PDA

View Full Version : இலங்கைச் செய்திகள்,,,இனியவன்
20-06-2006, 03:57 PM
1) இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களும் த,தே,கூ. உறுப்பினர்களும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக அப்பாவி தமிழர்களை ராணுவம் கொடுரமாகத் தாக்கி வருகிறது. அதில் பலர் பலியாகினர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் ஜே.வி.பி. பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் குறித்து அறிக்கையொன்றைத் தாக்கல் செய்தார். அதில் விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டிய வீரவன்ச அந்த இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தினார். கெப்பிட்டிக்கொல்லாவவில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ந.ரவிராஜ், செ.கஜேந்திரன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்படும் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதையடுத்து அவை நடுவிற்கு வந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். நடராஜா ரவிராஜ், கஜேந்திரன், ஈழவேந்தன் ஆகியோர் அந்தச் செயலில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவை நடுவிற்கு வந்த பிரதியமைச்சர்கள் ஜகத் புஷ்பகுமார, ஜயதிஸ்ஸ ரணவீர, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கேட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தி.மகேஸ்வரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அதனால் இருசாராருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜே.வி.பி. உறுப்பினர்கள் ஜயந்த விஜேசேகர, ஜயந்த சமரவீர, திமுது அபேகோன், அனுருத்த பொல்கம்பொல ஆகியோரும் வாக்குவாதத்தில் ஈடுபட நிலைமை மோசமாகியது.

அப்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீசிய புத்தகம் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மீது விழ இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அந்தக் களேபரத்தில் மேசையில் இருந்த மின்குமிழ் ஒன்று வெடித்துச் சிதறியது. அதையடுத்து சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்கு பண்டார நாடாளுமன்றத்தை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

2) யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழத் தேசியத் தலைவருக்கு நோர்வே கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக பேணி நடப்பதாக அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அநத்த் தகவலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கூறினார். இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுக்கள் தான் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.


3) பொலநறுவவில் இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது சோமவதிய பெளத்த விகாரை அருகே உள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். இராணுவமும் பதிலடியில் இறங்கியது. எனினும் எவருக்கும் காயமில்லை. பெளத்த விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன மோதலை உருவாக்குவதற்காக அரசாங்கப் படைகளே இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

4) சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பேருந்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் வசதிக்காக பனாகொடை, களுத்துறை, ஹொரணை, அவிசாவளை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு அந்தச் சேவை நடத்தப்பட்டு வந்தது.

புலனாய்வுக் குழுவுக்கு கிடைதத ரகசியத் தகவலையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து படையினருக்கும் இலவச பயண அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

5) நீர்கொழும்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதனால் நகரெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அநத் வதந்தி பரவியது.

அதையடுத்து பாடசாலைகளுக்குச் சென்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அது நிலைமையை மோசமாக்கியது. அதையடுத்து காவல்துறை பொறுப்பாளர் ஒ.டபிள்யு.சில்வா மக்களுக்கு விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

6) மட்டக்களப்பில் துணை ராணுவக் குழு ஒரவரைக் கடத்திச் சென்றது. அவர் நாசிவன்தீவு நல்லதம்பி சுதாகரன் என்று நம்பப்படுகிறது.
அவருடைய உறவினர் வீட்டை அந்தக் குழு தீ வைத்துக் கொளுத்தியது. அதன் சேதமதிப்பு பல இலட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே பகுதியில் மற்றொரு வீட்டில் புகுந்த துணை இராணுவத்தினர் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்றனர்.

,,, ,,, ,,,
தினமும் வழங்க முயற்சிக்கிறேன்,,, ,,, ,,,

தீபன்
20-06-2006, 05:26 PM
நல்ல முயற்சி நண்பரே.. பாராட்டுக்கள். ஆனால் உங்களால் இது தொடர்ந்து முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை... ஏனெனில் நம்னாட்டு செஇதிகளை அவ்வளவு இலகுவில் பதிவு செஇதிடமுடியாது... காரணம் நாளுக்கு நாள் செஇதிகள் கூடிக்கொண்டே போகப்போகிறது....

அறிஞர்
20-06-2006, 09:50 PM
தினமும் செய்தி கொடுங்கள்.... நடுநிலையான செய்தியை மட்டும் கொடுங்கள்......

