PDA

View Full Version : இரண்டு கடல் கவிதைகள்



ப்ரியன்
12-06-2006, 11:02 AM
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!

- ப்ரியன்.

கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

- ப்ரியன்.

பென்ஸ்
13-06-2006, 06:31 AM
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!.

துணைக்கும் நீங்களுமா பிரியன்...

அது என்ன .. மக்கள் கூட்டம் கலந்த பின்...????

நீலவோடு கைகோர்த்து ஒர் சிறு நடை பயணம்
ஆட்டோ கிடைக்கும் வரையா... இல்லை வீட்டில் சேரும் வரையா???

நீ இல்லாத இரவுகள்
எனக்கு அம்மாவாசை..
அட்லீஸ்ட் சில நச்சத்திர
முத்(து)தங்களை விட்டு போ...


கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!.

கால் நனைக்கும் குழந்தையின் கால்களை தழுவும் கடலின் ஸ்பரிசம் , கடல் குழந்தையின் முத்தமோ????

இனியவன்
13-06-2006, 07:57 AM
கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

- ப்ரியன்.[/QUOTE]

மிக நுண்ணிய பார்வை
குறைந்த வார்த்தைகளில்
அர்த்தம் பொதிந்த கருத்துக்கள்,,,,,

kavitha
14-06-2006, 09:13 AM
கடலைக் கண்முன் நிறுத்துகிறது கவிதை. அருமை பிரியன்.
"வரும்வழியில் பனிமழையில் பருவநிலா தினம்நனையும்
முகிலெடுத்து முகம்துடைத்து விடியும்வரை நடைபழகும்" -வைரமுத்து வரிகளையும் நினைவுபடுத்துகிறது.

றெனிநிமல்
14-06-2006, 04:38 PM
கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

நன்றாக இருக்கின்றது.
என் மனக்கண்களில் கடல்கரையில் ஓர் குழந்தை......

அறிஞர்
14-06-2006, 07:19 PM
இரு கவிகளும்.. அருமை....

கவி வந்து கவிதையை நியாபகபடுத்தியது அதிலும் அருமை......

இளசு
22-06-2006, 11:02 PM
மெல்லிய துல்லிய பார்வைகள் இரண்டும்..

ப்ரியனின் மென்முத்திரைகளுடன்..

பாராட்டுகள்