PDA

View Full Version : உளறல்கள்



இணைய நண்பன்
16-06-2006, 10:42 AM
உளறல்கள்

கோலம் போட்டுச்செல்கிறாய்
எ‎ன் வீட்டுக்கும் உன்வீட்டுக்கும்
நடுவே...
வைக்கபட்ட ஒவ்வொரு புள்ளியிலும்
கைதியாய் நா‎ன் ..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்ககு தெரியாது
பூச்சரத்தின்
ஒவ்வொரு சுருக்கிலும்
நா‎ன் மாட்டிக்கொண்டிருப்பது
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உயிரை கொடுத்து
உயிரை எடுப்பாய்
தெரிந்தும்்,
காத்து கொண்டு இருக்கிறேன்்.
உன்
முத்தத்திற்காக
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அணு ஆயுத போர்கள்
கூடாதென்கிறார்கள்.
முட்டாள்கள்
நீயும் நானும்
பார்த்துகொண்டிருப்பது
அறியாமல்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உளறல் தொடரும்
__________________

என்றும் அன்புடன்
பிரியன்

pradeepkt
19-06-2006, 09:48 AM
விஸ்டா
உங்க சேவை வாழ்க

இணைய நண்பன்
19-06-2006, 09:50 AM
நன்றி நண்பா

அமரன்
21-07-2007, 09:54 AM
இக்ராம் இக்கவிதைகளால் என்னை சிறையிலிட்டுவிட்டீர்கள். உளறல் தொடருதா/மா? பாராட்டுக்கள் இக்ராம். முதல் இரு கவிதைகளும் அசத்தலோ அசத்தல். உங்கள் கற்பனைகளை நினைத்து சிலிர்க்கின்றேன். தொடருங்கள் நண்பனே.

சிவா.ஜி
21-07-2007, 09:59 AM
இனிமையான உளறல்கள்.கோலப்புள்ளியில் கைதியாய்,பூச்சரத்தின் சுருக்கில் மாட்டிக்கொண்டிருப்பதும் அசத்தலான கற்பனை. கவிதைகள் அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் உளறல்கள் இக்ராம்.

இனியவள்
21-07-2007, 10:39 AM
இக்ராம் அமர் கூறியது போல்
முதல் இரண்டு கவிகளும் அருமை

உங்கள் கவிகளை இன்னும் ஆவலுடன்
எதிர்பார்க்க வைக்கின்றது வாழ்த்துக்கள்

அக்னி
21-07-2007, 10:45 AM
உளறல்கள் கலக்கல்கள்...
இன்னும் கலக்குங்கள் உளறல்களில்...

இன்பா
21-07-2007, 10:56 AM
கோலமிட்டு சிறைப்பித்த என்னை
என்ன செய்ய உத்தேசமோ...?

நீ இட்டது கோலங்களா..? − இல்லை
திருமணத்தில் நம் இரு மனமும்
இணைத்திட நட்ட பாலங்களா...?


நல்லாத்தான் உளறுரீங்க சார்...

அமரன்
21-07-2007, 03:25 PM
புலியாரே..கலக்குறீங்க...

ஓவியன்
22-07-2007, 02:18 AM
அடடே இக்ராம்...........!

உங்கள் காதல் உளறல்கள் அனைத்தும் அருமை.............!

theepa
23-07-2007, 08:54 PM
ஆகா அருமை நண்பரே உங்கள் உளறல்கள் அனைத்திலும் அருமையான கற்பனை உள்ளது பாராட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

இளசு
23-07-2007, 08:59 PM
இக்ராம் அவர்களே

கேட்பது தவறாயின் மன்னியுங்கள்..

கவிதைப்பதிவின் இறுதியில்
இப்படிக்கு பிரியன் என்றிருக்கிறதே..
கொஞ்சம் விளக்குங்களேன்...

நன்றி!