PDA

View Full Version : வேட்டையாடு விளையாடு Ц புட்டான்



рокро░роЮрпНроЪрпЛродро┐
06-06-2006, 01:36 PM
வேட்டையாடு விளையாடு Ц புட்டான்

சின்ன வயசு நடந்த சம்பவங்களை இப்போ நெனச்சி பார்த்தாலும் சந்தோசமாகத் தான் இருக்குது. அதை அப்போ அப்போ சிவாவின் பதிவுகள் படித்து அனுபவிச்சியிருக்கிறேன்.

கிராமம் என்றாலே அங்கே வெளையாட்டும் வேட்டையாடுதலும் இல்லாம இருக்காது.

என்னுடைய மொத வேட்டையாடுதல் எப்படி தொடங்கிச்சின்னா, புட்டான் (தும்பி) பிடிக்கிறதிலயும், கலர் கலர் ஈ பிடிக்கறதிலயும் தான்.

புட்டான் பிடிக்கும் கலையே தனிதான், செடியில் அமர்ந்திருக்கும் புட்டானை, சவுண்டே வுடாம நைசா பூனைக்கணக்கா கிட்ட போய், அதன் வாலை பிடிக்க வேண்டும், பிடித்தவுடன் உடனே அதன் ரக்கையை பிடிக்கணும், இல்லேன்னா வெட்டருவா புட்டான் கடிச்சிபுடும். நான் கடியும் வாங்கியிருக்கேன்.

புட்டான்கள் பலவகையுண்டு. சின்னதா இருப்பது கொசு புட்டான், அதை பிடிக்கிறது மகா கஷ்டம். அப்புறம் மஞ்ச நிறத்தில் இருக்கிறதுக்கு பேரு எங்க ஊரில் திருடன், ஊதா நிறத்தில் திருடன் சைசிலேயே இருக்கும் புட்டானுக்கு போலிஸ்காரன்னு பேரு, காரணம் ஊதா புட்டானை கண்டதும் மஞ்ச புட்டான் பறந்துடும். அப்புறம் டேஞ்சர் புட்டான் நம்ம வெட்டருவா தான்.

வெட்டருவா புட்டான் பச்சை நிறத்தில் போலிஸ் திருடனை விட கொஞ்சம் பெரிசா இருக்கும். மகா மோசமான புட்டான், அவன் கிட்ட போலிஸ், திருடன், கொசு இப்படி யாரு மாட்டினாலும் கடிச்சு துன்னுபுடுவான்.

அப்புறம் செல சமயம் நல்ல கலர் கலரா புட்டாங்கள் வரும், வந்துட்டா, யாரு நல்ல அழகான புட்டான் வச்சிருக்கானோ அவனுக்கு தனி மரியாதை, அந்த பயவுள்ள ராத்திரி அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்திருப்பான், காலையில் பார்த்தால் எறும்புங்க தின்னுட்டி இருக்கும்.

வைக்கப்டப்பு இருக்கிற இடத்துல செவப்பு நெறத்துல நிறைய புட்டாங்கள் பறக்கும், அதை நாங்க வெளக்குமாரு வைச்சி அடிச்சி புடிப்போம்.

நான் பயப்படுகிற புட்டானே, அந்த மல புட்டான் தான். அதை மலை புட்டான்னு சொல்லுறதா இல்லை மழை புட்டான்னு சொல்லுறதான்னு இன்னும் கொழப்பம் இருக்குது, சிவாகிட்ட தான் கேட்கணும்.

மழை பேஞ்சா ஒடனே வந்துடும், அய்யோ ராத்திரி லைட் மேலே மோதிகிட்டே இருக்கும், திடிரென்று ராக்கெட் வேகத்தில் கீழே பாயும், நான் பயந்து ஓடுவேன். செல சமயம், நம்ம மேலே, சட்டையில் இருக்கும், அதை தம்பி சொல்ல, அய்யோ, குய்யோன்னு சட்டையை கழட்டி போட்டு ஓடுவேன். அப்புறம் அம்மா வெளக்குமாத்தை கொடுக்க, வீராதி வீரன் என் தம்பி, தைரியமாக அதை அடித்து ஒரு கையால் பிடிச்சி வெளியே வீசிடுவான், அடுத்த நாள் எங்க வீட்டு எறும்புகளுக்கு பிரியாணி தான்.

செல சமயம், நம்ம கூட்டாளிங்க மழை புட்டானை பிடிச்சிட்டு வந்து அதன் வாலில் நூலை கட்டி விடுவான்க, அது அங்கேயும் இங்கேயும் ஓடும், செல பயலுக நூலை இழுக்க, வால் அறுந்துடும், அவனை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவோம். செல சமயம் புட்டான் பறந்து வேப்ப மரத்து உச்சிக்கு போயிடும், நாங்களும் விட்டுட்டு அடுத்த் ஆட்டத்துக்கு போயிடுவோம்.

