PDA

View Full Version : கவிஞன்... கவிஞன்... (படித்ததில் பிடித்தது.)saraa
20-06-2006, 03:03 PM
கண்ணதாசன் கவிதை எழுத உட்கார்ந்தால் நில்ல சூழ்நிலை, நல்ல சிந்தனை இருக்க வேண்டும். அவர் எழுதித் தரும் வரிகளில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால், மீண்டும் மீண்டும் எழுதித் தர சளைக்க மாட்டார். ஆனால், அவரது சிந்தனையில் சோர்வு ஏற்பட்டிருந்தால் அவரிடமிருந்து ஒரு வரியைக் கூட எதிர்பார்க்க முடியாது.

அவர் இருந்தவரை, கவிஞர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் அவர் தான். "களத்தூர் கண்ணம்மா' சமயத்திலெல்லாம் அவர் ஒரு பாடலுக்கு உவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அன்றைக்கு அது மிகப்பெ஛ய சம்பளம். ஆனால், அது அவர் கையில் தங்கியதில்லை.

அதை மனதில் வைத்து ஒரு நாள், "உங்களுக்கு அடுத்த நலையிலுள்ள கவிஞர்களுக்கு (ஒரு பாடலுக்கு) 400 ரூபாய்தான் சம்பளம். அந்த சம்பளத்திலேயே அவர்கள் நில்ல நலையில் இருக்கின்றனர். நீங்களோ அவர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்கியும்; அதை சேர்த்து வைக்காமல் செலவு செய்திடறீங்களே!' என்று கேட்டேன்.

அதற்கு கவிஞர், "என்னைப்பற்றி தெ஛ஞ்சும் இப்படிக் கேட்கலாமா? இருந்தாலும் உனக்காக சொல்றேன். நி௵ன் அதிகம் செலவு செய்கிற ஆள். சொந்தப்படம் எடுக்கறேன். அதில் நிஷ்டப்படுகிறேன். கடன் கொடுத்தவன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறான். கோர்ட்டுக்கு போய் நற்க வேண்டும்.

"எனது வக்கீல் வி.பி.ராமன் எனக்காக நறைய வாதாடுகிறார்.அவருக்கு பணம் தர வேண்டும்!

"இது போல் எனக்கு பல பிரச்னைகளால் பல வகையிலும் செலவு, பல வழிகளிலும் பிரச்னை இருந்து வந்தால் தான் எனக்கும் கவிதைகள் பொங்கி வரும். பிரச்னைகளே இல்லாதிருப்பவன் கவிஞனாக இருக்க முடியாது!' என்றார். எனக்கு அதற்கு மேல் கேட்கத் தோன்றவில்லை.

நன்றி - வார மலர்.

இளசு
20-06-2006, 09:29 PM
நன்றி சரா..

கவியரசு பற்றி இதுபோல் பல சுவையான சம்பவங்கள் உண்டு..

பல பல்லவிகள் அவரிடம் உருவானதற்கு அப்போதைய வாழ்க்கை
சு(சூ)ழல்கள் காரணம் என்பார்கள்..

அறிஞர் அண்ணாவிடம் ஏற்பட்ட பிணக்கால் - 'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

கடன் தர மறுத்த உறவால்-
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

கர்மவீரர் தோற்றபோது -
'முத்து நகையே உன்னை நானறிவேன்?

பாட்டு எழுத தாமதமாக்கியதற்கு மெல்லிசை மன்னர் கடிந்தபோது-
'சொன்னது நீதானா.. சொல் ..சொல்..


யதார்த்த வாழ்க்கையை விட்டு விலகாமலே
எளிய ஆனால் கவித்துவமான வரிகள் தந்த வள்ளல் அவர்..

இனியவன்
21-06-2006, 04:15 AM
நன்றி சரா..

பாட்டு எழுத தாமதமாக்கியதற்கு மெல்லிசை மன்னர் கடிந்தபோது-
'சொன்னது நீதானா.. சொல் ..சொல்..

யதார்த்த வாழ்க்கையை விட்டு விலகாமலே
எளிய ஆனால் கவித்துவமான வரிகள் தந்த வள்ளல் அவர்..

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய படம் அது.
கதாநாயகன் தன் மரணத்துக்குப் பின் வேறொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நாயகியிடம் கூறுகிறான். அதை அந்தப் பத்தினியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெண்களின் கோப வலிமை விசும்பலாகத் தானே ஒலிக்கும். அதற்காகவே சொல் என்ற வார்த்தையைக் கவிஞரிடம் கேட்டு வாங்கினார் இயக்குநர். இன்றும் அந்தப் பாடலைக் கேட்கும் போது மனதில் ஒரு வலி வரும். அது தான் அந்தப் பாடலின் வெற்றி.

pradeepkt
21-06-2006, 05:24 AM
நலந்தானா பாட்டு பற்றி கூட ஒரு சுவையான சம்பவம் உண்டு.
கவியரசர் என்ற பெயருக்கு என்றுமே பொருத்தமானவர்தான் கண்ணதாசன்.

saraa
21-06-2006, 01:37 PM
கவியரசு கவியரசு தான்.

