்
வள்ளட் டன்மையிற் வான்மழைக் கொப்போய்
உள்ளங் கனிந்தேத் துவதைக் கேளாய்
பள்ளிச் செல்வமாம் கல்விச் செல்வத்தை
அள்ளி அள்ளி அன்புடன் ஈந்து
பாலில் பட்ட பைம்புனல் தன்னை
பாங்குடன் அன்னம் பகுப்பதைப் போலே
நூலில் கற்ற நுட்பத்தில் எல்லாம்
நுணங்கிடும் நன்மையை நுகர்ந்திட வைத்தாய்
வாழ்வில் வளத்தை வனப்புடன் இணைத்த
வாழும் தெய்வம் நீயென்றும்
வாழிய வாழிய வாழிய வே.

mukilan
22-06-2006, 06:09 AM
ஏ என முடியும் ஆசிரியப்பானு படிச்ச ஞாபகம். அடேங்கப்பா! ஆசிரியப்பா! கலக்கிட்டீங்க

மதி
22-06-2006, 06:37 AM
உண்மையாவே கலக்கல் கவிதை...!

ஓவியா
22-06-2006, 12:38 PM
எழுத வேண்டும் கவிதை
ஏங்கினேன் நான் நெடுநாள்
புழுதி வாரி
பூசிக் கொண்டாலும்
எழுத வேண்டும் கவிதை

உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள்
உருப் பெற முடியாத வண்ணங்கள்
எள்ளி நகைத்தாலும்
நிமிர்ந்து எழுகின்ற சிங்கங்கள்

இது ஒரு
பல தெரு
சந்திப்பு

இதில்
எதுவென தெரியலை
என் திக்கு

வெறுமையை நோக்கி
திறமையை கூட்டி
போக வேண்டி ஒரு நினைப்பு

ஆனால்
அதில்தான் ஏனோ
ஒரு வெறுப்பு!!!!!

சபாஷ் வாத்தியாரே...............ஆ ஆ ஓ ஓ (புகழ்கிறேன்)

இனியவன்
22-06-2006, 02:07 PM
வாழ்த்துகள்,

இளசு
22-06-2006, 10:26 PM
சராவின் கதை எழுதப்போகும் கதை இடியாப்பம் என்றால்
செல்வனின் கவிதைகள் - பாலும் சர்க்கரையுமாய்..

பாராட்டுகள் நண்பர்களே..

saraa
24-06-2006, 01:19 PM
வெறுமையை நோக்கி
திறமையை கூட்டி
போக வேண்டி ஒரு நினைப்பு

ஆனால்
அதில்தான் ஏனோ
ஒரு வெறுப்பு!!!!!

னைனா

நல்லா கீது கவிதை

சரா