PDA

View Full Version : முகம் தொலையும் இடம்



இனியவன்
16-06-2006, 05:46 PM
நான் அறிந்த
தவமணி அக்கா
விசித்திரனானவள்
எதிலும்
ஜெயிக்க வேண்டும் அவளுக்கு...

தாயம் ஆடுகையில்
அவள் தோற்பதாய்
தோற்றமிருந்தால்,
காய்களைக் கலைத்து
கட்டங்களை அழித்துவிடுவாள்.

தேடிக் கிடைக்காத
ஆலிவ் பச்சை புடவைக்காய்
ஒரு தீபாவளிக்கு
கோடித்துணியே அவள் உடுத்தாததாய்
ஞாபகம்

பின்னொரு நாள்
மணமாகி அவள் போக...
என்னைவிட்டு
தூரம் போனது
அவளின் நேசம்

தவமணிக்கு வாச்சவன்
மொடாக் குடியனாம்,
கூத்திகூட இருக்காம்
அடி உதையின்னு
இம்சிக்கிறானாம்
ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

சிவராத்திரிக்கு
வந்திருந்த
அக்காவைப் பார்த்தேன்
ஊர் சொன்னது
உண்மை எனப் புரிந்தது

ஏனிந்த வாழ்க்கை உனக்கு?
எங்கே போனது உன் தைரியம்?
விலகி வந்துவிடேன்
பழகிய பாசத்தில்
படபடத்தேன்
அவளிடம்

கண்களுள் நீர் தேக்கி
மேடிட்ட தன் வயிறு தொட்டு
என்னைப் பார்த்தாள் அக்கா...

தாயாய்
தோற்றுத்தான் போகின்றனர்
எல்லா தவமணிகளும்!

நன்றி சினேகிதி

அல்லிராணி
19-06-2006, 07:14 AM
தோல்வியே வேண்டாமென்பவர்கள்
சிறு தோல்விகளை
காண்பதில்லை..
கண்களை
இறுக மூடிக் கொண்டு
கனவுகளில் ஜெயிக்க
முயற்சித்து விடுகிறார்கள்

வாழ்வு ஒரு
பந்தயமல்ல
பயணம்...
வெற்றியும் தோல்வியும்
தூரத்தில் மறைந்து கொண்டிருக்கும்
மைல் கற்கள்,,


தோல்விகளுடன்
எவையும்
முடிந்து விடுவதில்லை

வெற்றிகளுடன் எவையும்
நிலைத்து விடுவடில்லை...

தோல்வி அறியா
ராஜராஜன் கட்டிய
பிரகதீஸ்வரர் ஆலயம்..

அதன் சதய விழாவினில்
கலந்துகொண்டால்
நம் "கதி" அதோ"கதி"
அரசியல்வாதிகளின் சோதிடமிது...

தாய்மைக்காய்
பொறுமை என்பது
தோல்வியல்ல
இன்னுமொரு
புதுப் பயணம்


----அல்லி

இனியவன்
19-06-2006, 08:12 AM
தோல்வியே வேண்டாமென்பவர்கள்

தாய்மைக்காய்
பொறுமை என்பது
தோல்வியல்ல
இன்னுமொரு
புதுப் பயணம்

----அல்லி

அல்லி இப்படி நிறையச் சொல்லி வையுங்கள்,
தடம் மாறுவோர் மனம் மாறலாம்.

gragavan
19-06-2006, 08:49 AM
அல்லி சொல்வது உண்மைதான். சுருங்கச் சொன்னால் M.குமரன். s/o மகாலட்சுமி என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

தாமரை
19-06-2006, 08:52 AM
தாய்மைக்காய்
பொறுமை என்பது
தோல்வியல்ல
இன்னுமொரு
புதுப் பயணம்


----அல்லி
முகம் தொலையுமிடத்தில்
இதயம் வெல்கிறது...

----தாமரை

அல்லிராணி
19-06-2006, 09:36 AM
முகம் தொலையுமிடத்தில்
இதயம் வெல்கிறது...

----தாமரை
இதயம் தொலையும் இடங்களில்
காதல் வெல்கிறது...

