PDA

View Full Version : தினகரன் - ரூ2அறிஞர்
05-06-2006, 10:54 PM
ஆட்சியை பிடிக்க... புதுமையான வழியை திமுக கையாண்டது. அனைவரையும் படிக்க வைக்க தினகரன் பேப்பர் ரூ 1க்கு வெளியானது..

ஆட்சி பிடித்த பின் இப்பொழுது ரூ.2 ஆக கூட்டிவிட்டது......

mukilan
06-06-2006, 03:23 AM
இது எதிர் பார்த்ததுதானே அண்ணா, இவர்கள் என்ன நாட்டுக்கு சேவை செய்யவா ரூ 1க்கு கொடுத்தார்கள்.

மதி
06-06-2006, 03:46 AM
ஹ்ம்ம்..
எல்லாமே வியாபாரம் தான்...!!

pradeepkt
06-06-2006, 07:47 AM
அடடே...
இனிமேல் அடுத்த தேர்தலுக்கு தினபூமி தினமலர் தினமணி நமது எம்ஜியார் எல்லாமே ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் :)
என்ன வியாபாரமோ ??? ஹூம்...

தாமரை
06-06-2006, 08:37 AM
ஆட்சியை பிடிக்க... புதுமையான வழியை திமுக கையாண்டது. அனைவரையும் படிக்க வைக்க தினகரன் பேப்பர் ரூ 1க்கு வெளியானது..

ஆட்சி பிடித்த பின் இப்பொழுது ரூ.2 ஆக கூட்டிவிட்டது......
இதெல்லாம் தேர்தல் பிரச்சார செலவு கணக்குல சேர்க்க முடியாதே!!!...

gragavan
06-06-2006, 09:23 AM
அடடே...
இனிமேல் அடுத்த தேர்தலுக்கு தினபூமி தினமலர் தினமணி நமது எம்ஜியார் எல்லாமே ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் :)
என்ன வியாபாரமோ ??? ஹூம்...பிரதீப்...நீங்க ஏன் அரசியல்வாதி மாதிரி பேசுறீங்க...வேண்டாம்.

அறிஞர்
06-06-2006, 01:41 PM
பிரதீப்...நீங்க ஏன் அரசியல்வாதி மாதிரி பேசுறீங்க...வேண்டாம். நீங்கள் ஏதும் புதுசா பத்திரிக்கை ஆரம்பிக்க போறீங்களா......

பரஞ்சோதி
06-06-2006, 01:43 PM
இது எல்லாம் வியாபாரத்தில் சகஜமப்பா.

ஏற்கனவே ஊதுவத்தி, சூடம் கொடுத்தவங்க தானே.

அறிஞர்
06-06-2006, 01:44 PM
இது எல்லாம் வியாபாரத்தில் சகஜமப்பா.

ஏற்கனவே ஊதுவத்தி, சூடம் கொடுத்தவங்க தானே. இது மாதிரி இனி அம்மா யோசிப்பாங்க.. அடுத்த எலக்ஷனுக்கு....

அதுக்குள்ள கேப்டன் என்ன யோசிக்கிறாரோ

பரஞ்சோதி
06-06-2006, 01:48 PM
கேப்டன் உடனே ஒரு தொலைக்காட்சி சேவையை தொடங்கணும், அப்போ தான் ஆச்சியை இல்ல இல்ல ஆட்சியை பிடிக்க முடியும்.

அறிஞர்
06-06-2006, 01:49 PM
கேப்டன் உடனே ஒரு தொலைக்காட்சி சேவையை தொடங்கணும், அப்போ தான் ஆச்சியை இல்ல இல்ல ஆட்சியை பிடிக்க முடியும்.உள்ளாட்சி மன்ற தேர்தலில் 50 இலட்சம் ஓட்டு வாங்கின பின் அது பற்றி சிந்திப்பார்.

aren
06-06-2006, 02:17 PM
சன் டிவி காரர்கள் தினகரன் பத்திரைக்கையை வாங்கிய பொழுது வியாபாரத்தை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் இந்த ஒரு ரூபாய் பத்திரிக்கையும் ஒன்று. இப்பொழுது நன்றாக விற்கத்தொடங்கிவிட்டதால் விலையை ஏற்றவேண்டிய நிர்பந்தம்.