எங்க ஊரு கோயிலு கொடை வந்துட்டா போதும், கிடா வெட்டுவாங்க தானே. விழா முடிஞ்சதும், எங்க கூட்டாளிகள் எல்லாம் காட்டுக்குள்ள மண் கோயில் கட்டுவோம், மண் சட்டியில் பேப்பரை ஒட்டி, கொட்டு தயார் செய்வோம், பூவரசு எலையை எடுத்து பீப்பீ செய்வோம், ஆளுக்கு ஒரு இசைக்கருவி.

அப்புறம் சாமியாட ஒருவர், விபூதி, சாம்பிராணி, சாமி எல்லாம் தயார், அப்புறம் கிடாவுக்கு எங்கே போறது, இருக்கவே இருக்குது நம்ம புட்டான்கள்.

நாங்க புட்டான்களை புடிச்சிட்டு வந்து கொடுக்க, சாமியாடி ஆடிக்கொண்டே கிடா வெட்டுவார், நல்ல பனைமட்டை ஓரத்தில் இருக்கும் கருக்கை கத்தியாக்குவார், ஒரே வெட்டு, தல துண்டாயிடும், இப்படி 20, 30 கிடா வெட்டுவார்.

இதை ஒரு நாள் எங்க அம்மா கிட்ட யாரோ போட்டு கொடுக்க, எங்க வீட்டில் பெரிய பூசையே நடந்தது, அப்புறம் ராத்திரி ஒரு கதை சொன்னாங்க.

ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.

அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.

இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன், ஆனா கருந்தேள் பிடிக்கத் தொடங்கிட்டேன். ஏன்னா, தேளை கொன்னா தண்டனைன்னு அம்மா கதை சொல்லலையே?

அது அடுத்த கதை, கருந்தேள், மஞ்ச தேளை எப்படி புடிப்போமுன்னு வெளாவாரியா அடுத்தவாட்டி சொல்றேன்.

pradeepkt
06-06-2006, 08:22 PM
அடடே...
அண்ணா பெரிய வீராதி வீரனாதான் இருந்திருக்கீங்க...

சின்ன வயசில எங்க தாத்தா வீட்டுல முதல்ல ஒரு கரப்பான் பூச்சிய மீசையப் புடிச்சுத் தூக்கினதுக்கே எங்க அம்மாச்சி உன் தலை முடிய ஆணியில அடிச்சுக் கட்டி நரகத்துல வறுத்தெடுப்பாங்கன்னு அந்நியன் ரேஞ்சுக்குச் சொன்னதுல பேஸ்த்தடிச்சுப் போயி அப்புறம் யாராச்சும் கோழிக் குஞ்சைக் கொன்னாக் கூட கண்ணை மூடிக்கிட்டு ஓடிப் போயிருவேன்.

ஆனா அதே கோழிக் குஞ்சு சேப்புக் கலருல எண்ணையில பொறிஞ்சு வரும்போது மணக்க மணக்க வெட்டுவேன். :D

அப்புறம் எங்க வீட்டுக்கு (திருச்சி) வந்தப்புறம் மண்டலப் பொறியியல் கல்லூரிக் காடுகளில் பாம்புகள் பல்லிகள் நடுவினிலே (நாகூர் ஹனீபா கலைஞருக்கு ஒரு பாட்டுப் பாடினாரே நினைவிருக்கா அந்த மாதிரி) வாழ்ந்தோம். வாரத்துக்கு எப்படியும் ஒரு பாம்பு அடிப்பாங்க, நான் ஓடிப் போயி தூரமா நின்னு பாப்பேன்.

செகப்பு நெறத்துல ஒரு தேள் இருக்கும், அதை ஜலகண்டம்பான் என் தம்பி, ஏன்னு இன்னைக்கும் காரணம் தெரியலை! மழை வந்தாலே வந்துரும். எப்பவுமே சீவராசிகளில கறுப்பா பெரிசா இருக்குறதை விட செகப்பா இருக்குறது கொடியதும்பாக - உ.ம் கறுப்புக் கட்டெறும்பு மற்றும் மாமரத்தில் இருக்கும் செவப்பெறும்பு! அதை அவன் சர்வ சாதாரணமா அடிப்பான். நான் தள்ளி நின்னு ஜீவ காருண்யம் பேசுவேன்.