----அல்லி

தாமரை
19-06-2006, 10:08 AM
இதயம் தொலையும் இடங்களில்
காதல் வெல்கிறது...

----அல்லி
காதல் தொலையுமிடங்களில்
கடமை வெல்கிறது...

----தாமரை

இனியவன்
19-06-2006, 10:11 AM
கடமை தொலையும்
இடங்களில்
ல(வ)ஞ்சம் வெல்கிறது.

ஓவியா
19-06-2006, 10:14 AM
கடமை தொலையும்
இடங்களில்
ல(வ)ஞ்சம் வெல்கிறது.

ல(வ)ஞ்சம் தொலையும் இடங்களில்
ஒழுக்கம் வெல்கிறது

தாமரை
19-06-2006, 10:14 AM
ல(வ)ஞ்சம் தொலையும் இடங்களில்
ஒழுக்கம் வெல்கிறது
ஒழுக்கம் தொலையும் இடங்களில்
மிருகம் வெல்கின்றது

இனியவன்
19-06-2006, 10:17 AM
மிருகம் தோலையும்
இடங்களில்
மனிதம் வெல்கிறது....

தாமரை
19-06-2006, 10:19 AM
மிருகம் தோலையும்
இடங்களில்
மனிதம் வெல்கிறது....
மனிதம் தொலையும் இடங்களில்
தெய்வம்(இயற்கை) வெல்கிறது

இனியவன்
19-06-2006, 10:22 AM
இயற்கை தொலையும்
இடங்களில்
அணு ஆயுதம்
வெல்கிறது,

தாமரை
19-06-2006, 10:23 AM
ஆயுதம் தொலையும் இடங்களில்
அன்பு வெல்கிறது

poo
19-06-2006, 10:41 AM
அன்பு தொலையும் இடங்களில்
வாழ்க்கை தோற்கிறது...

- ஒரேடியா போட்டுத் தாக்கறீங்களே மக்கா...

பாராட்டுக்கள்... மணியான கவி தந்த இனியனுக்கு...
(நீங்கள் எழுதியதா (அ) சிநேகிதியின் பதிவா?!..)

தாமரை
19-06-2006, 10:50 AM
அன்பு தொலையும் இடங்களில்
வாழ்க்கை தோற்கிறது...

- ஒரேடியா போட்டுத் தாக்கறீங்களே மக்கா...

பாராட்டுக்கள்... மணியான கவி தந்த இனியனுக்கு...
(நீங்கள் எழுதியதா (அ) சிநேகிதியின் பதிவா?!..)
வாழ்க்கைத் தொலையும் இடங்களில்
வறுமை வெல்கிறது

poo
19-06-2006, 10:57 AM
வறுமை வெல்லும் இடங்களில்
வழமை தோற்கிறது..

தாமரை
19-06-2006, 11:00 AM
வறுமை வெல்லும் இடங்களில்
வழமை தோற்கிறது..
பூ... வெற்றிகளை தாருங்கள்..

வறுமை தோலையும் இடங்களில்
வளமை (வலிமை) வெல்கிறது...

வளமை தொலையும் இடங்களில்
மனவலிமை வெல்கிறது

ஓவியா
19-06-2006, 12:17 PM
பூ... வெற்றிகளை தாருங்கள்..

வறுமை தோலையும் இடங்களில்
வளமை (வலிமை) வெல்கிறது...

வளமை தொலையும் இடங்களில்
மனவலிமை வெல்கிறது


மனவலிமை தொலையும் இடங்களில்
தோல்வியே வெல்கிறது

தாமரை
19-06-2006, 12:21 PM
மனவலிமை தொலையும் இடங்களில்
தோல்வியே வெல்கிறது
தோல்விக்கே
வெற்றி
கைகூடக் கூடுமெனில்
உனக்கு மட்டும் ஏன்
கைகூடாது..
விழித்தெழு தோழி..
வியர்வையால்
விடியலுக்கு
வாசல் தெளி....


ஆஹா தொகுத்தால் ஒரு அபார கவிதை !!!!

