PDA

View Full Version : உலகக் கோப்பை 2006அறிஞர்
07-06-2006, 07:25 PM
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கால்பந்து 2006 - ஜுன் 9ந்தேதி ஆரம்பிக்கிறது.....

முதல் ஆட்டம் ஜெர்மனி- கோஸ்டரீகா....

எந்த அணி பலம் வாய்ந்தது.... உங்கள் கூற்றுப்படி யார் கோப்பையை வெல்வார்.

http://i13.photobucket.com/albums/a282/aringar/15_1.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/15_3.jpg

ஓவியா
07-06-2006, 08:47 PM
அறிஞர் சார்
ஏன் ஆசியா கண்டத்திலிரிருந்து ஒரு நாடும் வராத?

அறிஞர்
07-06-2006, 08:54 PM
அறிஞர் சார்
ஏன் ஆசியா கண்டத்திலிரிருந்து ஒரு நாடும் வராத? கொரியா, ஜப்பான் ஓரளவுக்கு விளையாடும்.. ஆனால் கோப்பை வெல்லும் அளவுக்கு பெரிய அணிகள் அல்ல...

Mano.G.
08-06-2006, 04:00 AM
இங்கு எனது தேர்வு பிரேசில்,
பிரேசில் நாட்டவர் காற்பந்து விளையாடுவதில் திறமைசாலிகள்
எனது ஓட்டு அவர்களுக்கே.

மனோ.ஜி

இனியவன்
08-06-2006, 04:38 AM
உலகமே பிரேசிலைத் தான் எதிர் பார்க்கிறது?
ஆனால் புதிதாக யாராவது தட்டிச் செல்லக் கூடும்,
யார் அது? கொஞ்சம் பொறுத்திருக்கலாமே?

aren
08-06-2006, 05:53 AM
என்னுடைய கணிப்பு இந்த முறை இங்கிலாந்து கோப்பையை வெல்லலாம் என்பதே. அதனால் என்னுடைய ஓட்டு இங்கிலாந்திற்கே.

aren
08-06-2006, 05:54 AM
அப்படி இங்கிலாந்து வெல்லவில்லையென்றால் குரோஃடியாவிற்கு கோப்பை கிடைக்கலாம்.

pradeepkt
08-06-2006, 05:58 AM
சும்மா நானும் ஒரு ஓட்டைப் போட்டு வைத்திருக்கிறேன்.

aren
08-06-2006, 06:01 AM
சும்மா நானும் ஒரு ஓட்டைப் போட்டு வைத்திருக்கிறேன்.

எல்லோரும் பிரேஸிலிக்கே போட்டால் எப்படி, அர்ஜண்டைனா, இத்தாலி, ஜெர்மனி ஆகியோரும் நன்றாக ஆடும் குழுக்களே.

pradeepkt
08-06-2006, 06:02 AM
வேணும்னா அவங்களுக்கு ஒவ்வொரு ஓட்டைப் போட்டுறவா?

மயூ
08-06-2006, 06:12 AM
அடடா! என்னப்பா எல்லாரும் பிரேசிலா?
நான் கூட பிரேசிலுக்கு போட்டிட்டன்.
முதலே எல்லாரும் பிரேசில்தான் போட்டு இருக்கினம் என்று தெரிந்து இருந்தால் நான் ஜேர்மனிக்குப் போட்டு இருப்பேன். பிரான்ஸ் பிரேசிலை போட்டுத்தாக்கியது போல ஜேர்மனியும் அவர்கள் மண்ணில் சாதித்தாலும் வியப்பில்லை.

aren
08-06-2006, 09:10 AM
வேணும்னா அவங்களுக்கு ஒவ்வொரு ஓட்டைப் போட்டுறவா?

நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

அறிஞர்
08-06-2006, 01:49 PM
நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். இப்ப இருக்கிறது வேறு ஊருல....

அறிஞர்
08-06-2006, 01:52 PM
என்னப்பா எல்லாரும் இப்படி போட்டு பிரேசிலை தாக்கிவிட்டீர்கள்..... ஆரென் ஆசைப்படி... குரோட்சியாவும் சேர்க்கப்பட்டுள்ளது

இனியவன்
08-06-2006, 02:18 PM
உலகின் அனேக நாடுகளில் பெரும்பாலான மக்களால் நேசிக்கப்படும் விளையாட்டு காற்பந்து. தங்கள் அபிமான வீரர்கள் ஆடுகளத்தில் நின்றால், அதைக் காண இரவு பகல் பாராது அரங்குகளில் தவம் கிடக்கும் ரசிகர்கன் ஆயிரமாயிரம், அதையே தொலைக்காட்சியில் பார்க்கத் தவமிருப்போர் அதை விட அதிகம்.
உலகின் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமானோர் காற்பந்து விளையாடுகின்றனர். அந்த விளையாட்டை எந்த இடத்திலும், எல்லோராலும் எளிதாக விளையாட முடியும். அதிக பொருட்செலவு அவசியமில்லை. ஒரே ஒரு பந்து போதும் எங்கு வேண்டுமானாலும் உதைத்துப் பழகலாம். இவை காற்பந்து விளையாட்டுக்கு உலகளவில் கூடுதல் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. இந்த ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெறுகின்றன. இம்மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கும் அந்தத் திருவிழா ஜுலை 9 ஆம் தேதி வரை நடக்கிறது. கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்த பிறகு அங்கு நடைபெறும் முதல் உலகக் கோப்பைப் போட்டி இது. அதை நடத்தும் பொறுப்பில் மொத்தம் 81 நடுவர்கள் உள்ளனர். தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், மொராக்கோ ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியை நடத்த முயற்சித்தன. ஆனால் ஜெர்மன் அந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றது.
உலகின் ஆகப் பெரிய காற்பந்துச் சங்கமான FIFA, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்துகின்றது. உலக நாடுகள் பங்கெடுத்துக் கொள்ளும் முறையான காற்பந்துப் போட்டியை 1906 ஆம் ஆண்டில் FIFA அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து 1930 ஆண்டு, முதல் உலகக் கோப்பைக் காற்பந்துப் போட்டி உருகுவேயில் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுச் சரித்திரத்தில் தன்னைப் பதித்துக் கொண்டது உருகுவே.
இரண்டாம் உலகப் போர் நடந்த வேளையில் மட்டும் உலகக் கோப்பைப் போட்டி நடக்கவில்லை. 2002 ஆம் ஆண்டுக்கான போட்டியை தென்கொரியாவும், ஜப்பானும் இணைந்து நடத்தின. பிரேசில் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
2006 உலகக் கிண்ணப் போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் 194 அணிகள் மோதின. ஆசியாவிலிருந்து ஈரான், ஸவூதி அரபியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தகுதி பெற்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தென்கொரியாவை ஆக்கிரமித்திருந்தது. அதனால் அவ்விரு நாடுகளுக்கு இடையில் சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. அத்தகைய சூழலில் பழைய பகைமையை மறந்து 2002 ஆம் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அந்நாடுகள் நடத்தின. நாடுகளுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்திய பெருமை காற்பந்துக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.
தென்கொரியாவையும், ஜப்பானையும் ஒன்று சேர்த்த இந்த மாபெரும் விளையாட்டு ஒருநாள் இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் கூட ஒன்று சேர்க்கலாம். காலம் கனியுமா?

அறிஞர்
08-06-2006, 02:28 PM
நல்ல தகவல்கள்.. நன்றி இனியவன்....... நாடுகள் இணைந்தால்... நல்லதே...

