PDA

View Full Version : குப்பை அஞ்சல்களைத் தவிர்ப்பது எப்படி?(யுĪ



இணைய நண்பன்
15-06-2006, 05:23 PM
குப்பை அஞ்சல்களைத் தவிர்ப்பது எப்படி?

அநேகமாக மின்னஞ்சல் உபயோகிப்பவர்கள் அனைவருமே அடிக்கடி குப்பை அஞ்சல்களால் (Spam) பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறோம். பல இணையத்தளங்களுக்கும் செல்கிறோம். பெரும்பாலான தளங்களில் மின்னஞ்சல் முகவரியை தர வேண்டியிருக்கிறது. சிலர் வலைப்பூக்களை அமைத்து பராமரித்து வருகிறோம். அங்கும் நம் முகவரிகளைக் கொடுத்திருப்போம். குப்பை அஞ்சல்களை அனுப்பும் பல தளங்களும் நாம் அவ்விதம் தரும் முகவரிகளை திரட்டித்தான் நமக்கு மின்னஞ்சல்களை அனுப்புகின்றன.

இதை தவிர்க்க சில வழிகள்:

1. உதாரணமாக நமது மின்னஞ்சல் முகவரி abc@yahoo.com என்று இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே தருவதற்கு பதிலாக abc.at.yahoo..com என்று தரலாம். அதாவது @ என்கிற குறிக்கு பதிலாக at என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். இது சில இடங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது.

2. மின்னஞ்சல் முகவரியை படமாக மாற்றி விடுவது. அதாவது paint போன்ற ஒரு கிராபிக்ஸ் அப்ளிகேசனை திறந்து மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்து அதை GIF அல்லது JPEG கோப்பாக சேமித்து அதை உபயோகிக்கலாம்.

3. இணையப்பக்கங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரி HTML-ல் அப்படியே இருக்கும். அதை குப்பை மின்னஞ்சல் அனுப்புபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு பதிலாக www.hivewire.com/enkoder_form.php என்கிற தளத்தில் இலவசமாக என்கோடிங் சர்வீஸ் உள்ளது. எந்த மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்க வேண்டுமோ அதை கொடுத்து என்கோடிங் பொத்தானை அழுத்தினால் ஒரு ஜாவா ஸ்கிர்ப்ட் கிடைக்கும். அதை தளத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளவும். 'கிளிக்' செய்யக்கூடிய தொடுப்பு இணையத்தின் பக்கங்களில் தெரியும்.

நன்றி: தமிழ்கம்ப்யூட்டர்
__________________
பாரதி

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:43 AM
தகவலுக்கு நன்றி

மயூ
14-01-2008, 08:06 AM
தகவல் பகிர்விற்கு நன்றி!!!!!!!!!!!!