ஒரு தடவை ராத்திரி தூக்கத்துல கண்ணாடி பாட்டிலைத் தட்டிவிட்டு ஒரு கருந்தேளைக் கொன்னேன். பாட்டிலை ஒடைச்சதுக்கு அப்பயும் பாவப்பட்ட சென்மத்துக்குச் சாத்து கெடைச்சுது. ஆனா அடுத்த நாள் என்னமோ நான் ரோமானியப் படையில சேர்ந்து போரஸ் மன்னனை நேருக்கு நேர் எதிர்த்த மாதிரி எங்கம்மா எதிர்த்த வீட்டு அகிலா அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்ததைக் கேட்டேன்! என்னமோ போங்க, இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியறதில்லை!

роЕро▒ро┐роЮро░рпН
06-06-2006, 08:39 PM
புட்டான்... என்றால் தட்டான் பூச்சி தானே நண்பா...

தட்டான் பூச்சி, வண்ணத்து பூச்சி, ஓணான் பிடிக்கிறதில் உள்ள இன்பமே தனிதான்....

குருவியை கவுட்டா பெல்ட் (ஊருக்கு ஊர் பெயர் மாறும்)... வைத்து அடிப்பது.... எல்லாம் ஒரு காலம்....

வீட்டுக்கு தெரிஞ்சா.... பூஜை பிரமாதமா இருக்கும்.... காலி பையன்களோடு என்னா ஆட்டம்.. என....

рокро░роЮрпНроЪрпЛродро┐
07-06-2006, 06:19 AM
ஆஹா, தம்பி நீங்க சரியான ஆட்டம் போட்டிருக்கீங்க. அடுத்து தேள் கதை சொல்றேன்.

рокрпЖройрпНро╕рпН
07-06-2006, 08:05 AM
ஐயோ ஐயோ... பரம்ஸு.... கலக்கலான நினைவுகள்... புட்டானை பிடிப்பதற்க்காக நான் எடுத்து கொள்ளும் பொறுமை வேறு எதிலும் காண்பிபது கிடையாது.... அதிலையும் இந்த ஊசி புட்டான் இருக்கே யப்பா என்னாமா விளையாட்டு காமிக்கும் தெரியுமா...
அப்புறம் இந்த யானை புட்டானை (அதுதான் நீங்க போலிஸ்ன்னு சொன்னீங்களே) பிடித்து அதன் வாலில் நூல் கட்டுறதும், அதன் வாலில் ஈக்கலை சொருகி பறக்க விடுவதும்.... இரண்டு புட்டானை பிடித்து இரண்டின் வாலையும் சேர்த்து நூலால் கட்டி பறக்க விடுவதும்... ஐயோ ஐயோ....
அப்புறம் அப்பாவின் தடிமனான புத்தகம் முழுவதும் கலர் கலராக பறக்கும் புட்டான் மற்றும் பட்டாம் பூச்சியை பிடித்து "ஸ்டப்" பன்னுவதும் ஒரு பொழுது போக்காய் இருந்தது...
எனக்கு மிகவும் பிடித்த வேட்டை நண்டுதான்.. வயக்காட்டில் பால் நண்டு என்று இருக்கும் .. வயல் உளவு அல்லது மரம் அடிக்கும் போது வயலுக்கு போயி, இந்த நன்டை பிடித்து அதன் வயிற்று பகுதியை திறந்து பாப்போம், சில நண்டில் வயறு நிறைய குட்டி நண்டு (நூற்று கணக்கில்) இருக்கும். அதை அப்படியே வாயில் தட்டி நல்ல "நறுக்கு மொறுக்கு" என்று தின்னு போடுவேன்... நல்லா இருக்கும்.
பிரதிப்பு: நானும் ஒருமுறை வீட்டில் நல்லா வாங்கி கட்டி கொண்டேன்....
வீட்டின் அருகில் இருக்கும் குளத்தில் மழை காலத்தில் தண்ணிர் பான்புகள் அதிகமாக இருக்கும்... சிறு மீன் களை பிடித்து அதை தூன்டிலில் வைத்து பாம்பு இருக்கும் பொந்துக்கு அருகில் வைப்போம், பாம்பு இதை சாப்பிடதும் வேளியே பாம்பை இளுத்து போட்டு அடித்து கொல்லுவோம்... அப்படி ஒருநாள் பாம்பை பிடித்து வேளியே நான் போட , ஆல்பர்ட் அதன் முதுகில் கல்லை தூக்கி போட அது படம் எடுக்க ஆரம்பித்து விட்டது.... அட பாவிமக்கா நல்ல பாம்பா என்று பயம் இருந்தாலும், அது படம் எடுக்கும் போது அதில் தண்ணீர் பட்டால் அது இறந்து விடும் என்று என்றோ கதை கேட்ட நியாபகம் வர அதன் படத்தில் தண்ணீர் ஊற்றி விளையாட, அங்கு என் பெரியப்பா ஒருத்தர் வர... பாம்பை கண்டு பயந்து அதை அடித்து கொண்று விட்டு எங்களை வீட்டிர்க்கு விரட்டினார். இதை வீட்டில் அறிந்து "அது கடித்து இருந்தால் என்ன ஆயிருக்கும்??" என்ரு அம்மா அடியை போட்டு விட்டார்கள்...
அறிஞர்:
நீங்களும் ஓனான் வாலில் துணி சுற்றி தீக்கொழுத்தி விளையாடி இருக்கிறிர்களா???
பரம்ஸ்... அடுத்த பதிவை எதிர்பார்க்கிறென்... அப்படியே இந்த பேத்தகுட்டியை (அதுதான் இந்த தவளையோட குட்டி ஐயா..) பிடித்து அதன் வயிற்றி நசுக்கி விட்டு மீண்டும் தண்ணீரில் விட்டால் ராக்கெட் மாதிரி போகுமே.. அது எல்லாம் எழுதுவிங்களா????

