PDA

View Full Version : ஓர் பார்வையும் பல கனவுகளும்



அகத்தியன்
27-05-2006, 05:02 PM
உன் கண்களுடன்
என் காதல் பயணமும் ஆரம்பமாயிற்று.

என்றாவது புரிந்து கொள்வாயா?
ஓர் பார்வையினை யாசிக்கும்,
இவ் யாசகன் பற்றி....

என் கனவு தின்று வழும்
உன் ஞாபக குப்பைகள்
இடமின்றி வழிகின்றது.

ஏதாவது செய்யேன்....
என்னை ஏதாவது செய்யேன்....

ஒன்றும் இயலாது போனால்
சபித்து விடு
பார்வை இன்றி போகவென.............



அகத்தியன்

pradeepkt
29-05-2006, 06:13 AM
கண்கள் இல்லையெனில்
கனவுகள் இருக்காதெனச்
சொன்னது யார்?

பென்ஸ்
07-06-2006, 06:48 PM
அகத்தியன்....

கண்களால் ஆரம்பிக்கபட்ட பயணம்,
அடுத்த பார்வைக்காக காத்திருக்கின்றன...

நல்ல கவிதை அகத்தியன்....

அப்படியே மீண்டும் ஒரு காதல் சுயநலவாதி...
என்னை புரிந்து கொள்
என் வலியை நீக்கு...
என் உணர்வுகளுக்கு தீனி போடு...

ஏன்.. ஏன்....???
எப்போது அவள் பார்வையில் இருக்கும் வலியை அல்லது வேலியை நாம் புரிந்து கொள்ள போகிறோம்....

கடைசியில் ... ஒரு இயலாமையை காட்டி... அப்படியே ஒரு மிரட்ட்லாக சிம்பதி உண்டுபண்ன பார்க்கும் மணம்....

அப்படியே ஒரு சாதாரண மனிதனின் மனதை வடிக்கும் கவிதை....
அருமை....

பிரதிப் சீரியஸ்சாக ஒரு கேள்வி: பிறவி குருடனுக்கு கனவு வருமா,
அப்படி வந்தால் அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் இடங்களும் எதாவது வடிவம் இருக்குமா????

pradeepkt
08-06-2006, 05:53 AM
கனவு என்பது மனத்தின் பிம்பங்கள்தானே...
பார்த்தால்தான் உருவம் மனதில் பதியும். உண்மை! ஆனால் எனக்கு சில சமயங்களில் ஆளில்லாத விண்வெளியில் உலவுவது போலும் பூமிக்குள் அப்படியே ஒட்டை போட்டுப் போவது போலெல்லாம் கனவு வரும். அவற்றை நான் வேறெங்கும் கண்டதில்லை, தனியே நானாக யோசித்துப் பார்க்கும் போது தெரியவரும்.

இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு?
எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன், மற்றவை நண்பர்கள் விவாதிக்க!

இளசு
01-07-2006, 11:02 PM
கனவு தின்ற நினைவுக்குப்பைகள்
இடமின்றி பாரமாகிய வலியின் வரிகள்..

பென்ஸ் சொன்னதுபோல் (ஒரு பக்க) நியாய வலி சொல்லும் வரிகள்..

சொற்கட்டை ரசித்தேன். வாழ்த்துகள் அகத்தியன்.

றெனிநிமல்
02-07-2006, 08:55 AM
நன்றி அகத்தியன்.
நன்றாகவே இருக்கின்றது இணைந்திருங்கள்.