PDA

View Full Version : நீ.. அழகியடி..



tya
11-06-2006, 01:58 PM
http://photos1.blogger.com/blogger/3127/2153/400/baby3.jpg
**********************************
கன்னத்தில் இதழ் பதித்து
செல்லமாய் முகம் சுளித்து
ஆசையாய் நீ வருடுகையில்
என் அணுக்கள் கூட சிலிர்க்குதடி

அம்மா என்று நீ அழைத்தால்
அல்லல் கூடப் பறந்துவிடும்
அள்ளியெடுத்து நீ அணைக்கையில்-என்
அன்னை தந்த பாசம் வீசும்

கொள்ளை அழகு உன் சிரிப்பு
குதுகலிப்பேன் என் கோபம் மறந்து
கொஞ்சிப்பேசும் உந்தன் உதடு
கொன்றே உயிர்தரும் கண்ணிமைகள் பட்டு

தத்தி நடக்கும் உன் கால்கள்-என்னை
சொக்க வைக்கும் உன்னசைவு
எத்தனை எத்தனை பாவனைகள்-அடி
ஏழு ஜென்மங்கள் ரசித்திருப்பேன்...
*********************************
-தயா

றெனிநிமல்
11-06-2006, 02:57 PM
மழலையையும் அவர்களின் மொழியையும் இரசிக்காத மானிடர் இல்லை என்றே கூறலாம்.
வாழ்த்துக்கள் தாயா.

ஓவியா
11-06-2006, 03:05 PM
அம்மா என்று நீ அழைத்தால்
அல்லல் கூடப் பறந்துவிடும்

*********************************
-தயா

அம்மா....உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாத ஓர் தெய்வீக உறவு

கவிதை அருமையாக உள்ளது நண்பா
இன்னும் அதிகமாக எழுதி அசதுங்கோ
வாழ்த்துக்கள்

இனியவன்
11-06-2006, 03:09 PM
கொள்ளை அழகு உன் சிரிப்பு
குதுகலிப்பேன் என் கோபம் மறந்து
கொஞ்சிப்பேசும் உந்தன் உதடு
கொன்றே உயிர்தரும்
********************************
-தயா[/QUOTE]

அழகிய முரண்பாடாய்
அழகைச் சொல்லும்
அனுபவ வரிகள்,
தொடருங்கள் தயா
வாழ்த்துகள்.

றெனிநிமல்
11-06-2006, 04:25 PM
உண்மைதான் தொடர்ந்து எழுதுங்கள் தயா.

tya
11-06-2006, 04:39 PM
அம்மா....உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாத ஓர் தெய்வீக உறவு

கவிதை அருமையாக உள்ளது நண்பா
இன்னும் அதிகமாக எழுதி அசதுங்கோ
வாழ்த்துக்கள்
நன்றி ஓவியா!! ஒன்றே ஒன்று "நண்பா" இல்லை "நண்பி":p

tya
11-06-2006, 04:41 PM
நன்றி றெனி அண்ணா, இனியவன்

பென்ஸ்
11-06-2006, 05:49 PM
தோழி தயா...

மன்றத்தில் உங்களுக்கு நல்வரவு...

எதன் மீது அதீத அன்பு வருகிறதோ அப்போதே கவிதை வந்து விடுகிறது...
அதை அடுத்தவரும் ரசிக்கும் போது அந்த கவிதையும் அதீத அழகு பெற்று விடுகிறது.

நண்பர் ஒருவர் மன்றத்தில் கூறி இருந்தார், என் முதல் ரசிகை என் அம்மா என்றும் முதல் கவிதை "அம்மா" என்றும்... அதே போல் சிறு குழந்தைகளும் கவிதை தான்.. அந்த கவிதை பற்றி உங்கள் கவிதை வாழ்த்துகள்...

உங்கள் வலை பக்கம் பார்த்தேன்... நல்ல கவிதைகள்.. வாழ்த்துகள்...

tya
11-06-2006, 06:05 PM
நன்றி benjaminv

ஓவியா
12-06-2006, 05:47 PM
நன்றி ஓவியா!! ஒன்றே ஒன்று "நண்பா" இல்லை "நண்பி":p


நண்பி உங்கள் வலை பக்கம் பார்த்தேன்... சும்மா அட்டகாசமா அசத்தலா இருக்கு மக்கா

முதல் விமர்சனம்...நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிங்க...:D :D :D
நல்ல அருமையான கவிதைகள்.. ...அழகழகாக படங்கள் :p :p

அந்த கதை.....கவலை படாதீங்கோ
மீ டூ நோ மம்மீ........அன்னையின் உடல் மட்டும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உயிர் நம்முடனே தான் இருக்கும், இந்த பாரிலுல்ல அத்தனை அம்மாக்கலும் நமக்குதான் :) :) :) ஓகேவா
:D :D

tya
12-06-2006, 08:18 PM
நண்பி உங்கள் வலை பக்கம் பார்த்தேன்... சும்மா அட்டகாசமா அசத்தலா இருக்கு மக்கா

முதல் விமர்சனம்...நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிங்க...:D :D :D
நல்ல அருமையான கவிதைகள்.. ...அழகழகாக படங்கள் :p :p

அந்த கதை.....கவலை படாதீங்கோ
மீ டூ நோ மம்மீ........அன்னையின் உடல் மட்டும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உயிர் நம்முடனே தான் இருக்கும், இந்த பாரிலுல்ல அத்தனை அம்மாக்கலும் நமக்குதான் :) :) :) ஓகேவா
:D :D

நன்றி ஓவியா!! உங்க அன்புக்கும் நன்றி நீங்க நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன்!! எல்லா அம்மாக்களும் எனக்கும் தாயென:) :)

ஓவியா
12-06-2006, 08:52 PM
நன்றி ஓவியா!! உங்க அன்புக்கும் நன்றி நீங்க நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன்!! எல்லா அம்மாக்களும் எனக்கும் தாயென:) :)

எனக்கும் அல்ல நமக்கும்

:) :) :) :D :D :D

tya
13-06-2006, 07:52 PM
எனக்கும் அல்ல நமக்கும்

:) :) :) :D :D :D
நமக்கும்!!! :) :) :)

றெனிநிமல்
13-06-2006, 08:03 PM
ம்....ம்.....ம்....ம்...:D

இணைய நண்பன்
13-06-2006, 08:45 PM
உங்கள் கவிச்சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தயா.

தாமரை
14-06-2006, 05:25 AM
தாயின் பூரிப்பு, அன்பின் பெருக்கு.. மனதை நெகிழ வைக்கும் ஒன்று..


தன் குழந்தையைக் காணும் போது
தன் தாயை நினைப்பவர் உண்டோ!!!

என்னைக் கண்ட என் தாயின் மனம்
இப்படித்தானே நெகிழ்ந்திருக்கும்
என எண்ணி நெகிழ்ந்த
நெஞ்சமுண்டோ

இருக்குமானால்
முதியோர் இல்லங்கள்
இல்லாமல்
போயிருக்குமே!!!

tya
14-06-2006, 02:34 PM
நன்றி செல்வன், விஸ்த்தா

இளசு
08-07-2006, 11:49 PM
என் அன்னை தந்த பாசம் வீசும்..

கண்கள் பனித்தன..

வாழ்த்துகள் தயா..

vckannan
02-08-2006, 04:48 AM
நயத்துடன் ஒரு கவிதை தாய்மையின் மீது
அசத்தல் தருவது - தயா

கலக்குங்க தயா தொடரட்டும் உங்க படைப்புகள்