PDA

View Full Version : கல்லூரி பாட்டு...

பென்ஸ்
12-06-2006, 07:33 AM
1000 வது பதிவா எதை போடலாம் என்ரு யோசித்து கொண்டிருந்த போது மனசில் ஒரு சின்ன யோசனை...

நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் எங்க கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு என்று.. என்னையும் கின்டலடித்து ஒரு பாட்டு உண்டு... கடைசி வருட கல்லூரி சுற்றுலாவின் போது இதை எழுதி வேளியிட்டது அல்ஜமின் தலமையிலான எங்க பாடல் குழு...
இந்த பாடல "பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டின்னு வந்துவிட்ட சிங்கம்" என்ற பாடலின் மெட்டில் வாசிக்கவும்....

**************************************************
பொதுவாக நான் தான் குஞ்சாக்கோ.
எனக்கு காலேஜில வச்ச பேரு சைக்கோ...
நாத்த ஜீன்ஸு உண்டு
நான் ஒரு மண்டு
9 எல்லாம் எனக்கு பிரண்டு

சொல்லுங்கோ சொல்லுங்கோ குஞ்சாக்கோ தானுங்கோ...
சொல்லுங்கோ சொல்லுங்கோ குஞ்சாக்கோ தானுங்கோ...

பேய போல ஹேர்ரு ஸ்டைலு,
மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு.
மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு... இல்ல டேய்ல்லு...

சொந்த ஊரு வில்லுகுறி
தின்பதேல்லாம் கிழங்குகறி
கேப்பதேல்லாம் இங்கிளிஸ் பாட்டுங்கோ...

***** ஒரு ஜில்லு
இவன் விட்டான் பாரு ஜொள்ளு,

சொல்லுங்கோ சொல்லுங்கோ குஞ்சாக்கோ தானுங்கோ...
சொல்லுங்கோ சொல்லுங்கோ குஞ்சாக்கோ தானுங்கோ...

:D :D :D :D :D :D

மதி
12-06-2006, 08:01 AM
அடடே....
ஆயிரம் பதிவுகளாச்சா?
வாழ்த்துக்கள் பென்ஸ்....
அது சரி...ஆயிரமாவது பதிவே சேம் சைட் கோல் தானா...????

பென்ஸ்
12-06-2006, 08:06 AM
இல்லப்பு.... அது என்னமோ தெரியல்ல... என்னை கின்டலடிச்சு எழுதின பாட்டாக இருந்த போது எனக்கு இது பிடித்து போயிருந்தது.....
மேலும் ஒருவரை கிண்டலடிக்கும் போது இல்லாவற்றை எல்லாம் சேர்த்து ஒப்பிடுவோம், அதனால வருத்த படவோ அல்லது முகம் சுளிக்கவோ தெவை இல்லையே.... கிண்டலை கிண்டலாக மட்டுமே எடுத்து கொள்ளும் வரை...

pradeepkt
12-06-2006, 08:17 AM
ஆயிரம் பதிவுகள் கண்ட பென்ஸூ வாழ்க!

பென்ஸ்
12-06-2006, 08:21 AM
யோவ் இது ஓவர்... உமக்கு "பிரதிப் 5000", "பிரதிப் 6000" என்று வாழ்த்து சொன்னது நாந்தேன்... நான் இன்னும் 1000 தாண் நீரு நான் வந்த பிறகே 3000 பதிவு கிட்ட போட்டு இருக்கீரே...

RRaja
12-06-2006, 09:05 AM
:) வாழ்த்துக்கள் பென்ஸ்!

தாமரை
12-06-2006, 09:12 AM
இல்லப்பு.... அது என்னமோ தெரியல்ல... என்னை கின்டலடிச்சு எழுதின பாட்டாக இருந்த போது எனக்கு இது பிடித்து போயிருந்தது.....
மேலும் ஒருவரை கிண்டலடிக்கும் போது இல்லாவற்றை எல்லாம் சேர்த்து ஒப்பிடுவோம், அதனால வருத்த படவோ அல்லது முகம் சுளிக்கவோ தெவை இல்லையே.... கிண்டலை கிண்டலாக மட்டுமே எடுத்து கொள்ளும் வரை...
பென்ஸூ 1000 போஸ்ட் பண்ணி அதிகப் பிரசங்கி ஆயிட்டீங்கோ...

