PDA

View Full Version : என் மனதுக்குகந்தவளே...

Raaga
05-06-2006, 10:35 AM
உன்னை சந்தித்தேனடி உள்ளம் மகிழ்ந்தேனடி
உந்தன் நினைவானதடி உறக்கம் வரவில்லையடி
ஊரெல்லம் தேடினாலும் உனைப்பொல் அழகியுண்டோ
உலகெல்லம் இருண்டாலும் உன் வதனம் மின்னுமன்றோ

உயிரில் கலந்தவளே உள்மூச்சில் இணைந்தவளே
உறவை தந்தவளே உணர்வை கொணர்ந்தவளே
ஊஞ்சல் கிளி போல உருகும் மொழி கூறுவதேனோ
உடல் இரத்தம் சூடேற உன் எண்ணம் வாட்டுவதேனோ

உரம் பெற்றயென் மார்பிலே உந்தன் முகம் புதைத்து
உதட்டொரம் ஊறும் தேனிலே உன் புன்னகை இணைத்து
ஊமை விழி பார்வையிலே உனக்கடிமை நான் என்பாயோ
உயிர்மூச்சு சுவாசத்தில் ஒரு உயர்காவியம் எழுதுவாயோ

எனக்கு தெரிந்த தமிழிலே ஒரு கவிதை...

பிழையிருப்பின் மன்னிக்கவும்...

பென்ஸ்
05-06-2006, 11:19 AM
யக்கோ.. இவரு பொய் சொல்லுறாரு நம்பாதிங்க....

ராகா: அடபாவி மனுஷா கவிதைன்னா இப்படி எல்லாம் பொய் சொல்லனுமா...

பொய் நல்லா இருக்கு:D :D :D :D

தாமரை
05-06-2006, 11:32 AM
யக்கோ.. இவரு பொய் சொல்லுறாரு நம்பாதிங்க....

ராகா: அடபாவி மனுஷா கவிதைன்னா இப்படி எல்லாம் பொய் சொல்லனுமா...

பொய் நல்லா இருக்கு:D :D :D :D
பெண் = கவிதை = பொய் ... என்ன பென்ஸூ..இன்னுமா உமக்கு இந்த குழப்பம்.. சி.டி இன்னொருமுறை பாருங்க.

Raaga
05-06-2006, 01:37 PM
உந்தன் கூந்தல் கண்டதும் சரியும் நீர்வீழ்ச்சியின் ஞாபகம்
உந்தன் விழிகள் கண்டதும் நீந்தும் கெண்டைகள் ஞாபகம்
உந்தன் இதழ்கள் கண்டதும் செந்தேன் கிண்ணங்கள் ஞாபகம்
உந்தன் புன்னகை கண்டதும் மலரும் ரோஜாக்கள் ஞாபகம்
உந்தன் முகத்தை கண்டதும் உதிக்கும் ஆதவனின் ஞாபகம்
உந்தன் மெல்லிடை கண்டதும் மல்லிகை கொடியின் ஞாபகம்
உந்தன் நடையை கண்டதும் துள்ளும் மான்களின் ஞாபகம்
உந்தன் கால்கள் கண்டதும் வாழைதண்டின் வழவழப்பு ஞாபகம்
உந்தன் நாணம் கண்டதும் செந்தூர குங்குமம் ஞாபகம்
உந்தன் கோபம் கண்டதும் ஜொலிக்கும் ஜுவாலையின் ஞாபகம்
உந்தன் பெருமூச்சை கண்டதும் எனக்கு தலை சுற்றியது ஞாபகம்
உந்தன் கண்ணீர் கண்டதும் என்னுயிர் மாண்டதுபோல் ஞாபகம்

உந்தன் முழு உருவம் கண்டதும் கடந்த ஆறு ஜென்மங்களில் நாம் காதல் ஜொடிகளாக களித்து வாழ்ந்ததாக ஞாபகம்...

இதுவும் பொய்யென்றே வைத்து கொள்ளுங்களேன்...

இனியவன்
05-06-2006, 01:54 PM
ராகா சும்மா சொல்லக் கூடாதய்யா உன் ரசனை அஷ்டாவதானியை மிஞ்சிவிட்டதய்யா,
(அதாம்பா நம்ம தாடிக்காரு டி,ஆரு)

Raaga
05-06-2006, 02:26 PM
இந்த உளறல்களுக்கு இப்படி வரவேற்பா, மிக்க நன்றி உங்களுக்கு...