gragavan
07-06-2006, 08:34 AM
அடடா! புட்டான்னா தட்டானா....ஊருக்குப் போன அங்க பயக பருத்தி மாரு இல்லைன்னா மஞ்சனத்தி மாரு வெச்சி தட்டாம் புடிப்பாங்க.

எனக்கும் பிடிக்கனும்னு ஆசையெல்லாம் இருந்துச்சு. கொஞ்ச வாட்டி பிடிச்சிருக்கேன். ஆனா நூல் கட்டுறது கெடா வெட்டுறதெல்லாம் கிடையாது. ஆனா கல்லத் தூக்க வப்போம். பொடிக் கல்லா இருக்க..அதுமேல தட்டான வெச்சா...கால்ல கவ்விக்கிரும். தட்டானத் தூக்குனா....கல்லும் தானா வரும். இதுதான் நான் செஞ்சிருக்கேன். வேற ஒன்னும் செஞ்ச நெனவில்லை.

பட்டுப் பூச்சி பிடிப்போம். செக்கச் செவேல்னு பளபளன்னு இருக்கும். அதப் பிடிச்சி ஜாமெண்டிரி பாக்ஸ்ல போட்டு வெச்சி, ரெண்டு மூனு நாளு வெச்சிருப்போம். அப்புறம் வீட்டுல கண்டு பிடிச்சி தூரப் போட்டுருவாங்க.

родро╛рооро░рпИ
07-06-2006, 11:06 AM
அந்த மர்ம மண்டபக் கதை...!!!!

நூற்றாண்டுகள் பழமையான ஒரு மண்டபம் அதன் வாசலில் இரு கல்வெட்டுகள்..

ஏழு சூலி மாடுகளை பலிகொடுத்து ஒரு சூலிப்பொண்ணை பலிகொடுத்தா அதில் இருக்குற புதையல் ரகசியம் தெரியும் என்ற மாடு மேய்க்கும் தாத்தாவின் கதைகள்..

அதையும் மீறி எலுமிச்சம்பழங்களுடன் அருகில் சென்று படிக்க முயற்சி செய்தால் பள்ளத்துப்பட்டி என்ற ஊரின் பெயர் புரிகிற மாதிரி இருக்க...

கால்களில் கனத்த பூட்ஸ், கமாண்டோ உடைகள், இடுப்பில் கத்தி கைகளில் உருட்டுக்கட்டைகள் (மெயின்ரோடு வரை, அங்கு ஒரு மரத்தில் பதுக்கி வைத்து விட்டு மீண்டும் பயணம்...

பள்ளத்துப் பட்டி ஊரைச் சுற்றி வந்தால்....

ஒரு பெரிய பாறை.. அதைச் சுற்றிலும் நீர்.. பாறையின் மேல் ஒரு முருகன் கோவில்...

ஒரே ஒற்றையடிபாதை இருக்க கோவிலுக்குப் போய் வணங்கி சுற்றிலும் பார்த்தால்..

தூரத்தில் ஒரு பாழடைந்த நூற்றாண்டுகள் பழமையான ஒரு வீடு..

நான்கு பாம்புகள் அடிபட்டு இறந்த பின் அந்த வீட்டை அடைந்தால்...

அங்கும் கல்வெட்டுகள்.. அஸ்திவாரத்திற்கும் சுவருக்கும் மத்தியில் இருக்கும் கருங்கற்களில்...

அவற்றில் புரிந்த ஒரே வார்த்தை களமாவூர்...

கல்லூரியில் இருந்த மண்டபத்திற்கும், இந்த வீட்டிற்கும் உள்ள தொடர்பு.. மர்மம்....

இதன் பின்னர்..

தினம் ஒரு பாம்பு வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பித்தது...

மின்னல் வெட்டின் வெளிச்சத்தில் அந்த மரத்தடியில் இருக்கும் சமாதியும், அங்கே இருக்கும் செயற்கை ஏரியின் இருட்டு சந்தும் மண்டபத்தின் உச்சியும் ஒரே நேர்கோட்டில் தெரிய...

