PDA

View Full Version : அவள் கூந்தல் வாசம்!



றெனிநிமல்
12-06-2006, 08:28 PM
அவள் கூந்தல் வாசம்!


http://photos1.blogger.com/blogger/1111/1912/320/jk%2C.0.jpg


பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

இரவுநேர வான் வெளியில்
கண்டேன்
அங்கேயும் அவள் முகம்!

கோயிலுக்குப் போனேன்
அங்கே ஓர் அதிசயம்
அம்மன் வடிவில் அவள் உருவம்...!

தனிமை கூட
இப்போது இனிக்கின்றது
அப்போது தான்
என்னருகில் அவள்!

வாசனையில் சிறந்த வாசனை
எதுவென்று என்னிடம் கேட்டால்.....
என் பதில்
அவள் கூந்தல்!

பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

ஓவியா
13-06-2006, 12:07 AM
அவள் கூந்தல் வாசம்!

கண்டதெல்லாம் அவள் முகம்!
அங்கேயும் அவள் முகம்!
அம்மன் வடிவில் அவள் உருவம்...!
என்னருகில் அவள்!
பதில்...அவள் கூந்தல்!


நல்ல தன் இருக்கு...இன்னும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.

இதுதான் வாயெல்லம் பொய்யா......யப்பு கலகறீக...


பின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா?
பசிக்கின்றது சாப்பிட முடியவில்லை
என் கையில் அவள் வாசனை
:D :D :D

அல்லிராணி
13-06-2006, 05:35 AM
உங்கள் கவிதையின் மறுபக்கம்....:eek: :eek: :eek: :eek:





பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

காம்பில் கண்ட முகம்
கவிதையா இல்லை
கண்டனமா?

பூக்களை பறித்தபின்பு
அங்கே
காம்பினைத்தானே
காணமுடியும்

பூவிலும் என்முகம்
காம்புதானா???



இரவுநேர வான் வெளியில்
கண்டேன்
அங்கேயும் அவள் முகம்!

!


அவ்வளவு கருப்பாய்
நட்சத்திரங்களாய்
அம்மைத் தழும்புகள்..
பொட்டு கூட பிரகாசமாய்
நான் மட்டும் இருளாய்..





கோயிலுக்குப் போனேன்
அங்கே ஓர் அதிசயம்
அம்மன் வடிவில் அவள் உருவம்...!
!

ஆயிரக்கணக்கானவரின்
அர்ச்சனையைப் பெற்று
கல்லாய்
எண்ணெய் பிசுக்குடன்




தனிமை கூட
இப்போது இனிக்கின்றது
அப்போது தான்
என்னருகில் அவள்!

!

அதாவது....
நீ
இருந்தாலும் ஒன்றுதான்
இல்லாவிட்டாலும் ஒன்றுதான்




வாசனையில் சிறந்த வாசனை
எதுவென்று என்னிடம் கேட்டால்.....
என் பதில்
அவள் கூந்தல்!

பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

கூந்தல் வாசனை
கையில் வரும் வரை
என்
குடுமி பிடித்து
ஆட்டுவீரோ????

:D :D :D :D :D :D :D :D :D

தாமரை
13-06-2006, 08:31 AM
நல்ல தன் இருக்கு...இன்னும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.

இதுதான் வாயெல்லம் பொய்யா......யப்பு கலகறீக...


பின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா?
பசிக்கின்றது சாப்பிட முடியவில்லை
என் கையில் அவள் வாசனை
:D :D :D
"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

அப்படின்னு சுய அறிவிப்பு கொடுத்துட்டு பொய் சொல்லும் தூயவரை இப்படி கேட்கிறீர்களே!...

பென்ஸ்
13-06-2006, 08:33 AM
பின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா?
பசிக்கின்றது சாப்பிட முடியவில்லை
என் கையில் அவள் வாசனை
:D :D :D

தெரிஞ்சா சாப்பாடுதான்.... :D :D :D :D

தாமரை
13-06-2006, 08:50 AM
அவள் கூந்தல் வாசம்!


வாசனையில் சிறந்த வாசனை
எதுவென்று என்னிடம் கேட்டால்.....
என் பதில்
அவள் கூந்தல்!

பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை![/SIZE][/COLOR][/B]
கையில் வாசனை..
சாப்பிட முடியவில்லை ஓ.கே..
குளிப்பீர்களா???