வாழ்த்துக்கள்.. நான் இன்னும் 1500 எட்டி பிடிக்கலையே

ஓவியா
12-06-2006, 11:00 AM
அடடே....
ஆயிரம் பதிவுகளாச்சா?
வாழ்த்துக்கள் பென்ஸ்....
அது சரி...ஆயிரமாவது பதிவே சேம் சைட் கோல் தானா...????

:D :D :D

ஆயிரம்........அபூர்வ சிந்தாமணி பென்ஸ் சாருக்கு
அடியேனின் வாழ்த்துக்கள்

பென்ஸ்
12-06-2006, 11:49 AM
:) வாழ்த்துக்கள் பென்ஸ்!

நன்றி ராஜா.....

பென்ஸ்
12-06-2006, 11:51 AM
பென்ஸூ 1000 போஸ்ட் பண்ணி அதிகப் பிரசங்கி ஆயிட்டீங்கோ...

வாழ்த்துக்கள்.. நான் இன்னும் 1500 எட்டி பிடிக்கலையே

1000 போஸ்ட் அடித்துதான் அதிக பிரசிங்கி ஆகனுமாக்கும்....
அப்ப மயூரேசன், ஓவியா, இனியவன் இவங்களை எல்லாம் எதுல சேப்பிங்களாக்கும்./...

பென்ஸ்
12-06-2006, 11:52 AM
:D :D :D

ஆயிரம்........அபூர்வ சிந்தாமணி பென்ஸ் சாருக்கு
அடியேனின் வாழ்த்துக்கள்

யக்கோவ்... எதுக்கு பல்லை இப்படி காட்டுகிறிர்கள்....

ஓவியா
12-06-2006, 11:59 AM
யக்கோவ்... எதுக்கு பல்லை இப்படி காட்டுகிறிர்கள்....
அது இதுக்கு மக்கா
ஆயிரமாவது பதிவே சேம் சைட் கோல் தானா

இது அதுக்கு மக்கா
:D :D :D :D :D :D :D :D :D
(சந்தோஷதில் இன்னோரு முறை சிரிசுக்குறேன்)

தாமரை
12-06-2006, 12:13 PM
1000 போஸ்ட் அடித்துதான் அதிக பிரசிங்கி ஆகனுமாக்கும்....
அப்ப மயூரேசன், ஓவியா, இனியவன் இவங்களை எல்லாம் எதுல சேப்பிங்களாக்கும்./...
சண்டப் பிரசண்ட(டி)ன்

பென்ஸ்
12-06-2006, 12:42 PM
யல மயூரேசா...
மக்கா ஓவியா...
எலா இனியவா...
கேட்டியால... உங்கள பத்தி செல்லுவன் என்ன சொன்னாருன்னு....

tya
12-06-2006, 12:46 PM
யல மயூரேசா...
மக்கா ஓவியா...
எலா இனியவா...
கேட்டியால... உங்கள பத்தி செல்லுவன் என்ன சொன்னாருன்னு....
பென்ஸ்! இது எந்த ஊரு பாஷை?:) :) ஆயிரம் போஸ்ட்ஸ்ஹுக்கு வாழ்த்துக்கள்!!!

பென்ஸ்
12-06-2006, 01:09 PM
ஆமா இது எந்து ஊரு பாஷை.... ???:confused: :confused: :confused: :rolleyes: :rolleyes:

(எந்த ஊருன்னு சொல்ல பயமாயிருக்கு):D :D :D

ஓவியா
12-06-2006, 03:07 PM
சண்டப் பிரசண்ட(டி)ன்

யல மயூரேசா...
மக்கா ஓவியா...
எலா இனியவா...
கேட்டியால... உங்கள பத்தி செல்லுவன் என்ன சொன்னாருன்னு....

:eek: மக்கா நம்மல பார்த்து என்னா கேட்டுபுட்டாக...ரத்தம் கொதிக்குதலே....
எலே யாருக்காவது இந்த பிச்சுவா பக்கிரி முகவரி தெரியுமாலே....

;) ;)

இனியவன்
12-06-2006, 03:16 PM
Originally Posted by benjaminv
யல மயூரேசா...
மக்கா ஓவியா...
எலா இனியவா...
கேட்டியால... உங்கள பத்தி செல்லுவன் என்ன சொன்னாருன்னு....

