PDA

View Full Version : அப்படிப் போடு ராஜா,,,,,



இனியவன்
16-06-2006, 03:29 AM
பண்டைக்கால மன்னர் முக்தார் என்பவரின் ஆஸ்தான கவிஞர் அபூபிராஸ். முக்தாரின் மந்திரிக்கு அபூபிராஸ் பற்றி எப்போதுமே ஒரு பயம். அபூபிராஸை ஒழித்துக் கட்டி விட்டால் பயமின்றி இருக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மந்திரி; சந்தர்ப்பமும் கிடைத்தது. சுவையான உணவைத் தயாரித்து, யாருமறியாமல் அதில் விஷத்தைக் கலந்து, நயவஞ்சகமாகக் கவிஞருக்குக் கொடுத்து விட்டார். அமைச்சரின் சதியை உணராத கவிஞர், அவ்வுணவை ரசித்துச் சாப்பிட்டார். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. அப்போது தான் கவிஞருக்கும் விஷயம் புரிந்தது. எதுவும் கூறாமல் அங்கிருந்து எழுந்தார்.

"எங்கு செல்கிறீர்?' என்று மந்திரி கேட்டபோது, "நீர் அனுப்புகிற இடத்திற்கு!' என்று அர்த்தத்துடன் பதிலளித்தார் கவிஞர். கருத்தை உணர்ந்து கொண்ட மந்திரி, "காலஞ்சென்ற என் தந்தையை நான் விசாரித்ததாகக் கூறும்!' என்று விஷமப் புன்னகையுடன் கூறினார்.

"நரகத்தின் வழியாக நான் செல்ல மாட்டேனே!' என்று நிதானமாகப் பதிலளித்தார் கவிஞர் அபூபிராஸ்.

ஓவியா
16-06-2006, 11:29 AM
நன்றி இனியவன் சார்

நன்பர்களே வாருங்கள்....
நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம்.....

தமிழன்
16-06-2006, 12:36 PM
அருமை இனியவன் அவர்களே.

bullu
14-10-2006, 05:46 PM
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தமைக்கு வாழ்த்துகள். மேலும் இது போல் பல சுவையான கருத்துகளை அளிக்க வேண்டும் நண்பரே.

இளசு
04-12-2006, 11:38 PM
வாழ்வாட்டத்தின் கடைசிக் காயையும் சாதுர்யத்துடன் நகர்த்திய
கவிஞரின் அறிவை எண்ணி பிரமிக்கிறேன்.

நன்றி இனியவன்..

அறிஞர்
08-12-2006, 02:09 PM
நன்றி இனியவன்....

கவிஞர்களின் சாதுர்ய புத்தி மெய்சிலிர்க்க வைக்கிறது...

தொடர்ந்து இது போன்றவற்றை கொடுங்கள்

arun
30-01-2007, 05:13 AM
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதித்தமைக்கு பாராட்டுக்கள்

pradeepkt
30-01-2007, 05:32 AM
சிரிப்பதற்கு எதுவுமில்லாவிட்டாலும் சிந்திக்க நிறைய உண்டு இத்திரியில்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

ஷீ-நிசி
30-01-2007, 05:36 AM
சிந்திக்க வைத்த கதை..... கடைசி நேரத்திலும் வந்த வார்த்தைகள் பயம் அறியா இதயமென காட்டியது..

மனோஜ்
30-01-2007, 07:58 AM
பாவம் அபூபிராஸ் தனது இறப்பை அறிந்தும் தனது எதிரிக்கு கலங்காது பதில்அளித்துள்ளார் அவரின் தயிரியத்தை உன்மையில் மெச்சுகிறோன்

பரஞ்சோதி
30-01-2007, 08:59 AM
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் கதை.

நானாக இருந்திருந்தா அந்த நயவஞ்சகனையும் என்னுடன் அழைத்து போய் நரகத்தில் சேர்த்துவிட்டு தான் சொர்க்கம் போயிருப்பேன்.

அறிஞர்
31-01-2007, 10:10 PM
பல நாட்களுக்கு பிறகு இந்த பதிப்புக்கு புத்துயிர் வந்திருக்கிறது...

ஓவியன்
15-02-2007, 08:56 AM
இது அறிஞர்களையும் மற்றவர்களையும் வேறுபடித்தி அறிவதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

சாகும் தறுவாயிலும் அவரது விட்டுக் கொடுக்காது பதிலடி கொடுக்கௌம் பாங்கு மெச்சத்தக்கது.

மயூ
15-02-2007, 10:29 AM
பாவம் அந்த கவிஞர்...
என்ன செய்வது... காலம் கலிகாலம்....