முதுகுத் தண்டில் சிலீர் என்று ஒரு பயம் தலைவரை சென்று வெடித்தது....

роУро╡ро┐ропро╛
07-06-2006, 11:23 AM
சின்ன வயசுலே எல்லோரும் வீரமகாராஜக்கள் தானோ....
இந்த முதலை, டைனசோர் எல்லம் புடிக்கலையா? :p

நான் சின்ன வயசுல அடிச்ச கொசுவுக்கெ கடவுளிடம் இன்னமும் மன்னிப்பு கேட்கிறேன்...அயோ பாவம்...னூ

படிக்கும் பொழுதுதே மனம் கனக்கிறது..

родро╛рооро░рпИ
07-06-2006, 11:53 AM
தட்டான்களையும், பட்டாம் பூச்சிகளையும் பிடிதது உண்டு.. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு விடாவிட்டால் முதுகில் அடிவிழும்.. இரண்டு அண்ணா, இரண்டு அக்காவிற்குப்பின் பிறந்தால் இப்படித்தான்.. தட்டான்களை விட பட்டாம் பூச்சிதான் எங்களின் செல்லம்.

ஓரிருமுறை ஓணான்களை கற்களால் அடித்ததுண்டு.. ஒரே ஒரு முறை முள்செடியால் வவ்வால்களை அடித்து சுட்டு சாப்பிட்டதுண்டு..

துண்டின் உதவியுடன் ஏரியில் மீன்பிடித்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டது ஒருமுறை..

பொன்வண்டுகளைப் பிடித்து நூல்கட்டி நெருப்புப் பெட்டியில் புற்களுடன் அடைத்து வைத்து பவுசு காட்டும் பையன்களை பார்த்து பெருமூச்சு விட்டதோடு சரி..

மக்கள் ஓணானை சுருக்கு கயிற்றில் பிடித்து கண்ணில் கள்ளிப்பால் விட்டு களிப்பார்கள். அந்த பக்கம் சென்றால் உதைவிழும்.

ஆனாலும் பென்ஸூ... ஓணானை ஆஞ்சனேயர் ஆக்கியது அநியாயம்..

அப்புறம் கொம்பு உள்ள ஒரு பூச்சி முள்செடியில் இருக்கும். அதைப்பிடித்து தலைகீழாக வைத்தால் பம்பரம் போலச் சுத்தும்...

மணல் பரப்புகளில் சின்ன சின்ன குழிகள் இருக்கும். அதில் ஒரு எறும்பை பிடித்து விட்டால் எறும்பு மேலே வரமுடியாமல் சுற்றிச் சுற்றி சறுக்கி வர அந்தப் பூச்சி மணலுக்குள் இருந்து மெல்ல மெல்ல மேலே வந்து எறும்பை பிடிக்க, நாங்கள் அந்தப் பூச்சியைப் பிடிப்போம்..

தேள்கள் என் கையில் அடிபட்டதில்லை.. ஆனால் 3 மாதங்கள் தினம்தினம் பாம்படித்த அனுபவம் இருக்கிறது. அந்த மர்ம மண்டபத்தை ஆராய்ந்த பொழுது..

роЗройро┐ропро╡ройрпН
07-06-2006, 01:48 PM
ம் ம் ம் ,,,
இப்ப கிராமத்துல வாழுற மக்கள் ரொம்பக் கொடுத்து வச்சவங்க,
நாரத்துல வாழும் குழந்தைகள் கெடுத்து வச்சவங்க,
அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்
கொஞ்சம் கம்யூட்டர்
கொஞ்சம் பாப்கார்ன்
கொஞ்சம் கார்டுன்
நிறைய கேம்ஸ்
என்னத்தைச் சொல்ல
நீளமாக வெளியாகுது
ஸ் ஸ் ஸ்,,,,,
நம்ம குழந்தைகளுக்கு
கொஞ்சம் கதை சொல்ல யோசிப்போம்.
அதற்காகவேனும் இது போன்ற தகவல்களை (சு)வாசிப்போம்.

рокрпЖройрпНро╕рпН
07-06-2006, 02:28 PM
சின்ன வயசுலே எல்லோரும் வீரமகாராஜக்கள் தானோ....
இந்த முதலை, டைனசோர் எல்லம் புடிக்கலையா? :p

நான் சின்ன வயசுல அடிச்ச கொசுவுக்கெ கடவுளிடம் இன்னமும் மன்னிப்பு கேட்கிறேன்...அயோ பாவம்...னூ

படிக்கும் பொழுதுதே மனம் கனக்கிறது..