தாமரை
19-06-2006, 12:28 PM
வெற்றி!!!

முகம் தொலையும் இடங்களில்
இதயம் வெல்கிறது...

இதயம் தொலையும் இடங்களில்
காதல் வெல்கிறது...

காதல் தொலையுமிடங்களில்
கடமை வெல்கிறது...

கடமை தொலையுமிடங்களில்
ல(வ)ஞ்சம் வெல்கிறது.

ல(வ)ஞ்சம் தொலையுமிடங்களில்
ஒழுக்கம் வெல்கிறது

ஒழுக்கம் தொலையுமிடங்களில்
மிருகம் வெல்கின்றது

மிருகம் தொலையுமிடங்களில்
மனிதம் வெல்கிறது....

மனிதம் தொலையுமிடங்களில்
தெய்வம்(இயற்கை) வெல்கிறது

இயற்கை தொலையுமிடங்களில்
அணு ஆயுதம் வெல்கிறது,

ஆயுதம் தொலையுமிடங்களில்
அன்பு வெல்கிறது

அன்பு தொலையும் இடங்களில்
வாழ்க்கை தோற்கிறது...

வாழ்க்கைத் தொலையும் இடங்களில்
வறுமை வெல்கிறது

வறுமை தொலையும் இடங்களில்
வளமை வெல்கிறது...

வளமை தொலையும் இடங்களில்
மனவலிமை வெல்கிறது

மனவலிமை தொலையும் இடங்களில்
தோல்வியே வெல்கிறது

தோல்விக்கே
வெற்றி
கைகூடக் கூடுமெனில்
உனக்கு மட்டும் ஏன்
கைகூடாது..
விழித்தெழு தோழி..
வியர்வையால்
விடியலுக்கு
வாசல் தெளி....

இக்கவிதையை மன்றத்திற்கு சமர்ப்பணம் செய்வோமா?

ஓவியா
19-06-2006, 02:54 PM
வெற்றி!!!
இக்கவிதையை மன்றத்திற்கு சமர்ப்பணம் செய்வோமா?

அடடா கவிதை தூள் .....ரோம்ப அருமையாய் இருக்கு

அர்ப்பணம்......சமர்ப்பணம்....செய்வோமே,

எனக்கு ஓக்கே சாமி

இனியவன்
19-06-2006, 03:39 PM
மன்றத்தின் அங்கத்தினர்கள் எண்ணத்தில்
ஒன்றானவர்கள் என்பதற்கு இந்தக் கூட்டுக் கவிதை
நல்ல எடுத்துக்காட்டு.
அது கவிதையல்ல
படிப்பவர் நெஞ்சங்களில்
கவி தை.

gragavan
19-06-2006, 05:00 PM
அடடா! கவிதை படைத்து அதை மன்றத்திற்கே படைத்த இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

தோல்வி தோல்வியடையும் இடத்தில்தான்
வெற்றி வெற்றியடைகிறது

இதற்கேற்ற வகையில் ஒரு கவிதை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள்.

தீபன்
19-06-2006, 05:36 PM
ஒரு கவிதை படிக்கவந்த இடத்தில் இலவச இணைப்பாயி இன்னொரு கவிதையா..
ஆனால், எதிர்பாராமல் தோன்றிய கவிதையானாலும் எதார்த்தமாஇ இருந்தது... பாராட்டுக்கள் நண்பர்களே..

தாமரை
20-06-2006, 04:00 AM
அடடா! கவிதை படைத்து அதை மன்றத்திற்கே படைத்த இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

தோல்வி தோல்வியடையும் இடத்தில்தான்
வெற்றி வெற்றியடைகிறது

இதற்கேற்ற வகையில் ஒரு கவிதை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள்.
இருவரல்ல ராகவன் ஐவர்

தாமரை, அல்லி, இனியவன், ஓவியா, பூ

இன்னுமொரு விந்தை பாருங்கள்
தாமரை அல்லி ஆகிய பூக்கள் இயற்கை தீட்டிய இனிய ஓவியங்கள்...

