PDA

View Full Version : பதிவிறக்குவது எப்படி?

pgk53
06-06-2006, 02:30 PM
அன்பு நண்பர்களே எனக்கு அருமையான பழைய பாடல்கள் உள்ள
ஒரு சிடி கிடைத்தது. அதை எனது கணிணியில் பதிவிறக்கம் செய்ய முயன்றேன் . முடியவில்லை.

பாடல் பைலை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் 'HTML' பைல் என்றுதான் வருகிறது பாடல் வருவதில்லை

ஒரு நண்பர் ரிப் செய்தால் இறக்கலாம் என்று கேள்விப்பட்டததகக் கூறினார்.ஆனால் அவருக்கு அதை எப்படிச் செய்வது என்று தெரியாது.

எப்படி பதிவிறக்குவது என்று அறிந்தவர்கள் கூறுங்களேன்.
நன்றி

அறிஞர்
06-06-2006, 02:37 PM
நானும் இது மாதிரி பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன்.. உதவி செய்யுங்கள் அன்பர்களே.....

சுவேதா
06-06-2006, 05:25 PM
நான் அப்படி செய்வதென்றால் மிடியா மூலம் கொப்பி பண்ணி எடுக்கின்றனான் அண்ணா

பரஞ்சோதி
07-06-2006, 06:21 AM
நான் அப்படி செய்வதென்றால் மிடியா மூலம் கொப்பி பண்ணி எடுக்கின்றனான் அண்ணா

என்ன சகோதரி எப்படி இருக்கீங்க?

நாங்க மிடி உபயோகிப்பது இல்லை, அது பெண்களுக்கான உடை தானே ?

- அப்பாவி பரம்ஸ்

சுவேதா
07-06-2006, 11:15 AM
என்ன சகோதரி எப்படி இருக்கீங்க?

நாங்க மிடி உபயோகிப்பது இல்லை, அது பெண்களுக்கான உடை தானே ?

- அப்பாவி பரம்ஸ்

நலமாக இருக்கின்றேன் தாங்கள் எப்படி:)
:D மிடி இல்லை அண்ணா media player இதிலே பாடலை copy பண்ணி எங்களது கணணிக்குள் எடுக்கலாம்.

ஓவியா
07-06-2006, 11:28 AM
என்ன சகோதரி எப்படி இருக்கீங்க?

நாங்க மிடி உபயோகிப்பது இல்லை, அது பெண்களுக்கான உடை தானே ?

- அப்பாவி பரம்ஸ்

மிடிகூட ஓகே

ஆனால் கையொப்பம் தான் .....:D :D :D

சுவேதா
07-06-2006, 11:34 AM
மிடிகூட ஓகே

ஆனால் கையொப்பம் தான் .....:D :D :D

:D :D :D :D :D

pgk53
07-06-2006, 06:19 PM
நான் அப்படி செய்வதென்றால் மிடியா மூலம் கொப்பி பண்ணி எடுக்கின்றனான் அண்ணா

அன்புத் தங்கையே----அருமையான தகவலைக் கொடுத்துள்ளீர்கள். அதனால் எனது கேள்விக்கு சரியான விடை கிடைத்துவிட்டது.மிக்க நன்றி.
மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று நான் செய்த விதத்தை விளக்குகிறேன்.

மீடியா ப்ளேயரை உயிர்ப்பித்தேன்.
அதில் ரிப் {RIP} என்னும் பகுதியைக் கிளிக்கினேன்.
மீடியா ப்ளேயெர் 10க்கு மேல்பட்டதில்தான் இந்த வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
புதிய பக்கம் திறந்தது. அதில் சீடியை சொருகவும் என்று கேட்டது.
பதிவிறக்கம் செய்யப்படவேண்டிய சீடியைச் செருகினேன்.
அடுத்தாற்போல். எத்தனை KPBS இறக்கவேண்டும் என்ற விருப்பத்தில் 128ஐத் தேர்வு செய்து கிளிக்கினேன்.
இப்போது சீடியில் இருக்கும் பாடல்களின் டிராக் மொத்தமும் பார்வைக்கு வந்தது. அவை அனைத்துமே தானாகவே கிளிக்கியிருப்பதைப் பார்க்கலாம். இதில் எந்த பாடல் தேவையில்லலயோ அதை மட்டும் கிளிக்கை எடுத்துவிடலாம்.
பிறகு RIP THE MUSIC என்பதைக் கிளிக்கினேன்,
அவ்வளவுதான் ஒவ்வொன்றாக ரிப் ஆகத் தொடங்கிவிட்டது,
ரிப் ஆன பாடல் எம்பி3 ஆக My Documentல் இருக்கும் MyMusicல் போய்ச் சேர்ந்துவிட்டது. அதை நான் தேவையான இடத்துக்கு மாற்றி வைத்துக்கொண்டேன்.
மீண்டும் ஒருமுறை சகோதரிக்கு எனது நன்றிகள் பல.