இனியவன்
08-06-2006, 02:50 PM
அறிஞரின் ஆவல் தான் அனைவருக்கும்.

mukilan
09-06-2006, 05:31 AM
வேணும்னா அவங்களுக்கு ஒவ்வொரு ஓட்டைப் போட்டுறவா?
நான் அப்படித்தான் எல்லா அணிகளுக்கும் ஓட்டு போடலாம்னு பார்த்தேன். முடியலையே!???:confused: :confused:

Mano.G.
12-06-2006, 02:40 AM
அண்மையில் உலக காற்பந்து விளையாட்டுக்களை
பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்தது,

காற்பந்து உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடுகளை விட
புதிதாக உலககிண்ண ஆட்டங்களுக்கு தேர்வுபெற்ற
டிரினிடட் , அங்கோல , கோஸ்தரிக்கா போன்ற (Underdogs) நாடுகளின்
ஆட்டங்கள் சிறப்பாக உள்ளன

இன்னமும் பிரேசிலின் ஆட்டங்கள் தொடங்கவில்லை
ஆதலால் அவர்களின் ஆட்டத்தை பற்றி விமர்சிக்க முடியவில்லை.

மனோ.ஜி

kavinila
13-06-2006, 09:41 AM
என்னுடைய தெரிவின் படி இம்முறை கோப்பையை வெல்லப்போவது பிரேசில் அணிதான்.....அதில் உள்ள சிறந்த வீரர்களான ரொனல்டினோ.காக்கா ரொபின்கொ அட்ரிஅனொ பபிச்டா ஆகியோர் சாதிப்பார்கள் என நினைக்கின்ரேன்;) ;) ;) ;)

Mano.G.
13-06-2006, 09:56 AM
நேற்றைய இரவு,
ஆஸ்திரேலியா ஜப்பான் ஆட்டம் மிக மிக அருமையாக
இருந்தது , பிரிஃலோ ஆட்டம் , ஜப்பான் ஆட்டக்காரர்களின்
ஆட்டம் அருமை, அவர்களின் முதல் கோலும் அருமை,
ஜாப்பான் கோல் காவலர் இல்லையேல் பல கோல்கள்
போடபட்டிருக்கும்.
ஆட்டம் 74ம் நிமிடம் வரை ஜப்பானே வெல்வார்கள் என எதிர்பார்த்தேன்
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3க்கு 1 என்ற கோல் எண்ணிக்கையில்
வென்றனர்.

இன்று பிரேசில் குரோசியா ஆட்டத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
மலேசியாவில் விடியற்காலை 3மணிக்கு

மனோ.ஜி

பரஞ்சோதி
13-06-2006, 10:59 AM
பிரேசில் வெல்லும் என்று நம்புகிறேன். திறமைச்சாலிகள் அதிகம் நிறைந்துள்ளார்கள்.

அறிஞர்
13-06-2006, 01:32 PM
பிரேசில் வெல்லும் என்று நம்புகிறேன். திறமைச்சாலிகள் அதிகம் நிறைந்துள்ளார்கள். பிரேசிலுக்கு வாய்ப்புள்ளது.. என்றாலும்.... ஜெர்மனிக்கும் உள்நாடு என்பதால் வாய்ப்புகள் உள்ளது.

அறிஞர்
13-06-2006, 01:33 PM
நேற்றைய இரவு,
ஆஸ்திரேலியா ஜப்பான் ஆட்டம் மிக மிக அருமையாக
இருந்தது , பிரிஃலோ ஆட்டம் , ஜப்பான் ஆட்டக்காரர்களின்
ஆட்டம் அருமை, அவர்களின் முதல் கோலும் அருமை,
ஜாப்பான் கோல் காவலர் இல்லையேல் பல கோல்கள்
போடபட்டிருக்கும்.
ஆட்டம் 74ம் நிமிடம் வரை ஜப்பானே வெல்வார்கள் என எதிர்பார்த்தேன்
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3க்கு 1 என்ற கோல் எண்ணிக்கையில்
வென்றனர்.

இன்று பிரேசில் குரோசியா ஆட்டத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
மலேசியாவில் விடியற்காலை 3மணிக்கு

மனோ.ஜி அனைவரையும் ஆச்சரியத்தில்... ஆழ்த்திய ஆட்டம்.... எனக்கு வேலை நேரம் நானும் பிரேசில் மேட்ச்சை பார்க்கனும்

பரஞ்சோதி
13-06-2006, 01:52 PM
ஆமாம், இன்றைய போட்டியை வைத்து பிரேசில் அணியை எடை போட்டு விடலாம். இன்று அட்டகாசமான கால்பந்து விருந்து காத்திருக்கிறது.

பென்ஸ்
13-06-2006, 01:57 PM
கி கி... நாம் பிரேசில் தோற்றால் அறை நண்பர்களுக்கு டிரிட் வைப்பதாக சொல்லி இருக்கிறென்...
ஜெயித்தால் அவர்கள் எனக்கு வைக்கனும்....

நான் பிரேசில் அணியின் ரசிகன் இல்ல...
இன்னைக்கு எனக்கு டிரீட் கண்டிப்பா கிடைக்கும்...

அறிஞர்
13-06-2006, 09:10 PM
பிரேசில் எளிதில் வெற்றி...... பெற்றது.. காகாவின் கோல் நன்றாக இருந்தது

Mano.G.
14-06-2006, 04:52 AM
முதல் பதினாலாவது (14.31) நிமிடத்தில் கார்லோசின்
முயற்சி அருமை பெனாட்டி பாக்சிற்கு வெளியிலிருந்து
அடித்த பந்து கோல்காவலரின் திறமையால் காற்பட்டது
அடுத்து ரொனால்டினோவின் ஸ்கில் இந்த ஆட்டத்தில்
என்னை மிக மிக கவர்ந்தது.

இந்த ஆட்ட ரசிக்க தக்கவகையில் அமைந்திருந்தது.

மனோ.ஜி

மயூ
14-06-2006, 06:39 AM
கி கி... நாம் பிரேசில் தோற்றால் அறை நண்பர்களுக்கு டிரிட் வைப்பதாக சொல்லி இருக்கிறென்...
ஜெயித்தால் அவர்கள் எனக்கு வைக்கனும்....
ஐயோ பென்ஸ~ அண்ணா ஆப்பு அயிடிச்சே! :eek: :eek:

பென்ஸ்
14-06-2006, 06:44 AM
யோவ்... அவங்க எனக்கு இன்னைக்கு டிரீட் வைக்கிறாங்க...
இதுல என்ன ஆப்பு...

Mano.G.
15-06-2006, 04:47 AM
இந்த சுட்டிகளை தட்டி
உலக கிண்ண உடனடி தகவல்களையும்
தினசரி ஹைடைட்ஸும் இங்கே காணலாம்.

http://fifaworldcup.yahoo.com/06/en/w/match/template.html?id=11&day=13&month=06&year=2006#மனோ.ஜி

பரஞ்சோதி
15-06-2006, 05:51 AM
யோவ்... அவங்க எனக்கு இன்னைக்கு டிரீட் வைக்கிறாங்க...
இதுல என்ன ஆப்பு...

உஷார் பார்ட்டியாச்சே நம்ம பென்ஸ், அசத்துங்க. இப்படியும் பந்தய கட்ட ஆட்கள் இருக்காங்களா?

