PDA

View Full Version : கஜல்



இனியவன்
17-06-2006, 01:04 PM
நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*

நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*

காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*

என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?
*

உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்
*

வயிற்றுக்காக
வாழ்ந்து
முகமிழந்து போனேன்
*

காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன

என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ

ஆக்கம் கவிக்கோ அப்துல் ரகுமான்.
நன்றி தை காலாண்டிதழ்

இணைய நண்பன்
17-06-2006, 01:23 PM
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிகள் சுவைக்கத்தக்கவை. அதை தொகுத்துத் தந்த உங்களுக்கு சுடச் சுட வாழ்த்துக்கள்

ப்ரியன்
19-06-2006, 10:38 AM
நன்றி இனியவன் ஆசான் அப்துல் ரகுமானின் கஜல் களை பகிர்ந்தளித்தமைக்கு!

அவரின்

மின்மினிகளால் ஒரு கடிதம்
ரகசியப் பூ

இரண்டுமே தமிழ் கஜல் கவிதைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

இளசு
22-06-2006, 10:49 PM
கவிக்கோ - பொருத்தமான பெயர் அவருக்கு.

நன்றி இனியவன்.

(இது இலக்கியங்கள் பகுதியில் பதிக்கப்படவேண்டும்)

பென்ஸ்
25-06-2006, 03:38 PM
அருமையான கவிதை ... அப்துல் ரகுமானின் "முட்டை மனிதர்கள்" மட்டும் எப்பவோ வாசித்த நியாபகம்....
நன்றி இங்கு பதித்து உங்களுக்கும்...
இனியவன், நாம் எழுதாத கவிதைகளை இலக்கியங்கள் பகுதியில் பதிக்கலாமே.. :-)

இனியவன்
25-06-2006, 04:01 PM
இனிமேல் தொடருவேன் அன்பர்கள் சொன்னபடி,,,, நன்றி