இப்படிப்பட்ட வியாபார விளம்பரங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.

எமிரேட்டில், கஃல்ப் நியூஸ் கை மாறிய பொழுது, அதை வாங்கியவர்கள் ஒரு மாதம் இலவசமாக அனைத்து வீடுகளுக்கும் கஃல்ப் நியூஸ்பேப்பரை விநியோகித்தார்கள். நிறைய வீடுகள் அதன் பிறகு அதற்கு சந்தாதாரர்களாக மாறினார்கள். அதுமாதிரிதான் இதுவும்.

அறிஞர்
06-06-2006, 02:35 PM
சன் டிவி காரர்கள் தினகரன் பத்திரைக்கையை வாங்கிய பொழுது வியாபாரத்தை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் இந்த ஒரு ரூபாய் பத்திரிக்கையும் ஒன்று. இப்பொழுது நன்றாக விற்கத்தொடங்கிவிட்டதால் விலையை ஏற்றவேண்டிய நிர்பந்தம்.

இப்படிப்பட்ட வியாபார விளம்பரங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.. இப்பொழுது 15 இலட்சம் விற்கிறார்கள்.. ஆனால் அந்த எண்ணிக்கை குறையும்... இப்பொழுது குறைந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை.

தினமலர் முதலில் இதை எதிர்த்தது.... ஆனால் தினகரன் அவர்களை கடுமையாக விமர்சித்து எழுதினர்...... ரூ.1க்கு சாத்தியம் என. இப்பொழுது கோர்ட்டுக்கும் செல்லமுடியாது.... விவரம் தெரிந்தவர்கள்.. ஏமாற்று வேலை என கோர்ட் செல்லலாம்

pradeepkt
06-06-2006, 08:49 PM
பிரதீப்...நீங்க ஏன் அரசியல்வாதி மாதிரி பேசுறீங்க...வேண்டாம்.
அட நீங்க வேற... என்னைத் தப்பா நினைச்சுட்டீங்க...
நான் கண்டிக்க வந்தது தினகரன் போட்டுக் குடுத்த ரூட்டை... அடுத்த தேர்தல்ல அவங்களும் இதைப் பயன்படுத்தி இன்னும் களத்தைக் கேவலப் படுத்தலாமே... இப்படியே ரெண்டு பேரும் செஞ்சா என்னாவுங்கற வயித்தெரிச்சல் இது!

vanavasiravi
07-06-2006, 06:00 AM
சரியா சொன்னீக நாட்டுக்கு தேவையான ஆட்சியா நடக்குது. இட ஒதுக்கீடு விஷயமும் அப்படிதானே

மயூ
08-06-2006, 06:28 AM
கேப்டன் உடனே ஒரு தொலைக்காட்சி சேவையை தொடங்கணும், அப்போ தான் ஆச்சியை இல்ல இல்ல ஆட்சியை பிடிக்க முடியும்.
நம்ம கப்டன் டீவிக்கு என்ன பெயர் வைக்கலாம்? :confused:

தங்கவேல்
16-06-2006, 09:45 AM
இது ஒரு வியாபார தந்திரம். அனைவரும் செய்வதுதான். சன் டிவி குழுமங்களுக்கு வியாபார தந்திரங்கள் நிறைய தெரியும். அவ்வளவுதான். மக்களாகிய நாம் தான், உணர வேண்டும்.

poo
17-06-2006, 07:08 AM
ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தாலும் 2 ரூ- ஆகியிருக்கும்..

தினமலர், தினத்தந்தி என ஒட்டுமொத்த பத்திரிக்கைகளும் தர்மத்தை மீறி ஒரு பக்கம் சாய்ந்தவேளையில் 1 -ரூ என தினகரனை அறிமுகப்படுத்தவில்லையெனில், கழகத் தொண்டனும் துவண்டிருப்பான்..

மக்களை இந்த விலை குறைப்பும், விலையேற்றமும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது... பல்லிருப்பவன் பாக்கு மெல்லப் போகிறான்.... தினகரனை வாங்க வேண்டியது கட்டாயமில்லையே!!?..