யக்கா.. இந்த டயனசர் எங்க கிடைக்கும்.... எங்க வீட்டு பக்கம் ஏதும் இருந்து இருந்தா சும்மா அதுக்க வாயை பிளந்து, கையை உள்ள விட்டு, அதோட கிட்டினியை புடுங்கி ரக்பி விளையாடி இருக்க மாட்டேனா?????:p :p :p :D :D :D

சரி சரி ... முதலை என்னை பாத்து கண்ணிர் வடித்தது அதுனால விட்டுட்டேன்.....:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

படிக்கும் போது மனசு கனக்குது என்றால் சொல்லுங்க அதை களற்றி வைத்து விடலாம் ... என்ன நான் சொல்லுறது....B) B) :eek: :eek:

mukilan
07-06-2006, 05:43 PM
அனைவரின் பதிவுகளையும் படித்தேன். மலரும் நினைவுகளை வர செய்கின்றன. எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டு. அத்தோடு, நான் பட்டாம்பூச்சியும் பிடித்து விளையாடியிருக்கிறேன். சில சமயங்கள் குருவிக் குஞ்சுகளைக் காட்டில் இருந்து எடுத்து வந்து வளர்க்கப் போவதாய், உடைந்த பானைக்குள் வைத்து மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் காணாம்ல் போயிருக்கும். மைனா, கிளி புறா, பூனை, மீன் மற்றும் இப்பொழுதும் என் வீட்டில் வளர்ந்து வரும் லவ் பேர்ட்ஸ் என நான் மேனகா காந்திக்கு பிடித்த பையனாகவே இருந்திருக்கிறேன் (அதற்காக அசைவம் உண்ணாமல் இருக்க முடியுமா). நான் நாய் வளர்க்க என் வீட்டில் அனுமதி கிடைக்க வேயில்லை. காரணம் --- என் வலது கை மணிக்கட்டில் என் பக்கத்து வீட்டு நாய் பதம் பார்த்து இன்னமும் பெரிய தழும்பு இருக்கிறது

பென்ஸீன் அனுபவங்கள் வித்யாசமாய் இருக்கின்றன. அதெப்படியய்யா நண்டுக் குஞ்சுகளை அப்படியே பச்சையாய் சாப்பிட்டிருக்கிறீர். :mad: :mad: தவளையின் வயிறைப் பிழிவீரா!!!:confused: :confused:

எனக்கு சின்ன வயதில் சிறுவர் மலரில் படித்த அறிவியல் செய்தி நினைவில் வருகிறது. ஆப்பிரிக்க காடுகளில் ஒருவகைத் தவளை நிறைய தண்ணீர் குடித்து வயிற்றில் சேமித்து வைத்துக் கொள்ளுமாம். பழங்குடியினர் தண்ணீர் பஞ்சத்தின் பொழுது அதைப் பிழிந்து குடிப்பார்களாம்.
ஒரு சிறு தகவல்
புட்டான், தட்டான் அதன் ஆங்கிலப் பெயர் "டிராகன் ஃப்ளை". இத்துணூன்டு பூச்சியாய் இருக்கும் இதற்குப் பெயர் பார்த்தீர்களா. அத்துடன் இவ்வகைப் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்கள். பயிர்களைத்தாக்கும் பூச்சிகளைக் கொல்கின்றன. தட்டான் பூச்சிகள் முட்டைகளை தண்ணீரில் தான் இடும். அந்த முட்டைகள் பொரித்து வந்து அவை தண்ணீரில் உள்ள மற்ற பூச்சிகளை அழிக்கின்றன. பின்பு வளர்ச்சி பெற்ற பிறகு இறக்கை உருவாகி வானில் பறந்து "நம்மில்" பலர் கையில் மாட்டி அழிந்து போகின்றன.

pradeepkt
08-06-2006, 05:49 AM
யோவ் பென்ஸூ
பெரிய சிசுபாலனாய் இருந்திருக்கிறீரே ஐயா...
எனக்கு நீங்கள் எழுதியதைப் படிக்கும் போதே பயமாயிருக்கு, நீங்க என்னடான்னா படாத பாடு படுத்தியிருக்கீங்க... நண்டை அப்படியே முறுக்கு மாதிரி மொறுக்கு மொறுக்குன்னு திம்பீரா? சைனாவுல பொறக்க வேண்டியவரு!

முகில்ஸூ,
எங்க வீட்டுலயும் நாய் வளக்கணும்னு உண்ணாவிரதம்லாம் இருந்து பாத்தம், எங்கய்யா ஏற்கனவே மூணு நாய்களை வளக்குறேன், புதுசா என்னத்துக்குன்னு ஒத்தக் காலுல நின்னுட்டாரு...

