PDA

View Full Version : வாலிபக் கவிஞர் வாலி



இனியவன்
14-06-2006, 03:51 PM
மறுபடியும்

காலில்
கட்டிக் கொண்டிருக்கிற
இலங்கை _ போர்
சலங்கை ;
அதன் ஆட்டத்தில்
அதிர்கின்றன...
தமிழர் வாழும்
திக்குகள் ;
புன்னகப்பரோ _ புத்த
பிக்குகள்?



போற்றுகிறார்கள்
புத்தன் பல்லை ;
புறக்கணிக்கிறார்கள்
புத்தன் சொல்லை ;
அன்னணம் இல்லையேல்
ஆகுமா _
புத்த பூமி
யுத்த பூமி?



இந்தியாவில்
இருந்தவரையில் _
புத்தன்
போதிமரத் தடியில் ;
இலங்கைக்கு
இடம் பெயர்ந்த பின் _
புத்தன்
சாதிமரத் தடியில்!


சிங்களச் சாதி ;
தமிழச் சாதி ;
பகுத்ப் பார்க்கிற
பவுத்தம் ;
அது போலுளதோ _ வேறு
அபத்தம்?



ஆதி நாளில் _
அந்த நிலம்...
தமிழன் வியர்வையில்
தழைத்ததை விளக்கும் _
தேயிலை ; ஆனால் அதற்கு
வாயிலை!



அண்மையில்
அகதிகளாய்ச் சிலர்...

கலம் ஏறி வந்தனர்
கண்ணீர்க் கடலோடு ;
தரை காணா போயினர்
தண்ணீர்க் கடலோடு!



பயணித்த
படகு...
கவிழ்ந்து
கடலெங்கும் சவம் ; அது _
சவமல்ல ; அந்த
சித்தார்த்தன் தவம்!

நன்றி குமுதம்,,,

றெனிநிமல்
14-06-2006, 04:31 PM
ஆதி நாளில் _
அந்த நிலம்...
தமிழன் வியர்வையில்
தழைத்ததை விளக்கும் _
தேயிலை ; ஆனால் அதற்கு
வாயிலை!

நன்றி இனியவன்.

அறிஞர்
14-06-2006, 08:17 PM
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கவிதை.....

மற்றவர்கள் கவிதையை.. இலக்கிய பகுதியில் பதிப்பது வழக்கம்.. அதனால் மாற்றுகிறேன்

ஓவியா
14-06-2006, 08:42 PM
முடிக்கும் தருனத்தில் சுர் என்று ஒரு முள்
தைத்ததை போல் அல்லவா உள்ளது இதயம்

கவிதையை வடித்த வாலிபருக்கும்,,,,,
வரைந்த இனியவருக்கும் ....நன்றிகள் பல.....

அல்லிராணி
15-06-2006, 04:28 AM
குமுதம் ரிப்போர்ட்டருக்கு நன்றி!!!
குமுதம் வார இதழுக்கு நன்றி!!!

இனியவன்
15-06-2006, 07:34 AM
முடிக்கும் தருனத்தில் சுர் என்று ஒரு முள்
தைத்ததை போல் அல்லவா உள்ளது இதயம்

கவிதையை வடித்த வாலிபருக்கும்,,,,,
வரைந்த இனியவருக்கும் ....நன்றிகள் பல.....

அந்த வலி தான் வாலியைக் கவிதை பாட வைத்தது,
என்னை மன்றத்தில் பதிய வைத்தது,,,,,,,,,