தினமும் தாளம் ரேடியோ கேட்கும் வழக்கம் எனக்கு உண்டு....

என்றுதான் இலங்கையில் அமைதி திரும்பும் என்ற ஏக்கம் இன்றும் தொடர்கிறது...

இனியவன்
21-06-2006, 04:08 AM
நடுநிலை என்பதே பம்மாத்து.
இது என் தாழ்மையான கருத்து.
உண்மைக்கு ஏது நடுநிலை?
என்னால் முடிந்தவரை தகவல்களைத் தர முயற்சிக்கிறேன்.நன்றி.

இனியவன்
21-06-2006, 04:00 PM
ஜுன் 21 புதன்கிழமை

1) தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்

பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரை தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு கிளிநொச்சியில் சந்தித்துப் பேசியது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் அந்நிகழ்வு நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ச் செல்வன், இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. அதை அண்மைய

நடவடிக்கைகள் நிருபிக்கின்றன என்பதை நோர்வே தூதரிடம் எடுத்துச் சொன்னதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடை விதித்தது ஒரு தலைப்பட்சமானது. அப்படி இருக்கையில் அதனிடமிருந்து எங்களால் நியாயத்தை

எதிர்பார்க்க முடியாது. எனவே அது பற்றி எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளோம் என்று அவர் விவரித்தார்.

இலங்கை அரசின் நடவடிக்கைகளைக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து, அதற்கு தார்மீக ஆதரவளிக்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர்

வவியுறுத்தினார்.

வழமைபோல் இயல்பு நிலையைக் குழப்புவதற்காகவே வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவுக்குச் சென்றுள்ளதாகவும்

தமிழ்ச் செல்வன் சந்தேகம் தெரிவித்தார்.

2) யுத்த நிறுத்தம் பற்றிய நோர்டிக் நாடுகளின் வரும் வியாழக்கிழமை வெளியாகும் என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ்

பிறட்ஸ்கர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியுள்ளதை அவர் உறுதி செய்தார். விடுதலைப் புலிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்வதாகத்

தெரிவித்த அவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டாமென புலிகள் கோரியிருப்பது கவலைக்குரியது

என்றார்.

தொடர்ந்து கண்காணிப்புக் குழவினருக்கு பாதுகாப்பு வழங்க விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

3) மன்னார் பேசாலை தேவாலயம் மீதான தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம்

அனுப்பியுள்ளார். அதில், கடற்படைத் தாக்குதலில் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தேவாலயம் தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது.
ஆனால் தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்ட செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை என்று அவர்

குறிப்பிட்டுள்ளார்.

4) சிறிலங்கா மின்சார சபை மறுசீரமைப்பு மசோத திரும்பப் பெறப்பட வேண்டும் ,அவ்வாறு இல்லாவிட்டால் அரசுக்கான ஆதரவைத்

திரும்பப் பெறுவோம் என்று ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.

சிறிலங்கா மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன, பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, மகிந்தவின் ஆலோசகர் பரத

லக்ஸ்மன் பிரேமச்சந்திர, திறைசேரி செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர ஆகியோர் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.டி. லால்கந்த,

பியசிறி விஜெநாயக்க மற்றும் ரஞ்சன் ஜயலால் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது அநதத் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசவும் ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
இருப்பினும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறினார்.

5) கிளிநொச்சியில் கவிஞர் வேலணையூர் சுரேசின் உயிர் நெய்த வாழ்வு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமைற்று நடத்தினார். திரளான மக்கள் அதில் கலந்து சிறப்பித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

விடுதலைப் போராட்டத்தின் சமகால அனுபவங்களை சுரேஸ் தன் படைப்புகள் ஊடாக வழங்கி வருவதாக அவர் புகழ்ந்தார். விடுதலையின்

வீச்சாக கவிதை, இன்னமும் வீரியம் அடையவேண்டும் என்ற அவர் சுரேஸ் அப்பாதையில் பயணிப்பதாகக் கூறினார்.

விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை மதிப்பீட்டு உரையினை நிகழ்த்தினார்.

இறுதியாக சுரேஸ் ஏற்புரையாற்றினார்.