PDA

View Full Version : என்ட மக்கள் புலம்பெயர்ந்த வீதி!



ப்ரியன்
27-05-2006, 12:41 PM
எம்மக்கள் புலம்பெயர்ந்த
வெற்று வீதிகளில்
முகம் திருப்பியப்படியே
பயணிக்கிறது சூரியன்!

- ப்ரியன்.

pradeepkt
29-05-2006, 06:12 AM
சுடும் நோக்கிருந்தால்
சூரியனும் புறமுதுகிடுவான் - எம்
வெற்று வீதிகளுக்கும் வீரமுண்டு

- பிரதீப்

பென்ஸ்
03-06-2006, 06:50 AM
ப்ரியன்...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்....

முதலில் கவிதை சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. (இதுதான் தமிழையாவது ஒழுங்கா படித்து இருக்கனும்ன்னு சொல்லுறது). பிரதிப்பின் பதில் கண்டு கவிதையிம் வேகமுன் ஆழமும் அறிந்தேன்...

நன்று...

நன்றி (பிரதிப்புக்கும்..)