PDA

View Full Version : பள்ளிக்கூடம் திறக்கப்போகுது

அறிஞர்
26-05-2006, 06:49 PM
பள்ளிக்கூடம் திறக்கப்போகுது.. பெற்றோர்கள்....புத்தகம் வாங்க பாடுபடும் படங்கள்... சிரிப்பாக தமிழ் முரசு பேப்பரில் வந்தது.. அதில் சில..... இங்கு...

http://i13.photobucket.com/albums/a282/aringar/9_3.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/9_2.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/8_2.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/8_1.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/9_4.jpg

நன்றி-தமிழ் முரசு

Mano.G.
27-05-2006, 04:06 AM
படங்கள் அருமை ,
நான் பள்ளிகூட வாசலில் எனது பிள்ளைகள்
பள்ளி செல்லும் போது நின்ற நினைவுகளை
நினைவுருத்துகிறது

அருமை

மனோ.ஜி

ஓவியா
28-05-2006, 12:51 AM
படங்கள் அருமை ,
நான் பள்ளிகூட வாசலில் எனது பிள்ளைகள்
பள்ளி செல்லும் போது நின்ற நினைவுகளை
நினைவுருத்துகிறது, அருமை..

மனோ.ஜி

ஓ அப்படியா அண்ணே, நல்லது.
என்ன ஒரு 50பது வருசதிர்க்கு முன்பு இருக்குமா?:D

ஓவியா

Mano.G.
28-05-2006, 01:11 AM
ஏன் 50பது வருசத்துக்கு போகனும்.
இப்ப மலேசியாவில எல்லா தமிழ் பள்ளிகளிலும்
வருஷ ஆரம்பத்துல இந்த நில தான்.

மலேசிய இந்திய வம்சாவளி பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு படிக்க
அனுப்ப வேண்டும் என ஆர்வம் கொண்டு
அளவுக்கு அதிகமான வரவேற்பு அதிகமான மாணவர்கள்

.இங்கும் அப்படியே

மனோ.ஜி/

ஓவியா
28-05-2006, 03:01 AM
படங்கள் அருமை ,
நான் பள்ளிகூட வாசலில் எனது பிள்ளைகள்
பள்ளி செல்லும் போது நின்ற நினைவுகளை
நினைவுருத்துகிறது....அருமை

மனோ.ஜி

நான் இதை சொன்னேன்

மயூ
28-05-2006, 04:42 AM
ஏன் 50பது வருசத்துக்கு போகனும்.
இப்ப மலேசியாவில எல்லா தமிழ் பள்ளிகளிலும்
வருஷ ஆரம்பத்துல இந்த நில தான்.

மலேசிய இந்திய வம்சாவளி பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு படிக்க
அனுப்ப வேண்டும் என ஆர்வம் கொண்டு
அளவுக்கு அதிகமான வரவேற்பு அதிகமான மாணவர்கள்
மனோ.ஜி/

மலேசியத் தமிழர்களின் தமிழ் ஆர்வம் பற்றிக் கேட்க மெய் சிலிர்க்கின்றது. வாழ்க வழர்க நம் தமிழரும் தமிழும். :)

Mano.G.
28-05-2006, 06:01 AM
எனது மூன்றாவது மகன் தமிழ் பள்ளியில்
5ம் ஆண்டு பயில்கிறான், அந்த தமிழ் பள்ளியில்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் வெகு சிறப்பாக
இயங்கி வருகிறது, ஆரம்பபள்ளி 5ம் ஆண்டு 6ம் ஆண்டுக்கான
அரசாங்க தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த இந்த பெற்றோர் ஆசிரியர்
சங்கம் ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு வழங்கி நமது இந்திய தமிழ் மாணவர்கள்
தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற எல்லவழிகளிலும் வசதிகள் செய்து கொடுக்கின்றது.

நான் அந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் துணைத்தலைவராக
பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

மனோ.ஜி

மயூ
30-05-2006, 08:07 AM
ஈழத்தில் கூட குறிப்பாக கொழும்பு வாழ் தமிழரிடையே இப்போது லண்டன் பரீட்சைகளிற்காக சர்வதேசபாடசாலைகளில் குளந்தைகளைச் சேர்ப்பது வாடிக்கையாகும் வேளையில் மலேசியத் தமிழரை குறிப்பாக திரு மனோ போன்ற பெற்றோர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

தாமரை
30-05-2006, 08:52 AM
அனிருத்திற்கு இந்த வருட படிப்பு செலவுக் கணக்கு இதோ!