:eek: மக்கா நம்மல பார்த்து என்னா கேட்டுபுட்டாக...ரத்தம் கொதிக்குதலே....
எலே யாருக்காவது இந்த பிச்சுவா பக்கிரி முகவரி தெரியுமாலே....

;) ;)

மக்கா கன்னியாகுமரித் தமிழ்
யல, எலா நெஞ்சை அள்ளும் நெல்லைத் தமிழ்

ஏங்கண்ணு நீங்க தமிழ் படங்கள்லாம் பாக்குறதில்லியாக்கும்,,,

அட தெரியாததைக் கேட்டா
சொல்லிக் கொடுக்குறத விட்டுப்புட்டு
எதுக்குங்க பிச்சுவா பக்கிரி?
நம்ம லோக்கல்னா
அவங்க இன்டர்நேஷனல் லெவல்ல போவாங்க,
வேணாம்மா கண்ணு
இப்படியே ரண களமாப் போயிடும்,,,,,,,

றெனிநிமல்
12-06-2006, 04:11 PM
1000 பிறப்புக்களைப் படைத்ததால் நீயும் பிரமானாகின்றாய்!

அடடா! கொஞ்சம் ஓவாராவே ஐஸ் வைத்து விட்டேன் என்று, கண்டு பிடித்து கடித்து குதறுவார்களோ தெரியவில்லையே?:eek:

மதி
13-06-2006, 05:28 AM
1000 போஸ்ட் அடித்துதான் அதிக பிரசிங்கி ஆகனுமாக்கும்....
அப்ப மயூரேசன், ஓவியா, இனியவன் இவங்களை எல்லாம் எதுல சேப்பிங்களாக்கும்./...
இதுக்கு பேர் தானா காசே குடுக்காம வாங்கறதா....!!!
மக்களே கவனியுங்க..!

pradeepkt
13-06-2006, 05:32 AM
அதானேய்யா உண்மைன்னாலும் அதை இப்படியா பட்டவர்த்தனமா போட்டு ஒடைக்கிறது?

தாமரை
13-06-2006, 05:47 AM
பேய போல ஹேர்ரு ஸ்டைலு, மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு.
மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு... இல்ல டேய்ல்லு...

:D :D :D :D :D :D
சந்தடி சாக்குல கல்லூரி காலத்தில தலையில நிறைய தலைமுடி இருந்தது அப்படின்னு ஒரு பிட்டு போட்டிருக்கீங்க பாருங்க.. சூப்பர்...

மதி
13-06-2006, 05:51 AM
செல்வன்....
ஆனாலும் பென்ஸோட ஹேர் ஸ்டைல் மேல உங்களுக்கு ரொம்ப தான் பொறாமை...

mukilan
13-06-2006, 05:57 AM
வாழ்த்துக்கள் பென்ஸ் அனைவரின் நண்பர் ஆகி விட்டீர்.

மதி
13-06-2006, 06:02 AM
வாழ்த்துக்கள் பென்ஸ் அனைவரின் நண்பர் ஆகி விட்டீர்.
அவரு ரொம்ப நாளாவே அனைவரின் நண்பர் தானே..?

mukilan
13-06-2006, 06:03 AM
அவரு ரொம்ப நாளாவே அனைவரின் நண்பர் தானே..?

உண்மைதான் அய்யா, இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக

பென்ஸ்
13-06-2006, 06:06 AM
டேய் .. போது நிறுத்துங்க....

நீங்க பிரதிப் மாதிரி ஒரு வீரனை கிண்டல் அடித்து இருந்தால் நான் உங்களை பாராட்டி இருப்பேன்... நீங்க கிண்டல் அடிக்கிரது ஒரு பிள்ளைபூச்சியை... கேவலமா இல்லை உங்களுக்கு...
இன்னும் ஒரு முறை கிண்டல் அடித்தீங்க....

வேணாம் ஆமா... சொல்லிபுட்டேன்...

மதி
13-06-2006, 06:09 AM
ச்சே...ஆனாலும் உங்கள நீங்களே பெருமை பேசலாமா..??

தாமரை
13-06-2006, 06:20 AM
டேய் .. போது நிறுத்துங்க....

