PDA

View Full Version : நாட்டுக்கடிஇனியவன்
05-06-2006, 02:44 PM
மங்களமான நாடு = இத் தாலி
வலியுள்ள நாடு = ஸ் பெயின்
பசுமையான நாடு = கிரீன் லந்து.
வேகமான நாடு = அர்ஜென்ட் டினா.
சொத்துக்கள் நிறைந்த நாடு = ஆஸ்தி ரேலியா.

ம் ம் ஏதோ நம்மால முடிஞ்சது:p :p :p

அறிஞர்
06-06-2006, 12:11 AM
மங்களமான நாடு = இத் தாலி
வலியுள்ள நாடு = ஸ் பெயின்
பசுமையான நாடு = கிரீன் லந்து.
வேகமான நாடு = அர்ஜென்ட் டினா.
சொத்துக்கள் நிறைந்த நாடு = ஆஸ்தி ரேலியா.

ம் ம் ஏதோ நம்மால முடிஞ்சது:p :p :p கலக்கல்...

ஸ்ரீ லங்கா - மரியாதையுடன் அழைக்கப்படும் நாடு

இப்படியே ஒவ்வொருவரும் சொல்லுங்க

தாமரை
06-06-2006, 05:38 AM
கலக்கல்...

ஸ்ரீ லங்கா - மரியாதையுடன் அழைக்கப்படும் நாடு

இப்படியே ஒவ்வொருவரும் சொல்லுங்க
லந்து செய்பவர் செல்ல வேண்டிய நாடு : போ லந்து
மற்றவர்களுடன் சேராத நாடு : அமெரிக் "கா"
மரியாதை இல்லாத நாடு : கன "டா"

pradeepkt
06-06-2006, 08:57 AM
மாடு நிறைய இருக்குற நாடு - நே பாள்
மாடு நிறைய இருக்குற ஊரு - போ பால்
பணக்காரப் பயமக்க இருக்குற நாடு - பங்களா தேஷ்
ஆத்தாவுக்கு மரியாதை தர நாடு - தாய் லாந்து

முதல்வன்ல கடைசி டயலாக்கு சொல்வாரே அர்ஜூன்... "என்னையே மாத்திட்டியே"ன்னு.. எனக்கென்னவோ நினைவுக்கு வருது

ஓவியா
06-06-2006, 11:38 AM
முத்தமழை பொழியும் நாடு - பா 'கிஸ்' தான்

முத்தமழை கேட்க்கும் நாடு - பா 'கிஸ்....தா'..........ன்

:D

அறிஞர்
06-06-2006, 02:48 PM
முத்தமழை பொழியும் நாடு - பா 'கிஸ்' தான்

முத்தமழை கேட்க்கும் நாடு - பா 'கிஸ்....தா'..........ன்

:D என்ன அம்மிணி.. கிஸ் நாடு.... மட்டும்தான் கண்ணுக்கு தெரிந்ததா... வேறு நாடு எதுவும் தெரியலையா

pradeepkt
06-06-2006, 09:24 PM
எல்லாம் வயசுக் கோளாறு அறிஞரே... :)

அறிஞர்
06-06-2006, 09:36 PM
எல்லாம் வயசுக் கோளாறு அறிஞரே... :) வயசுக்கு கோளாறா...இல்லை வயசு பிள்ளைக்கு கோளாறா...

ஓவியா
07-06-2006, 12:10 AM
எல்லாம் வயசுக் கோளாறு அறிஞரே... :)

பிரதிப் சார்,

கண்டுபிடிசிட்டிங்களே,

ஆமாம் ஆமாம்..........ஒரு எலிக்குதானே இன்னோரு எலியின் வலை தேரியும்....எல்லாம் வயசுக் கோளாறு :p :p

ஓவியா
07-06-2006, 12:52 AM
குளுமையான நாடு = சில்லீ
சக்கபோடு போடர நாடு = ஜமாயிக்கா

நாய்வளர்க்கும் நாடு = புருணாய்
பணக்கார நாடு = பணமா

திட்டும் நாடு = சோமாலிய
சிரிக்கும் நாடு = சிரியா

சான்றோர்களை போல் ஞானம் இல்லை என்றாலும்
நமக்கும் கொஞ்சம் ......... இருக்கு :cool: :cool: :cool: :cool:

அறிஞர்
07-06-2006, 02:47 AM
சான்றோர்களை போல் ஞானம் இல்லை என்றாலும்
நமக்கும் கொஞ்சம் ......... இருக்கு :cool: :cool: :cool: :cool: கொஞ்சம் எங்க.. நிறையவே இருக்கு போல....