ஓவியா
05-06-2006, 02:38 PM
உன்னை சந்தித்தேனடி உள்ளம் மகிழ்ந்தேனடி
உந்தன் நினைவானதடி உறக்கம் வரவில்லையடி
ஊரெல்லம் தேடினாலும் உனைப்பொல் அழகியுண்டோ
உலகெல்லம் இருண்டாலும் உன் வதனம் மின்னுமன்றோ

உயிரில் கலந்தவளே உள்மூச்சில் இணைந்தவளே
உறவை தந்தவளே உணர்வை கொணர்ந்தவளே
ஊஞ்சல் கிளி போல உருகும் மொழி கூறுவதேனோ
உடல் இரத்தம் சூடேற உன் எண்ணம் வாட்டுவதேனோ

உரம் பெற்றயென் மார்பிலே உந்தன் முகம் புதைத்து
உதட்டொரம் ஊறும் தேனிலே உன் புன்னகை இணைத்து
ஊமை விழி பார்வையிலே உனக்கடிமை நான் என்பாயோ
உயிர்மூச்சு சுவாசத்தில் ஒரு உயர்காவியம் எழுதுவாயோ
...

நல்லா இருக்கு ராகா சார்

வேதனையை தொடர்ந்து அனுபவிக்க அடியேனின் நல்வாழ்த்துக்கள்

ஓவியா
05-06-2006, 02:47 PM
உந்தன் கூந்தல் கண்டதும் சரியும் நீர்வீழ்ச்சியின் ஞாபகம்
உந்தன் விழிகள் கண்டதும் நீந்தும் கெண்டைகள் ஞாபகம்
உந்தன் இதழ்கள் கண்டதும் செந்தேன் கிண்ணங்கள் ஞாபகம்
உந்தன் புன்னகை கண்டதும் மலரும் ரோஜாக்கள் ஞாபகம்
உந்தன் முகத்தை கண்டதும் உதிக்கும் ஆதவனின் ஞாபகம்
உந்தன் மெல்லிடை கண்டதும் மல்லிகை கொடியின் ஞாபகம்
உந்தன் நடையை கண்டதும் துள்ளும் மான்களின் ஞாபகம்
உந்தன் கால்கள் கண்டதும் வாழைதண்டின் வழவழப்பு ஞாபகம்
உந்தன் நாணம் கண்டதும் செந்தூர குங்குமம் ஞாபகம்
உந்தன் கோபம் கண்டதும் ஜொலிக்கும் ஜுவாலையின் ஞாபகம்
உந்தன் பெருமூச்சை கண்டதும் எனக்கு தலை சுற்றியது ஞாபகம்
உந்தன் கண்ணீர் கண்டதும் என்னுயிர் மாண்டதுபோல் ஞாபகம்

உந்தன் முழு உருவம் கண்டதும் கடந்த ஆறு ஜென்மங்களில் நாம் காதல் ஜொடிகளாக களித்து வாழ்ந்ததாக ஞாபகம்...

இதுவும் பொய்யென்றே வைத்து கொள்ளுங்களேன்...

சரி

அப்ப அவளை காணும் முன் இதேல்லம் ஞாபகம்
வந்ததே இலையா.:p

அவள் ஞாபகதிற்க்கு வரவேண்டும் என்றால் என்ன காண்பீர்கள்?

Raaga
09-06-2006, 04:27 AM
நல்லா இருக்கு ராகா சார்

வேதனையை தொடர்ந்து அனுபவிக்க அடியேனின் நல்வாழ்த்துக்கள்

வேதனை என்ன சோதனை வந்தாலும் அவளை மறக்க முடியுமா,
இல்லை தெய்வீக உறவை மறுக்கத்தான் முடியுமா...

துன்பம் கண்டபின் பெரும் இன்பம் இரட்டிப்பாகும்...
ஊடலுக்குபின் கூடலிலெ நித்யசொர்க்கம் தோன்றும்...

கீழே படியுங்கள் புரியும்...

உறவு தருவாள் இரவு தூக்கமின்றி செய்வாள்
உலகம் மறக்கவைப்பாள் என்னை வியக்க வைப்பாள்
மயக்கம் வந்தாலும் மன கலக்கமின்றி இருப்பாள்
மயங்கிய மாந்தனை மட்டும் புழுவாய் துடிக்க வைப்பாள்

உயிரை கடனாக கேட்பாள் உலரும் என்னிதயம் மறப்பாள்
உருகும் மெழுகாய் கரைவாள் உறவாடி என்னிலை குளைப்பாள்
மறக்கவொன்னா மழலை மொழி கூறுவாள் மதி மயக்குவாள்
மன்னவன் நெஞ்சத்தினை மட்டும் கசக்கி வலிக்க வைப்பாள்

துன்பத்தில் இன்பம் தருவாள் தூயவனின் நெஞ்சம் அறிவாள்
துணைவனை நெஞ்சில் வைப்பாள் தூர நின்றே வதைப்பாள்
தூக்கத்தில் தொல்லை தருவாள் துணைக்கு தலையணை தருவாள்
துரத்தி விட்டு நகைப்பாள் திரும்பி வருவானென்பதை அறிவாள்

வலியிலும் இனிக்குதடி வண்ண முகம் காண துடிக்குதடி
வஞ்சனை நீ செய்தாலுமடி வஞ்சியுனை எப்படி மறப்பேனடி
ஊடலுக்குபின் கூடல் என்றறிவேனடி உனது இனிய உள்ளம் எனக்கு தெரியாதாடி
உளவேதனை தந்தாலென்னடி உறவாட மீண்டும் வருவாயென என்மனம் அரியாதாடி

றெனிநிமல்
19-06-2006, 09:21 PM
நன்றி ராகா
நன்றாக எழுதுகின்றீர்கள்.