அனுமதிக் கட்டணம் : 10,000
கல்விகட்டணம் : 15,400
புத்தகங்கள் : 1600 (10 புத்தகங்கள், 10 நோட்டுகள்,1 டைரி)
உடைகள் : 2000
போக்குவரத்து வாகனம் : 6000
இரு வார கால தவணை கொடுக்கப்பட்டதால், உடனடியாய் ஒரு திங்கள் கிழமை காலை முதல் ஆளாகச் சென்று பெற்றதால் செலவழித்தது
3 மணி நேரம்.

இன்னும் 1 புத்தகம் மற்றும் டைரி பாக்கி உள்ளது. அதை வகுப்பு ஆரம்பிக்கும் அன்று வகுப்பிலேயே தருவதாக சொல்லி விட்டார்கள்.

மேலே உள்ள கார்ட்டூன்களில் 1 மட்டுமே கற்பனை. புதுப்புத்தகங்களை கண்டு அதை உடனே படித்து விடும் ஆர்வத்தில் இருந்தான் அனிருத். இதுவரை 2 புத்தகங்களை தலைமுதல் கால்வரை புரட்டியாயிற்று.

மற்றபடி நிஜமோ நிஜம். அனிருத் என்னுடைய 51/2 வயது மகன். முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான்.

pradeepkt
30-05-2006, 06:38 PM
நல்ல வேளைங்கோவ்...
என் நண்பனின் மகளுக்கு ஜி எம் பாள்யாவில் உள்ள ஏதோ ஒரு பப்ளிக் ஸ்கூலில் வருடத்திற்கு 50000 ரூபாய் செலவு!
பொண்ணு எல் கே ஜியில் படிக்கப் போறா!

அறிஞர்
30-05-2006, 10:10 PM
இந்தியா வந்து என் பையன்களை சேர்க்கும் போது யோசிக்கனும்...

என்ன பிரதீப்.. என் நண்பர் ஹைதராபாத்தில் தன் பிள்ளையை சேர்க்க ஒன்று - இரண்டு லட்சம் ஆகும் என்றார்.

pradeepkt
31-05-2006, 12:46 PM
இந்தியா வந்து என் பையன்களை சேர்க்கும் போது யோசிக்கனும்...

என்ன பிரதீப்.. என் நண்பர் ஹைதராபாத்தில் தன் பிள்ளையை சேர்க்க ஒன்று - இரண்டு லட்சம் ஆகும் என்றார்.
இருக்கலாம்.
இங்கே மிகச்சில இண்டர்நேஷனல் பள்ளிகளே உள்ளன.
அதனால் பயங்கர அடிதடி.
அதே சமயம் உயர்நிலைப் பள்ளிகளிலும் அடிதடிதான். ஆனால் நர்சரிப் பள்ளிகளை ஒப்பிடும்போது உயர்நிலைப் பள்ளிகளிலும் இண்டர்மீடியேட் கல்லூரிகளிலும் கட்டணம் பத்தில் ஒரு பங்குதான்.

தாமரை
31-05-2006, 12:53 PM

பெங்களூரில் அதிகபட்ச கட்டணம் 5,00,000
இண்டர்நேஷனல் ஸ்கூல்கள் 1,50,000 லட்சம் என்பது சராசரி செலவு.
நான் பார்த்த பல பள்ளிகள் 20,000 லிருந்து 1,50,00 லட்சம் வரை.

நான் சேர்த்திருப்பது ரையான் இண்டர்நேஷனல் ஸ்கூல்.

அறிஞர்
31-05-2006, 01:50 PM
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியுது... பேசாம ஏதாவது ஸ்கூலில் பார்ட்னரா மாறிடலாம் போல்

தாமரை
31-05-2006, 02:12 PM
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியுது... பேசாம ஏதாவது ஸ்கூலில் பார்ட்னரா மாறிடலாம் போல்
ஆரம்பிச்சுருவோமா?