நீங்க பிரதிப் மாதிரி ஒரு வீரனை கிண்டல் அடித்து இருந்தால் நான் உங்களை பாராட்டி இருப்பேன்... நீங்க கிண்டல் அடிக்கிரது ஒரு பிள்ளைபூச்சியை... கேவலமா இல்லை உங்களுக்கு...
இன்னும் ஒரு முறை கிண்டல் அடித்தீங்க....

வேணாம் ஆமா... சொல்லிபுட்டேன்...
நாங்க பிடறியை சிலிர்த்து நிற்கும் சிங்கம் அப்படின்னு நினச்சோமோ...
ஒரு சிங்கம் - சூயிங்கம் ஆகிறது...

அடடா! என்ன ஆச்சு பென்ஸூ உங்களுக்கு! பிரதீப்பை கிண்டலடிக்கனும்னு உங்களுக்குள்ள இவ்ளோ ஆசையா. செல்வன் கிட்ட சொல்லிட்டாப் போச்சு. நானும் மதியும்தான் கூடவே இருக்கோமே!:D :D

பென்ஸ்
13-06-2006, 06:22 AM
இல்லை செல்வன்...
நான் ஒரு பாவம்... ஒரு ஆளை எதிர்த்து பேச கூட தெரியாது....
இப்ப கூட பாருங்க நான் எவ்வளவு அமைதியா இருக்கிறென்....

தாமரை
13-06-2006, 06:23 AM
டேய் .. போது நிறுத்துங்க....

நீங்க பிரதிப் மாதிரி ஒரு வீரனை கிண்டல் அடித்து இருந்தால் நான் உங்களை பாராட்டி இருப்பேன்... நீங்க கிண்டல் அடிக்கிரது ஒரு பிள்ளைபூச்சியை... கேவலமா இல்லை உங்களுக்கு...
இன்னும் ஒரு முறை கிண்டல் அடித்தீங்க....

வேணாம் ஆமா... சொல்லிபுட்டேன்...
அவரே ஆசையா இந்த வாரம் வர்ரேன்னு சொல்லி இருக்கார். அனிருத்தை வேற பிர்தீப் பார்க்கணும்னு சொன்னார்,,, வெண்ணை திரண்டு வர்ற நேரத்தில் தாழியை உடைக்கலாமா???

mukilan
13-06-2006, 06:26 AM
அவரே ஆசையா இந்த வாரம் வர்ரேன்னு சொல்லி இருக்கார். அனிருத்தை வேற பிர்தீப் பார்க்கணும்னு சொன்னார்,,, வெண்ணை திரண்டு வர்ற நேரத்தில் தாழியை உடைக்கலாமா???
பென்ஸூ உங்க ஆசை நிறைவேறப் போகுதே!!

மதி
13-06-2006, 06:28 AM
இல்லை செல்வன்...
நான் ஒரு பாவம்... ஒரு ஆளை எதிர்த்து பேச கூட தெரியாது....
இப்ப கூட பாருங்க நான் எவ்வளவு அமைதியா இருக்கிறென்....

அட! பாவமே!!

இனியவன்
13-06-2006, 08:04 AM
பேய போல ஹேர்ரு ஸ்டைலு,
மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு.
மங்கி எனக்கு இல்ல டேய்ல்லு... இல்ல டேய்ல்லு...
:D :D :D :D :D :D[/QUOTE]

அடுத்த தடவை புகைப்படம் அனுப்புங்கப்பு,,,,,

ஓவியா
13-06-2006, 01:25 PM
நாங்க பிடறியை சிலிர்த்து நிற்கும் சிங்கம் அப்படின்னு நினச்சோமோ...
ஒரு சிங்கம் - சூயிங்கம் ஆகிறது...

:D :D :D :D :D

பென்ஸ்
13-06-2006, 01:34 PM
ஐயாட.... என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு...

pradeepkt
14-06-2006, 06:49 AM
யோவ் என்னய்யா என் தலை உருளுது இங்கே...
என்னைப் பத்தி உங்களுக்குச் சரியாத் தெரியாது போல... ஹா ஹா ஹா...
பென்ஸூ, இந்த வாரம் அங்க இருக்கீகள்ளா?

kavitha
14-06-2006, 09:16 AM
உங்கள் தோழர்களுக்கு நல்ல ரசனை பென்ஸ்! :D

தாமரை
14-06-2006, 10:15 AM
உங்கள் தோழர்களுக்கு நல்ல ரசனை பென்ஸ்! :D
பென்ஸூக்கும்தான்.. ஃபாரம்ஸ் அனுபவத்தில சொல்லறேன்... இல்லையா சரவணா!!!!

