PDA

View Full Version : காத்திருப்பு.



றெனிநிமல்
11-06-2006, 03:04 PM
காத்திருப்பு.

http://photos1.blogger.com/blogger/1111/1912/400/one.jpg


உன் முகம் காண
காத்திருக்கின்றது நிலவு....!

உன் குரல் கேட்க
காத்திருக்கின்றது குயில்....!

உன் நிழல் தாங்க
காத்திருக்கின்றது நிலம்....!

உன் புன்னகை காண
காத்திருக்கின்றது தென்றல்...!

உன் வாசனை வாங்க
காத்திருக்கின்றது பூக்கள்....!

உன் கூந்தல் வருடிச் செல்ல
காத்திருக்கின்றது காற்று.....!

உன் மேனி தொட்டிடவே
காத்திருக்கின்றது மழைத்துளி...!

உன் வருகைக்காக
வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்.

இனியவன்
11-06-2006, 03:12 PM
சும்மா சொல்லக் கூடாது
நிமல்
ரொம்ப ஃபீலிங்கோட
அள்ளி விட்டிருக்கீங்க,
நிச்சயமாக அவர்(ள்)
வந்து சேர்ந்து விடுவார்.
அப்போதும்
உங்கள் உணர்வுகளைப் பதியுங்கள்,

ஓவியா
11-06-2006, 03:35 PM
காத்திருப்பு.

காத்திருக்கின்றது நிலவு....!
காத்திருக்கின்றது குயில்....!
காத்திருக்கின்றது நிலம்....!
காத்திருக்கின்றது தென்றல்...!
காத்திருக்கின்றது பூக்கள்....!
காத்திருக்கின்றது காற்று.....!
காத்திருக்கின்றது மழைத்துளி...!
.

வாழ்க்கையில் காத்திருப்புகள் அவசியமே....
அதுவும் இயர்க்கையே நமக்காக (அவளுக்காக) காத்திருப்பது....சந்தோஷமே

உங்கள் கவிதை ஜோர்.....


பின் குறிப்பு : இது வீட்டுக்கு தெரியுமா?
உன் வருகைக்காக
வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்
:D ;) ;)

இனியவன்
11-06-2006, 03:38 PM
பின் குறிப்பு : இது வீட்டுக்கு தெரியுமா?
உன் வருகைக்காக
வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்
:D ;) ;)[/QUOTE]

ஆங்....
இதான வேணாங்கிறது
சிண்டு முடியலைன்னா
உமக்குத் தூக்கமே வராதா?
:) :mad: :p ;) :D :rolleyes: :cool: :eek: B) :angry:
ஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,,,

ஓவியா
11-06-2006, 03:47 PM
ஆங்....
இதான வேணாங்கிறது
சிண்டு முடியலைன்னா
உமக்குத் தூக்கமே வராதா?
:) :mad: :p ;) :D :rolleyes: :cool: :eek: B) :angry:

ஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,,,



இனியவன் சார்
இது உங்கள் கையோப்பம் தானே....

நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,இனியவன்.

நாராயணா.......விக்கி விக்கி அழுகை வருதே......:p :p

றெனிநிமல்
11-06-2006, 04:11 PM
நன்றி இனியவன்.
நிச்சயமாக எனது மற்றைய ஆக்கங்களையும் இணைத்துக் கொள்வேன்.

றெனிநிமல்
11-06-2006, 04:18 PM
நன்றி ஓவியா.
காத்திருப்பதிலும் ஓர் சுகம் இருக்கின்றது தானே.
அஃதே காத்திருக்கின்றான் கதாநாயகனும்.


பின் குறிப்பு : இது வீட்டுக்கு தெரியுமா?
உன் வருகைக்காக
வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்

அடப் பாவிங்களா! குருவி மாதிரி கட்டிய வீட்டில் குண்டு வைத்து, சாப்பாட்டுக்கு தட்டை ஏந்தும் நிலையை றெனிக்கு உருவாக்கி விடாதீர்கள்.:eek:

ஓவியா
13-06-2006, 08:54 PM
நன்றி ஓவியா.
காத்திருப்பதிலும் ஓர் சுகம் இருக்கின்றது தானே.

அஃதே காத்திருக்கின்றான் கதாநாயகனும். :

எதுவரை...தல்லாடி தல்லாடி சாப்பாட்டுக்கு தட்டை ஏந்தும் நிலையை வரையா............:rolleyes:

காதலை சொல்ல தைரியம் இல்லாதவன் பெண்னை கனவிலும் நினைப்பது தப்பு............:cool: :cool:

வீட்டில் சொல்லி (என்னை போல்) ஒரு அப்பாவி பெண்னா பார்த்து மணம் முடிக்கவும்...

அல்லிராணி
14-06-2006, 03:57 AM
காத்திருப்பு.

உன் முகம் காண
காத்திருக்கின்றது நிலவு....!

உன் குரல் கேட்க
காத்திருக்கின்றது குயில்....!

உன் நிழல் தாங்க
காத்திருக்கின்றது நிலம்....!

உன் புன்னகை காண
காத்திருக்கின்றது தென்றல்...!

உன் வாசனை வாங்க
காத்திருக்கின்றது பூக்கள்....!

உன் கூந்தல் வருடிச் செல்ல
காத்திருக்கின்றது காற்று.....!

உன் மேனி தொட்டிடவே
காத்திருக்கின்றது மழைத்துளி...!

உன் வருகைக்காக
வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்.[/B]

நிலவு காண முடியா
நிலவறையில்

குரல்கள் நுழையத்
தடைசெய்யப்பட்ட
கூண்டுக்குள்

நிழல் விழாத
இருட்டறைக்குள்

தென்றல் வீசா
புழுக்கத்தில்

பூக்கள் இல்லா
பொட்டலில்

காற்று வீசா
காராக்கிரகத்தில்

மழையே பாராத
பாலைவனத்தில்

என்னை விட்டு விட்டு
எதற்காக காத்திருக்கிறாய்?

காத்திருப்பது சுகம்தான்..
காதலி சுகமும்
முக்கியமன்றோ!!!!

தாமரை
14-06-2006, 04:42 AM
றெனிநிமல்!!!

காதலுக்கு கண்ணில்லை தான்.. ஆனா இப்படி மறுபக்கத்தை பார்க்கிற அல்லிராணிங்க இருக்கிற வரை உங்க கப்ஸா... செல்லுபடி ஆகிற மாதிரி தோணலை...

காதலிக்காக காத்திருக்கிற நீங்க நீங்களாவே இருந்தா (நான், நாம் ஆக காத்திருக்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்கலாம்) எப்படி...??

றெனிநிமல்
14-06-2006, 04:13 PM
நன்றி அல்லிராணி,
வித்தியாசமான கற்பனையில் அசத்தீட்டீங்க.

றெனிநிமல்
14-06-2006, 04:20 PM
நன்றி stselvan.

கவிதை என்றாலே கற்பனைகளின் பிணைப்பு தானே?
அதிலும் காதல் கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா?

stselvan.
(நான், நாம் ஆக காத்திருக்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்கலாம்) எப்படி...??

அடடா! நன்றாகவே இருக்கின்றதே.:)

அல்லிராணி
15-06-2006, 04:18 AM
நன்றி அல்லிராணி,
வித்தியாசமான கற்பனையில் அசத்தீட்டீங்க.
ஜூட்...:D :D :D

ஓவியா
15-06-2006, 04:19 PM
உன் முகம் காண காத்திருக்கின்றது நிலவு....!
உன் குரல் கேட்க காத்திருக்கின்றது குயில்....!
உன் நிழல் தாங்க காத்திருக்கின்றது நிலம்....!
உன் புன்னகை காண காத்திருக்கின்றது தென்றல்...!
உன் வாசனை வாங்க காத்திருக்கின்றது பூக்கள்....!
உன் கூந்தல் வருடிச் செல்ல காத்திருக்கின்றது காற்று.....!
உன் மேனி தொட்டிடவே காத்திருக்கின்றது மழைத்துளி...! [/B]
உன் வருகைக்காக வாழ்நாள் முழுவதும் நானிங்கே
நானாக காத்திருக்கின்றேன்



றெனிநிமல்!!!
காதலிக்காக காத்திருக்கிற நீங்க நீங்களாவே இருந்தா (நான், நாம் ஆக காத்திருக்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்கலாம்) எப்படி...??


எப்படி குடும்பத்துடனா.....இல்லை கூட்டனியாவா

அதுவும் காதலிக்காகவா.................................:confused: :confused:

இனியவன்
15-06-2006, 04:22 PM
எப்படி குடும்பத்துடனா.....இல்லை கூட்டனியாவா
அதுவும் காதலிக்காகவா:confused: :confused:
காதலிக்காகவா காத்திருப்பார்களோ?
:confused: :) :) :)

றெனிநிமல்
15-06-2006, 04:57 PM
ஓவியா
எப்படி குடும்பத்துடனா.....இல்லை கூட்டனியாவா

உண்மையில் இதனைப் பார்த்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன்.:D :D :D
ஓயியா ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான். அது தான் லொல்லு!:D

தாமரை
16-06-2006, 04:16 AM
எப்படி குடும்பத்துடனா.....இல்லை கூட்டனியாவா

அதுவும் காதலிக்காகவா.................................:confused: :confused:
குடு குடு என்று பிடுங்கி எடுப்பதால் குடும்பமா?:confused: :confused: :confused:

ஓவியா
16-06-2006, 11:32 AM
குடு குடு என்று பிடுங்கி எடுப்பதால் குடும்பமா?:confused: :confused: :confused:


தானாக பேசவில்லையே அனுபவம்தான் பேசுது....;) :D

தமிழன்
16-06-2006, 12:33 PM
அருமயான கவிதை அல்லவா?

றெனிநிமல்
16-06-2006, 05:47 PM
நன்றி தமிழன்.

இளசு
22-06-2006, 11:00 PM
அருமை றெனி

இளமையும் ஏக்கமும் நிரம்பியுள்ள இதயம் மட்டுமே
எழுதமுடியும் இவ்வரிகளை..

பென்ஸ்
25-06-2006, 03:26 PM
அருமையான கவிதை இது.... இருப்பினும் இது இளசு சொல்லுவது
போல் "பப்பி லவ்" வயசில் இருக்கும் மக்கள் எழுதுற மாதிரி
இருக்கு........

அதாவது... இந்த சிம்பதி உருவாக்குகிற வேலையை எல்லாம் அவங்க தான் செய்வாங்க...

நான் வேதனை படுகிறேன்...
நான் காத்திருக்கிறேன்...
நான் மரித்துவிடுவேன்...

சும்மா லுலுவாயிக்கு டபாயிக்கிரது....
எங்க காத்திருக்கும் போது அதை விட ஒரு நல்ல பிகரை கண்னுலா காட்டுங்க ....
சோகம் எல்லாம் போயிடுமே... நல்ல் பிகர் என்ன சுமாரான பிகரை பாத்தாலே சரவணன் விளுந்துடுவான்....
பாவம் ஒன்னா ரெண்டா... பாவன் அவன்....

அது போல நீரு எதுக்கு காத்திருக்கிரது...
போயிர வேண்டியது தானே... அப்பகூட நிராகரித்து விட படும் பயம்..

நண்பா... தைரியமா கிளம்பு...
நீயே தேடி போ..
கண்டு பிடி...
காதல் கைகூடும்...

ஓவியா
26-06-2006, 11:17 AM
அருமையான கவிதை இது.... இருப்பினும் இது இளசு சொல்லுவது
போல் "பப்பி லவ்" வயசில் இருக்கும் மக்கள் எழுதுற மாதிரி
இருக்கு........ அதாவது... இந்த சிம்பதி உருவாக்குகிற வேலையை எல்லாம் அவங்க தான் செய்வாங்க...

நான் வேதனை படுகிறேன்...
நான் காத்திருக்கிறேன்...
நான் மரித்துவிடுவேன்...

சும்மா லுலுவாயிக்கு டபாயிக்கிரது....
எங்க காத்திருக்கும் போது அதை விட ஒரு நல்ல பிகரை கண்னுலா காட்டுங்க .... சோகம் எல்லாம் போயிடுமே... நல்ல் பிகர் என்ன சுமாரான பிகரை பாத்தாலே சரவணன் விளுந்துடுவான்.... பாவம் ஒன்னா ரெண்டா... பாவன் அவன்...

அது போல நீரு எதுக்கு காத்திருக்கிரது...
போயிர வேண்டியது தானே... அப்பகூட நிராகரித்து விட படும் பயம்..
நண்பா... தைரியமா கிளம்பு... நீயே தேடி போ.. கண்டு பிடி...
காதல் கைகூடும்...

:) :) சரவணன் என்று பெயர் வைத்தல் அப்படிதான்

பெஞ்சு இது
அட்வாஐசா, அறுதலா, இல்லை ஊக்கமா?

றெனிநிமல்
27-06-2006, 08:11 PM
நன்றி இளசு, பெஞ்சமின்.