இனியவன்
15-06-2006, 07:32 AM
யோவ்... அவங்க எனக்கு இன்னைக்கு டிரீட் வைக்கிறாங்க...
இதுல என்ன ஆப்பு...

இப்படியே மாறி மாறி ஒருத்தருக்கு ஒருத்தர் ஆப்பு அடிச்சுக்கிட்டா எப்படி?:angry:

மயூ
19-06-2006, 06:30 AM
யோவ்... அவங்க எனக்கு இன்னைக்கு டிரீட் வைக்கிறாங்க...
இதுல என்ன ஆப்பு...
யப்பா! இப்படியும் பெட்டு கட்டுவாங்களா!
பென்ஸ் அண்ணா அசத்திட்டீங்க போங்க! :p

அறிஞர்
27-06-2006, 04:36 PM
இதோ காலிறுதி.. அட்டவணை...

என்னுடைய சாய்ஸை... வட்டமடித்து காட்டியுள்ளேன்
http://i13.photobucket.com/albums/a282/aringar/2006cup2.jpg

அறிஞர்
28-06-2006, 12:05 PM
ஸ்பெயின் தோற்றுவிட்டது.... பிரான்ஸ் வென்றுள்ளது.... அடுத்த காலிறுதி ஆட்டத்தில்... பிரேசில்.. பிரான்ஸை ஜெயித்துவிடும்

Mano.G.
28-06-2006, 12:44 PM
நமது சகோதர்கள் பிரேசிலுக்கு அமோக ஆதரவு
வழங்கியுள்ளதை பார்த்தால் இந்த ஆண்டும்
பிரேசில் தான் உலக கிண்த்தை வெற்றிபெரும்
போல உள்ளதே?

மனோ.ஜி

அறிஞர்
28-06-2006, 03:22 PM
நமது சகோதர்கள் பிரேசிலுக்கு அமோக ஆதரவு
வழங்கியுள்ளதை பார்த்தால் இந்த ஆண்டும்
பிரேசில் தான் உலக கிண்த்தை வெற்றிபெரும்
போல உள்ளதே?

மனோ.ஜி எனக்கு... என்னவோ ஜெர்மனிக்கு வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது....

அர்ஜெண்டினா, பிரேசில் நன்றாக விளையாடுகிறது....

ஜெர்மனியும், அர்ஜெண்டினாவும் காலிறுதியில் சந்திப்பது வருத்தமான செய்தி.......

மயூ
29-06-2006, 03:58 AM
ஸ்பெயின் தோற்றுவிட்டது.... பிரான்ஸ் வென்றுள்ளது.... அடுத்த காலிறுதி ஆட்டத்தில்... பிரேசில்.. பிரான்ஸை ஜெயித்துவிடும்
பழிக்கு பழி இரத்தத்திற்கு இரத்தம்!
என்ன யோசிக்கிறீங்க!
எல்லாம் 1998 ல் நம்ம பிரேசில தோற்கடித்த பிரான்ஸ்சுக்கு பதிலடி வழங்கப்போகும் நாள் யூலை 1....
காத்திருக்கின்றேன்....:mad:

அறிஞர்
02-07-2006, 03:15 AM
பழிக்கு பழி இரத்தத்திற்கு இரத்தம்!
என்ன யோசிக்கிறீங்க!
எல்லாம் 1998 ல் நம்ம பிரேசில தோற்கடித்த பிரான்ஸ்சுக்கு பதிலடி வழங்கப்போகும் நாள் யூலை 1....
காத்திருக்கின்றேன்....:mad:பதிலடியா.. மரணடி... கொடுத்துவிட்டனர்....

பிரேசில் பாவம்... யாரும் எதிர்பார்க்காத தோல்வி.....

இங்கிலாந்தின் தோல்வியும் எதிர்பார்க்கதது..... முன்னனி வீரர்கள்.. இருவர் விளையாடாமல் போனது.. தோல்விக்கு காரணம்.

என்னுடைய கூற்று படி.. ஜெர்மனிக்கு வாய்ப்புக்கள் அதிகமாகிறது....

நடுவர்களை சரிகட்டி......அர்ஜெண்டினாவை வென்றது ஜெர்மனி... மீதமுள்ள போட்டிகளிலும் அவ்வாறு செய்து... கோப்பையை.. கைப்பற்றும் ஜெர்மனி....

ஜெர்மனி, பிரான்ஸை இறுதி போட்டியில் பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.

Mano.G.
02-07-2006, 04:11 AM
ஏமாற்றாம் ஏமாற்றம
விடியற்காலை 3மணிக்கு
எழுந்து 5 மணி வரை ஆட்டம்
பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றம
பிரேசில் ஃரான்சிடம் 1-0 கோல் எண்ணிக்கையில்
தோற்றுவிட்டது.

மனோ.ஜி

மயூ
02-07-2006, 09:37 AM
ஆர்ஜன்ரீனா! பிரேசில் என் ஆசை அணிகள் இரண்டும் வெளியேறிவிட்டன!
பரவாயில்லை போர்த்துக்ளுக்கு சப்போட் பண்ணுவோம்.
ஆர்ஜன்டீனாவை ஜேர்மனி வெற்றி கொண்டதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. படுபாவிங்க இப்படி ஏமாற்றிவிட்டாங்களே????

Raaga
02-07-2006, 01:42 PM
னேற்று சனிக்கிழமை எங்க நாடு (ஃப்ரான்சு) ஜெயித்து அரையிறுதி போட்டிக்கு தேர்வு ஆகி விட்டது..

ஃப்ரஞ்சு நாட்டு அணியை கிழ அணி என்று விடைப்பாக கூறிய அனைவரும் வாய் பொத்தி நிற்கும் நிலை இப்போது...

அப்புறம் என்ன ஊரெங்கும் வானவேடிக்கைதான், தெருவெல்லாம் ஒரே ஆரவாரமாக மக்கள் இரவை கழித்தார்கள்...

பாவிகள் என்னை தூங்க விடவில்லை...

pradeepkt
03-07-2006, 06:19 AM
நானும் சும்மா இருக்காமல் ஒரு அணியை ஆதரித்து வைத்தேன். இது வரை கால்பந்து ஆட்டம் ஒன்றைக் கூட பார்த்திராமல் தைரியமாக பிரேசில் மீது நம்பிக்கை வைத்தேன்...
ஆப்பு வைத்து விட்டார்கள்.
எனவே மீண்டும் வனவாசம் செல்ல முடிவெடுத்திருக்கிறேன்

மயூ
03-07-2006, 06:37 AM
னேற்று சனிக்கிழமை எங்க நாடு (ஃப்ரான்சு) ஜெயித்து அரையிறுதி போட்டிக்கு தேர்வு ஆகி விட்டது..

ஃப்ரஞ்சு நாட்டு அணியை கிழ அணி என்று விடைப்பாக கூறிய அனைவரும் வாய் பொத்தி நிற்கும் நிலை இப்போது...

அப்புறம் என்ன ஊரெங்கும் வானவேடிக்கைதான், தெருவெல்லாம் ஒரே ஆரவாரமாக மக்கள் இரவை கழித்தார்கள்...

பாவிகள் என்னை தூங்க விடவில்லை...
பி பி சி செய்தியில் பிரான்சில் நடந்த கொண்டாட்டங்களையும் பிரேசில் காரர் நடந்ததை நம்ப முடியாது அழுததயும்.....
என்ன செய்வகு நம்ம பிரேசில் காரங்க இப்படி ஏமாற்றிற்றாங்களே?????