ஒரு வரியில் உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டியவர்களுக்கு
புரிய வைப்பவர்.


பாவம் அரசியல் தெரியாத கவிஞன்

இனியவன்
02-07-2006, 07:11 AM
எம்.ஜி.ஆர்., நடிக்க, வி.சி.குகநாதன் கதை "புதிய பூமி'யானது. கண்ணதாசனின் மூன்று பாடல்கள் பதிவானது. இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்., பாடினால் பொருத்தமாக இருக்கும் என எனக்குத் தோன்றிய பல பல்லவிகளைத் தயாரிப்பாளர்களிடமும், குகநாதனிடமும் கூறியதுண்டு. அதில் ஒரு பல்லவி தான்
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது
ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை...'என்ற பல்லவி.
பல்லவி நன்றாக இருப்பதாக எல்லாருமே பாராட்டினர். என்றாலும் புதிய கவிஞனான என்னை எழுத வைத்தால் எம்.ஜி.ஆர்., என்ன சொல்வாரோ என அஞ்சவும் செய்தனர். அப்போது இந்தப் பல்லவியைக் கேட்ட ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார், "எம்.ஜி.ஆரிடம் பல்லவியை நான் சொல்கிறேன். உங்களையே எழுத வைக்கிறேன்...' என்றார். என்றாலும் எனக்கு அரைகுறை நம்பிக்கை தான்!
எம்.ஜி.ஆரிடம் படத்துக்குக் கால்ஷீட் வாங்க கனகசபை செட்டியாரும், தயாரிப்பாளரும் சென்றனர். அப்போது, "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' பல்லவியைக் கனகசபை கூற, யார் எழுதியது என்ற விவரமெல்லாம் கேட்டு விட்டு, "அவரையே எழுதச் சொல்லுங்கள்...' என்று கூறி விட்டார் எம்.ஜி.ஆர்.,
எம்.எஸ்.வி., அந்தப் பல்லவியில் ஓர் எழுத்தைக் கூட மாற்றச் சொல்லாமல் இசை அமைத்தார். தொடர்ந்து சரணங்களுக்கு ஒரு சந்தம் கொடுத்தார்.
"காலம் தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை!
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை!
இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்!
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்...'என முதல் சரணத்தை அங்கேயே, அப்போதே எழுதினேன்.
பிறகு படபிடிப்பில் சந்தித்தபோது, பாடலை மிகவும் பாராட்டினார் எம்.ஜி.ஆர்., "வேறு என்ன படங்களுக்கு எழுதுறீங்க?' என அன்போடு விசாரித்தார். நானும் அப்போது எழுதிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு படங்களைச் சொன்னேன். "நானும் சொல்றேன்...' எனக் கூறிவிட்டு படப்பிடிப்பில் ஈடுபட்டார்.
"உண்மையான உண்மைகள்'
நூலில் பூவை செங்குட்டுவன்.

நன்றி வாரமலர்

இளசு
02-07-2006, 10:07 PM
சுவையான திரைக்கவிச் சம்பவங்களுடன் திரி தொடர்கிறது.

நன்றி இனியன்.

maran75
03-07-2006, 11:48 AM
great kannadhaasan

ஓவியா
03-07-2006, 03:09 PM
நலந்தானா பாட்டு பற்றி கூட ஒரு சுவையான சம்பவம் உண்டு.
கவியரசர் என்ற பெயருக்கு என்றுமே பொருத்தமானவர்தான் கண்ணதாசன்.

பிரதீப் சார் ஆது என்ன சுவையான சம்பவம்
(உங்களுக்கு தெரியும் ஆனால் எங்களுக்கு தெரியாது)
சொன்னால் நலம்....:D


மே (மாதத்தில்) பாடலை முடிக்க வேண்டும் என்று மெஷ்.விஷ் கூரியதால்
கவியரசு கண்ணதாசன் மேவில் முடித்த பாடல்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்னில் விலையாடும் எழில் வண்னமே
கன்னி தமிழ் மன்றமே

இனியவன்
03-07-2006, 03:15 PM
உவமைக் கவிஞர் சுரதா கலந்து கொண்ட விழா அது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார் ஒருவர்.
அவர் தொலைக்காட்சித் தொடர் நடிகரோ தெரியவில்லை.
நீ,,,,,ண்ட பாடினார். மேடையிலிருந்த உவமைக் கவிஞர் தன் அருகில் இருந்த நண்பரிடம் இப்படிக் கூறினார்.
யாரப்பா இவர் கோவணத்தைச் சேலையாகக் கட்டுறார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பக்தென்பது இது தானா?