PDA

View Full Version : என்னருகில் நீ



இணைய நண்பன்
16-06-2006, 09:49 PM
என்னருகில் நீ
---------------

காயும் நிலவு
கலையா வானம்
என்னருகில் நீ

பனி கொஞ்சும் முகில்
நனி துஞ்சும் மலை
என்னருகில் நீ

ஒற்றைக் கிளை
இரட்டைக் கிளி
என்னருகில் நீ

பாயும் அலை
பரவா விரல்கள்
என்னருகில் நீ

மஞ்சள் விரவும் மாலை
இமை அகலா பார்வை
என்னருகில் நீ

துடிக்கும் விரல்கள்
தூங்கும் கை
என்னருகில் நீ

நனையா முத்தம்
நினைந்த கனவு
என்னருகில் நீ
__________________
உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.

என்றும் நட்புடன்,
கவிதா

சாராகுமார்
13-09-2007, 02:55 PM
என்றும் உங்களருகில் இருக்க வாழ்த்துக்கள்.

இலக்கியன்
13-09-2007, 03:15 PM
கவிதையே நீ இப்போது என்னருகில் நீ வாழ்த்துக்கள் கவிதா
கவி மழையில் நனைய பதிப்பித்த நண்பருக்கு நன்றி

சுகந்தப்ரீதன்
26-09-2007, 03:38 AM
நண்பரே... கவிதை மிக தெளிவாக உள்ளது.. வாழ்த்துக்கள்...
ஆனால் எழுதியது நீங்களா.. இல்லை கவிதாவா..? கடைசியில் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது...!

மயூ
26-09-2007, 04:06 AM
வாவ்.. அருமையான கவிதை....
அமைதியான கைகள், ஆனால் துடிக்கும் விரல்கள்.. கற்பனை அருமை இக்ராம்... வாழ்த்துக்கள்!!! கலக்குங்க