தாமரை
03-07-2006, 07:44 AM
இதோ காலிறுதி.. அட்டவணை...

என்னுடைய சாய்ஸை... வட்டமடித்து காட்டியுள்ளேன்
http://i13.photobucket.com/albums/a282/aringar/2006cup2.jpg
பிரேஸிலும் போச்சு இங்கிலாந்தும் போச்சு.. அறிஞரே அதெப்படி ஒருபக்கம் சரியாகவும் ஒரு பக்கம் தவறாகவும் சொல்லி நடுநிலயாளராக இருக்கிறீரே!!!!:eek: :eek: :eek:

pradeepkt
03-07-2006, 08:46 AM
பிரேஸிலும் போச்சு இங்கிலாந்தும் போச்சு.. அறிஞரே அதெப்படி ஒருபக்கம் சரியாகவும் ஒரு பக்கம் தவறாகவும் சொல்லி நடுநிலயாளராக இருக்கிறீரே!!!!:eek: :eek: :eek:
ஏங்க ஏற்கனவே வெந்த புண்ணில வேலை ரெட் ஹாட்டா சுடவச்சுப் பாய்ச்சறீங்க??? :angry:

aren
03-07-2006, 09:34 AM
கால்பந்து - அப்படின்னா என்னப்பா?

அர்ஜெண்டைனாவை ஜெர்மனி வென்றதைப் பார்த்தவுடனேயே, இந்த கோப்பை அப்படித்தான். பிரேசில் நிச்சயம் ஜெயிக்காது என்றே நினைத்தேன். ஆனால் நடுவர்கள் சேர்ந்து இங்கிலாந்திற்கும் இப்படி ஆப்பு வைப்பார்கள் என்று நினைக்கவில்லை.

இனிமேல் நிம்மதியாக தூங்கலாம். தூங்காமால் மாட்ச் பார்க்கும் நேரம் மிச்சமாயிற்று.

மிச்சம் இருக்கும் சொத்தைகளில் ஒரு சொத்த உலகக்கோப்பையை கைப்பற்றும், அவ்வளவே.

பார்த்து மகிழுங்கள்.

pradeepkt
03-07-2006, 12:02 PM
ஆனால் பாருங்க.
இந்த உலகக்கோப்பையே இப்போது ஐரோப்பிய யூனியன் கோப்பை ஆகிவிட்டது.

போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி!!!!

ஓவியா
03-07-2006, 12:46 PM
ஸ்பெயின் தோற்றுவிட்டது.... பிரான்ஸ் வென்றுள்ளது.... அடுத்த காலிறுதி ஆட்டத்தில்... பிரேசில்.. பிரான்ஸை ஜெயித்துவிடும்
சார் உங்கள் ஜக்கம்மா தப்பா குறி சொல்லிடாங்களே

பழிக்கு பழி இரத்தத்திற்கு இரத்தம்!
என்ன யோசிக்கிறீங்க!
எல்லாம் 1998 ல் நம்ம பிரேசில தோற்கடித்த பிரான்ஸ்சுக்கு பதிலடி வழங்கப்போகும் நாள் யூலை 1....காத்திருக்கின்றேன்....:mad:
அதே அதே சபாபதி

நானும் சும்மா இருக்காமல் ஒரு அணியை ஆதரித்து வைத்தேன். இது வரை கால்பந்து ஆட்டம் ஒன்றைக் கூட பார்த்திராமல் தைரியமாக பிரேசில் மீது நம்பிக்கை வைத்தேன்...ஆப்பு வைத்து விட்டார்கள். எனவே மீண்டும் வனவாசம் செல்ல முடிவெடுத்திருக்கிறேன்
வனவாசம் செப்டம்பருக்கு முன்பாகவா...இல்லை பின்பகவா...;) ;) :p

எனக்கு ஒரே சந்தொசம், நான் எதிர்பார்த்தபடி பிரேசில் சட்டி பொட்டி எல்லாம் கட்டி கொண்டு வீட்டுக்கு போய்விட்டது....:D :D

தாமரை
03-07-2006, 12:47 PM
ஆனால் பாருங்க.
இந்த உலகக்கோப்பையே இப்போது ஐரோப்பிய யூனியன் கோப்பை ஆகிவிட்டது.

போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி!!!!
நெப்போலியனும் ஹிட்லரும் மோதிக்கொள்வார்களா? அறிஞரே என்ன சொல்கிறீர்.. நீர் ஃப்ரான்ஸ் என்றால் போர்ச்சுகலும் போர்ச்சுகல் என்றால் ஃபிரான்ஸும் ஜெயிக்குமாமே???:eek: :eek: :eek:

பென்ஸ்
03-07-2006, 12:48 PM
இனிமேல் நிம்மதியாக தூங்கலாம். தூங்காமால் மாட்ச் பார்க்கும் நேரம் மிச்சமாயிற்று.

மிச்சம் இருக்கும் சொத்தைகளில் ஒரு சொத்த உலகக்கோப்பையை கைப்பற்றும், அவ்வளவே.

பார்த்து மகிழுங்கள்.

நானும் அப்படிதான் விட்டுட்டேன் ஆரென்.... :rolleyes: :rolleyes: :D
இனி நிம்மதியா தூங்கலாம்...B) B)
ஆனாலும் பிரேசில் தோத்த அன்னைக்கு எனக்கு உறக்கம் வரலை...:angry: :angry: :angry:

அறிஞர்
03-07-2006, 04:59 PM
நானும் அப்படிதான் விட்டுட்டேன் ஆரென்.... :rolleyes: :rolleyes: :D
இனி நிம்மதியா தூங்கலாம்...B) B)
ஆனாலும் பிரேசில் தோத்த அன்னைக்கு எனக்கு உறக்கம் வரலை...:angry: :angry: :angry: ஏன் அடுத்தவனுக்கு ட்ரீட் கொடுக்கவேண்டும் என்றா????/:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
03-07-2006, 05:00 PM
நெப்போலியனும் ஹிட்லரும் மோதிக்கொள்வார்களா? அறிஞரே என்ன சொல்கிறீர்.. நீர் ஃப்ரான்ஸ் என்றால் போர்ச்சுகலும் போர்ச்சுகல் என்றால் ஃபிரான்ஸும் ஜெயிக்குமாமே???:eek: :eek: :eek: சரி பிரான்ஸ் ஜெயிக்கும்... ஜெர்மனி கடைசியில் ஜெயிக்கும்... :D :D :D

(இப்படியாவது போர்ச்சுக்கலுக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னா பார்ப்போமே)

அறிஞர்
03-07-2006, 05:02 PM
பிரேஸிலும் போச்சு இங்கிலாந்தும் போச்சு.. அறிஞரே அதெப்படி ஒருபக்கம் சரியாகவும் ஒரு பக்கம் தவறாகவும் சொல்லி நடுநிலயாளராக இருக்கிறீரே!!!!:eek: :eek: :eek: என்னப்பண்ணுறது... ஒரு குத்து மதிப்பா கணித்தேன்....

ஆனால் ஜெர்மனியை முதலிலிருந்து..... ஆதரிக்கிறேன்.... அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என.. பார்ப்போம்.....

ஜெர்மனி-அர்ஜெண்டினா பிராட் மேட்ச் பார்த்தவுடன்...... கண்டிப்பா... ஜெர்மனி நடுவர்கள் ஆதரவுடன் கோப்பையை வெல்வர் எனப்படுகிறது.....

