Log in

View Full Version : மனிதனுக்கு நிகர் மனிதனே!



றெனிநிமல்
15-06-2006, 04:20 PM
மனிதனுக்கு நிகர் மனிதனே!

http://photos1.blogger.com/blogger/1111/1912/400/5555.jpg

நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தால்
அது குற்றம் என்றால்
வளர்ந்த கிடாவின் கழுத்தில்
கத்தி வைப்பது எவ்வகையில்
நியாயம்?

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி
ஜாதிகள் இல்லை என்றால்
நாம் இல்லை என்றான் அரசியல்வாதி!

கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறப்பது அரிது என்றாள் ஒளவை
இவர்கள் இல்லை என்றால்
நான் எப்படி என்றான் நடிகன்!

கடவுள் பெயரை சொல்லி
காவு கொடுத்து படையல் படைத்து
தன் வயிற்றை நிரப்புகின்றான்
அவன் பெயர் பூசாரி!

நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

இனியவன்
15-06-2006, 04:25 PM
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி
ஜாதிகள் இல்லை என்றால்
நாம் இல்லை என்றான் அரசியல்வாதி!

அவர்கள் மட்டுமல்ல சில படித்த மேதாவிகளும் தான்
வட இந்தியாவில் மருத்துவத் தொழில் நொண்டியடித்த செய்தி கேள்விப்பட்டிருப்பீர்களே?

றெனிநிமல்
15-06-2006, 04:50 PM
உண்மை தான் இனியவன்.
இதனை (மருத்துவத் செய்தி)பத்திரிக்கை ஒன்றில் பார்த்தேன்.

இளசு
05-07-2006, 10:33 PM
நிதர்சன வேதனைகளை வினாக்களாக எழுப்பிய பாணி அருமை.

பாராட்டுகள் றெனிநிமல்.

gragavan
06-07-2006, 06:29 AM
சாதி வைத்துத்தான் அரசியல்வாதிகளுக்குப் பிழைப்பே நடக்கிறது. அதுவும் கூடாதென்றால் அவர்கள் என்னதான் செய்வார்கள்!

நல்ல ஆதங்கம் மிகுந்த கவிதை.

றெனிநிமல்
06-07-2006, 09:13 PM
நன்றி இளசு, gragavan

ஓவியா
07-07-2006, 01:06 AM
மனிதனுக்கு நிகர் மனிதனே!

நீதி தேவதையின் கண்களைக் கட்டி.......(நீதி மனிதனால் எழுதப்பட்டது)
தனக்கு சாதகமாக நீதிகளை அமைப்பதில்......................... (மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!

வளர்த்த கிடா (நன்றி மறப்போர் (மனிதன்)) மார்பில் பாய்ந்தால்
அது குற்றம் என்றால் வளர்ந்த கிடாவின் (வாழ்க்கையில்) கழுத்தில்
கத்தியை வைப்பது........................(மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் பாரதி (மனிதன்)
ஜாதிகள் இல்லை என்றால் நாம் இல்லை என்றான் அரசியல்வாதி! (மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!

கூன் குருடு செவிடு இல்லாமல் பிறப்பது அரிது என்றாள் ஒளவை (மனிதன்)
இவர்கள் இல்லை என்றால் நான் எப்படி என்றான் நடிகன்! (மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!

கடவுள் பெயரை சொல்லி காவு கொடுத்து படையல் படைத்து
தன் வயிற்றை நிரப்புகின்றான் அவன் பெயர் பூசாரி! (மனிதன்)
கடவுள் இல்லை என்று சொல்லியும் வயிற்றை நிரப்புகின்றான் மற்றோருவன் (மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!

நீதி தேவதையின் கண்களைக் கட்டி (நீதி மனிதனால் எழுதப்பட்டது)
தனக்கு சாதகமாக நீதிகளை அமைப்பதில்................ (மனிதன்)
சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே!


அன்பான றெனிநிமல் (மனிதன்)
உங்கள் கவிதை அருமையோ அருமை

அன்புடன்,
ஓவியா (மனிதன்)

சபாஷ் மனிதனுக்கு நிகர் மனிதனே....:D :D

மன்னிக்கவும்
உங்கள் கவிதை எனக்கு இப்படிதான் விளங்கியது...;)

றெனிநிமல்
07-07-2006, 07:30 PM
சபாஷ் ஓவியா (மனிதன்)

உண்மையாகவே நன்றாக நிறம் போட்டு காட்டி இருக்கின்றீர்கள். எனது பிழைகள் கூட பளிச் என்று தெரிகின்றது.

ஓவியா
07-07-2006, 10:06 PM
சபாஷ் ஓவியா (மனிதன்)

உண்மையாகவே நன்றாக நிறம் போட்டு காட்டி இருக்கின்றீர்கள். எனது பிழைகள் கூட பளிச் என்று தெரிகின்றது.


நன்றி.

பிழைகள் ஒன்றும் இல்லையே,
அது அவரவர் என்னத்திற்க்கு தெரிவது
மனிதனின் சிந்தனை சக்தி ஒன்றுபடுவது அறிது

உங்களை புண்படுத்திருந்தால் மன்னிக்கவும்.

பென்ஸ்
13-07-2006, 10:39 PM
சமுதாயத்தில் மனிதன் அம்மனமாக நடக்க துவங்கியது முதல் , கலி முத்தி போச்சு என்று நினைக்கும் இந்த காலம் வரை மனிதன் வகுத்து கொண்ட கலாச்சாரம், கட்டுபாடுகள் எல்லாம் தன் தேவைக்காக உருவாக்கி கொள்ளபட்டவைகள்தானே...

சாதிகள் இல்லை என்றும்... எனக்கு பிடிக்காது என்பதும் எல்லோரும் சொல்லும் விஷயம் தான் ..
ஆனால் அதனால் தனக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றால் அதையே கவசமாக வைத்து கொள்வது தானே இயல்பு...

"நீங்க தமிழா???"..
"இல்லை, கர்நாடகா.."
"ஓ.. எல்லாம் பக்கத்துலதானெங்க இருக்கு"

சொல்லும் போது "நான் ரொம்ப நல்லவன்" அப்படின்னு ரவுசு எல்லாரும் விடதான் செய்வொம் ஆனால் சயலில் யாரும் அப்படி இருக்க முடியாது... அப்படி இருப்பதை உங்கள் சமுதாயமும் கூட ஒத்து கொள்ளாது....

கவிதை அருமை... ஆனால் சமுதாய கவிதைகல் எழுதும் போது விரிந்த சிந்தனையுடன் எழுதுவது இன்னும் அழகையும் தாக்கத்தியும் கொடுக்கும்...

கலக்கல் தொடரட்டும்...

ramamoorthi21
14-07-2006, 05:00 AM
நன்றி.

றெனிநிமல்
15-07-2006, 06:47 PM
நன்றி.

பிழைகள் ஒன்றும் இல்லையே,
அது அவரவர் என்னத்திற்க்கு தெரிவது
மனிதனின் சிந்தனை சக்தி ஒன்றுபடுவது அறிது

உங்களை புண்படுத்திருந்தால் மன்னிக்கவும்.

அப்படி எதுவும் இல்லை.
இணைந்திருங்கள்.