பென்ஸ்
07-06-2006, 06:25 PM
என்ன சகோதரி எப்படி இருக்கீங்க?

நாங்க மிடி உபயோகிப்பது இல்லை, அது பெண்களுக்கான உடை தானே ?

- அப் "பாவி" பரம்ஸ்

சரியாதானே சொல்லி இருக்கிறார்....:D :D :D

பென்ஸ்
07-06-2006, 06:26 PM
முழுதகவலையும் அருமையாக கொடுத்தமைக்கு நன்றி PGK

சுவேதா
07-06-2006, 08:58 PM
அன்புத் தங்கையே----அருமையான தகவலைக் கொடுத்துள்ளீர்கள். அதனால் எனது கேள்விக்கு சரியான விடை கிடைத்துவிட்டது.மிக்க நன்றி.
மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று நான் செய்த விதத்தை விளக்குகிறேன்.

மீடியா ப்ளேயரை உயிர்ப்பித்தேன்.
அதில் ரிப் {RIP} என்னும் பகுதியைக் கிளிக்கினேன்.
மீடியா ப்ளேயெர் 10க்கு மேல்பட்டதில்தான் இந்த வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
புதிய பக்கம் திறந்தது. அதில் சீடியை சொருகவும் என்று கேட்டது.
பதிவிறக்கம் செய்யப்படவேண்டிய சீடியைச் செருகினேன்.
அடுத்தாற்போல். எத்தனை KPBS இறக்கவேண்டும் என்ற விருப்பத்தில் 128ஐத் தேர்வு செய்து கிளிக்கினேன்.
இப்போது சீடியில் இருக்கும் பாடல்களின் டிராக் மொத்தமும் பார்வைக்கு வந்தது. அவை அனைத்துமே தானாகவே கிளிக்கியிருப்பதைப் பார்க்கலாம். இதில் எந்த பாடல் தேவையில்லலயோ அதை மட்டும் கிளிக்கை எடுத்துவிடலாம்.
பிறகு RIP THE MUSIC என்பதைக் கிளிக்கினேன்,
அவ்வளவுதான் ஒவ்வொன்றாக ரிப் ஆகத் தொடங்கிவிட்டது,
ரிப் ஆன பாடல் எம்பி3 ஆக My Documentல் இருக்கும் MyMusicல் போய்ச் சேர்ந்துவிட்டது. அதை நான் தேவையான இடத்துக்கு மாற்றி வைத்துக்கொண்டேன்.
மீண்டும் ஒருமுறை சகோதரிக்கு எனது நன்றிகள் பல.

:) நன்றி எதற்கு அண்ணா நாங்கள்தான் நன்றி கூறவேண்டும் காரணம் விவரமாக கூறியுள்ளீர்கள் மற்ற நண்பர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும் அண்ணா:)

pradeepkt
08-06-2006, 05:58 AM
ரியல் பிளேயரிலும் இது போன்ற வசதி இருக்கிறது.
வெகுநாட்களாகவே நான் உபயோகித்து வருகிறேன்.
இத்திரியைக் கவனிக்காமைக்கு மன்னிக்கவும்.

prabhafriend
19-06-2006, 12:17 AM
mediaplayer மூலம் Rip செய்வதைவிட Nero மூலம் Rip செய்தால் இன்னும் துல்லியமாக இருக்கும்.