அறிஞர்
03-07-2006, 05:03 PM
னேற்று சனிக்கிழமை எங்க நாடு (ஃப்ரான்சு) ஜெயித்து அரையிறுதி போட்டிக்கு தேர்வு ஆகி விட்டது..

ஃப்ரஞ்சு நாட்டு அணியை கிழ அணி என்று விடைப்பாக கூறிய அனைவரும் வாய் பொத்தி நிற்கும் நிலை இப்போது...

அப்புறம் என்ன ஊரெங்கும் வானவேடிக்கைதான், தெருவெல்லாம் ஒரே ஆரவாரமாக மக்கள் இரவை கழித்தார்கள்...

பாவிகள் என்னை தூங்க விடவில்லை... அணித்தலைவர் ஜிடேனுக்கு தான் எல்லா புகழும் சேரும்.... அவரின் ஆட்டம் வெகு அருமை...... ஹென்றியும் கலக்குகிறார்......

அறிஞர்
03-07-2006, 05:05 PM
எனக்கு ஒரே சந்தொசம், நான் எதிர்பார்த்தபடி பிரேசில் சட்டி பொட்டி எல்லாம் கட்டி கொண்டு வீட்டுக்கு போய்விட்டது....:D :D ஏன் உங்க ஊரும் தான்... எல்லாத்தையும் கட்டிக்கொண்டு.. அழுகையோடு நாடு திரும்பியுள்ளனர். :p :p :p :p

தாமரை
05-07-2006, 04:15 AM
என்னப்பண்ணுறது... ஒரு குத்து மதிப்பா கணித்தேன்....

ஆனால் ஜெர்மனியை முதலிலிருந்து..... ஆதரிக்கிறேன்.... அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என.. பார்ப்போம்.....

ஜெர்மனி-அர்ஜெண்டினா பிராட் மேட்ச் பார்த்தவுடன்...... கண்டிப்பா... ஜெர்மனி நடுவர்கள் ஆதரவுடன் கோப்பையை வெல்வர் எனப்படுகிறது.....

ஆதரிச்சுக் கவுக்குறதில சுப்பிரமணி சுவாமியாய் இருப்பீர் போல இருக்கே!:eek: :eek: :eek: உங்க வாய் முகூர்த்தம்.. ஜெர்"மணி" தோற்று இத்"தாலி" வென்றது.. ஏனென்றல் மணியில் ஒரு சுழி குறைச்சல்.:D :D :D

மதி
05-07-2006, 04:17 AM
அடடா..!
பரபரப்பான அரையிறுதியில் இத்தாலி ஜெயித்து விட்டது. எஸ்ட்ரா டைமில் கடைசி இரண்டு நிமிடங்களில் 2 கோல் போட்டு இத்தாலி ஜெர்மனி அணியினை மண்ணை கவ்வ வைத்து விட்டது.
பார்ப்போம் இன்றைய ஆட்டத்தில் யார் மண்ணை கவ்வ போகிறார்கள் என்று? இனியும் இன்னது தான் ஜெயிக்கும் என்ற ஆருடத்தில் நம்பிக்கையில்லை.

தாமரை
05-07-2006, 04:18 AM
சரி பிரான்ஸ் ஜெயிக்கும்... ஜெர்மனி கடைசியில் ஜெயிக்கும்... :D :D :D

(இப்படியாவது போர்ச்சுக்கலுக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னா பார்ப்போமே)

ஜெர்மனி கடைசியில் ஜெயிக்கும்... :D :D :D
கடைசியிலதானே கப்பலே கவுந்தது!...:eek: :eek: :eek:

கடைசி இரண்டு நிமிடத்தில் இத்தாலி இரண்டு கோல் அடித்து அசத்தியது. ஆட்டத்தின் 119வது நிமிடத்தில் பாபியோ கிராசோ பிரமாத கோல் அடிக்க, இத்தாலி 10 என்ற முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடத்தில் அலெசாண்ட்ரோ டெல் பியரோ அருமையான கோல் அடிக்க, இத்தாலி 2--0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பிரமாதமாக முன்னேறியது.

மதி
05-07-2006, 04:18 AM
ஆதரிச்சுக் கவுக்குறதில சுப்பிரமணி சுவாமியாய் இருப்பீர் போல இருக்கே!:eek: :eek: :eek: உங்க வாய் முகூர்த்தம்.. ஜெர்"மணி" தோற்று இத்"தாலி" வென்றது.. ஏனென்றல் மணியில் ஒரு சுழி குறைச்சல்.:D :D :D
இந்த நக்கலுக்கெல்லாம் கொறச்சலில்ல.. ஆக மணிய விட தாலியே மேலுங்கறீங்க...!

தாமரை
05-07-2006, 04:43 AM
இந்த நக்கலுக்கெல்லாம் கொறச்சலில்ல.. ஆக மணிய விட தாலியே மேலுங்கறீங்க...!

தாலிகட்டிப் பாருங்க புரியும்...

மதி
05-07-2006, 04:51 AM
தாலிகட்டிப் பாருங்க புரியும்...
அட எந்த திரி போனாலும் இதே பேச்சு தானா?
ஆள வுடுங்க சாமி...

மயூ
05-07-2006, 06:21 AM
அட எந்த திரி போனாலும் இதே பேச்சு தானா?
ஆள வுடுங்க சாமி...
என்ன அண்ணே பெரியவங்க ஒண்டு சொல்லுவாங்க..
காலத்தே பயிர் செய்.....:D :D :D

pradeepkt
05-07-2006, 06:23 AM
ஆஹா ஆஹா
எனக்குத் தாலி மீது அவ்வளவாகப் பாசம் இல்லாவிடினும் மணி மைதானத்துக்கு வெளியே ஆடிய ஆட்டம் ஓவராக இருந்த படியால் என் மானசீக ஆதரவைத் தாலிக்கு அளித்தேன்.
செண்டிமெண்டல்களின் தாலி வென்றமைக்கு வாழ்த்துகள்!!!! :D

மதி
05-07-2006, 06:29 AM
என்ன அண்ணே பெரியவங்க ஒண்டு சொல்லுவாங்க..
காலத்தே பயிர் செய்.....:D :D :D
அத பெரியவங்களுக்கு சொல்லுங்க தம்பி...!!
:D :D :D ..சின்ன பயலுக்கு ஏன்?