роУро╡ро┐ропро╛
08-06-2006, 01:56 PM
முகில்ஸூ,
எங்க வீட்டுலயும் நாய் வளக்கணும்னு உண்ணாவிரதம்லாம் இருந்து பாத்தம், எங்கய்யா ஏற்கனவே மூணு நாய்களை வளக்குறேன், புதுசா என்னத்துக்குன்னு ஒத்தக் காலுல நின்னுட்டாரு...


:D :D :D

рокрпЖройрпНро╕рпН
08-06-2006, 06:01 PM
பச்ச நண்டு சாப்பிடதுக்கே இப்படி சொன்னா எப்படி??? உடும்பு சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா???? நீங்க அதை சுட்டு சாப்பிட்ட பிறகும் அதன் வெட்டுபட்ட தலை நாக்கை துறுத்தி கொண்டிருக்கும்.....
எங்க ஊரு பயக்க அதன் ரத்ததை ஒன்னாங்கட்டை சாராயத்தில் விட்டு மருந்து என்று குடிப்பானுவ....

mukilan
08-06-2006, 06:07 PM
பச்ச நண்டு சாப்பிடதுக்கே இப்படி சொன்னா எப்படி??? உடும்பு சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா???? நீங்க அதை சுட்டு சாப்பிட்ட பிறகும் அதன் வெட்டுபட்ட தலை நாக்கை துறுத்தி கொண்டிருக்கும்.....
எங்க ஊரு பயக்க அதன் ரத்ததை ஒன்னாங்கட்டை சாராயத்தில் விட்டு மருந்து என்று குடிப்பானுவ....
ஒன்னாங்கட்டை சாராயமா??? (விவேக் பாசையிலே சொல்லிப் பாருங்க).
பென்ஸீ கொஞ்சம் கவனிப்போட இருக்க வேண்டிய ஆளு போல:D :D

родро╛рооро░рпИ
09-06-2006, 05:59 AM
பச்ச நண்டு சாப்பிடதுக்கே இப்படி சொன்னா எப்படி??? உடும்பு சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா???? நீங்க அதை சுட்டு சாப்பிட்ட பிறகும் அதன் வெட்டுபட்ட தலை நாக்கை துறுத்தி கொண்டிருக்கும்..... எங்க ஊரு பயக்க அதன் ரத்ததை ஒன்னாங்கட்டை சாராயத்தில் விட்டு மருந்து என்று குடிப்பானுவ....
சாப்பிட்டபின்னும் துறுத்திக் கொண்டிருக்குமா? என்ன ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா? இல்லை அஜீரணமா?

рокрпЖройрпНро╕рпН
09-06-2006, 06:50 AM
லோள்ளு....
அதோட தலையை சாப்பிடமாட்டாங்க...
விலாங்குமீனும் இப்படிதான்....

родро╛рооро░рпИ
09-06-2006, 07:09 AM
லோள்ளு....
அதோட தலையை சாப்பிடமாட்டாங்க...
விலாங்குமீனும் இப்படிதான்....
அப்போ நீங்க வீரப்பன் கூட்டாளி.. (அவர்தானே உடும்புக்கறி சாப்பிடுவார்.. ராஜ்குமார் சொன்னாரே!) மாட்டிகிட்டீங்களா!!!!

рокрпЖройрпНро╕рпН
09-06-2006, 08:46 AM
தாடி வைத்தவர் எல்லாம் திருவள்ளுவரா...
மீசை வைத்தவர் எல்லாம் பாரதியா...

யோவ், புட்டானுக்கும் வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம்யா... வேட்டையாடுவதை தவிர.. :-)

родро╛рооро░рпИ
09-06-2006, 09:33 AM
தாடி வைத்தவர் எல்லாம் திருவள்ளுவரா...
மீசை வைத்தவர் எல்லாம் பாரதியா...

யோவ், புட்டானுக்கும் வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம்யா... வேட்டையாடுவதை தவிர.. :-)
நான் புட்டானுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு என்று எப்ப சொன்னேன்..
உங்களுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு என்றுதானே சொன்னேன்.. நீங்க என்ன புட்டானா? ஜாக்கிரதை.. இங்க நிறைய பேர் பழைய நினைப்பிலே கை துறுதுறுக்க காத்திருக்காங்க..

sarcharan
09-06-2006, 12:55 PM
ஒன்னாங்கட்டை சாராயமா??? (விவேக் பாசையிலே சொல்லிப் பாருங்க).
பென்ஸீ கொஞ்சம் கவனிப்போட இருக்க வேண்டிய ஆளு போல:D :D


ஹி ஹி பென்ஸூ என்ன அது ஒன்னாங்கட்டை சாராயம்!!!!!!!!!!

