PDA

View Full Version : டார்வினின் கூர்ப்புக் கொள்கை - மீளாய்வு...



தீபன்
18-06-2006, 05:37 PM
டார்வினின் கூர்ப்புக் கொள்கை - மீளாய்வு...


அந்திப் பொழுதில் மந்திகள் பல
கூட்டம் கூடிக்
குந்தியிருந்து பேசின தமக்குள்,


~மனிதனாம் மனிதன்!
எம்மினத்திலிருந்து தோன்றினானாம்.
என்ன கதையிது,
டார்வினின் கூர்ப்பு கொள்கையாம்...!
ஐயோ!
எம்மினத்திற்கே அவமானம்!!
குரங்குகள் நாம் நட்புமுறிவதில்லை..!
எல்லைச் சண்டையில்லை...!
சாதிப்பிரிவினை, இனக்கலவரம் எம்முள் எழுவதில்லை...!
மதக்கலவரம், குண்டு வெடிப்பு
அணுகுண்டு கலாச்சாரம், வன்முறைகள்
எமக்குள் இல்லை...!
கணவனை பிரிவதில்லை
மனைவியை விவாகரத்து செய்வதில்லை
நிறப்பிரிவினை எம்மிடையில்லை...!
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்
கடத்தல்காரன் வீரப்பன்,
சர்வதிகாரி கிட்லர், ஓசாமா பின்லேடன்
எம் மத்தியில் இல்லை...!
என்ன கொள்கையிது...?
தவறான வழிமுறை.... தப்பான படிமுறை...
டார்வின் லஞ்ச ஊழல் செய்து
எம் மீது பழியைப் போட்டு விட்டார்..!
மீளாய்வு செய்ய வேண்டும்...!!
டார்வின் கொள்கை,
மீள்புனரமைப்பு செய்யப்பட வேண்டும்...!!!.~


கு. ரங்குப்பிள்ளை
10ம் கொப்பு
8ம் மரம் (ஆலமரம்)
கூட்டம் கலைந்தது...
மந்திகள் அறிக்கையிது...!!!

இளசு
18-06-2006, 10:41 PM
பரிணாமம் சில தந்தும்
பல பழைய பண்புகளை இழந்த
பரிதாபம்..

அழகாய்க் குட்டிச்சொன்ன படிமம்..

பாராட்டுகள் தீபன்..

prabhafriend
18-06-2006, 10:48 PM
என்னைப் பொறுத்தவரை மனிதன் நீங்கள் சொல்லும் அளவு கெட்டவன் கிடையாது . இதும் ஒரு பரினாம வளர்ச்சியே . தற்பொழுது மனிதன் தன்னுடைய உணர்வுகள் அனைத்தும் வெளிபடுத்த தொடங்கி இருக்கிறான் . பிறகு தான் கட்டுப்படுத்த தொடங்குவான் . எல்லாம் மெல்ல நடக்கும் .

அல்லிராணி
19-06-2006, 09:30 AM
டார்வினின் கூர்ப்புக் கொள்கை - மீளாய்வு...


அந்திப் பொழுதில் மந்திகள் பல
கூட்டம் கூடிக்
குந்தியிருந்து பேசின தமக்குள்,


~மனிதனாம் மனிதன்!
எம்மினத்திலிருந்து தோன்றினானாம்.
என்ன கதையிது,
டார்வினின் கூர்ப்பு கொள்கையாம்...!
ஐயோ!
எம்மினத்திற்கே அவமானம்!!
குரங்குகள் நாம் நட்புமுறிவதில்லை..!
எல்லைச் சண்டையில்லை...!
சாதிப்பிரிவினை, இனக்கலவரம் எம்முள் எழுவதில்லை...!
மதக்கலவரம், குண்டு வெடிப்பு
அணுகுண்டு கலாச்சாரம், வன்முறைகள்
எமக்குள் இல்லை...!
கணவனை பிரிவதில்லை
மனைவியை விவாகரத்து செய்வதில்லை
நிறப்பிரிவினை எம்மிடையில்லை...!
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்
கடத்தல்காரன் வீரப்பன்,
சர்வதிகாரி கிட்லர், ஓசாமா பின்லேடன்
எம் மத்தியில் இல்லை...!
என்ன கொள்கையிது...?
தவறான வழிமுறை.... தப்பான படிமுறை...
டார்வின் லஞ்ச ஊழல் செய்து
எம் மீது பழியைப் போட்டு விட்டார்..!
மீளாய்வு செய்ய வேண்டும்...!!
டார்வின் கொள்கை,
மீள்புனரமைப்பு செய்யப்பட வேண்டும்...!!!.~


கு. ரங்குப்பிள்ளை
10ம் கொப்பு
8ம் மரம் (ஆலமரம்)
கூட்டம் கலைந்தது...
மந்திகள் அறிக்கையிது...!!!