மயூ
05-07-2006, 06:35 AM
அத பெரியவங்களுக்கு சொல்லுங்க தம்பி...!!
:D :D :D ..சின்ன பயலுக்கு ஏன்?
சின்னப பசங்க நாங்க இருக்கேக்க
இந்த பெரியவங்களேல்லாம் எதுக்கு நம்ம இடத்தப் பிடிக்க பாக்கிறாங்க....;) :D :D :D :D

தாமரை
05-07-2006, 07:57 AM
ஆஹா ஆஹா
எனக்குத் தாலி மீது அவ்வளவாகப் பாசம் இல்லாவிடினும் மணி மைதானத்துக்கு வெளியே ஆடிய ஆட்டம் ஓவராக இருந்த படியால் என் மானசீக ஆதரவைத் தாலிக்கு அளித்தேன்.
செண்டிமெண்டல்களின் தாலி வென்றமைக்கு வாழ்த்துகள்!!!! :D

இத்தாலி பாக்கியம் நிலைக்குமா???:confused: :confused: :confused:

pradeepkt
05-07-2006, 09:50 AM
இத்தாலி பாக்கியம் நிலைக்குமா???:confused: :confused: :confused:
அது இன்னைக்கு போர்-ஐச் சமாளிக்க பிளான்ஸ் போடுறவங்க கையில, ஸாரி, காலில இருக்கு :D :D :D

ஓவியா
05-07-2006, 12:08 PM
இத்தாலி பாக்கியம் நிலைக்குமா???:confused: :confused: :confused:

இத்தாலி சும்மா விழுந்து-விழுந்து விளயாடியதை கவனித்திரோ.
எல்லம் கை விட்டு போய்விட்டகூடதுனு தான்

பிரேசில், இங்லன்ட் தோல்வி எனது வெற்றி...:D :D :D
பாவம் என் கனவு கண்ணன் ரோனியை ஆட்டத்தில் இருந்து தூக்கியதில் கொஞ்சம் வருத்தம்

அநியாயமாய் அர்ஜென்டினாவை மூட்டை கட்டிய
ஜெர்மனிக்கும் ஒரு ஆப்பு...:D :D :D :D

(நான் நினைத்தபடி... வீரப்பாவி சிரிப்பு என் மனதில்...)
:D :D :D:D :D :D :D :D

என் ஓட்டு பிரான்ஸ்க்கே

தாமரை
05-07-2006, 12:21 PM
(நான் நினைத்தபடி... வீரப்பாவி சிரிப்பு என் மனதில்...)
:D :D :D:D :D :D :D :D

படுபாவி, கொடும்பாவி, அப்பாவி இப்படி நிறைய பாவி கேள்விப்பட்டிருக்கேன்.. இதென்ன வீரப்பாவி?:eek: :eek: :eek: :eek: :eek:

ஒரு வேளை வீரப்பன் + ஆவி = வீரப்பாவி யோ?:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
05-07-2006, 12:49 PM

அடராமா,
அய்யா சமாலிப்பிகேஸ்ஷன் ப்ரோபேஸ்சர்

அது
வீரப்பாவின் சிரிப்பு
எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்

சார்
இருதாலும் உங்களுக்கு ஞானம் ரோம்பதான்..:)

இனியவன்
05-07-2006, 02:38 PM
ஆவிகள் உலகமா இது
நான் ரொம்ப சின்னப்புள்ளைமா

அறிஞர்
05-07-2006, 04:53 PM
ஆவிகள் உலகமா இது
நான் ரொம்ப சின்னப்புள்ளைமாசின்னப்புள்ளையா..... :confused: :confused: :confused: :confused: வீரப்பன், வீரப்பா வரப்போகிறார்கள்

அறிஞர்
05-07-2006, 05:00 PM
இன்று மற்றொரு சுவாரஷ்யமான போட்டி...

பிரான்ஸ்- போர்ச்சுக்கல்...

யார் ஜெயிப்பா... நான் சொல்லுறதுக்கு மாற்றாக நடக்கிறது.

பிரான்ஸ் ஜெயிக்கும் (அப்படியாவது போர்ச்சுக்கல் ஜெயிக்கட்டும்)

இளசு
05-07-2006, 09:53 PM
அறிஞரே... பிரான்ஸ் ஒரு பினால்ட்டி கோல் போட்டு போர்ச்சுகலை பின் தள்ளி விட்டதே....ஹூம்!

தாமரை
06-07-2006, 04:06 AM
இன்று மற்றொரு சுவாரஷ்யமான போட்டி...

பிரான்ஸ்- போர்ச்சுக்கல்...

யார் ஜெயிப்பா... நான் சொல்லுறதுக்கு மாற்றாக நடக்கிறது.

பிரான்ஸ் ஜெயிக்கும் (அப்படியாவது போர்ச்சுக்கல் ஜெயிக்கட்டும்)
பிரான்ஸூடன் மோதியதில் போர்சுக்கல் சுக்கலாகி விட்டதே!.. அறிஞரே உங்களுக்கு எதிராக சதி நடக்கிறது.. உலக அளவில...

மதி
06-07-2006, 04:46 AM
எப்படியோ...கோவாவை ஜெயிச்சுடுச்சு..புதுச்சேரி..
இப்படியெல்லாம் சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான்...

gragavan
06-07-2006, 09:53 AM
எனக்குப் பிரான்சும் பிடிக்கும் இத்தாலியும் பிடிக்கும். ரெண்டு பேருல யாருக்கும் வெற்றி மாலை சூட விருப்பந்தான். ஜெர்மனி தோற்றதில் கொஞ்சம் வருத்தம்தான். பிரேசில் தோற்றதில் மகிழ்ச்சிதான். போர்ச்சுகல் தோற்றதிலும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் பிரான்சுக்கு எதிராக என்பதால் அந்த வருத்தமும் குறைவு.

மதி
06-07-2006, 10:06 AM
ஆக மொத்தம் உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா..வருத்தமா..
அப்பப்பா..எத்தன மகிழ்ச்சி..எத்தன வருத்தம்..??

pradeepkt
06-07-2006, 10:22 AM
எனக்குப் பிரான்சும் பிடிக்கும் இத்தாலியும் பிடிக்கும். ரெண்டு பேருல யாருக்கும் வெற்றி மாலை சூட விருப்பந்தான். ஜெர்மனி தோற்றதில் கொஞ்சம் வருத்தம்தான். பிரேசில் தோற்றதில் மகிழ்ச்சிதான். போர்ச்சுகல் தோற்றதிலும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் பிரான்சுக்கு எதிராக என்பதால் அந்த வருத்தமும் குறைவு.
ஏய்யா இதிலயுமா இத்தனை கொழப்பம்???
என்னை வீணா சென்னைக்கு ஆட்டோ அனுப்ப வச்சுறாதீங்க :angry: :angry: :eek: :eek: :confused: :confused:

gragavan
06-07-2006, 10:43 AM
ஏய்யா இதிலயுமா இத்தனை கொழப்பம்???
என்னை வீணா சென்னைக்கு ஆட்டோ அனுப்ப வச்சுறாதீங்க :angry: :angry: :eek: :eek: :confused: :confused:என்ன கொழப்பம். தெளிவாச் சொல்லீருக்கேனே. எப்படீன்னாலும் எனக்குப் பிடிச்ச அணிதான் ஜெயிக்கப் போகுது. அத எவ்வளவு தெளிவாச் சொல்லீருக்கேன். நீங்க என்னடான்னா....

தாமரை
06-07-2006, 10:44 AM
ஏய்யா இதிலயுமா இத்தனை கொழப்பம்???
என்னை வீணா சென்னைக்கு ஆட்டோ அனுப்ப வச்சுறாதீங்க :angry: :angry: :eek: :eek: :confused: :confused:

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு ஆட்டோவா?:eek: :eek: :eek: :eek: :eek:
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பச் செலவாகுமே!!:confused: :confused: :confused: :confused:
முத்திப் போச்சு!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

sarcharan
06-07-2006, 10:52 AM
ஏய்யா இதிலயுமா இத்தனை கொழப்பம்???
என்னை வீணா சென்னைக்கு ஆட்டோ அனுப்ப வச்சுறாதீங்க :angry: :angry: :eek: :eek: :confused: :confused:

ஆந்திரா மாநிலத்துல (அங்க போனவங்களும்!!!!!!!!)இப்படித்தானோ.............

கொலை வெறி புடிச்சி அலையறானுவ....

sarcharan
06-07-2006, 10:53 AM
நான் என்னோட வோட்ட ஃபைனல் அன்னிக்கு போடுறேன்.