என்ன எல்லா நாட்டு பட்டியலையும் எடுத்து அலசி இருப்பீர்கள் போல :rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
07-06-2006, 09:17 AM
அடப்பாவி மக்கா என்னா இது.. என்னா அங்... தெரியாமதான் கேக்குறேன்....
யூ ட்டூ, ப்புருட்டஸ்...... சாரி.... பிரதிப் ????

இனியவன்
07-06-2006, 01:23 PM
குளுமையான நாடு = சில்லீ
சக்கபோடு போடர நாடு = ஜமாயிக்கா

நாய்வளர்க்கும் நாடு = புருணாய்
பணக்கார நாடு = பணமா

திட்டும் நாடு = சோமாலிய
சிரிக்கும் நாடு = சிரியா

சான்றோர்களை போல் ஞானம் இல்லை என்றாலும்
நமக்கும் கொஞ்சம் ......... இருக்கு :cool: :cool: :cool: :cool:

சரிங்க அம்மணி
தாய்க்குலத்துக்கு எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஞானம் தான்
ஆனா பதிஞ்ச விஷயங்களை ஒரு தடவை படிச்சுப் பார்க்கக் கூடாதா?
பணமா அல்ல பனாமா
அந்தப் பேரில் எங்கள் ஊரில் ஊதுவெண்குழல் பிரபலம், அட அந்த சிகரெட் டுக் கருமாந்திரம் தான் அது,
சோமாலியா
ஜமாயிக்கா இல்ல ஜமைக்கா.

க்கும்....:) :) :)
ஏதோ உங்க அளவுக்கு இல்லாட்டியும்
எங்களுக்கும் கொஞ்சம் இருக்கு,

தாமரை
07-06-2006, 01:52 PM
பிரே"சில்" = கூலான இன்னொரு நாடு
"அர்ஜெண்ட்"ஐனா = அவசரமான நாடு
"பாக்கி"ஸ்தான் = கடன் வைக்கும் நாடு

ஓவியா
07-06-2006, 01:57 PM
சரிங்க அம்மணி
தாய்க்குலத்துக்கு எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஞானம் தான்
ஆனா பதிஞ்ச விஷயங்களை ஒரு தடவை படிச்சுப் பார்க்கக் கூடாதா?
பணமா அல்ல பனாமா
அந்தப் பேரில் எங்கள் ஊரில் ஊதுவெண்குழல் பிரபலம், அட அந்த சிகரெட் டுக் கருமாந்திரம் தான் அது,
சோமாலியா, ஜமாயிக்கா இல்ல ஜமைக்கா.

க்கும்....:) :) :)
ஏதோ உங்க அளவுக்கு இல்லாட்டியும்
எங்களுக்கும் கொஞ்சம் இருக்கு,

எலோ மக்கா
இது சும்மா ஒரு கடி ஜோக் தானே,

இதுல என்னயா உங்களின் புலமையை காட்டிக்கொண்டு......:cool: :cool:

இப்பதான் புரியுது ஏன் மகளிர் அணியில் சுவேதா பாப்பா மட்டும் தான் இருக்குனு......
:p :p :p

இனியவன்
07-06-2006, 02:37 PM
அம்மணி களம் என்று வந்து விட்டால்
அதில் ஆண் என்ன பெண் என்ன?
தப்பு செஞ்சுப்புட்டு இப்படி
சமயோசிதமா தப்பிக்க நினைக்காதீங்க,இங்கே பல மலைமுழுங்கி மகாதேவன்கள்
கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுட்டு
காத்திருக்கிறாங்க,
இனிமேயாவது சூதானமா இருங்க
சரி பொழச்சுப் போங்க,
கடைசிவரை நீங்க பண்ணுன தப்புக்கு மன்னிப்புக் கேட்கலைன்னனு
யார் கிட்டயும் வாய் விட்டுச் சொல்லிடாதீங்க, ஆமா,,,,,கல கல கல கலB) B) B)