அல்லிராணி
20-06-2006, 04:38 AM
உன்னை சந்தித்தேனடி உள்ளம் மகிழ்ந்தேனடி
உந்தன் நினைவானதடி உறக்கம் வரவில்லையடி
ஊரெல்லம் தேடினாலும் உனைப்பொல் அழகியுண்டோ
உலகெல்லம் இருண்டாலும் உன் வதனம் மின்னுமன்றோ

உயிரில் கலந்தவளே உள்மூச்சில் இணைந்தவளே
உறவை தந்தவளே உணர்வை கொணர்ந்தவளே
ஊஞ்சல் கிளி போல உருகும் மொழி கூறுவதேனோ
உடல் இரத்தம் சூடேற உன் எண்ணம் வாட்டுவதேனோ

உரம் பெற்றயென் மார்பிலே உந்தன் முகம் புதைத்து
உதட்டொரம் ஊறும் தேனிலே உன் புன்னகை இணைத்து
ஊமை விழி பார்வையிலே உனக்கடிமை நான் என்பாயோஉயிர்மூச்சு சுவாசத்தில் ஒரு உயர்காவியம் எழுதுவாயோ

எனக்கு தெரிந்த தமிழிலே ஒரு கவிதை...

பிழையிருப்பின் மன்னிக்கவும்...
யார் யாருக்கு அடிமை?
பலாப்பழத்தில்
கரடு முரடான தோலுக்குள்
சிக்கலான சிக்கலுக்குள்
சுவையான சுளை

பாட்டிலோ
இனிமையான தமிழில்
சிக்கலான வார்த்தைகளில்
கரடு முரடான எண்ணம்..

"சொல்லில் பிழையில்லை இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம் பொருளில் தான் குற்றமிருக்கிறது":eek: :eek: :eek: :D :D :D

அல்லிராணி
20-06-2006, 04:44 AM
உந்தன் கூந்தல் கண்டதும் சரியும் நீர்வீழ்ச்சியின் ஞாபகம்
கூவமா???

அதுதானே கருப்பு நீர்வீழ்ச்சி?.. இல்லை எனக்கு நரைத்து விட்டதா???

உந்தன் விழிகள் கண்டதும் நீந்தும் கெண்டைகள் ஞாபகம்

கண்ணீரில்தானே???

உந்தன் இதழ்கள் கண்டதும் செந்தேன் கிண்ணங்கள் ஞாபகம்

ம்ம்... குடிக்கிற நினைப்பு போகலியே!!!

உந்தன் புன்னகை கண்டதும் மலரும் ரோஜாக்கள் ஞாபகம்

உந்தன் முகத்தை கண்டதும் உதிக்கும் ஆதவனின் ஞாபகம்

உந்தன் கோபம் கண்டதும் ஜொலிக்கும் ஜுவாலையின் ஞாபகம்... நீங்களே சொல்லிட்டீங்களே!!!

உந்தன் பெருமூச்சை கண்டதும் எனக்கு தலை சுற்றியது ஞாபகம்

கோபப் பெருமூச்சுக்கே தலை சுற்றினால்... பூரிக்கட்டை பறக்கும்பொழுது???

உந்தன் முழு உருவம் கண்டதும் கடந்த ஆறு ஜென்மங்களில் நாம் காதல் ஜொடிகளாக களித்து வாழ்ந்ததாக ஞாபகம்...

இந்த ஜன்மத்தில் வேண்டவே வேண்டாம்.. இல்லையா???

இதுவும் பொய்யென்றே வைத்து கொள்ளுங்களேன்

இதுவும் பொய்யென்றே வைத்து கொள்ளுங்களேன்:D :D :D :D :D

இளசு
27-06-2006, 09:38 PM
ராகா

உள்ளத்தின் உண்மை உணர்வுகளின் நீண்டநாள் தேக்கம்..

பீறிட்ட எண்ணங்களை
சொல், வரி அளவு என்னும் கரைகளுக்குள்
அழகாக பயணிக்க வைத்திருக்கிறீர்கள்.

ஆர்வத்துக்கும், நிஜ உணர்வுக்கவிதைகளுக்கும் முதலில் பாராட்டுகள்.

1) நிறைய வாசியுங்கள்; நிறைய எழுதுங்கள்.

2) பிற கவிதை வடிவங்கள், செதுக்கிய சொற்கட்டு, மடக்கிய வரிவடிவம் இப்படியும் எழுதுங்கள்..

3) பின் காதல் தாண்டிய களங்களிலும் கால் பதியுங்கள்.

4) விமர்சனங்களை உரமாக பயன்படுத்துங்கள்..

வாழ்த்துகள்..