மறுசிந்தனை

கையில் வாசனை..
சாப்பிட முடியவில்லை..
அப்படின்னா அதற்கு பெயர் நாத்தமுங்கோ

ஓவியா
13-06-2006, 02:04 PM
உங்கள் கவிதையின் மறுபக்கம்....:eek: :eek: :eek: :eek:

காம்பில் கண்ட முகம் கவிதையா இல்லை கண்டனமா?

பூக்களை பறித்தபின்பு அங்கே காம்பினைத்தானே காணமுடியும்
பூவிலும் என்முகம் காம்புதானா???

அவ்வளவு கருப்பாய் நட்சத்திரங்களாய் அம்மைத் தழும்புகள்..
பொட்டு கூட பிரகாசமாய் நான் மட்டும் இருளாய்..

ஆயிரக்கணக்கானவரின் அர்ச்சனையைப் பெற்று கல்லாய் எண்ணெய் பிசுக்குடன்

அதாவது....நீ இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்

கூந்தல் வாசனை கையில் வரும் வரை என் குடுமி பிடித்து ஆட்டுவீரோ????


அல்லிராணி



சார் இதுதான் உண்மையான அல்லிராணி விமர்சனம்மா.......
இவங்க தான்னா அது........:eek: எப்பூ நான் எக்ஷ்கேப்

றெனிநிமல் சார் எனக்கே உங்களை பார்க்க பாவமா இருக்கு......

:)

றெனிநிமல்
13-06-2006, 05:07 PM
பின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா?
பசிக்கின்றது சாப்பிட முடியவில்லை
என் கையில் அவள் வாசனை
:D :D :D

நன்றி ஓவியா.
உங்களுக்கு நாரதர் ஏதும் தூரத்து இல்லை....இல்லை கிட்டத்து சொந்தமா?
நாராயணா நாராயணா........

ஓவியா
13-06-2006, 05:23 PM
நன்றி ஓவியா.
உங்களுக்கு நாரதர் ஏதும் தூரத்து இல்லை....இல்லை கிட்டத்து சொந்தமா?
நாராயணா நாராயணா........


நன்பா
அல்லிராணியின் விமர்சனம் படிங்கோ......
அப்புறம் உங்களுக்கு கவிதை ஞானம் சுனாமி அலைபோல் பெருக போகுது.......

:D ;) ;)

றெனிநிமல்
13-06-2006, 06:02 PM
வணக்கம் அல்லிராணி.
அம்மாடியோவ் நீங்கள் பட்டிமன்றத்துக்கு போகவேண்டியவர்! தவறுதலாக தமிழ் மன்றம் வந்து விட்டீர்களோ என்று தோன்றுகின்றது.
தருமி போன்று கேள்வி "இஸ்கட்"டுக்களை தொடுத்து விட்டீர்கள்.
நானும் "பேட்ரியாட்"களை தயார் செய்ய வேண்டும் தானே!

பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

பூக்களை மாத்திரம் தான் என் மனக்கண்கள்
படம்பிடித்திருந்தன! பூக்களை பறித்ததும் அங்கே காம்போ, வெறுமையோ தெரியாமல் அவள் முகம் தான் கண்டேன்! (இதெல்லாம் சும்மா கப்ஸுங்கோ!)

நீங்கள் எழுதியதில் எனக்கு பிடித்தவை ( வாசித்து வாய் விட்டு சிரித்தேன்.)

அதாவது....
நீ
இருந்தாலும் ஒன்றுதான்
இல்லாவிட்டாலும் ஒன்றுதான்

கூந்தல் வாசனை
கையில் வரும் வரை
என்
குடுமி பிடித்து
ஆட்டுவீரோ????

றெனிநிமல்
13-06-2006, 06:07 PM
stselvan,குளிப்பீர்களா??? (குளிர் காலத்தில சுத்தமா இல்லிங்கோ!)
benjaminv தெரிஞ்சா சாப்பாடுதான்.... ( இது சாப்பாட்டிற்கே ஆப்புங்கோ!)

றெனிநிமல்
13-06-2006, 06:11 PM
ஓவியா....
றெனிநிமல் சார் எனக்கே உங்களை பார்க்க பாவமா இருக்கு......
ஓவியா.....
நன்பா
அல்லிராணியின் விமர்சனம் படிங்கோ......
அப்புறம் உங்களுக்கு கவிதை ஞானம் சுனாமி அலைபோல் பெருக போகுது.......

ஹி ஹி ஹி .......
பார்த்தீங்களா சுனாமியில் இருந்து எப்படி தப்பிச்சேன்னு!
வாள மீனுக்கும் விலாங்கு மீனும் களியாணம் கட்டி வைச்சதே நான் தானுங்கோ! :D :D :D :D :D :D

அல்லிராணி
14-06-2006, 03:50 AM
!

பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

பூக்களை மாத்திரம் தான் என் மனக்கண்கள்
படம்பிடித்திருந்தன! பூக்களை பறித்ததும் அங்கே காம்போ, வெறுமையோ தெரியாமல் அவள் முகம் தான் கண்டேன்! (இதெல்லாம் சும்மா கப்ஸுங்கோ!)

???
உங்கள் விளக்கம் வழுக்குகிறதே..

பூக்களை(பெண்களை) கண்டீர்கள்
மனக் கண்களால்
படம் பிடித்தீர்கள்..
பறித்தீர்கள்
பின்னர்
என்னைக் கண்டீரோ!!!

உங்கள் எதிரே
கோபம் கனலடிக்கும்
விழிகளோடு..
காம்புகளையும்
வெறுமைகளையும் கடந்து
உங்கள் பார்வை பட்ட
இடங்களிலெல்லாம்
வியாபித்து
விஸ்வரூபமெடுத்து...

.....

தாமரை
14-06-2006, 04:12 AM
stselvan,குளிப்பீர்களா??? (குளிர் காலத்தில சுத்தமா இல்லிங்கோ!)
benjaminv தெரிஞ்சா சாப்பாடுதான்.... ( இது சாப்பாட்டிற்கே ஆப்புங்கோ!)
அழுக்கா எப்படி குளிப்பது???:eek: :eek: :eek: :eek: கூவத்தில் குளிப்பீகளோ???:eek: :eek: :eek: :confused: :confused: :confused:

தாமரை
14-06-2006, 04:13 AM
ஹி ஹி ஹி .......
பார்த்தீங்களா சுனாமியில் இருந்து எப்படி தப்பிச்சேன்னு!
வாள மீனுக்கும் விலாங்கு மீனும் களியாணம் கட்டி வைச்சதே நான் தானுங்கோ! :D :D :D :D :D :D
அல்லிராணி, பஞ்சாயத்து தலைவர் சுறாமீனு மாதிரிங்கோ!!!!
நாட்டாமை தீர்ப்பு நச்சுன்னு இருக்குங்கோ!!!!

றெனிநிமல்
14-06-2006, 04:00 PM
ஐயோ! போதும், போதும் தாங்கமுடியல்ல..........:eek:
தலைவர் திமிங்கலம்! வந்து அடியேனை காப்பாத்துங்கோ சாமியோவ்!:D

இனியவன்
14-06-2006, 04:15 PM
கூந்தல் வாசனை
கையில் வரும் வரை
என்
குடுமி பிடித்து
ஆட்டுவீரோ????[/B][/QUOTE]
:) :) :) :) :) :)

றெனிநிமல்
14-06-2006, 04:22 PM
நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்து விட்டது.:D :D :D :D :D

தாமரை
15-06-2006, 03:58 AM
கூந்தல் வாசனை
கையில் வரும் வரை
என்
குடுமி பிடித்து
ஆட்டுவீரோ????[/B]
:) :) :) :) :) :)[/QUOTE]
இப்போதெல்லாம்
கூந்தலே
கையோடு வந்து விடும்..
சௌரி தானே
சௌகரியம்,!!!!:cool: :cool: :cool:

அல்லிராணி
15-06-2006, 04:15 AM
:) :) :) :) :) :)
இப்போதெல்லாம்
கூந்தலே
கையோடு வந்து விடும்..
சௌரி தானே
சௌகரியம்,!!!!:cool: :cool: :cool:

வழுக்கை வரன்கள்
பெண்களின் அழகை
முடியின் நீளத்தால் அளந்தால்
சௌரி தான் கிடைக்கும்...
(பின்குறிப்பு - இவ்வரிகள் யாரையும் குறிப்பாக குறிப்பன அல்ல)

முடியென்பது
செத்துப் போன
செல்கள்

அதிலுல்ல வாசனை
செயற்கை என்னும் போது
முடியே
செயற்கையாய் போனதில்
தவறேது???

றெனிநிமல்
15-06-2006, 04:13 PM
ஆ! இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா?:D

இனியவன்
15-06-2006, 04:28 PM
ஆ! இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா?:D

இத்தனை முடி போட்டா எப்படி முடியும்?