рооропрпВ
10-06-2006, 06:27 AM
என்னப்பா பயங்கரவாதி ரேஞ்சில கொலை கொள்ளை செய்திட்டு.... அப்பப்பா.... :mad:
நீங்க கதைப்பதைப் பார்த்தா எனக்கு பொறாமையாக உள்ளது. நான் நகரத்தில் வளர்ந்ததால் இந்த அனுபவங்கள் எல்லாம் இல்லை ஆயினும் வண்ணாத்திப் பூச்சி (பட்டாம் பூச்சி) பிடித்த ஞாபகம் உண்டு. ஆனாலும் கடா எல்லாம் வெட்டுவது கிடையாது.......
சிலந்தி மற்றும் மண்புழு வழர்க்கும் முயற்சிகள் வீணாணது வேற கதை.

ஒரு தடவை என் நண்பன் சொன்னான் மண்புழு இரண்டாக அறுந்தால் இரண்டு உயிராக மாறிவிடும் என்று. நானும் வாழைப் பாத்தியில் சில் மண்புழு பிடித்து பல துண்டுகளாக அறுத்துக்கொண்டேன். பின்பு நான் சிறு வயதில் பாவித்த் பீடிங் பாட்டலில் சிறிது மண் போட்டு அதனுள் அந்த துண்டுகளைப் போட்டது மட்டு மில்லாமல் சில பாண் துண்டுகளையும் சாப்பாட்டிற்காகப் போட்டேன் (எவ்வளவு பரந்த மனசு).

மறு நாள் அம்மா வந்து பார்த்தபோது ஒரே மணம்... அப்புறம் என்ன வழமை போல டமால் டுமீல்தான்.......:p

рооропрпВ
10-06-2006, 06:28 AM
நான் புட்டானுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு என்று எப்ப சொன்னேன்..
உங்களுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு என்றுதானே சொன்னேன்.. நீங்க என்ன புட்டானா? ஜாக்கிரதை.. இங்க நிறைய பேர் பழைய நினைப்பிலே கை துறுதுறுக்க காத்திருக்காங்க..

ஐயையோ கடா வெட்டிட்டாங்கண்ணா.................. :eek: :eek: :eek: :eek: :eek: :eek:

pradeepkt
10-06-2006, 07:36 PM
பென்ஸூ,
எனக்குப் படிக்கையிலயே தலை சுத்துதேய்யா...

рокрпЖройрпНро╕рпН
11-06-2006, 11:54 AM
ஹி ஹி பென்ஸூ என்ன அது ஒன்னாங்கட்டை சாராயம்!!!!!!!!!!

சாராயம் வடிக்கும் போது முதலில் வரும் சாராயத்தை தாம் ஒன்னாங்கட்டை சாராயம் என்று சொல்லுவார்கள்... இதுல C2H5OH சதவிகிதம் அதிகமா இருக்கும்... டக்கிலா அடிக்கிற மாதிரி ஒரு அவுன்சுக்கு மேல அடிக்க முடியாது...:D :D குடிக்கிறப்ப வாயில் இருந்து வயறு போகிற வரை தெரியுறமாதிரி எரியும்.... :rolleyes: :rolleyes: :rolleyes:

எங்க தோட்டம் வழியா கன்னிமார் ஓடை ஓடுது. அதுதாங்க சப்த கன்னியர் குழித்ததாக சொல்லும் ஓடை, இங்கும் நம்ம பிள்ளையாரை பாக்கலாம். இந்த ஓடை துவக்கத்தில் சாராய வடிவு இருக்கும். நான் பாத்து இருக்கிறேன்.... கொடுமை என்னானா, சாராயம் வடிச்சு முடின்சதும் கழுவுகளை இந்த ஓடை தண்ணீரில் விட்டு போய்விடுவார்கள்... அது எங்க தோட்டம் வழியா போகும்... இதனாலயே பல பிரச்சினை...இப்போ சாராயம் யாரும் வடிப்பதில்லை... காரணம் வேறு எதுவும் கிடையாது.... ஓடையில் மழை காலத்தில் மட்டும் தான் இப்போ தண்ணி வரும் :angry: :angry: :angry:

роЗрогрпИроп роирогрпНрокройрпН
11-06-2006, 12:06 PM
ஆடடா......ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
விடுமுறை தினங்களில்...,
மைனாக்களைப் பிடித்து வளர்த்தது
பச்சோந்தி அடிக்கப்போய் பக்கத்து வீட்டாரிடம் அடிவாங்கியது..
தும்பி பிடித்து பட்டம் விட்டது..
வண்ணத்துபூச்சி பிடித்து பெட்டியில் அடைத்தது..
எல்லாம் ஞாப்கம் வருதே..
எல்லாம் புட்டான் செய்த வேலையா?
இது தான் வேட்டையாடு விளையாடா?
கமல் சார்..நீங்களும் அப்படியா?..