PDA

View Full Version : உள்ளிறங்கி நுழைகிறது வானம்!



ப்ரியன்
09-06-2006, 11:58 AM
வானம்
நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!

- ப்ரியன்.

இளசு
20-06-2006, 09:57 PM
ப்ரியன்

உங்கள் கவிதைகளின் சொல்லழகு, உள்ளழகின் ரசிகன் நான்.
ஆழ்ந்து படிக்கவைப்பவை உங்களின் கவிதைகள்..

மெல்ல எல்லாவற்றையும் வாசித்து விமர்சிக்க ஆசை..

துளி தெறித்தும்
வான் நுழைந்த அதிசயம்..

படிமத்தின் உள்ளடுக்கு என்ன ப்ரியன்?

தாமரை
21-06-2006, 12:41 PM
முகில்களின் அருகில்
மழை வழியும் பொழுது
எங்கோ கீழே
பூமி
குளித்துக் கொண்டிருக்கிறது..

சில்லென்ற குளிர்
மனதில் மட்டும்
என்ன செய்ய
விமானத்திலல்லவா
வந்து கொண்டிருக்கிறேன்..

பென்ஸ்
25-06-2006, 03:55 PM
அருமையான கவிதை ப்ரியன்....

பொருள் புரிய செல்வன் கவிதையை படிக்க வேண்டி வந்தது...
புரிந்த போது குளிர்ந்திருந்தது...

இன்று பெங்களூரில் நல்ல மழை இருந்தது...
இன்றும் "ரெயின் டிரைவ்" அப்ப உங்க இந்த கவிதை நியாபகம் வந்தது...

முன்னமே வாசித்தும் விமர்சனம் இடாமைக்கு மன்னிக்கவும்....

அது என்னமோ நம்ம மக்கள் கவிதை நாளுக்கு நாள் நல்லாகுதா..
இல்லை நான் தான் நாளுக்கு நாள் நாலடியார் ஆகிறேனா ...


பி.கு: நாலடியார் -- டியூப் லைட்

தாமரை
26-06-2006, 03:51 AM
அது என்னமோ நம்ம மக்கள் கவிதை நாளுக்கு நாள் நல்லாகுதா..
இல்லை நான் தான் நாளுக்கு நாள் நாலடியார் ஆகிறேனா ...


பி.கு: நாலடியார் -- டியூப் லைட்
நான் என்னவோ நாலு அடி வாங்கினால்தான் புரியுமோ என நினைத்தேன்..
சமீப காலமாக இதுதான் உண்மை போல தெரிகிறது...