மதி
20-06-2006, 12:24 PM
அடடா..
இதை படிக்காம போயிட்டேனே...
அருமையாய் கவிதை வடித்துள்ளீர்...
கூட்டு முயற்சி வாழ்க...!

நம்பிக்கை தொலையும் இடம் எதுவோ??

ஓவியா
20-06-2006, 01:14 PM
அடடா..
இதை படிக்காம போயிட்டேனே...
அருமையாய் கவிதை வடித்துள்ளீர்...
கூட்டு முயற்சி வாழ்க...!

நம்பிக்கை தொலையும் இடம் எதுவோ??

நம்பிக்கை தொலையும் இடங்களில்
இயலாமை வெல்கிறது

saraa
20-06-2006, 01:26 PM
nallaa irukku

தாமரை
20-06-2006, 01:31 PM
கவிதைன்னா சோகம்தானா?
உங்க கவலைக்கு மருந்து இங்கே சரா

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6052

சுபன்
20-06-2006, 01:54 PM
nallaa irukku
தமிழில் எழுதலாமே!!!

saraa
20-06-2006, 02:04 PM
நல்ல இருக்கு...

saraa
20-06-2006, 02:04 PM
நல்லா இருக்கு...

மதி
20-06-2006, 02:15 PM
நல்லா இருக்கு...
முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

மதி
20-06-2006, 02:20 PM
நம்பிக்கை தொலையும் இடங்களில்
இயலாமை வெல்கிறது

நன்று ஓவியா...

இயலாமை தொலையும் இடங்களில்
இல்லாமை தொலைகிறது..

ஓவியா
20-06-2006, 02:29 PM
நன்று ஓவியா...

இயலாமை தொலையும் இடங்களில்
இல்லாமை தொலைகிறது..

இல்லாமை தொலையும் இடங்களில்
இருமாப்பு (கர்வம்) வெல்கிறது..

சுபன்
20-06-2006, 02:33 PM
நல்ல இருக்கு...
தமிழில் எழுதியது கண்டு மகிழ்ச்சி:) :) :)

மதி
20-06-2006, 02:41 PM
இல்லாமை தொலையும் இடங்களில்
இருமாப்பு (கர்வம்) வெல்கிறது..

அடடா...
இப்படியே போனா இது நீண்டுகிட்டே போகும் போல..

இதுக்கு 2ம் பாகம் வேற வேணுமா என்ன?

ஓவியா
20-06-2006, 02:53 PM
அடடா...
இப்படியே போனா இது நீண்டுகிட்டே போகும் போல..
இதுக்கு 2ம் பாகம் வேற வேணுமா என்ன?

வேண்டாமா...........:)

மாதத்தில் இருந்து வருடத்திற்க்கு வயது.....................நீள்கிறது
..........இளமையில் இருந்து முதுமைக்கு பருவம்...........................நீள்கிறது
.......................எண்ணத்தில் இருந்து ஞானத்திற்க்கு அறிவு........................................நீள்கிறது

அட சும்மா பயப்படாம அடுத்தவரியை போடு மக்கா


இல்லாமை தொலையும் இடங்களில்
இருமாப்பு (கர்வம்) வெல்கிறது..........

தீபன்
20-06-2006, 05:13 PM
இறுமாப்பு வெல்லுமிடங்களில்
அனியாயம் வெல்கிறது!

ஓவியா
20-06-2006, 06:34 PM
இறுமாப்பு வெல்லுமிடங்களில்
அனியாயம் வெல்கிறது!


அனியாயம் தொலையும் இடங்களில்
நியாயம் வெல்கிறது..........

mukilan
20-06-2006, 07:37 PM
நல்லா இருக்கு...
உங்கள் தமிழ் தட்டச்சு நல்லா இருக்கு!

இளசு
20-06-2006, 09:43 PM
தவமணியின் முகம் தொலைந்த கதையை
சிநேகிதியிடம் இருந்து வாங்கி இனியவன் தர,

தொலைத்தல் - தோல்வி எல்லாம்
கிடைத்தல் - வெற்றியின் மறுபக்கம் என
அல்லிராணி புதுப்பார்வை தர

அடுத்து செல்வன், பூ, இனியவன், ஓவியா, அல்லிராணி ,மதி, தீபன் என
அடுக்குமல்லியாய் வெற்றி மாலை..
மன்றத்துக்கு அர்ப்பணம்.. அருமை மக்களே..