நாட்டுக்கு நல்லது செஞ்ச மாதிரி இருக்கும்.

pradeepkt
31-05-2006, 04:32 PM
ஆரம்பிச்சுருவோமா?

நாட்டுக்கு நல்லது செஞ்ச மாதிரி இருக்கும்.
அப்படியே வீட்டுக்கும்...
என்ன செல்வன் சொல்றீங்க?
உங்களுக்கு இன்னொரு பார்ட்னர் ரெடி

அறிஞர்
01-06-2006, 07:11 PM
அப்படியே வீட்டுக்கும்...
என்ன செல்வன் சொல்றீங்க?
உங்களுக்கு இன்னொரு பார்ட்னர் ரெடி அப்ப நான் யோசிக்கனும்... :confused: :confused: :confused:

mukilan
01-06-2006, 07:18 PM
அப்படியே வீட்டுக்கும்...
என்ன செல்வன் சொல்றீங்க?
உங்களுக்கு இன்னொரு பார்ட்னர் ரெடி
அய்யா பிரதீப்பு உங்களுக்கு வியாபார காந்தம் ஆகனும்னு தோணியாச்சு போல. ஏற்கனவே என்னை சங்கரன்கோவிலில் கிளப் கடை வைக்க கூப்பிட்டீக இப்போ பள்ளியோடத்தில பார்ட்னரு.

pradeepkt
01-06-2006, 08:09 PM
வியாபார காந்தமோ விஜயகாந்தமோ ஆனாலும் சரி ஆகாட்டியும் சரி, ஆசைப் பட்டுருவம்ல?
நீங்க முதல்ல சங்கரங்கோயிலுக்கு வாங்கப்பு...

mukilan
01-06-2006, 08:33 PM
வியாபார காந்தமோ விஜயகாந்தமோ ஆனாலும் சரி ஆகாட்டியும் சரி, ஆசைப் பட்டுருவம்ல?
நீங்க முதல்ல சங்கரங்கோயிலுக்கு வாங்கப்பு...

அப்போ அடுத்ததா தே.மு. தி.க. தானா? நானும் ஏதவது கட்சியிலே சேரலாம்னு இருக்கேன். என்ன சொல்லுதீக. சங்கரன் கோயிலுக்கு வந்து என்ன செய்ய. மதுரைல "அப்பா" மெஸ்ஸூன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?

தாமரை
02-06-2006, 02:06 AM
அப்போ அடுத்ததா தே.மு. தி.க. தானா? நானும் ஏதவது கட்சியிலே சேரலாம்னு இருக்கேன். என்ன சொல்லுதீக. சங்கரன் கோயிலுக்கு வந்து என்ன செய்ய. மதுரைல "அப்பா" மெஸ்ஸூன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?

ஹோட்டல்னா ராகவன் இல்லாமலா? வின்னிங் ஃபார்முலா சரியில்லையே???:D :D :D :D

mukilan
02-06-2006, 02:23 AM
ஓகோ இதுதான் "அரித்மேட்டிக்" கூட்டணியோ, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். அவரையும் சேர்த்துப்போம். அப்போதான் எங்க ஹோட்டல்ல "உக்கரை" ஸ்பெசல் போடலாம்.

தாமரை
02-06-2006, 03:14 AM
ஓகோ இதுதான் "அரித்மேட்டிக்" கூட்டணியோ, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். அவரையும் சேர்த்துப்போம். அப்போதான் எங்க ஹோட்டல்ல "உக்கரை" ஸ்பெசல் போடலாம்.
மதுரையை விட பெங்களூர் நல்ல லாபம் கிடைக்கும்.

ஐடியா
1 : கட்டடம் வாடகைக்கு எடுக்க கூடாது... வெறும் நிலம் போதும்
2 : புல்வெளி அமைத்து மத்தியில் 2, 4, 6, 10, 20 இப்படி பல சைஸ்களில் காட்டேஜ்.
3 : அங்கங்கே பூஞ்செடிகள் (முக்கியமா சிகப்பு ரோஜா)சின்ன நீர்வீழ்ச்சி

நில வாடகை மட்டும்தான், மெயிந்தெனென்ஸ் குறைச்சல்...

