PDA

View Full Version : தேதியில்லா குறிப்புகள்



இணைய நண்பன்
18-06-2006, 10:44 AM
தேதியில்லா குறிப்புகள்

நிறைய மாதங்களாக நினைத்துக்கொண்டே இருந்தது.... ஆனால் செய்யத்தான் முடியவில்லை. இப்போதும் இதை முடிப்பேனா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தொடங்கிவிட வேண்டும் என்கிற உத்வேகம் மாத்திரமே இதை ஆரம்பிக்க செய்கிறது.

நினைவில் உள்ளவற்றை அப்படியே கொட்டுவதுதான் இதன் நோக்கம். இதில் அனேகமாக தேதியே இருக்காது, வரிசைக்கிரமமாகவும் இருக்காது.... கோர்வையாகவும் இருக்காது. சில விசயங்கள் திரும்ப வரலாம். சில சம்பந்தமில்லாமல் இருக்கலாம்... சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிவராமல் இருக்கலாம்.ஆனால் ஒன்று வருவதில் நிஜம் மட்டுமே இருக்கும்.

படிக்கப்போகிறவர்களுக்கு ...
இதில் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நன்றி.

முதல் நினைவு

யோசிச்சுப்பாக்குறேன்... பிறந்ததுலேருந்து எது முதல்ல ஞாபகத்துக்கு வருதுன்னு...ம்ம்... இதுதான்னு குறிப்பா சொல்ல முடியல... இப்போதைக்கு முதலாவது வகுப்பு படிக்க போனதுதான் நெனவுல இருக்கு.

பள்ளிக்கூடத்தோட பேரு பழனியப்பா வித்தியாலயம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு, ரெண்டாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு... இப்படி மொத்தம் பத்து வகுப்பு.

திங்கக்கிழம மட்டும் கண்டிப்பா யூனிபார்ம் போடணும். வெள்ளச்சட்ட, காக்கி டவுசர். மத்த நாள்ல நம்மகிட்ட என்ன இருக்கோ அத போட்டுகிட்டு போனா போதும். காலைல ஒம்போது மணிக்கு பள்ளிக்கூடம். லேட்டா போனா ஹெட்மாஸ்டர்கிட்டே பெரம்படி வாங்கணும். அஞ்சாவது வகுப்பு வரைக்குந்தான் அந்தப்பள்ளிக்கூடம். ஆறாவது வகுப்புலேருந்து "பழனியப்பா உயர்நிலைப்பள்ளி"ன்னு மெயின் ரோட்டுக்கு கெழக்க இருக்கும். அங்கே போயி படிக்கணும்.

எங்க வகுப்புல ரெண்டு மூணு இஞ்சு உயரத்துல மர பெஞ்சு இருக்கும். மொத்தம் எட்டு பெஞ்சு. ஒவ்வொரு பெஞ்சுலயும் மூணு இல்லாட்டி நாலு பேரு உக்காருவோம். டீச்சரோட பேரு என்ன தெரியுமா..? டிலாமணி. நல்லா குண்டா இருப்பாங்க. அவங்க டேபிள் மேலேயே நீளமா ஒரு தப்பைக்குச்சி இருக்கும். உக்காந்த இடத்துலேருந்தே பசங்கள "மொட்"டுனு அடிக்க வசதியா இருக்கும். என் பக்கத்திலே இருந்த பையனோட பேரு முருகன். பரிச்ச நடக்கும் போது அவனுக்கு காட்டலன்னா 'வெளியே வந்தா அடிப்பேன்'னு மெரட்டுவான். ரொம்ப பயமா இருக்கும்.

அப்ப எல்லாம் ஒரு சிலேட், ஒரு குச்சி, முத வகுப்பு புஸ்தகம் - இத எல்லாம் ஒரு மஞ்சப்பையில் போட்டுகிட்டு போவோம். சிலேட்டுல எழுதுற குச்சில ரெண்டு வகை. ஒண்ணு சாதாரணமா எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி பாறையில இருந்து எடுத்த மாவுக்குச்சி. அப்புறம் கடல்பாசின்னு சொல்வாங்க.. கருவேலமர முள்ளு மாதிரி இருக்கும். அத வச்சித்தான் எல்லாத்தையும் எழுதணும். சாக்பீசு எல்லாம் டீச்சர் மாத்திரம்தான் வச்சிருப்பாங்க.

