PDA

View Full Version : ஹி ஹி ஹிட்லர்......



இனியவன்
20-06-2006, 04:16 AM
ஹிட்லர் ஆட்சிக்கு வருமுன், 17 கட்சிகள் பார்லிமென்ட்டில் இருந்தன. பிறகோ, ஹிட்லரின் நாஜி கட்சி மட்டுமே இருந்தது. அப்போது ஒருநாள் பார்லிமென்ட் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இது சம்பந்தமாக வேடிக்கையான கதை ஒன்றை பெர்லினில் கூறுவர்.

பார்லிமென்ட் கட்டடம் தீப்பிடித்து எரிகிறதென்று ஹிட்லரிடம் சென்று கூறினாராம். அப்போது தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "இவ்வளவு சீக்கிரமா?' என்றாராம் ஹிட்லர். கடைசியில், பாவம் ஹாலந்து நாட்டுப் பைத்தியக்காரன் ஒருவனைப் பிடித்து, ஜெர்மன் பார்லிமென்ட் கட்டடத்துக்குத் தீயிட்ட குற்றத்துக்காக துக்கில் போட்டனராம்.

pradeepkt
20-06-2006, 07:37 AM
இனியவன்,
"இளம் புயல்"னு பேருக்கேத்த மாதிரிதானய்யா பதியுறீங்க!

இனியவன்
20-06-2006, 08:54 AM
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே
உடம்பு ரணகளமாக் கிடக்குதப்பு....

பென்ஸ்
20-06-2006, 09:10 AM
இனியவன்,
"இளம் புயல்"னு பேருக்கேத்த மாதிரிதானய்யா பதியுறீங்க!

நீங்களும் "மண்றத்தின் தூண்" எங்கிற மாதிரிதானே இருக்கீங்க...:D :D :D

pradeepkt
20-06-2006, 09:55 AM
நீங்களும் "மண்றத்தின் தூண்" எங்கிற மாதிரிதானே இருக்கீங்க...:D :D :D
இந்த நக்கலுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை.
சேம் சைட் கோல் போடுறது நல்லதில்லைங்ணா!!! :D

தாமரை
20-06-2006, 10:46 AM
நீங்களும் "மண்றத்தின் தூண்" எங்கிற மாதிரிதானே இருக்கீங்க...:D :D :D
இப்போ என்னாங்கிறீங்க..? :angry: :angry: :angry:


நான் மன்றத்தின் தூணாக வேண்டாமா?:rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
20-06-2006, 11:20 PM
நீங்களும் "மண்றத்தின் தூண்" எங்கிற மாதிரிதானே இருக்கீங்க...:D :D :D ஒரு தூண் பத்தி மற்ற (எதிர்கால) தூண் பேசக்கூடாதில்ல பிரதீப்பு......

arul5318
21-06-2006, 06:37 AM
நல்ல அறிவுரைதரும்படியான ஜோக்

றெனிநிமல்
21-06-2006, 08:59 PM
ஹிட்லர் ஓர் கொடியவராகவே வெளியுலகிற்கு படம் பிடித்துக் காட்டப் பட்டார். ஆனால் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருந்திருக்கின்றன! அவர் மாமிசம் உண்ண மாட்டார்! தன் காதலியை விட வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை தன் வாழ் நாள் முழுவதும்.

இதையும் விட, நாட்டில் இருக்கும் அனைவரின் வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்று கூறி அதை செயல் படுத்தவும் ஆணையிட்டிருந்தார். வேலை செய்யும் அனைவருக்கு ஓய்வூதியம் என்ற முறையை அமுல் படுத்தியவரும் இவரே!

aren
22-06-2006, 02:55 AM
எவ்வளவு நல்லது செய்தாலும் ஒரு கெட்ட விஷயத்தைச் செய்தால் தாம் செய்த எல்லா நல்ல விஷயங்களும் மறக்கப்பட்டுவிடும் என்பதற்கு ஹிட்லர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே தெரிகிறது.

அறிஞர்
23-06-2006, 04:33 PM
இது எங்கிருந்து எடுத்தீர்கள் அன்பரே....

இதை காப்பியடித்து மற்ற தளங்களில் வெளியிட்டுள்ளனர்........