கூடவே சைடில் காலை நேரத்துக்கு ஜிம், ஷட்டில் கோர்ட், டேபிள் டென்னிஸ்.. நீச்சல் குளம்..

அப்புரம் வளர வளர.. போலிங்.. காட்டேஜ்கள்.. கோல்ஃப் கோர்ட்(மினி கோல்ஃப் யூ.எஸ் ல இருக்கிற மாதிரி.. வீடியோ கேம் பார்லர்.. ஐஸ்கிரீம் கார்னர்கள்..

பிளான் நல்லா இருக்கா?

mukilan
02-06-2006, 03:23 AM

வாவ் கலக்கிட்டீங்க. அப்போ நீங்களும் வந்து கலந்துக்கோங்க. உங்களுக்கு இதயத்தில் மட்டுமல்ல லாபத்திலும் இடமுண்டு (பங்குண்டு). போற போக்கைப் பார்த்தால் தீஸிஸை மூட்டை கட்டிட்டு பெங்களூரூ பக்கம் செட்டில் ஆயிடலாம்னு தோணுதே!:D

அறிஞர்
02-06-2006, 03:29 AM

பிளான் நல்லா இருக்கா? இது எதுக்கு.. ஸ்கூலுக்கா.. இல்லை பொழுது போக்கு கூடத்துக்கா

தாமரை
02-06-2006, 03:29 AM
வாவ் கலக்கிட்டீங்க. அப்போ நீங்களும் வந்து கலந்துக்கோங்க. உங்களுக்கு இதயத்தில் மட்டுமல்ல லாபத்திலும் இடமுண்டு (பங்குண்டு). போற போக்கைப் பார்த்தால் தீஸிஸை மூட்டை கட்டிட்டு பெங்களூரூ பக்கம் செட்டில் ஆயிடலாம்னு தோணுதே!:D
இதை செய்து பக்கத்தில ஒரு நர்சரி ஆரம்பிச்சிடலாம்.அப்பா அம்மா ஹெல்த் கிளப் மெம்பர். குழந்தைகளுக்கு லைப்ரரி மற்றும் ஆக்டிவிட்டி கிளப் அப்புறம் ஒரு 5 அல்லது 6 வருஷத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூல்..
கடைசியா ஒரு ஹாஸ்பிடல் மற்றும் முதியோர் இல்லம். அதாவது நம்ம கஸ்டமர்ஸ் நம்ம ஹாஸ்பிடல்லயே பிறந்து நம்ம ஸ்கூல்ல படிச்சு, நம்ம ஹோட்டல்ல சாப்பிட்டு, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, அவங்க குழந்தைகளையும் இதே ரூட்டில் விட்டுட்டு, நம்ம முதியோர் இல்லத்திலயே சேர்ந்திடலாம்.. லாங் டைம் மெம்பர்ஸ் டிஸ்கவுண்ட் குடுத்திடலாம்.

தாமரை
02-06-2006, 03:31 AM

இதையெல்லாம் மனசில் வச்சு "Ensemble 89" ல ஒரு முடிவு பண்ணி ஒரு 20 ஏக்கர் நிலம் வாங்கிப் போடலாம்னு இருக்கோம்.

அறிஞர்
02-06-2006, 03:31 AM
இதை செய்து பக்கத்தில ஒரு நர்சரி ஆரம்பிச்சிடலாம்.அப்பா அம்மா ஹெல்த் கிளப் மெம்பர். குழந்தைகளுக்கு லைப்ரரி மற்றும் ஆக்டிவிட்டி கிளப் அப்புறம் ஒரு 5 அல்லது 6 வருஷத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூல்..
கடைசியா ஒரு ஹாஸ்பிடல் மற்றும் முதியோர் இல்லம். அதாவது நம்ம கஸ்டமர்ஸ் நம்ம ஹாஸ்பிடல்லயே பிறந்து நம்ம ஸ்கூல்ல படிச்சு, நம்ம ஹோட்டல்ல சாப்பிட்டு, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, அவங்க குழந்தைகளையும் இதே ரூட்டில் விட்டுட்டு, நம்ம முதியோர் இல்லத்திலயே சேர்ந்திடலாம்.. லாங் டைம் மெம்பர்ஸ் டிஸ்கவுண்ட் குடுத்திடலாம்.
ஆஹா அறிவுக்களஞ்சியமே... இப்படி திட்டம் தீட்டிட்டு இருக்கிங்க....