அப்பத்தானே சரியா இருக்கும்.;)

ஓவியா
06-07-2006, 01:16 PM
இந்தமுறை நான் ஆதரித்த அத்தனை அணியும் அபார வெற்றி..

என் கனவு மன்னன் சிடானோவின் ஆட்டம் கூல் ன் சூப்பர்...:D ;)
பிரான்சு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கின்றென்....:D :D

இனியவன்
06-07-2006, 02:07 PM
இந்தமுறை நான் ஆதரித்த அத்தனை அணியும் அபார வெற்றி..

என் கனவு மன்னன் சிடானோவின் ஆட்டம் கூல் ன் சூப்பர்...:D ;)
பிரான்சு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கின்றென்....:D :D

என் கணிப்பும் உங்கள் வழி தான்.
பிரான்சு க்குக் கிட்டுமா அந்த தங்க மாங்கனி?
அல்ஜீரியாவைப் பூர்வீகமாய்க் கொண்ட ஜிடான் அந்தக் கனியைப் பறித்துத் தருவார் என்பது என் எதிர்பார்ப்பு.

அறிஞர்
06-07-2006, 02:15 PM
நான் என்னோட வோட்ட ஃபைனல் அன்னிக்கு போடுறேன்.

அப்பத்தானே சரியா இருக்கும்.;) 7ந்தேதியோடு வோட்டெடுப்பு முடிகிறது.....

அறிஞர்
06-07-2006, 02:16 PM
என் கணிப்பும் உங்கள் வழி தான்.
பிரான்சு க்குக் கிட்டுமா அந்த தங்க மாங்கனி?
அல்ஜீரியாவைப் பூர்வீகமாய்க் கொண்ட ஜிடான் அந்தக் கனியைப் பறித்துத் தருவார் என்பது என் எதிர்பார்ப்பு.
என்ன ஓவியா....கண்டிப்பா... அல்ஜீரியாக்காரர் வெல்வாரா.....

அறிஞர்
06-07-2006, 08:16 PM
இத்தாலி, பிரான்ஸை ஆதரித்த 5 அன்பர்கள் யாரப்பா??????????

ஓவியா
06-07-2006, 11:35 PM
என்ன ஓவியா....கண்டிப்பா... அல்ஜீரியாக்காரர் வெல்வாரா.....

சார் அறிஞர்
இதை படித்தப்பொழுதே நான்......:eek: :eek: :eek: :eek:

நான் எங்க போய் சொல்ல......சிரிப்புதான் வருது....:D :D :D :D

ரகசியமாக காத்திருந்து பார்ப்போம்.....;) ;) ;) ;) ;)

ஓவியா
06-07-2006, 11:39 PM
என் கணிப்பும் உங்கள் வழி தான்.
பிரான்சு க்குக் கிட்டுமா அந்த தங்க மாங்கனி?
அல்ஜீரியாவைப் பூர்வீகமாய்க் கொண்ட ஜிடான் அந்தக் கனியைப் பறித்துத் தருவார் என்பது என் எதிர்பார்ப்பு.

கனியை பறிப்பாரா.......

காத்திருகின்றேன்,
காத்திருகின்றேன்,
காத்திருகின்றேன்

காலம் பதில் சொல்லும்....

அறிஞர்
07-07-2006, 12:09 AM
சார் அறிஞர்
இதை படித்தப்பொழுதே நான்......:eek: :eek: :eek: :eek:

நான் எங்க போய் சொல்ல......சிரிப்புதான் வருது....:D :D :D :D

ரகசியமாக காத்திருந்து பார்ப்போம்.....;) ;) ;) ;) ;) காலம் பதில் சொல்லும்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

mukilan
07-07-2006, 03:14 PM
நமக்கும் விளையாட்டுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். ஆனாலும் பிரேசில்க்கு ஓட்டுப் போட்டேன்.

அறிஞர்
07-07-2006, 03:15 PM
நமக்கும் விளையாட்டுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். ஆனாலும் பிரேசில்க்கு ஓட்டுப் போட்டேன். உங்களை மாதிரி பல பேர் பெட் கட்டி.. 400 கோடி நஷ்டமாம்....

தாமரை
07-07-2006, 03:41 PM
காலம் பதில் சொல்லும்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர் இப்போதெல்லாம் குறி சொல்வதை விட்டு விட்டார்..
:D :D :D :D :D

அறிஞர்
07-07-2006, 04:23 PM
அறிஞர் இப்போதெல்லாம் குறி சொல்வதை விட்டு விட்டார்..
:D :D :D :D :D உமக்காக.. இதோ....

1. பிரான்ஸ்
2. இத்தாலி
3. போர்ச்சுக்கல்
4. ஜெர்மனி......

ஜெர்மனி-போர்ச்சுக்கல் மேட்ச்சிற்கு... நடுவர் அர்ஜெண்டினாக்காரர்.. அதனால்.. ஜெர்மனியை பழி வாங்குவார் என எண்ணுகிறேன்

ஓவியா
07-07-2006, 04:29 PM
உமக்காக.. இதோ....

1. பிரான்ஸ்
2. இத்தாலி
3. போர்ச்சுக்கல்
4. ஜெர்மனி......

ஜெர்மனி-போர்ச்சுக்கல் மேட்ச்சிற்கு... நடுவர் அர்ஜெண்டினாக்காரர்.. அதனால்.. ஜெர்மனியை பழி வாங்குவார் என எண்ணுகிறேன்

அப்படிபோடு,

இந்த முறையும் எனக்கு தான் வெற்றி

அறிஞர்
07-07-2006, 04:34 PM
அப்படிபோடு,

இந்த முறையும் எனக்கு தான் வெற்றி புதுமைப்பெண் சொல்லியாச்சுங்கோ.... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
08-07-2006, 10:21 PM
உமக்காக.. இதோ....

ஜெர்மனி-போர்ச்சுக்கல் மேட்ச்சிற்கு...
நடுவர் அர்ஜெண்டினாக்காரர்..
அதனால்.. ஜெர்மனியை பழி வாங்குவார் என எண்ணுகிறேன்

இல்லை வேறு ஏதோ வாங்கிவிட்டார்

நாடுவர் சுவிஷ் பேங்கில் எண் ஓபென் பன்னிவிட்டார் என்று என்ன தோன்றுகிறது.........:cool: :cool:
அதிகபடியாக ஆட்டத்தில் பல இடங்களில் எதையுமே கவனிக்காதவர் போல் அல்லவா நழுவி விட்டார்..........:angry: :angry:

mukilan
09-07-2006, 10:34 PM
என்னவோ போங்கள் இந்த உலகக் கோப்பை இத்தாலிக்குத்தான்னு எழுதி வைச்சிருக்கு போல. நம்ம மன்றத்தில் கூட இத்தாலிக்கு 2 பேருதான் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. யாரய்யா அந்த தீர்க்க தரிசிகள்.

Mano.G.
10-07-2006, 01:08 AM
இத்தாலி தான் உலக காற்பந்து கோப்பையை வென்று விட்டதே.
வாழ்த்துக்கள் இத்தாலிக்கு வாழ்த்துக்கள்

aren
10-07-2006, 01:47 AM
இத்தாலி நிச்சயம் வெற்றி பெரும் என்று முன்பாகவே கணித்த அந்த இரண்டு உறுப்பினர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

மதி
10-07-2006, 04:02 AM
இத்தாலிக்கு வாழ்த்துக்கள்...!

