PDA

View Full Version : சித்திரம் நீயடி.



றெனிநிமல்
14-06-2006, 06:05 PM
சித்திரம் நீயடி.

http://photos1.blogger.com/blogger/1111/1912/400/552.jpg

முத்துப் பல்லழகி நீயடி
என்னை சித்தம் பேதலிக்க
வைத்தவளும் நீயடி
நித்தமும் உன் கூந்தல்
வாசனைதான் என் உயிரடி

நித்தம் உன் பெயரை
நானுரைப்பதால்.....
அதுவும் அழகாக தெரிகின்றதா?
நீ என் பேரழகியடி

குமரி அல்ல நீ எனக்கு
குழந்தை தானடி
காலங்கள் பலவானாலும்
எப்போதும் நீ எனக்கு
குழந்தை தானடி

செல்லக் கோபமும்
சின்னச் சண்டையும்
மாத்திரமில்லை.......
உன்னையும் எனக்கு
ரொம்பப் பிடிக்குமடி

பஞ்சிக் குவியலில் செய்த
தேகமடி உன் தேகம்
பஞ்சனையில் கொஞ்சி
விளையாடிடவே துடிக்கின்றது
என் மோகம்!

முற்பகலில் முனங்கள் ஓசை
காதல் கீதமடி
காதுகளில் ஒலிக்குதடி
அது இசைக்குதடி
என் மனம் இரசிக்குதடி

கடின மார்புக்குள்
இருக்கின்றது உனக்கோர்
சிம்மாசனம்
அங்கே இருந்து கொண்டே
எனை ஆழ்கிறாய் எப்போதும்

அறிஞர்
14-06-2006, 07:01 PM
தங்கள் ஆளும்... அன்பு உள்ளத்துக்கு.. வடித்த கவிதை பிரமாதம்....

உங்களை கவர்ந்த அழகி யாரன்பரே...

றெனிநிமல்
14-06-2006, 07:33 PM
நன்றி அறிஞர்.
என் மனம் கவர்ந்தவர் அவர் என்றால் அது மிகையாகாது.

ஓவியா
14-06-2006, 08:31 PM
கவிதை அற்புதமாக உள்ளது......

கொடுத்து வைத்தவள்...................உங்கள் அவள்

பின் குறிப்பு : இதுதான் ஃகுவின் கொன்ட்ரோலா
கடின மார்புக்குள் இருக்கின்றது உனக்கோர் சிம்மாசனம்
அங்கே இருந்து கொண்டே எனை ஆழ்கிறாய் எப்போதும்.............

றெனிநிமல்
14-06-2006, 08:47 PM
ஓவியா
கொடுத்து வைத்தவள்...................உங்கள் அவள்
எதை? எங்கே?


பின் குறிப்பு : இதுதான் ஃகுவின் கொன்ட்ரோலா
கடின மார்புக்குள் இருக்கின்றது உனக்கோர் சிம்மாசனம்
அங்கே இருந்து கொண்டே எனை ஆழ்கிறாய் எப்போதும்.............
ஹி ஹி ஹி....... ராணியின் ஆட்சியில் கீழ் நீங்கள் இருப்பதாலோ?:D


நன்றி ஓவியா.
இணைந்திருங்கள்.