ஓவியா
15-06-2006, 04:29 PM
ஆ! இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா?:D


முடி வளர்ந்து கொண்டுதான் இருக்கும்...............:p :p

இனியவன்
15-06-2006, 04:30 PM
முடி வளர்ந்து கொண்டுதான் இருக்கும்...............:p :p
ஆ எவ்வளவு பெரிய உண்மை,,,:) :) :)

றெனிநிமல்
15-06-2006, 04:53 PM
"முடியும் முடிவும்" என்று ஒர் கட்டுரையே எழுதலாம் போல் இருக்கின்றதே?:D

தாமரை
16-06-2006, 03:55 AM
முடி என்ற பெயர் வந்ததற்கு காரணமே இது முடிந்தாலும்(கூந்தலை அள்ளி) முடியாத பிரச்சனை என்றுதானே.. முடியாத அந்த முடிதானே மஹாபாரதப் போரையே நடத்தியது... இதெல்லாம் சின்னப் போர் அல்ல
சுத்தப் போர்...(BORE) வைக்கப் போர் இல்லை அக்கப்போர்...

மதி
16-06-2006, 04:04 AM
ஆக..இந்த திரி முடியுமா...முடியாதா???

றெனிநிமல்
16-06-2006, 05:49 PM
முடி என்ற பெயர் வந்ததற்கு காரணமே இது முடிந்தாலும்(கூந்தலை அள்ளி) முடியாத பிரச்சனை என்றுதானே.. முடியாத அந்த முடிதானே மஹாபாரதப் போரையே நடத்தியது... இதெல்லாம் சின்னப் போர் அல்ல
சுத்தப் போர்...(BORE) வைக்கப் போர் இல்லை அக்கப்போர்...

ஹி ஹி ஹி........
தாங்க 'முடி'யவில்லை.

ஆதவா
14-05-2007, 09:15 PM
கூந்தல் வாசனை
கையில் வரும் வரை
என்
குடுமி பிடித்து
ஆட்டுவீரோ????


அய்யோ!! அல்லியக்கா... என்னால முடியல...

மக்களே முழு பின்னூட்டங்களும் படிங்க.... சூப்பர்.. அல்லியக்காட்ட மோதமுடியாது போல..

அமரன்
12-06-2007, 08:18 PM
ஹும்...நாமெல்லாம் இப்படி எப்போது...? முடியுமா?
ஒவ்வொன்றும் முத்துக்கள்.

அன்புரசிகன்
07-07-2007, 07:14 PM
பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

எனக்கு மிகப்பிடித்த வரிகள்...

இனியவள்
07-07-2007, 07:16 PM
ஹும்...நாமெல்லாம் இப்படி எப்போது...? முடியுமா?
ஒவ்வொன்றும் முத்துக்கள்.

அமர் முயற்சிப்போம் முயன்றால் முடியாதது இல்லை
என்றாலும் அல்லி ராணி கவிதை ராணி தான் :)

நல்ல காலம் நான் மாட்டேலை அல்லி ராணிட :icon_wink1:

இனியவள்
07-07-2007, 07:18 PM
பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

ஏனுங்கோ அவா வாசனைத் திரவியம் அடிச்சு இருந்தாவ :confused:

அமரன்
07-07-2007, 07:21 PM
வழுக்கை வரன்கள்
பெண்களின் அழகை
முடியின் நீளத்தால் அளந்தால்
சௌரி தான் கிடைக்கும்...
(பின்குறிப்பு - இவ்வரிகள் யாரையும் குறிப்பாக குறிப்பன அல்ல)

ஏதாவது புரிகின்றதா....

ஓவியன்
07-07-2007, 07:21 PM
உங்கள் விளக்கம் வழுக்குகிறதே..

பூக்களை(பெண்களை) கண்டீர்கள்
மனக் கண்களால்
படம் பிடித்தீர்கள்..
பறித்தீர்கள்
பின்னர்
என்னைக் கண்டீரோ!!!

உங்கள் எதிரே
கோபம் கனலடிக்கும்
விழிகளோடு..
காம்புகளையும்
வெறுமைகளையும் கடந்து
உங்கள் பார்வை பட்ட
இடங்களிலெல்லாம்
வியாபித்து
விஸ்வரூபமெடுத்து...

.....

வரிகளில் உஸ்ணம் தெறிக்கிறது!.

இதற்கு மேல் விளக்க நான் விரும்பலை (ஹீ!,ஹீ)
மிக அருமையாக எழுதி இருக்கா!........

அமரன்
07-07-2007, 07:30 PM
அமர் முயற்சிப்போம் முயன்றால் முடியாதது இல்லை
என்றாலும் அல்லி ராணி கவிதை ராணி தான் :)

நல்ல காலம் நான் மாட்டேலை அல்லி ராணிட :icon_wink1:

அதுதான் உங்ககிட்ட மாட்டி முழிக்கின்றோமே.