தாமரை
10-07-2006, 04:08 AM
அறிஞரே நீங்க வெளிய இருந்து ஆதரவு கொடுத்த ஃப்ரான்ஸும் மண்ணைக் கவ்வ இத்தாலி வென்றதே..

தாலி பாக்கியம் நிலைச்சுடுச்சு..

சரி சரி பென்ஸூ அமெரிக்கா வந்திருக்கிறார்.. அவரைக் கவனியுங்கள்...

மயூ
10-07-2006, 04:22 AM
கண்ணைக் கசக்கியவாறு தாலிக்கு பாராட்டு சொல்கின்றேன்.......

pradeepkt
10-07-2006, 04:46 AM
ஏம்ப்பா கண்ணைக் கசக்குற!
தாலி பாக்கியம்தான் ஸ்டிராங்குன்னு நிரூபிச்சிருச்சுல்ல... நான் பிரேசிலுக்கு ஓட்டுப் போட்டேன். ஆனால் பெனால்ட்டியில பிரான்ஸூ பிளான்ஸூ போட்டு பிரேசிலை மண்ணைக் கவ்வ வச்சுருச்சு... அந்த வயித்தெரிச்சல் சும்மா விடுமா? அதான் இன்னைக்கு அதே மாதிரி இத்தாலி பிரான்ஸூக்கு ஜில்பான்ஸ் வேலை காட்டிருச்சு...

எனிவே, வென்ற இத்தாலிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்த பிரான்ஸ், ஜெர்மனி அணிகளுக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஓவியா
10-07-2006, 10:04 AM
என்னமோ பொங்கப்பா
கடைசி நேரத்தில் என் பட்சி என்னை ஏமற்றிவிட்டது...

வாழ்க்கையில் இதுதான் முதை முறை
நான் ஆட்டம் முடிந்து ஓ என்று அழுதது
தூக்கம் வாரமல் துக்கதில் கண்ணில் நீர்நீராய் கொட்டியது.....

என் கனவு மன்மதன் ஜிடான்
ஆசை துறந்தால் அகிலமும் எனக்கே என்று போய்விட்டரே...

தாமரை
10-07-2006, 10:12 AM

அறிஞர் சொன்னபோதே எனக்குத் தெரிந்து விட்டது.. ஓவியா..
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது..

தாமரை
10-07-2006, 10:29 AM
உமக்காக.. இதோ....

1. பிரான்ஸ்
2. இத்தாலி
3. போர்ச்சுக்கல்
4. ஜெர்மனி......

ஜெர்மனி-போர்ச்சுக்கல் மேட்ச்சிற்கு... நடுவர் அர்ஜெண்டினாக்காரர்.. அதனால்.. ஜெர்மனியை பழி வாங்குவார் என எண்ணுகிறேன்

1. இத்தாலி
2.ஃப்ரான்ஸ்
3. ஜெர்மனி
4. போர்ச்சுக்கல்

ஏன் இப்படி சொந்தக் காசில சூனியம் வச்சுகிட்டு வீணாப் போறீங்க? கடைசியில் பழிவாங்கப்பட்டது நீங்கதான்

அறிஞர்
10-07-2006, 11:50 AM
அறிஞரே நீங்க வெளிய இருந்து ஆதரவு கொடுத்த ஃப்ரான்ஸும் மண்ணைக் கவ்வ இத்தாலி வென்றதே..

தாலி பாக்கியம் நிலைச்சுடுச்சு..

சரி சரி பென்ஸூ அமெரிக்கா வந்திருக்கிறார்.. அவரைக் கவனியுங்கள்... அப்படியா,.. எங்கு வந்துள்ளார்.... தொல்லைபேசி எண் தேவை.....

அறிஞர்
10-07-2006, 11:53 AM
1. இத்தாலி
2.ஃப்ரான்ஸ்
3. ஜெர்மனி
4. போர்ச்சுக்கல்

ஏன் இப்படி சொந்தக் காசில சூனியம் வச்சுகிட்டு வீணாப் போறீங்க? கடைசியில் பழிவாங்கப்பட்டது நீங்கதான் என்னைய யாருங்க பழிவாங்கினா.....

போர்ச்சுக்கல்... சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை... பயிற்சியாளர்-பீகோ சண்டை காரணமோ.

இத்தாலி, முதல் பாதி நேரத்திலும், பிரான்ஸ் இரண்டாம் பாதி நேரத்திலும் சிறப்பாக விளையாடியது.

ஜிடேன் செய்த முட்டாள்தனமான செயல்... கோப்பையை இழக்கச்செய்தது....

அறிஞர்
10-07-2006, 04:37 PM
ஜிடேன் இந்த 2006 உலக கோப்பையின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டும் தங்க கால்பந்து பெறுகிறார்.

அதிக கோல் அடித்த ஜெர்மனியின் குலோஸ் (5) தங்க காலணி பெறுகிறார். அர்ஜெண்டினாவின் கிறிஸ்போ (4) வெள்ளி காலணி, பிரேசில் ரொனால்டோ (3) வெண்கல காலணி பெறுகிறார்கள்.

பிரேசில், ஸ்பெயின் அணிகள் சிறந்த அணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது

aren
11-07-2006, 01:58 AM
அறிஞரே, நீங்கள் உங்கள் அறிவுத்திறமையால் அறிவித்த அனைத்து அணிகளுமே மண்ணைக் கவ்விவிட்டதே.

மிகவும் மட்டமாக ஆடிய இத்தாலி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டதே.

ஓவியா
11-07-2006, 04:26 AM
நான் ஃப்ரான்ஸ்க்கு ஆதரவு தந்தாலும்

சும்மா சொல்லக்கூடாது
என் கண்களுக்கு இறுதி ஆட்டத்தில் இத்தாலி அபாரமா ஆடியது

தாமரை
11-07-2006, 05:01 AM
நான் ஃப்ரான்ஸ்க்கு ஆதரவு தந்தாலும்

சும்மா சொல்லக்கூடாது
என் கண்களுக்கு இறுதி ஆட்டத்தில் இத்தாலி அபாரமா ஆடியது

உங்க கண்பட்டுதானே ஃபிரான்ஸ் மற்றும் ஜிடேன் எல்லாம் அவதிப்பட்டார்கள்...

அய்யா ஜாக்கிரதை.. :D :D :D

gragavan
12-07-2006, 05:55 PM
இத்தாலி மட்டமாக ஆடவில்லை. சிறப்பாகவே செய்தார்கள். எனக்கு எப்பொழுதும் பிரான்சின் மீதும் இத்தாலியின் மீதும் விருப்பம் உண்டு. இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.

ஜிடேனின் கோபம் தவறுதான் என்றாலும் அவரைத் தூண்டியதும் மிகப் பெரிய தவறு. அதுவும் குடும்பத்தை வம்புக்கு இழுத்து. கால்பந்து என்பது ஆண்மையுள்ளவர்களின் விளையாட்டு என்பார்கள். காரணம் அதற்குத் தேவைப்படும் உடலுரமும் உள்ள உரமும். அந்த உரத்தினாலும் வலிமையினாலும் இப்படி நடப்பது சகஜமே. இந்தத் தொடரில் ரசித்த மற்றொரு அணி போர்ச்சுக்கல். பிரேசிலின் தோல்வி மகிழ்ச்சியே. அவர்களை மீண்டும் சுத்திகரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு.