PDA

View Full Version : ஒரு வார்த்தை...

இணைய நண்பன்
16-06-2006, 11:52 AM
ஒரு வார்த்தை...

முதல்பார்வையில் மலர்ந்த காதலினால்
மோகனராகத்திலும் ஓர் மெளனராகமாய்
இதயத்திற்குள் இதயராகமாய்
இசைமீட்டுகின்ற உன் நினைவலைகள்

உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே...
என் காதல் தேவதையே.. ஒரு முறையேனும்
உன்மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ

பின்னிய நீண்ட கருங்கூந்தலுக்குள்
பின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர
மீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்
கன்னியவள் என்னை பார்த்திட் மாட்டாயா

உயிர் என உன்னை நிதம் நினைத்து
உன்னை என்னுள் சிறைவைத்து
நிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க
நிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே
புல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை
அமைதியாய் அடங்கிட ஒருமுறை ஓரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா என் செல்லமே...
thamarai
இனியவர்

தமிழன்
16-06-2006, 02:02 PM
காதல் வந்தால் கல்லும் கடவுளாய் தெரியும்.

ஓவியா
16-06-2006, 02:12 PM
:)
அருமையாக உள்ளது கவிதை...
இன்னும் அதிகம் படைக்க வாழ்த்துக்கள் :)

ஒரு வார்த்தை...
ஒரு முறையேனும்
உன்மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ
எங்க விஷ்தா கண்டு பிடித்தீர் இந்த சொற்களின் கோர்வையை

தூள் மச்சி........:D :D :D

இனியவன்
16-06-2006, 05:59 PM
உயிர் என உன்னை நிதம் நினைத்து
உன்னை என்னுள் சிறைவைத்து
நிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க
நிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே
புல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை
அமைதியாய் அடங்கிட ஒருமுறை ஓரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா என் செல்லமே...
thamarai
இனியவர்[/QUOTE]

இப்படி பொய் பொய்யா சொன்னாத்தான் காதலிக்க முடியுமா?:)

ஓவியா
16-06-2006, 06:17 PM
இப்படி பொய் பொய்யா சொன்னாத்தான் காதலிக்க முடியுமா?:)

அப்ப நீங்கள்
காதல் பண்ணுனதே
இல்லையா.............அடக்கடவுளே

:eek: :eek: :eek: :p

இணைய நண்பன்
16-06-2006, 06:22 PM
:)
அருமையாக உள்ளது கவிதை...
இன்னும் அதிகம் படைக்க வாழ்த்துக்கள் :)

எங்க விஷ்தா கண்டு பிடித்தீர் இந்த சொற்களின் கோர்வையை

தூள் மச்சி........:D :D :D

அன்பின் ஓவியா..இது என்னுடைய சொந்தப்படைப்பு அல்ல. இங்கே பழைய திஸ்கி பதிப்புக்களை யுனிகோட்டிற்கு மாற்றி அமைத்துள்ளேன்.அதன் உண்மையான படைப்பாளரை வாழ்த்துங்கள்

இனியவன்
16-06-2006, 06:25 PM
அப்ப நீங்கள்
காதல் பண்ணுனதே
இல்லையா.............அடக்கடவுளே

:eek: :eek: :eek: :p

என்னாலயே நம்ப முடியலே

ஓவியா
16-06-2006, 06:47 PM
அன்பின் ஓவியா..இது என்னுடைய சொந்தப்படைப்பு அல்ல. இங்கே பழைய திஸ்கி பதிப்புக்களை யுனிகோட்டிற்கு மாற்றி அமைத்துள்ளேன்.அதன் உண்மையான படைப்பாளரை வாழ்த்துங்கள்

நன்றி
விஷ்தா சார்
மாற்றும் பொழுது அதனை வடித்தவரின் பெயர் இல்லையா...??????????

எப்படி வாழ்த்த................ பெயர் இல்லையே................இப்படியா
எங்கிருந்தாலும் வாழ்க..... ஒரு முறையேனும் அவள் மூச்சால் சுவாசம் கேட்ட கவிஞர் வாழ்க.....

:D :D :D :D :D :D :D
அன்பின் ஓவியா

சுபன்
16-06-2006, 07:32 PM
நன்றி
விஷ்தா சார்
மாற்றும் பொழுது அதனை வடித்தவரின் பெயர் இல்லையா...??????
அதை படைத்தவர் தாமரை கீழே உள்ளதே
ஒரு வார்த்தை...
அமைதியாய் அடங்கிட ஒருமுறை ஓரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா என் செல்லமே...
thamarai

ஓவியா
16-06-2006, 07:54 PM
அதை படைத்தவர் தாமரை கீழே உள்ளதே

நன்றி சுபன்

நலமா?
தம்பி எங்கே போனீர்..
ரொம்ப நாளா அளையே காணும்

இணைய நண்பன்
16-06-2006, 10:24 PM
[QUOTE=ஓவியா]நன்றி
விஷ்தா சார்
மாற்றும் பொழுது அதனை வடித்தவரின் பெயர் இல்லையா...??????????

எப்படி வாழ்த்த................ பெயர் இல்லையே................இப்படியா
எங்கிருந்தாலும் வாழ்க..... ஒரு முறையேனும் அவள் மூச்சால் சுவாசம் கேட்ட கவிஞர் வாழ்க.....

அன்பின் ஓவியா...கவிதையை வடித்தவரின் பெயரை கீழே கொடுத்திருக்கிறேன்.தாமரை -இனியவர் என்று பார்க்கவில்லையா

ஓவியா
16-06-2006, 10:40 PM

இப்ப பார்க்கின்றேன்.....நன்றி

அன்பாக அன்பின் ஓவியானு அழைத்ததிற்க்கும்.......:D :D நன்றி

சுபன்
16-06-2006, 10:48 PM
நன்றி சுபன்

நலமா?
தம்பி எங்கே போனீர்..
ரொம்ப நாளா அளையே காணும்
தேர்வு நடந்ததால் வர இயலவில்லை