மதி
14-06-2006, 10:56 AM
பென்ஸூக்கும்தான்.. ஃபாரம்ஸ் அனுபவத்தில சொல்லறேன்... இல்லையா சரவணா!!!!
எந்த ரசனையை பத்தி பேசறீங்க..?:confused: :confused: :confused: :confused: :confused:

தாமரை
14-06-2006, 11:00 AM
எந்த ரசனையை பத்தி பேசறீங்க..?:confused: :confused: :confused: :confused: :confused:
நான் லேண்ட் மார்க் ரசனையை சொல்லலை. அது நீங்க ஃபீனிக்ஸ் ல இருந்தப்ப நடந்த ஃபாரம் மீட்டிங்-ல நடந்தது. மீட்டிங் முடிஞ்சதுன்னு ராகவனை அனுப்பிட்டு அப்புறம் ஒரு 2 மணி நேரம் ஃபாரம் வாசலில் நடந்தது... சரவணா நீ எங்கப்பா இருக்கே???

மதி
14-06-2006, 11:03 AM
என்னாது வாசலிலேயா....அங்க யாரும் தனியா இருக்க மாட்டாங்களே..
பென்ஸ் என்னாதிது???

பென்ஸ்
14-06-2006, 11:19 AM
மதி....
இந்த செல்வனுக்கு என்னை தேடி வந்து ரிவிட் அடிக்கிறதே வேலையா போச்சு....
இன்னைக்கு ஒரு வழி பண்ணிடனும் ..
கட்டுட வண்டியா,
செல்வன் அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னாடியே ஓடி போடிடலாம்...

ஓவியா
14-06-2006, 11:26 AM
நாங்க பிடறியை சிலிர்த்து நிற்கும் சிங்கம் அப்படின்னு நினச்சோமோ...
ஒரு சிங்கம் - சூயிங்கம் ஆகிறது...
வண்டியை கட்டி
வசனத்தை மெய்யாக்கிட்டேலே அப்பு.....ஒரு சிங்கம்......:D :D

பென்ஸ்
14-06-2006, 11:42 AM
என்ன சிரிப்பு... இதுக்கேல்லாம் நாங்க பயப்படுவது கிடையாது...
எத்தனை .. எத்தனை இடத்திலை இதே மாதிரி....
இதுக்கு போயி யாராவதி சின்னாபுள்ள மாதிரி ஓடுவாங்களா...
கே கே...
போ புள்ள போ...
கைபுள்ள உயிர் பிச்சை தாரேன் பொழச்சி போ....
வந்திட்டாங்கயா... வசனம் பேசுறதுக்கு...

மதி
14-06-2006, 12:59 PM
மதி....
இந்த செல்வனுக்கு என்னை தேடி வந்து ரிவிட் அடிக்கிறதே வேலையா போச்சு....
இன்னைக்கு ஒரு வழி பண்ணிடனும் ..
கட்டுட வண்டியா,
செல்வன் அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னாடியே ஓடி போடிடலாம்...
சந்தடிசாக்குல நம்மளயும் ஏன் இதுல இழுக்கறீங்க..?
அங்க என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியாது...

யாரங்கே...பென்ஸ் யாரையோ கூப்பிடறாரு பாருங்க...;) ;) ;)

ஓவியா
14-06-2006, 01:02 PM
என்ன சிரிப்பு... இதுக்கேல்லாம் நாங்க பயப்படுவது கிடையாது...
எத்தனை .. எத்தனை இடத்திலை இதே மாதிரி....
இதுக்கு போயி யாராவதி சின்னாபுள்ள மாதிரி ஓடுவாங்களா...
கே கே... போ புள்ள போ...
கைபுள்ள உயிர் பிச்சை தாரேன் பொழச்சி போ....
வந்திட்டாங்கயா... வசனம் பேசுறதுக்கு...

அப்ப அடிக்கடி வண்டியை கட்டுவீர்களா.......:D

பென்ஸ்
14-06-2006, 01:07 PM
பாட்டை பாத்தாலே தெரியலை....
நீங்க பண்ணுறது எல்லாம் ஜுஜுப்பின்னு...

இளசு
20-06-2006, 10:09 PM
தன்னை கிண்டல் செய்யும் பாட்டை போட்ட
ஆயிரம் பதிவு கண்ட அன்பு பென்ஸூக்கு வாழ்த்துகள்..

பொதுவாக உன் பேரு பென்சு..
போதுறது துவைக்காத ஜீன்சு

என புதுப்பல்லவி தோணுதுப்பா..

கவீயின் 'ரசனை' கமெண்ட் நச்..

..
சந்தடி சாக்குல கல்லூரி காலத்தில தலையில நிறைய தலைமுடி இருந்தது அப்படின்னு ஒரு பிட்டு போட்டிருக்கீங்க பாருங்க.. சூப்பர்...

என்ன செல்வன்.. சிங்கத்தோட தலையை சீப்பால வார முயற்சியா?
கவனம்..உஷார்..

sarcharan
21-06-2006, 11:53 AM
பென்ஸூக்கும்தான்.. ஃபாரம்ஸ் அனுபவத்தில சொல்லறேன்... இல்லையா சரவணா!!!!

அதப்பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே....:D :D

sarcharan
21-06-2006, 11:55 AM
மதி....
இந்த செல்வனுக்கு என்னை தேடி வந்து ரிவிட் அடிக்கிறதே வேலையா போச்சு....
இன்னைக்கு ஒரு வழி பண்ணிடனும் ..
கட்டுட வண்டியா, செல்வன் அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னாடியே ஓடி போடிடலாம்...

ஹ்க்கும் "வின்னர்" பட கைப்புள்ள கணக்கா சவாலெல்லாம் விட்டுட்டு அனிருத்த பாத்தவுடனே ஜகா வாங்கினீரூ....

sarcharan
21-06-2006, 12:04 PM
தன்னை கிண்டல் செய்யும் பாட்டை போட்ட
ஆயிரம் பதிவு கண்ட அன்பு பென்ஸூக்கு வாழ்த்துகள்..

பொதுவாக உன் பேரு பென்சு..
போதுறது துவைக்காத ஜீன்சு

என புதுப்பல்லவி தோணுதுப்பா..

கவீயின் 'ரசனை' கமெண்ட் நச்..

..

என்ன செல்வன்.. சிங்கத்தோட தலையை சீப்பால வார முயற்சியா?
கவனம்..உஷார்..

ஆனாலும் இளசு அண்ணா உங்களுக்கு பென்ஸூ (பெண்-ச்சூ) பத்தின பாடல் பாட ரொம்ப கிரியேட்டிவிட்டி சாஸ்தி...

பென்ஸ்
21-06-2006, 04:12 PM
ஆகா.. அப்படியே இது நல்லா இருக்கு...
கல்லூரியில் உள்ல மற்ற நண்பர்களின் பாடலையும் இடலாம் என்று தோனுச்சு...
சில மாற்றம் நானே (அடி வாங்காம இருக்கதான்) பண்ணி இருக்கேன்....:rolleyes: :rolleyes:

இந்த பாடலை "படையப்பா" படத்தின் "என் பேரு படையப்பா" ராகத்தில் வாசிக்கவும்...

என் பேரு மகேஷப்பா
போடுவதேல்லாம் கனேஷப்பா (புகையிலை)
என்னோட உள்ளதேல்லாம் துவைக்காத ஜீன்சப்பா...
ஜீன்சப்பா...ஜீன்சப்பா...ஜீன்சப்பா...

நாகர்கோவில் ஊரப்பா..
**** என்று பேரப்பா
***** என்று பேரு வச்சது CSI மண்ணப்பா...

காலேஜு பெருசு யாருன்னு சொல்லு
டீனேஜு பொண்ன கண்டா சிந்திடுவார் ஜொள்ளு (2)

டிப்பார்ட்மென்ட் செக்கரட்டரிதான்
பொண்ணுங்க எல்லோருக்கும் செக்கூரிட்டிதான்....

மீதி பாட்டு மறந்து போச்சு மக்கா..
மக்கள்கிட்ட கேட்டு சொல்லுறேன்....:D :D :D :D

ஆதவா
03-06-2007, 02:10 AM
பாட்டைப் பார்த்து படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்... ஒரு கற்பனையும் பண்ணிப் பார்த்தேன்... அட!!! பென்ஸ் அண்ணா!!! ம்ம்.... கற்பனையில் சூப்பரா இருக்கீங்க.