PDA

View Full Version : என்ன பயன்?



இணைய நண்பன்
16-06-2006, 09:51 PM
என்ன பயன்?
------------------

ஐந்திரு திங்கள் சுமந்த பொழுதிலும்
அரைவயிற்றோடு உணவிட்ட பொழுதிலும்
அண்ணாந்து இடுக்கிப் பார்க்கும் பொழுதிலும்
நினைக்கவில்லை அவள்..
இவனால் என்ன பயன்?

வைரம் பாய்ந்த தேகம்
வளமான வாழ்க்கை
வாழ்த்துமளவு புகழ்
இருந்தும் கேட்கிறாய் நீ
இவளால் என்ன பயன்?

இறந்த பின்
பூமி கேட்கிறது
இவனால் என்ன பயன்?
__________________
உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.

என்றும் நட்புடன்,
கவிதா