PDA

View Full Version : படங்கள் ஏற்றும் வசதி (Gallery) - விதிமுறைகள்.



இராசகுமாரன்
12-06-2006, 05:31 PM
நண்பர்களே...

நமது மன்றத்தின் சமீபத்திய தோற்ற மாற்றங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்குமென்று நம்புகிறேன், குறிப்பாக Thumbs படங்களுடனான படங்கள் பகிர்ந்து கொள்ளும் PhotoGallery வசதி.

இந்த படங்கள் பகுதியில் பிரவேசிக்க நமது மன்றத்தின் மேல் பாகத்தில் உள்ள மெனுவில் PhotoGallery (http://www.tamilmantram.com/photogal/index.php) என்பதை சொடுக்குவதன் மூலம் செல்லலாம்.

அல்லது இந்த சுட்டியிலும் செல்லலாம்: http://www.tamilmantram.com/photogal/

நமது மன்றத்து உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்கள் தான், இருந்தாலும் புதியவர்கள் யாராவது இந்த வசதியை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில விதிமுறைகள் அவசியம், அவை சுறுக்கமாக பின் வருமாறு:

1) பண்பட்டவர் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே படங்களை ஏற்ற அனுமதி உண்டு.

2) அருவறுப்பு, ஆபாசம், அவமதிப்பு இல்லாத எந்த படங்களை வேண்டுமென்றால் இங்கே ஏற்றலாம்.

3) மன்றத்தை அலங்கரிக்க தரமான, அரிய, இனிய, மனமகிழ்ச்சி தரக்கூடிய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

4) பிற மத, இன, கலாச்சாரத்தை கொச்சை படுத்தும் படங்களுக்கு அனுமதி கிடையாது.

5) நமக்கு தமிழன் என்ற ஒரு மதம் போதும். அதனால், மற்ற மத சம்மந்தமான படங்களை தவிர்த்தல் நல்லது.

6) தரமற்ற, பிரச்சனை வரக்கூடிய படங்கள் என கருதப் படுபவை, முன்னறிவிப்பு இன்று நீக்கப் படும்.

7) அநாகரீகமாக பதிக்கப் படும் கருத்துக்கள் முன்னறிவிப்பு இன்றி நீக்கப் படும்.

8) ஒருவர் ஒரு நாளைக்கு 10 படங்களுக்கு மேல் ஏற்றாமல் இருந்தல் நல்லது.



புதிய உறை அல்லது பகுப்பு உருவாக்க, மற்றும் ஆலோசனைகள் வழங்க எனக்கு தனிமடல் அனுப்ப தயங்க வேண்டாம்.

படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அது பற்றி உங்கள் கருத்துக்களை கூறவும் வசதி உள்ளது, அதனால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறிச் செல்லவும்.

உங்கள் கருத்துக்கள் படம் ஏற்றியவர்களை இன்னும் சிறந்த படங்கள் ஏற்ற நிச்சயம் ஊக்கமளிக்கும், அதனால் நல்லதை பாராட்ட தயங்காதீர்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..

இராசகுமாரன்.

.

அறிஞர்
12-06-2006, 05:33 PM
நல்லது... படங்கள்.. மன்றத்தை அலங்கரிக்கிறது...

குழந்தைகள், பூக்கள், இயற்கை காட்சிகள், அழகான கட்டிடங்கள், இரவு காட்சிகள், சிரிக்க வைப்பவை, சிந்திக்கக்கூடியவை... என தனி தனி பிரிவுகளை உருவாக்கலாம்.

மயூ
19-06-2006, 07:35 AM
என்னிடம் இருந்த சில படங்களை நான் பதிவேற்றி உள்ளேன்.
கிடைக் கிடைக்க புதிதாக பதிவேற்றும் எண்ணம் உண்டு.

இணைய நண்பன்
19-06-2006, 10:53 AM
என்னிடம் சில படங்கள் இருக்கின்றன.விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

இனியவன்
19-06-2006, 11:00 AM
இராசகுமாரனுக்கு நன்றி.
விரைவில் புதிய படங்களை பதிப்பிக்கிறோம்...

அறிஞர்
29-09-2006, 05:04 PM
புதியவர்கள்.. படமேற்றுபவர்கள்.. விதிமுறைகளை கவனியுங்கள்...

ஓவியா
01-09-2007, 10:01 PM
மன்னிக்கவும் இன்றுதான் இந்தத்திரியை கண்டேன், விதிகளை பின்பற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி சார்.

அறிஞர்
02-11-2007, 08:33 PM
மன்றத்தில் வரும் படங்களுக்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அதனால்... பல மதத்தினர் இங்கு வருவதால், ஒரு மதத்தை சார்ந்த படங்களை நீக்கலாம் என எண்ணுகிறோம். மேலும் மற்றவர் மனதை பாதிக்கூடிய வகையில் உள்ள படங்களையும் நீக்கலாம் என எண்ணுகிறோம்.

தங்களின் கருத்துக்களை கொடுங்கள்...

அக்னி
03-11-2007, 02:01 AM
மற்றவர் மனதை பாதிக்கவல்ல படங்களை அகற்றலாம். அப்படியானவை மன்றத்திற்கு தேவையற்றவையே.
ஆன்மீகப் படங்களுக்காக ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தலாம். விரும்புபவர்கள் உள்ளே சென்று பார்வையிடலாம். விரும்பாதவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.என்பது என் கருத்து.

மாதவர்
04-11-2007, 08:58 AM
என்னிடம் நல்ல அரிதான படங்கள் உள்ளது
ஆனால் 1000 kb அதிகமாக உள்ளதால் மேல் ஏற்ற இயல வில்லை என்ன செய்யலாம்?

அன்புரசிகன்
04-11-2007, 09:06 AM
அவற்றை கலரியில் தான் ஏற்றவேண்டுமா.... picoodle போன்றவற்றில் ஏற்றி நமது மன்றத்திலுள்ள புகைப்படக் களஞ்சியம் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=101) ல் நம்முடன் பகிரலாமே.... படங்களுடன் உங்களது குறிப்புகளையும் தந்தால் இன்னும் சிறப்பு..