எதிர்காலத்தில் உங்க பையன்.. இன்னும் அதிகமா யோசித்து.. உங்களை முதியோர் இல்லத்துல விட்டுட போறான்....

அறிஞர்
02-06-2006, 03:33 AM
இதையெல்லாம் மனசில் வச்சு "Ensemble 89" ல ஒரு முடிவு பண்ணி ஒரு 20 ஏக்கர் நிலம் வாங்கிப் போடலாம்னு இருக்கோம். எங்க இடம் கிடைக்குது... நீங்க வாங்கினா... அரசியல்வாதி வந்து வளைச்சுடுவாங்க... முதல்ல.. அரசியல்வாதியாகிட்டு.. தொழிலில் இறங்குங்க...

தாமரை
02-06-2006, 03:36 AM
ஆஹா அறிவுக்களஞ்சியமே... இப்படி திட்டம் தீட்டிட்டு இருக்கிங்க....

எதிர்காலத்தில் உங்க பையன்.. இன்னும் அதிகமா யோசித்து.. உங்களை முதியோர் இல்லத்துல விட்டுட போறான்....
அதே தான்.. முன்னேற்பாடு.. நாமளே நடத்தினா வசதியா இருக்கும்ல...

தாமரை
02-06-2006, 03:38 AM
எங்க இடம் கிடைக்குது... நீங்க வாங்கினா... அரசியல்வாதி வந்து வளைச்சுடுவாங்க... முதல்ல.. அரசியல்வாதியாகிட்டு.. தொழிலில் இறங்குங்க...
அதற்கு அரசியல்வாதியாக இருக்கக் கூடாது.. அவரின் பினாமியாக இருக்கணும்... அரசியல்வாதிகளும் இருக்காங்க. பினாமிகளும் இருக்காங்க. அந்த தகுதியும் இருக்கு சிலருக்கு.:D :D :D :D

அறிஞர்
02-06-2006, 03:43 AM
அதற்கு அரசியல்வாதியாக இருக்கக் கூடாது.. அவரின் பினாமியாக இருக்கணும்... அரசியல்வாதிகளும் இருக்காங்க. பினாமிகளும் இருக்காங்க. அந்த தகுதியும் இருக்கு சிலருக்கு.:D :D :D :D பிரதீப்புக்குன்னு வெளிப்படையா சொல்லுங்களேன்... :cool: :cool: :cool:

தாமரை
02-06-2006, 03:50 AM
பிரதீப்புக்குன்னு வெளிப்படையா சொல்லுங்களேன்... :cool: :cool: :cool:
ஏன் இப்படி "பினாமி" பிரதீப்னு பட்டம் கொடுக்கறீங்க.. அவர் பாவம் இல்லியா?

அறிஞர்
02-06-2006, 04:33 AM
ஏன் இப்படி "பினாமி" பிரதீப்னு பட்டம் கொடுக்கறீங்க.. அவர் பாவம் இல்லியா? பாவமா.... அவரு... தேமுதிகவின் தலைவருக்கு ஹைதாராபாத்தில் உள்ள ஆள் என உங்களுக்கு தெரியாதா....

தாமரை
02-06-2006, 04:38 AM
பாவமா.... அவரு... தேமுதிகவின் தலைவருக்கு ஹைதாராபாத்தில் உள்ள ஆள் என உங்களுக்கு தெரியாதா....
நான் பேசிகிட்டௌ இருந்தது எங்க கல்லூரி நண்பர்கள் "Ensemble-89" பற்றி.. நீங்க பிர்தீப்பை இழுக்கறீங்களே இது ஞாயமா?

என் கல்லூரித் தோழன் ஒருவன் பஞ்சாயத்து தலைவராகவும்.. இன்னொரு வரின் அண்ணி தி.மு.க வேட்பாளர் (வருங்கால வாரியத் தலைவர்) ஆகவும் இருப்பதை சொன்னேன்..