ஒன்றுமில்லா விஷயத்திற்கு
மீட்டீங்காம்..
இதைவிட வேண்டுமா ஆதாரம்..

தோற்றுப் போன
எதிர்கட்சி போல்
ஊழல் புகார்..
போராட்ட அறிக்கை...
இதை விட வேண்டுமா ஆதாரம்...

----- அல்லி

இனியவன்
19-06-2006, 09:39 AM
வெளுத்து வாங்குறீங்க தீபன்
தொடருங்கள்,

தீபன்
19-06-2006, 05:10 PM
என்னைப் பொறுத்தவரை மனிதன் நீங்கள் சொல்லும் அளவு கெட்டவன் கிடையாது . இதும் ஒரு பரினாம வளர்ச்சியே . தற்பொழுது மனிதன் தன்னுடைய உணர்வுகள் அனைத்தும் வெளிபடுத்த தொடங்கி இருக்கிறான் . பிறகு தான் கட்டுப்படுத்த தொடங்குவான் . எல்லாம் மெல்ல நடக்கும் .
மெல்ல மெல்ல அது நடக்குமுன்னர் மனித இனமே அளிந்துவிட்டிருக்கும் நண்பரே... அதன் பின் பரிணாமம் அடைந்து என்ன பலன்..???

தீபன்
19-06-2006, 05:13 PM
ஒன்றுமில்லா விஷயத்திற்கு
மீட்டீங்காம்..
இதைவிட வேண்டுமா ஆதாரம்..

தோற்றுப் போன
எதிர்கட்சி போல்
ஊழல் புகார்..
போராட்ட அறிக்கை...
இதை விட வேண்டுமா ஆதாரம்...

----- அல்லி
எப்பவும் என்னோட ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க... என்ன பிரச்சினை நமக்குள் சகோதரி...?

அல்லிராணி
20-06-2006, 07:22 AM
எப்பவும் என்னோட ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க... என்ன பிரச்சினை நமக்குள் சகோதரி...?
உங்களுக்கும் எனக்குமா? பிரச்சனை ஒன்றும் இல்லையே!!!:cool: :cool: :cool:

நான் மந்திகளுக்கல்லவா பதில் சொன்னேன்...:rolleyes: :rolleyes: :rolleyes:

தீபன்
20-06-2006, 05:07 PM
உங்களுக்கும் எனக்குமா? பிரச்சனை ஒன்றும் இல்லையே!!!:cool: :cool: :cool:

நான் மந்திகளுக்கல்லவா பதில் சொன்னேன்...:rolleyes: :rolleyes: :rolleyes:
ஓ.. நீங்க மந்திகளுக்குத்தான் பதில் சொல்லுவிங்களா... அடடா ... நாந்தான் புரியாம கேட்டுட்டன்....

அக்னி
11-09-2007, 05:23 PM
சாட்டையடியாய் ஒரு கவிதை...

கூர்ப்பில்
பகுத்தறிவு
தோன்றியதா... மழுங்கியதா?
வினவ வைக்கின்றது,
மனிதனின்
பரிணாம வளர்ச்சி...

பாராட்டுக்கள் தீபன்...

இலக்கியன்
11-09-2007, 09:25 PM
நல்ல கற்பனை தொடரட்டும் உம் பணி

aren
12-09-2007, 10:58 AM
அழகான கற்பனையில் உதித்த கவிதை அருமை தீபன்.

ஜெயாஸ்தா
15-09-2007, 03:03 PM
கூர்ந்த கழுகுப்பார்வை
உன்னித்த பாம்புச்செவி
முழுவதையும் முழுங்கும்
முதலை வாய்...!

பானை போன்ற
யானை வயிறு
நிமிடத்திற்கோற் நிறம்
காட்டும் பச்சோந்தி மனது...!

சிங்க நடை...
சிறுத்தை எழுச்சி...
அடுத்தவன் பொருளை
அபகரிப்பதில் அட்டை போல்...!

வாழ்க்கையில் முன்னேற
நரித் தந்திரம்...
எந்தவழியிலும் சம்பாதிக்க
ஓநாய் வெறி...


மொத்ததில் விலங்குகளின்
சங்கமம் மனிதன்.....!
மாக்கள் இங்கே....
மனிதன் எங்கே...?

தீபா
09-07-2008, 07:26 AM
அருமை தீபன். நல்ல சாட்டையடி. மந்திகளும் மனிதர்களும் ஒப்பானவர்களல்ல. நம்மைக் காட்டிலும் அவர்கள் மேலானவர்கள். உந்தக் கவிதையெல்லாம் படிக்காமல் போய்விட்டேனே!