ஓவியா
07-06-2006, 03:13 PM
அம்மணி களம் என்று வந்து விட்டால்
அதில் ஆண் என்ன பெண் என்ன?
தப்பு செஞ்சுப்புட்டு இப்படி
சமயோசிதமா தப்பிக்க நினைக்காதீங்க,இங்கே பல மலைமுழுங்கி மகாதேவன்கள்
கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுட்டு
காத்திருக்கிறாங்க,
இனிமேயாவது சூதானமா இருங்க
சரி பொழச்சுப் போங்க,
கடைசிவரை நீங்க பண்ணுன தப்புக்கு மன்னிப்புக் கேட்கலைன்னனு
யார் கிட்டயும் வாய் விட்டுச் சொல்லிடாதீங்க, ஆமா,,,,,கல கல கல கலB) B) B)


எது தப்பு? எழுத்து பிழையா?

தமிழில் புலமை பேற்றவர்கள் மட்டுமே எழுத வேண்டும் என்றால், தமிழை வாழ வைக்க முடியாது சார்.....

பலர் தமிழில் படித்து ஆங்கிலமாக மாறிக்கொண்டு இருக்கும் போழுது....நாங்கள் வேட்று மொழி படித்து தமிழை (வாழ) வளர்க்க நினைப்பது குற்றமா......அப்படியென்றால்....

சரி மன்னிக்கவும்

இனியவன்
08-06-2006, 05:50 AM
பாரதி காணாத புதுமைப் பெண்ணல்லவா
சினம் அதிகம் தான்.
தட்டச்சுப் பிழை தான் பொருட்பிழையல்ல,
கவனமுடன் இருந்தால் தவிர்த்திருக்கலாம் தானே,
நாடுகளின் பெயர்கள் அனைவரும் அறிந்தவை,
அவற்றில் சிறு பிழையிருந்தாலும் வெண் காகிதத்தில் கரும்புள்ளி போல் பளிச்செனத் தெரியும். அதைத் தான் சுட்டிக்காட்ட விரும்பினேன். தமிழை வாழ வைக்கும் உங்களைப் போன்றவர்களின் சேவை என்றும் தேவை.

pradeepkt
08-06-2006, 07:00 AM
சரி சரி
புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், அது சண்டையாக மாறலாமா??? :)

மயூ
08-06-2006, 08:03 AM
மெய் பேசும் நாடு - ஜ மெய் கா
தலையைப் பிய் பிய் என்டு பிச்சு கண்டுபிடிச்சனய்யா......... :D

இனியவன்
08-06-2006, 03:56 PM
சரி சரி
புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், அது சண்டையாக மாறலாமா??? :)
அன்பரே இது செல்லச் சண்டை
அன்பு வெல்லச் சண்டை
இறுதியில் கிடைக்கப் போவது இனிப்பு மட்டும் தான்.

ஓவியா
08-06-2006, 05:31 PM
அன்பரே இது செல்லச் சண்டை
அன்பு வெல்லச் சண்டை
இறுதியில் கிடைக்கப் போவது இனிப்பு மட்டும் தான்.


:) :)

தாமரை
09-06-2006, 08:08 AM
கானா - பாட்டுப்பாடும் நாடு
"ரஷ்"யா - கூட்டமான நாடு
"கஜ""கிஸ்"தான் - யானைகள் முத்தம் கொடுக்கும் நாடு
"நமீ"பியா - நமீதா ரசிகர்கர்கள் அதிகம் வாழும் நாடு
"தை"வான் - பிரதீப்புக்கு பிடித்த டெய்லர்கள் நாடு
சிங்"கப்"பூர்.....

pradeepkt
10-06-2006, 08:19 PM
எனக்கு தைவான் புடிக்கும்னு உங்களுக்கு எப்படிய்யா தெரிஞ்சுது? பெரிய தில்லாலங்கடிதான் நீங்க.
நம்ம அறிஞர்தான் ரொம்ப நாளா தைவான்ல இருந்தார்.

ஓவியா
10-06-2006, 09:32 PM
எனக்கு தைவான் புடிக்கும்னு உங்களுக்கு எப்படிய்யா தெரிஞ்சுது? பெரிய தில்லாலங்கடிதான் நீங்க.
நம்ம அறிஞர்தான் ரொம்ப நாளா தைவான்ல இருந்தார்.


http://www.geocities.com/mayuresan_1/chacha202x6ty.gif
தெய்ய தெய்யா தெய்யா தெய்யா
தக தெய்ய தெய்யா தெய்யா தெய்யா:


பாத்தால் தீபாவளிக்கு துணி தைக்க கொடுத்து விட்டு, டெய்லர் கடை முன் துணி கேட்டு தர்ணா செய்வதைபோல தோன்றுகிறதே...(துணியை தெய்யா தெய்யா தெய்யா அப்படின்னு..)பிரதீப்பு... உமக்கு சரியான அவதார்தான்.. தீபாவளி புத்தாடைன்னா உங்க ஞாபகம்தானே வருகிறது...:D :D :D :D


அடடா நல்லதான் இருக்கு....இதுதான் ஆட்டமா ஆடுறதா,

பிரதீப் சார் ரொம்ப நாலவே ஆடுறாரு...
உடனே கோப்பையை கையில் கொடுத்து ஆட்டதை முடிக்கவும்
பாவம் கால் வலிக்க போது
D

ஒ அதுவா...நீங்க திபாவளிக்கு டைலர் கடைக்கு முன்னாடி துண்டக்கானும் துணியகானும்னு தை தைனு ஆடனீங்களே.....
அதைச் சொல்றாகளோ என்னவோ......

;) ;) :p :p :) :) :D

இனியவன்
12-06-2006, 09:27 AM
கடன் அதிகமுள்ள நாடு பாகி ஸ்தான்.

இணைய நண்பன்
12-06-2006, 11:31 AM
என்னால் முடிந்தவை சில

கை உள்ள நாடு = இலங் "கை"

கொரிக்கும் நாடு = "கொரி" யா

மாலையாகும் நாடு = " மாலை "தீவு

ஓ போடும் மான் உள்ள நாடு = "ஓ" மான்
பூ உள்ள நாடு = "பூ"ட்டான்

தாமரை
12-06-2006, 11:36 AM
என்னால் முடிந்தவை சில

கை உள்ள நாடு = இலங் "கை"

கொரிக்கும் நாடு = "கொரி" யா

மாலையாகும் நாடு = " மாலை "தீவு

ஓ போடும் மான் உள்ள நாடு = "ஓ" மான்
பூ உள்ள நாடு = "பூ"ட்டான்

ராஜேந்திரகுமாருக்கு பிடித்த நாடு - (ங்)நேபாளம்
சொத்து உள்ள இன்னொரு நாடு : "ஆஸ்தி"ரியா

pradeepkt
12-06-2006, 01:46 PM
ராஜேந்திரகுமாருக்கு பிடித்த நாடு - (ங்)நேபாளம்
சொத்து உள்ள இன்னொரு நாடு : "ஆஸ்தி"ரியா
ராஜேந்திரக் குமாருக்குப் புடிச்ச எழுத்தை எப்படியா தட்டச்சு செய்யிறது???

ஓவியா
12-06-2006, 03:20 PM
ராஜேந்திரக் குமாருக்குப் புடிச்ச எழுத்தை எப்படியா தட்டச்சு செய்யிறது???

ஆமா
அவர் யார்
அவருக்கு என்ன எழுத்து பிடிக்கும்

இனியவன்
12-06-2006, 03:38 PM
ஆமா
அவர் யார்
அவருக்கு என்ன எழுத்து பிடிக்கும்
புகழ் பெற்ற தமிழ் நாவலாசிரியர்,
அவருக்கு பிடித்த எழுத்து:confused:

தாமரை
13-06-2006, 06:17 AM
சரி சரி.. ங வரிசையில் ங் தவிர மற்ற எழுத்துக்கள் (ராஜேந்திரகுமாரின் ங்-ஏ தவிர மற்ற எழுத்துக்கள் உபயோகப்படும் வார்த்தைகள் இருந்தால் சொல்லுங்களேன்..

இங்ஙனம்

தாமரை
13-06-2006, 02:29 PM
என்ன எல்லோரும் ங்-ஏ ன்னு விழிக்கிறீங்க.. ங கர வரிசையில் ங் தவிர மற்ற உயிர்மெய் எழுத்துக்கள் உள்ள வார்த்தைகள் யாருக்குமே தெரியலையா?????