நீங்க என்னன்னா தேமுதிக ஹைதராபாத் அப்படின்னு ஆரம்பிச்சிட்டீங்க.. ஏன் பெங்களூர்ல கூடத்தான் தேமுதிக இருக்கு...

mukilan
02-06-2006, 04:42 AM

பெங்களூருல தலைவர் நீங்களா?

மதி
02-06-2006, 05:05 AM
பெங்களூருல தலைவர் நீங்களா?

உங்களுக்கு என்னங்க இதுல சந்தேகம்...??:confused: :confused: :confused:

தாமரை
02-06-2006, 06:11 AM
உங்களுக்கு என்னங்க இதுல சந்தேகம்...??:confused: :confused: :confused:
சரி.. பிஸினஸ் பற்றி பேசுங்க..

ஆமாம் நம்ம் பிளானுக்கு ஒரு 25 ஏக்கர் நிலம் தேவைப்படுமா?

mukilan
02-06-2006, 06:43 AM
சரி.. பிஸினஸ் பற்றி பேசுங்க..

ஆமாம் நம்ம் பிளானுக்கு ஒரு 25 ஏக்கர் நிலம் தேவைப்படுமா?
அட எங்க நம்ம பார்ட்னர் "பினாமி பிரதீப்பை"க் காணோம். அவரும் வந்தா நல்லா இருக்கும். 25 ஏக்கர் போதுமே.அப்புறமா வேணும்னா ஆந்திரத் தலை நகர்ல ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சிடுவோம்.

தாமரை
02-06-2006, 07:37 AM
அட எங்க நம்ம பார்ட்னர் "பினாமி பிரதீப்பை"க் காணோம். அவரும் வந்தா நல்லா இருக்கும். 25 ஏக்கர் போதுமே.அப்புறமா வேணும்னா ஆந்திரத் தலை நகர்ல ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சிடுவோம்.
வாங்க பிரதீப், வாங்க பெங்களூர் கண்மணிகளே... உங்க ஐடியாக்களையும் எடுத்து விடுங்க

pradeepkt
02-06-2006, 08:56 AM
சொல்லிட்டீங்க இல்ல,
கண்டிப்பாச் செஞ்சிருவம்.
ஒரு ஆல் இன் ஆல் கேம்பஸ் கட்டுறதுக்கு செல்வன் ரோடு போட்டிருக்கார், நாம அதுக்கு மேல காரு ஓட்டுவோம்.
இந்தப் பள்ளிக் கூடங்களோடு பல நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுக்கும் மையங்களும் ஆரம்பிக்கலாம். பின்னுதுங்க காசு!

ஹ்ம்ம்... என்ன செய்ய? கல்வி என்பது என்ன மாதிரி யாவாரம் பாருங்க!

தாமரை
02-06-2006, 09:19 AM

கல்வியில பல விதமான வியாபார வாய்ப்புகள் உண்டு.

1. குழந்தை பாதுகப்பு மையம்
2. நர்ஸரி
3. குழந்தைகள் கிளப்
4. பள்ளி
5. நூலகம்..
6. சம்மர் கேம்ப்
7. ஸ்போர்ட்ஸ் கேம்ப்
8. ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செண்டர்
9. ஆக்டிவிடி கிளப்ஸ் (ஓவியம், ட்ரெக்கிங், பாட்டு, நடனம். கதை சொல்லுதல்..)
10. கோச்சிங் கேம்ப்ஸ்
11. கம்ப்யூட்டர் செண்டர் (மல்டி மீடியாவுடன்)
12. உடற்பயிற்சி மையம்

லிஸ்ட் பெருசு.. வளர்ச்சிக்கு ஸ்கோப் அதிகம். ஒரே பகுதியை ஆரம்பித்து திறம்பட நடத்தி விட்டால் பல்கிப் பெருகி விடலாம்.. அப்புறம் பிராஞ்சுகள், ஃப்ராஞ்சைஸ் பண்ணி பிராய்ஞ்சிறலாம்..

aren
03-06-2006, 10:20 AM
நானும் இதுமாதிரி ஏதாவது இந்தியாவில் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு போர்டிங் ஸ்கூல் மாதிரி ஆரம்பிக்கலாமா என்று நினைக்கிறேன்.