தமிழ்ல மாத்திரம்தான் பாடம் எல்லாம். "அ"-னா "ஆ"-வன்னா .. அப்புறம் பறவைகள், விலங்குகள்... இப்படித்தான் மொத்தப்பாடமும் இருக்கும்.

வருசத்துக்கு ஒரு தடவ "இன்ஸ்பெக்சன்" அப்படீன்னு சொல்லி எல்லோரும் பரபரப்பா இருப்பாங்க. சுவத்துல எல்லாம் புதுப்புது படமா தொங்கும். யாரோ ரெண்டு பேரு வருவாங்க... நாங்க எல்லாம் பேந்த பேந்த முளிச்சுகிட்டு இருப்போம். சும்மா சிரிச்சிட்டு போய்டுவாங்க.

முத வகுப்புல காப்பரிச்சைல நாந்தான் பர்ஸ்ட் ரேங்க். அத அம்மாகிட்டே சொன்னேன் பாருங்க... சந்தோசம் தாங்காத அம்மா "நீனு நன்னு மொகுல்ல"... என்று கொஞ்சிக்கொண்டு என்ன இடுப்புல தூக்கி வச்சுகிட்டு தெருக்கோடியில இருந்த காப்பிக்கடைல அதிரசம் வாங்கிக்கொடுத்தாங்க.. என்னா ருசி தெரியுமா...ம்ம்ம்..! அதுதான் எனக்கு நெனவிருக்கு...

(அவசரத்துல டீச்சர்கிட்ட கேக்க பயந்து கிட்டு ஒண்ணுக்கு இருந்து, அத யாருக்கும் தெரியாம புத்தக பையாலேயே தொடச்சு... அதெல்லாம் தனிக்கத)
__________________
பாரதி

பாரதி
18-06-2006, 01:34 PM
அன்பு நண்பரே... உங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. ஏற்கனேவே தேதியில்லா குறிப்புகள் இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. திஸ்கியிலிருந்து ஏற்கனவே அவை ஒருங்குறிக்கு மாற்றப்பட்டுவிட்டன நண்பரே.... மிக்க நன்றி.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934

ஓவியா
18-06-2006, 07:40 PM
அன்பு நண்பரே... உங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. ஏற்கனேவே தேதியில்லா குறிப்புகள் இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. திஸ்கியிலிருந்து ஏற்கனவே அவை ஒருங்குறிக்கு மாற்றப்பட்டுவிட்டன நண்பரே.... மிக்க நன்றி.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934
பாரதி சார்

அனுபவம் பட்டிக்க ரொம்ப சுவாரிஸ்யமா இருக்கு
நினைவு இரண்டு எங்கே உள்ளது....கொஞ்சம் (லிங்க்) கொடுத்தா நல்லது....
நன்றி

தோழர்...விஷ்தாவுக்கும் நன்றி

இணைய நண்பன்
18-06-2006, 08:10 PM
தாங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் பாரதி மற்றும் ஓவியா.நான் திஸ்கி பதிப்புக்களை யுனிகோடிற்கு மாற்ற முயற்சிக்கிறேன்.ஆனால் மாற்றி அமைத்தவை ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டவை என்று பின்னர் தான் அறியக்கிடைக்கிறது. மாற்றப்படாதவை எவை என்று நிர்வாகம் அறியத்தந்தால் எமக்கு இலகுவாக் இருக்கும்.நன்றி.

பாரதி
20-06-2006, 01:51 PM
பாரதி சார்
அனுபவம் படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு. நினைவு இரண்டு எங்கே உள்ளது? கொஞ்சம் (லிங்க்) கொடுத்தா நல்லது....

தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு

சார் எல்லாம் வேண்டாமே..! வெறுமனே பெயரை விளித்தால் போதும். நன்றி.

சுபன்
20-06-2006, 01:53 PM
தாங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் பாரதி மற்றும் ஓவியா.நான் திஸ்கி பதிப்புக்களை யுனிகோடிற்கு மாற்ற முயற்சிக்கிறேன்.ஆனால் மாற்றி அமைத்தவை ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டவை என்று பின்னர் தான் அறியக்கிடைக்கிறது. மாற்றப்படாதவை எவை என்று நிர்வாகம் அறியத்தந்தால் எமக்கு இலகுவாக் இருக்கும்.நன்றி.
இராசகுமாரன் அவர்கள் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார் அதன் பின் செய்வது இலகுவாக இருக்கும்