மன்றம் மணக்கிறது..

வாழ்த்துகள்..பாராட்டுகள் அனைவருக்கும்.


இனியன், அழகிய கவிதை படைத்தவர் பெயர் தெரிந்தால் பதியுங்கள். நன்றி.

அல்லிராணி - உங்கள் பதில்பார்வைக்கவிதையை வெகுவாய் ரசித்தேன்.
பாராட்டுகள்.

ஓவியா
20-06-2006, 09:57 PM
அனியாயம் தொலையும் இடங்களில்
நியாயம் வெல்கிறது..........


தொடரவில்லையா..............:)

தீபன்
21-06-2006, 06:21 PM
நியாயங்கள் வெல்லும் இடங்களில்
சமாதானம் வெல்கிறது.

அல்லிராணி
22-06-2006, 06:10 AM
அடுத்து செல்வன், பூ, இனியவன், ஓவியா, அல்லிராணி ,மதி, தீபன் என
அடுக்குமல்லியாய் வெற்றி மாலை..
மன்றத்துக்கு அர்ப்பணம்.. அருமை மக்களே..

மன்றம் மணக்கிறது..

அல்லிராணி - உங்கள் பதில்பார்வைக்கவிதையை வெகுவாய் ரசித்தேன்.
பாராட்டுகள்.
அல்லி பங்கேற்ற மல்லி மாலை...
பதில்பார்வைக்கவிதையை --- ஒரே வார்த்தையாய் போட்டு ஏன் அனைவரையும் குழப்புகிறீர்...

என் பதில், பார்வைக்கவிதையா?(நான் பார்த்ததை நீர் எப்போது பார்த்தீர்?)
என் பதில்பார்வை, கவிதையா? (அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்கிற மாதிரி, யாரோ கேள்வியுடன் நோக்க என் பார்வை பதில் தந்ததா?)
என் பதில், பார்வை எல்லாம் கவிதையா?

இளசு
22-06-2006, 10:41 PM
அல்லி பங்கேற்ற மல்லி மாலை...
பதில்பார்வைக்கவிதையை --- ஒரே வார்த்தையாய் போட்டு ஏன் அனைவரையும் குழப்புகிறீர்...

என் பதில், பார்வைக்கவிதையா?(நான் பார்த்ததை நீர் எப்போது பார்த்தீர்?)
என் பதில்பார்வை, கவிதையா? (அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்கிற மாதிரி, யாரோ கேள்வியுடன் நோக்க என் பார்வை பதில் தந்ததா?)
என் பதில், பார்வை எல்லாம் கவிதையா?


அல்லிராணி அவர்களே,
என்னை மன்னிக்கவேண்டும். அனைவரையும் குழப்பியதற்கு.
தட்டச்சியதில் சறுக்கல்.
அந்த சொற்றொடரை வைத்து நீங்கள் எழுதிய சொல்லாடலை
ரசிக்க முடிகிறது . பதில் எழுதும் அளவு என்னிடம் தமிழ் இல்லை.
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

தீபன்
23-06-2006, 05:17 PM
அல்லிராணி அவர்களே,
என்னை மன்னிக்கவேண்டும். அனைவரையும் குழப்பியதற்கு.
தட்டச்சியதில் சறுக்கல்.
அந்த சொற்றொடரை வைத்து நீங்கள் எழுதிய சொல்லாடலை
ரசிக்க முடிகிறது . பதில் எழுதும் அளவு என்னிடம் தமிழ் இல்லை.
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.
குளப்பியது நீங்களல்ல .... குளம்பாமல் இருந்தவர்களையும் குளப்பியது அல்லியேதான் நண்பரே....

ஓவியா
24-06-2006, 11:12 AM
நியாயங்கள் வெல்லும் இடங்களில்
சமாதானம் வெல்கிறது.

சமாதானம் தொலையும் இடங்களில்
பகைமை வெல்கிறது..........

பென்ஸ்
25-06-2006, 03:15 PM
பகைமை தொலையும் இடத்தில்
பாசம் வெல்கிறது...


அட இந்த இடத்துக்கு கொஞ்சம் லேட்டா வந்துட்டேனா....

செல்வன்... கலக்கல்...

மக்கா எல்லாருக்கும் ... எப்படிடா.. எப்படி.. கலக்குறிங்க....

மேற்பார்வையாளருக்கு: இது வேறு ஒருவர் எழுதிய கவிதையாக இருந்தால் இலக்கியங்கள் பகுதிக்கு மாற்றலாமே...

சாம்பவி
03-12-2007, 05:11 PM
கூட்டாஞ்சோறு.....
பலே ஜோரு... !

பூமகள்
03-12-2007, 05:20 PM
பெண்களின் நிலை உணர்த்தும் அற்புதக் கவி..!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
வாழ்த்துகள்.

தாமரை
03-12-2007, 10:58 PM
பெண்களின் நிலை உணர்த்தும் அற்புதக் கவி..!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
வாழ்த்துகள்.


:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

இதுக்காகவா இந்த லிங்க் கொடுத்தேன்..
சிநேகிதி வார இதழில் வந்த கவிதையை மட்டும் பாராட்டி இருக்கியே!

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியன்
04-12-2007, 02:50 AM
முகம் தொலையுமிடத்தில்
இதயம் வெல்கிறது...

----தாமரை

இதயத்தையும் முகத்தையும்
ஒரு சேரத் தொலைத்து விட்டு
காலத்தை வெல்ல இடம்
கொடுப்பவர்களிடை
இப்படியும் சிலர் இன்னும்
இருக்கத் தான் செய்கிறார்கள்..

தாமரை
04-12-2007, 02:52 AM
இதயத்தையும் முகத்தையும்
ஒரு சேரத் தொலைத்து விட்டு
காலத்தை வெல்ல இடம்
கொடுப்பவர்களிடை
இப்படியும் சிலர் இன்னும்
இருக்கத் தான் செய்கிறார்கள்..

என்னது இதயம் தொலைஞ்சு போயிட்டாரா???:confused::confused:
சொல்லவே இல்லை.. அப்ப கிசு கிசுக்கு கண்மணியை விட்டால் வேற நாதி கிடையாதா?:eek::eek:

ஓவியன்
04-12-2007, 02:57 AM
என்னது இதயம் தொலைஞ்சு போயிட்டாரா???:confused::confused:
சொல்லவே இல்லை.. அப்ப கிசு கிசுக்கு கண்மணியை விட்டால் வேற நாதி கிடையாதா?:eek::eek:

ஆஹா..!!

கண்மணியைப் பற்றி கிசு,கிசா....??
சொல்லுங்க, சொல்லுங்க...
என்னணு அறியணும்.....!!

தாமரை
04-12-2007, 03:00 AM
அதை வித்தியாசமான ஒரு சந்திப்பில் போய் பாருங்க!

ஓவியன்
04-12-2007, 03:20 AM
அதை வித்தியாசமான ஒரு சந்திப்பில் போய் பாருங்க!

வித்தியாசமான ஒரு சந்திப்புனு நீங்க விளித்த அந்த பெங்களூர் சந்திப்புதான் முடிவடைந்து விட்டதே, இனியெப்படி நான் அந்த சந்திப்புக்கு வாறது........!!:confused::confused::confused:

தாமரை
04-12-2007, 03:24 AM
பதிவுகளில் அது வரும் கவலைப் படாதீர்கள்.

ஓவியன்
04-12-2007, 03:30 AM
பதிவுகளில் அது வரும் கவலைப் படாதீர்கள்.
:D:D:D:rolleyes:

நேசம்
04-12-2007, 03:48 AM
கவிதையும் கவிதைகளும் அரிமை.

செல்வா
04-12-2007, 06:22 AM
தாய்மைக்காய்
பொறுமை என்பது
தோல்வியல்ல
இன்னுமொரு
புதுப் பயணம்

தாய்மைக்காய் பொறுமை என்று
தருக்கர்களை வளரவிடலாமா...
தாய்மைக்கு முன்பே பொங்கியிருக்க வேண்டும்...
முடியாத நேரத்தில்... நீ தந்தையாக வேண்டுமென்றால்...
தப்புகளை நிறுத்து என... மிரட்டியிருக்கலாம் ... தவறே இல்லை...

சுகந்தப்ரீதன்
12-01-2008, 09:11 AM
தொடர்கவி தந்த கவிஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!

எங்கே போய்விட்டார்கள் இவர்கள் எல்லோரும்..? இப்போதெல்லாம் காணமுடிவதில்லையே இதுபோன்ற கூட்டு முயற்சியை நம் குடும்பத்தில்...!

பூமகள்
12-01-2008, 02:35 PM
:traurig001::traurig001::traurig001::traurig001: இதுக்காகவா இந்த லிங்க் கொடுத்தேன்..
சிநேகிதி வார இதழில் வந்த கவிதையை மட்டும் பாராட்டி இருக்கியே!:traurig001::traurig001::traurig001::traurig001:
அச்சச்சோ...!! :sprachlos020:
அதை மட்டும் சொல்லலைனா..! :icon_ush::icon_ush:
இத்தன நாள் இதைப் பார்க்காம விட்டமைக்கு மன்னிக்கவும் தாமரை அண்ணா. இன்னிக்கித் தான் கண்ணில் சிக்கியது.
எல்லாரோட கூட்டு முயற்சியுமே அருமையோ அருமை. :icon_b:
இப்படி என்னோடு விளையாட ஆள் கிட்டினா, நானும் கவிதையிலேயே விளையாடுவேனே...!!:icon_ush:

சுபி, ஆதி, யவனி அக்கா, சிவா அண்ணா எல்லாரும் ஓடியாங்க...! நாமலும் இவுங்க மாதிரி கவிதையில் விளையாடலாம். :D

யவனிகா
12-01-2008, 02:45 PM
நல்ல தொகுப்புக் கவிதை அது தாமரை...வாழ்த்துக்கள்...நான் வந்திட்டேன் பூ...நீ எங்க போன?

பூமகள்
12-01-2008, 02:49 PM
பகைமை தொலையும் இடத்தில்
பாசம் வெல்கிறது...
பாசம் தொலையும் இடத்தில்
வெறுமை வெல்கிறது...

(யவனி அக்கா, வாங்க அடுத்து 2 வரி போடுங்க.....:D)

அமரன்
12-01-2008, 06:10 PM
வெறுமை தொலையும் இடத்தில்
வாழ்க்கை வெல்கிறது!

பூமகள்
13-01-2008, 04:26 AM
வாழ்க்கை தொலையும் இடத்தில்
மரணம் வெல்கிறது..!

சுகந்தப்ரீதன்
13-01-2008, 05:25 AM
வாழ்க்கை தொலையும் இடத்தில்
மரணம் வெல்கிறது..!
மரணம் தொலையும் இடத்தில்
ஜனனம் வெல்கிறது..!

ஓவியா
04-06-2009, 01:32 AM
அருமையான திரி, இனி திரியை தொடரலாமே!!


ஜனனம் தொலையும் இடத்தில்
இயற்கை வெல்கிறது

anbukala
14-11-2009, 12:18 AM
இனிய கவிதை தந்த இனியவன் அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்

குணமதி
14-11-2009, 02:52 AM
இயற்கை தொலைகையில்...
அழிவு தொடங்குகிறது.

ஜனகன்
16-11-2009, 10:09 PM
அழிவு தொடங்குகையில்
அநீதி வெல்கிறது

சரண்யா
17-11-2009, 02:39 AM
அநீதி தொடங்குகையில்
மனசாட்சி வெல்கிறது

வானதிதேவி
17-11-2009, 01:47 PM
மனசாட்சி வெல்கையில்
வாய்மை வாய்திறக்கிறது

குணமதி
19-11-2009, 10:48 AM
வாய்மை வெல்கையில்
நீதி நிலைக்கிறது.