உங்கள் ஐடியாவும் நன்றாகத்தான் இருக்கிறது.

இது தவிற எனக்கு இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. எல்லோரும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் இஞ்ஜினியரிங் அல்லது மென்பொருள் படிப்போ படித்துவிட்டு கை நிறைய சம்பாதிக்க போய்விடுகிறார்கள். ஆனால் பத்தாவது பாஸ் செய்துவிட்டு அல்லது ஃபெயில் ஆகிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிறைய பேர் முழிக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒன்று செய்து வழிகாட்ட வேண்டும் என்று ஒரு ஆக்கம் மனதில் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான தொழிற்கல்வி கொடுத்து அவர்களையும் கரை சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக ஒரு 20 - 25 ஏக்கர் நிலம் தேவைபடும், தேடிக்கொண்டிருக்கிறேன். முதலில் நிலம் வாங்கிவிட்டு பின்னர் வேலையில் இறங்கவேண்டும் என்று நினைக்கிறேன். இங்கே படித்து அவர்களுக்கு வேலை கிடைத்தால் சந்தோஷமே.

ஓவியா
03-06-2006, 01:39 PM
அட எங்க நம்ம பார்ட்னர் "பினாமி பிரதீப்பை"க் காணோம். அவரும் வந்தா நல்லா இருக்கும். 25 ஏக்கர் போதுமே.அப்புறமா வேணும்னா ஆந்திரத் தலை நகர்ல ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சிடுவோம்.
:D :D :D

பத்தாவது பாஸ் செய்துவிட்டு அல்லது ஃபெயில் ஆகிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிறைய பேர் முழிக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒன்று செய்து வழிகாட்ட வேண்டும் என்று ஒரு ஆக்கம் மனதில் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான தொழிற்கல்வி கொடுத்து அவர்களையும் கரை சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக ஒரு 20 - 25 ஏக்கர் நிலம் தேவைபடும், தேடிக்கொண்டிருக்கிறேன். முதலில் நிலம் வாங்கிவிட்டு பின்னர் வேலையில் இறங்கவேண்டும் என்று நினைக்கிறேன். இங்கே படித்து அவர்களுக்கு வேலை கிடைத்தால் சந்தோஷமே.

அருமையான ஐடியா, :)

வாழ்த்துக்கள் அன்பரே

ஓவியன்
01-10-2007, 07:48 AM
லிஸ்ட் பெருசு.. வளர்ச்சிக்கு ஸ்கோப் அதிகம். ஒரே பகுதியை ஆரம்பித்து திறம்பட நடத்தி விட்டால் பல்கிப் பெருகி விடலாம்.. அப்புறம் பிராஞ்சுகள், ஃப்ராஞ்சைஸ் பண்ணி பிராய்ஞ்சிறலாம்..

அண்ணா இந்த திட்டத்தில் நான் உங்களோடு பங்குதாரராக சேர ரெடி...!!! :icon_b:
உங்க பதில் என்னவோ.....!!! :rolleyes:

அமரன்
01-10-2007, 08:07 AM
அண்ணா இந்த திட்டத்தில் நான் உங்களோடு பங்குதாரராக சேர ரெடி...!!! :icon_b:
உங்க பதில் என்னவோ.....!!! :rolleyes:
காத்திருங்க தபால்ல அனுப்புவாரு.

ஓவியன்
01-10-2007, 08:48 AM
காத்திருங்க தபால்ல அனுப்புவாரு.

தபால்ல அனுப்புவாரா, இல்லை தபாலை அனுப்புவாரா....???? :rolleyes:

அமரன்
01-10-2007, 08:51 AM
தபால்ல அனுப்புவாரா, இல்லை தபாலை அனுப்புவாரா....???? :rolleyes:
பதிலைப் பதிந்த தபாலை தபாலில் அனுப்புவாராக்கும்.

ஓவியன்
01-10-2007, 08:52 AM
பதிலைப் பதிந்த தபாலை தபாலில் அனுப்புவாராக்கும்.

தபாலை எப்படி தபாலில் அனுப்புவது...??? :rolleyes: